Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள்

கட்டுரைகள்

பொசொன் போயா தினமும் பௌத்த மதமும் 12.06.2014

E-mail Print PDF


புத்தரபிரான் அவதரித்ததும், அவர் ஞானம் பெற்றதும், பரிநிர்வாணம் அடைந்ததும் வைகாசிமாத (போயா) பௌர்ணமி தினங்களிலே நிகழ்ந்துள்ளதாக பௌத்த சமய நூள்கள் கூறுகின்றன. இவ் சிறப்பு மிக்க வைகாசிமாத பூரணை தினத்தையே பௌத்த மதத்தினர் ”வெசாக் பண்டிகையாக” கொண்டாடுகின்றனர்.

அதேபோல் பெளத்த தர்மம் இலங்கைக்கு (முதல் முறையாக) அறிமுகம் செய்து வைக்கப்பெற்றதும் ஒரு பூரணை தினத்திலேயாகும். இந் நிகழ்வானது ஆனி மாத பூரணை தினத்திலேயே நிகழ்ந்துள்ளது. அதனால் இவ் பூரணை தினத்தையே ”பொசன்” பூரணை (போயா) தினமாக பௌத்த மதத்தினர் கொண்டாடுகின்றனர். அத் தினம் இவ் வருடம் 12.06.2014 அன்று அமைவதாக கணித்துள்ளனர். பூரணை தினத்தை புனித நாளாக இந்துசமயம் போற்றுவதுபோல் பௌத்த சமயமும் போற்றுகின்றது.

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் கௌதம புத்தர் பிறந்தார் . அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர்.

கி.மு. 328 ஆவது ஆண்டில் ஒரு பொசன் போயா தினத்தன்று இந்திய சாம்ராச்சியத்தின் சக்கரவர்த்தியாகிய அசோக சக்கரவர்த்தியின் மகள் துறவறம் பூண்ட இளவரசி சங்கமித்தை தேரர் தனது சகோதரனான இளவரசர் அரஹட் மஹிந்த தேரருடன் இலங்கைக்கு வந்து மிஹிந்தலை மலை உச்சியில் இலங்கையில் அரசாட்சி புரிந்து வந்த தேவநம்பியதீசன் மன்னனை சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெற்றது

கலிங்கப் போரில் தன்னை எதிர்த்துப் போராடிய எதிரிநாட்டு படைகளை போர் முனையில் படுதோல்வியடையச் செய்த சக்கரவர்த்தி அசோகன் அன்றிரவு போர்களத்திற்கு சென்று போரினால் ஏற்பட்ட இழப்புக்களை கண்காணித்துக் கொண்டிருந்த போது; போர் வீரர்கள் பலர் அங்கவீனர்களாகவும் குற்றுயிராயும் அவஸ்த்தைப்படுவதையும், ஒரு வயோதிப் பெண் ஒரு இளம் போர் வீரரின் சடலத்தை தனது மடியில் வைத்து கண்ணீர்விட்டு அழுதுக் கொண்டிருந்த காட்சியையும் பார்த்து மனம் நெகிழ்ந்து போன அசோக சக்கரவர்த்தி, குனிந்து அந்தப் பெண்ணிடம், ஏன் அம்மா அழுகிறீர்கள்? என்று கருணையுடன் கேட்டிருக்கிறார்.

அப்போது, போர் முனையில் எங்கள் நாட்டை ஆக்கிரமித்த வெளிநாட்டுப் படைகள் எனது மகனை கொன்றுவிட்டார்கள் என்று தெரிவித்த அந்த வயோதிப மாது நீங்கள் யார் என்று அசோக  சக்கரவர்த்தியிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த சக்கரவர்த்தி நான் தான் ”சாம்ராட் அசோக சக்கரவர்த்தி” என்று பதிலளித்தவுடன் வேங்கையைப் போன்று கொதித்தெழுந்த அந்த வயோதிப மாது, நீ ஒரு சக்கரவர்த்தி அல்ல. அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் மிருகமென்று கத்தி அழுது கொண்டே மயக்கமடைந்தார்.

இந்த சம்பவங்களினால் மனம் நொந்துபோன அசோக சக்கரவர்த்தி செய்வதறியாது இத்தனை உயிர்களை பலிகொண்டு கலிங்கப் போரில் நான் அடைந்த வெற்றியினால் எதனை சாதிக்கப்போகிறேன் என்று நிலை தடுமாறி வேதனையில் மூழ்கியிருந்த போது அவருக்கு போதி மரத்து மாதவன் புத்தபெருமானின் நற்போதனைகளின் உண்மைத் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அன்று முதல் அசோக சக்கரவர்த்தியின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. யுத்தம், இரத்தகளரி, கொலை போன்ற தீய எண்ணங்களை அடியோடு துறந்துவிட்ட அசோக சக்கரவர்த்தி பெளத்த மதத்தை தழுவி பெளத்த மதத்தின் நற்போதனைகளை பரப்பும் பணியை ஆரம்பித்தார்.

இதனைத் தொடர்ந்து அரச குடும்பமே பெளத்த மதத்தைத் தழுவிக்கொண்டது. உடனடியாகவே மகன் மஹிந்தையையும் மகள் சங்கமித்தையையும் புத்த சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபடுத்தினார். இந்த பெளத்த தர்மத்தை போதிக்கும் பணிக்கு தனது மகன் இளவரசர் மஹிந்தவையும், மகள் இளவரசி சங்கமித்தையையும் சக்கரவர்த்தி தேர்ந்தெடுத்தார்.

பின்னர் காவி உடையணிந்து பெளத்த தர்மத்தை உலகத்திற்கு பரப்பும் பணிக்காக துறவறம் பூண்ட அரஹட் மஹிந்த இலங்கைக்கு வந்து மன்னன் தேவநம்பிய தீசனை சந்திக்கச் சென்ற போது, மன்னன் மிஹிந்தலை மலை உச்சியில் மான் வேட்டையாடிக் கொண்டிருப்பதை அவதானித்தனர்.

தேவநம்பிய தீச மன்னனை அணுகிய இவ்விரு துறவிகளும் பெளத்த தம்மத்தை அவரிடம் போதித்து, கருணாமூர்த்தி புத்த பெருமானின் போதனைக்கு அமைய கருணையுள்ளம் கொண்ட வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று போதனை செய்தனர். இவர்களின் இந்த பெளத்த போதனையை கேட்டு மனம்மாறிய தேவநம்பியதீச மன்னன் மிருகங்களை வேட்டையாடுவதை அடியோடு விட்டு பெளத்த தர்மத்தை தனது பல்லாயிரக்கணக்கான மக்கள் சகிதம் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வே இலங்கையில் பெளத்த தர்மம் தழைத் தோங்குவதற்கான ஆரம்பமாகும். அசோக சக்கரவர்த்தி இலங்கைக்கு போதனை செய்த பெளத்த தம்மம் சீனா, ஜப்பான், தூரகிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளுக்கும் பரவிய போதும் இலங்கையில் தான் பெளத்த தர்ம்ம் வலுவாக நிலை கொண்டது. இதனையடுத்து இலங்கையை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் பெளத்த விகாரைகளையும், பெளத்த தூபிகளையும் நாடெங்கிலும் நிர்மாணித்தனர்.

மிஹிந்தலை மலையில் முதன் முதலில் தேவநம்பியதீச அரசனை சந்தித்த அரஹட் மஹிந்த தேரர் பெளத்த தர்மத்தின் தத்துவத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிறாரா, அவரின் அறிவின் தரத்தை அறிந்து கொள்வதற்கும் பல கேள்விகளை எழுப்பினார். நாம் உண்மைத் தத்துவத்தை உலகத்திற்கு உபதேசித்த ஒரு பெரியாரின் நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கிறோம் என்று கூறி பெளத்த தர்மத்தை போதித்த போது அதனை தேவநம்பியதீச மன்னன் ஏற்றுக் கொண்டு அன்றிலிருந்து பெளத்த தர்மத்துக்கு அமைய தன்னுடைய மற்றும் நாட்டு மக்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தார்.

அந்த சம்பவத்தினால் பெளத்த தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரச குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இலங்கையில் துறவறம் பூண்டு நாடெங்கிலும் பெளத்த தர்மத்தை பரப்பினர். இந்த நிகழ்வு இலங்கையில் கலாசார மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு வழிகோலியது.

அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்தை தேரர் இலங்கைக்கு வந்தபோது கொண்டு வந்த புத்த பெருமான் புனிதத்துவம் அடைந்த அரச மரத்தின் கிளையொன்றை அனுராதபுரத்தில் நாட்டி இலங்கையில் புத்த சமயம் அறிமுகப்படுதப்பெற்றமையை  நினைைவு கூர்ந்தனர். இந்தக் கிளை இன்று ஒரு பெரிய விருட்சமாக மாறி ”ஸ்ரீமாபோதி” என்ற பெளத்த புனிதத் தலங்களில் பிரதான நிலைக்கு வந்துள்ளது. பெளத்த தர்மம் இலங்கைக்கு அறிமுகமாகிய பொசன் போயா தினம் புதியதோர் கலாசாரத்தையும் அமைதியான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது.

போதிமாவனின் வாழ்கை வரலாற்றை அறிந்துகொள்ள இங்கே அழுத்துக

வெசாக் பண்டிகை பற்றி அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

 


 

 

 

 

 

 


மனுக்குலத்தின் மீட்பிற்காக வந்துதித்த இயேசு கிறிஸ்துவின் அவதார நிகழ்வுகள் - குருத்தோலை ஞாயிறு

E-mail Print PDF

மனுக்குலத்தின் மீட்பிற்காக இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்து, நாற்பது நாள்கள் உபவாசம் இருந்து உலகத்தை ஜெயித்தார். இதனைக் குறிக்கும் முகமாக ”உயிர்த்த ஞாயிறு”க்கு முன்பாக உள்ள 40 நாட்களை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக் காலமாக அனுசரிக்கின்றனர்.

இவ் வருடம் இந்த தவக்காலம் (சாம்பற் புதன்கிழமை) அன்று முதல் ஆராதனைகளுடன் ஆரம்பமாகியது. இந்த 40 நாட்களில் தேவாலயங்களில் சிறப்பு சிலுவை தியான ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னுள்ள ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனியுடன் சிறப்புப் பிரார்த்தனை நடைபெறுகின்றது.

இயேசு கிறிஸ்து மனுக்குலத்திற்கு தாழ்மையைக் கற்றுத் தருவதற்காக எருசலேம் நகரில் கழுதையின் மேல் பவனியாக வந்ததைக் குறிக்கும் வகையில் இவ் குருத்தோலை பவனி நடைபெறுகின்றது.

அப்போது நகரத்தார் ”தாவீதின் குமாரனுக்கு ஒசன்னா”, என்றும் ”சமாதான பிரபுவுக்கு ஓசன்னா” என்றும் கோஷங்களை எழுப்பி கைகளில் குருத்தோலைகளை ஏந்தி பவனியாகச் சென்றார்கள். இதனைக் குறிக்கும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.  

இதனைத் தொடர்ந்து எதிவரும் வரும் திங்கட்கிழமை முதல் கிறிஸ்தவர்கள் பரிசுத்த வாரத்தை அனுசரிக்கிறார்கள். 13.04.2016 (வியாழக்கிழமை) புனித வியாழன் அன்று இரவு இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் நடத்திய கடைசி ராபோஜனத்தைக் குறிக்கும் வகையில் திருவிருந்து ஆராதனை தேவாலயங்களில் நடைபெறும்.

கர்த்தர் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. 14.04.2017 (வெள்ளிக்கிழமை) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டதைக் குறிக்கும் புனித வெள்ளி மும்மணி தியான ஆராதனை தேவாலயங்களில் நடைபெறும்.

இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை எதிர்வரும் 16-ம் திகதி (16.04.2016) அன்று கொண்டாடப்படுகிறது.

புனித வெள்ளிக்கிழமையன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் தியான ஆராதனை நடைபெறும்.  சில தேவாலயங்களில், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில் சொன்ன 7 வார்த்தைகளின் அடிப்படையில் தியானப் பிரசங்கங்கள் நடைபெறும்.

16.04.2017 (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் உயிர்த்த ஞாயிறு ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு - ஈஸ்ரர் பண்டிகை அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

ஜேசு நாதரின் பிறப்பும் அப்போது நிகழ்வுற்ற அதிசயங்களும்


போகம்பறை சிறைச்சாலையும் அங்கு அமைந்துள்ள தூக்கு தண்டனை வசதிகளும்

E-mail Print PDF

பொதுவாக சிறைச்சாலை அனுபவம் எல்லோரிக்கும் கிடைப்பதில்லை. இங்கு அனுபவசாலிகளாக இருப்பதற்கு சிறைக் கைதியாக அல்லது அங்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும். மற்றையோருக்கு அங்கு செல்ல அனுமதி இல்லை. மனிதர்கள் தங்களுடைய வாழ்நாளில் போகக் கூடாத இடம் என சிறைச்சாலையை ஒதுக்கி வைத்துள்ளார்கள். ஆனால்  தெரிந்தோ, தெரியாமலோ தாம் செய்த தவறுகளுக்காக சிறைத் தண்டனையை அனுபவிக்க சட்டம் சிலரை அங்கு அனுப்பி வைக்கின்றது. இங்கு வருபவர்கள்  வேண்டா வெறுப்புடன் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உரித்துகள் இல்லாத ஆலய உரிமைகாரரும் (ஆதீனகர்த்தாக்களும்), பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய பரிபாலனமும்

E-mail Print PDF


பணிப்புலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் முத்துமாரி அம்பாள் ஆலயம் கடந்த காலங்களில் இவ் ஆலயத்தின் ஸ்தாபகர் பரம்பரையில் வந்தோராலும் பூசைகள் செய்யப்பெற்றும், பரிபாலிக்கப் பெற்றும், பராமரிக்கப் பெற்றும் வந்தமை யாவரும் அறிந்தமையே.

இவ் ஆலயம் தற்பொழுது, ஆலய ஸ்தாபகரான பூசகர். வேலாயுதர் கனகர் அவர்களினதும், அவரின் புதல்வர் பூசகர். கனகர் வேலாயுதர் அவர்களினதும், அவரின் புதல்வர் பூசகர். வேலாயுதர் கனகர் அவர்களினதும் பரம்பரையில் வந்த பூசகர் வேலாயுதர் கனகர் அவர்களின் பேரப்பிள்ளைகளினால் பரிபாலிக்கப் பெற்று பூசைகள் செய்யப்பெற்று வருகின்ற போதிலும் கனடாவில் வசிக்கும் பூசாரி கந்தையா சதாசிவம் அவர்களே முழு உரித்தும், உரிமையும் (இவ் ஆலய  சொந்தக்காரனாகவும், உரிமைகாரனாகவும்) உள்ளவராக இருக்கின்றார்.

ஆனால் ஊரில் இருந்து பூசைகள் செய்து ஆலயத்தை பரிபாலிக்கும் பூசகர் கனகர் வேலாயுதம் அவர்களினது, பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களினதும் பிள்ளைகளுக்கு இவ் ஆலயம் சொந்தமாகதாக அமைய அவர்களின் தந்தையினரால் உறுதி எழுதப்படாது இருப்பதனால் உரித்தில்லா உருமைகாரர்களாக இருப்பது அவர்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. (உரித்து என்பது பரம்பரை பரம்பரையாக உறுதி மூலம் கிடைத்த சொத்தாகவும், உரிமை என்பது இவ் ஆலயத்தில் அவர்களுக்குரிய கடமைகளை செய்வதற்கு வழங்கப் பெற்ற (நீதிமன்ற) அனுமதியுமாகும்).

1934 ம் பூசகர் வேலாயுதர் கனகர் அவர்கள் தனது ஆண் பிள்ளைகளான பூசகர். சுப்பையா அவர்களுக்கும், பூசகர். கந்தையா அவர்களுக்கும், பூசகர். வேலாயுதம் அவர்களுக்கும், பூசகர். தம்பிப்பிள்ளை அவர்களுக்கும் உறுதி மூலம் தனக்கு இருந்த உரிமைகள் எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்திருந்தார்.

அதன் பின்னர் பூசகர். சுப்பையா அவர்கள் தனது பங்கை பூசகர். கந்தையா அவர்களுக்கு ஒப்படைதமையால் பூசகர். கந்தையா அவர்கள் அரைப் பங்குக்கு உரித்துடையவரானார். பூசகர். கனகர் கந்தையா அவர்களும் தாம் இறப்பதற்கு முன் தனது ஏக புத்திரனான பூசகர். கந்தையா சதாசிவம் அவர்களுக்கு தனது அரைப் பங்கையும் அதற்கான உருத்தினையும் உறுதி மூலம் வழங்கியுள்ளார்.

ஆனால் பூசகர். கனகர் வேலாயுதம் அவர்களும், பூசகர். கனகர் தம்பிப்பிள்ளை அவர்களும் திடீரென நோய்வாய்ப்பட்டு 1976 ம் ஆண்டு இறந்தமையால் இவ் ஆலயத்தில் அவர்களுக்கு இருந்த 1/4 பங்குகளுக்கான உரித்தினை தமது ஆண் பிள்ளைகளுக்கு எழுத முடியாது போயுள்ளது. அதனால் பூசகர். வேலாயுதம் அவர்களின் பரம்பரையில் வந்தவர்களும், பூசகர். தம்பிப்பிள்ளை அவர்களின் பரம்பரையில் வந்தவர்களும் எழுதப் படாத உரித்துடன் நம்பிக்கைச் சொத்து வழக்கு மூலம் கிடைக்கப் பெற்ற உரிமையுடன் ஆலயத்தை பரிபாலித்து வருகின்றனர். 

அவர்கள் பங்குதாரர்களுடன் காலத்திற்கு காலம் ஏற்பட்ட உரிமைப் பிரச்சனை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தொடரப் பெற்ற நம்பிக்கை சொத்து வழக்கில் ஆலயத்தை பூசகர் கந்தையா சதாசிவம் அவர்கள் (1/2 பங்கிற்குரிய) இருவருடங்களும், பூசகர் வேலாயுதம் அவர்களின் புதல்வர்கள் (1/4) பங்கிற்குரிய) அடுத்து வரும் ஒரு வருடமும், பூசகர் தம்பிப்பிள்ளையின் புதல்வர்கள் (1/4) பங்கிற்குரிய) அடுத்து வரும் ஒரு வருடமும் ஆலய தர்மகர்த்தாவாக இருந்து ஆலய பூசகர்களது இல்லத்தில் தங்கி இருந்து ஆலயத்தை நிர்வகித்து பராமரிக்கவும், பூசைகள் செய்வதற்கும், உரிமைகள் வழங்கப் பெற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதி மன்றில் ஆணை பிறப்பிக்கப் பெற்றுள்ளது.

ஆனால் இவ் ஆலயம் அவர்களுக்கு உரித்தானது (சொந்தமானது) என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் பூசகர் கனகர் வேலாயுதம் அவர்களின் பிள்ளைகளுக்கு இதுவரை எழுதப் பெறவில்லை என்பதே உண்மை.

அத்துடன், ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கு ஒருமுறை பூசகர். வேலாயுதம் அவர்களின் பிள்ளைகளும், பூசகர். தம்பிப்பிள்ளை அவர்களின் பிள்ளைகளும் விரும்பினால் தங்களுக்குள் ஒருவரை அவ் வருட பொறுப்புகள் ஏற்பதற்கு நியமிக்கலாம். அதாவது, முதல் ஆறு வருடங்களுக்குள் பூசகர். வேலாயுதம் அவர்களின் ஒரு மகன் பொறுப்பேற்றிருந்தால் ஏழாவது வருட பொறுப்பை அக் குடும்பதில் உள்ள வேறு ஒருவர் பொறுப்பேற்கலாம். இதேபோல் பூசகர் தம்பிப்பிள்ளையின் மக்களில் ஒருவர் பொறுப்பேற்கலாம். இவை யாவும் நம்பிக்கைச் சொத்து வழக்கில் குறிக்கப்பெற்றுள்ளது. 

அத்துடன் ஆலய பொறுப்புகளை பொறுப்பேற்றுள்ளவர் ஆலய வளாகத்தில் இருக்கும் வீட்டில் தங்கி இருந்து பூசைகள் செய்ய வேண்டும் என்றும் இவ் ஆலயத்திற்கு வரும் சகல வருமானங்களை எடுத்து கோயிலுக்கு தேவையான செலவுகளைச் செய்து மிகுதி ஏதேனும் இருப்பின் அதனை ஆலய தர்மகர்த்தாக்கள் தமது ஊதியமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழங்கப் பெற்ற தீர்ப்பில் குறிப்பிடப் பெற்றுள்ளது.

இவ் ஆலயத்தின் உரிமைகாரர்களாக கீழே தரப்பெற்ற 17 பேரும் ஆலய தர்மகர்த்தாக்களாகவும், பூசகர்களாகவும் மனேஜர்களாகவும் இருப்பார்கள் என யாழ்மாவட்ட நீதிமன்றில் வழங்கப் பெற்ற தீர்ப்பின் பிரதி உங்கள் கவனத்திற்காக இணைக்கப் பெற்றுள்ளது. (இவர்களில் இருவர் சிவபதம் அடைந்து விட்டார்கள்).

 

க. கனகரத்தினம்

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய

மூத்த தர்மகர்த்தா

 

 

522.15.04.2014

அணுவை பிளந்து உட்பகுதியை படமெடுத்து விஞ்ஞானப் புரட்சி!

E-mail Print PDF


இவ் உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணுக்களால் ஆனவை. அணுக்களைப் பிரிக்க முடியாது என்று முதலில் கருதப்பட்டது ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

Page 2 of 24