Tuesday, Jul 17th

Last update02:52:36 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு

மரண அறிவித்தல் - ஆறுமுகம் செட்டியார் பஞ்சாட்சரம் செட்டியார் அவர்கள் - 31.03.2017 - கனடா

E-mail Print PDF

Image may contain: 1 person

செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்; மூளாய் - கூட்டுறவு வைத்தியசாலை உத்தியோகத்தராக கடமையாற்றிவரும்; தமக்கு பரம்பரையாக வந்த சாந்தை சித்திவிநாயர் ஆலயத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்து ஆலயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்த கொடை வள்ளலும், கனடா- மொன்றியாலில் வசித்து வந்தவருமான உயர்திரு. ஆறுமுகம் செட்டியார் பஞ்சாட்சரம் செட்டியார் அவர்கள் 31.03.2017 அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; ஆறுமுகம் செட்டியார் மங்களம் தம்பதியினரின் அன்பு மகனும்;

சமாதியாகிய நல்லம்மா அவர்களின் அன்புமிகு கணவரும்;

சாரதா, சாவித்திரி, வாசு, விஜி, சண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்மாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்பெறும்.

தகவல்: சாந்தை - சித்திவிநாயகர் ஆலய பரிபாலகர்கள்

 

 

 


சாந்தை சித்திவிநாயகர் மஹோற்சவ விழா - 2017 முன்னறிவித்தல்.- விளக்கங்களுடன்:

E-mail Print PDF

Image may contain: text

ஆடி மாதத்தில் பௌர்ணமி திதியில் தீர்த்த உற்சவம் நிகழக்கூடியதாக மஹோற்சவ விழாவுக்கான கொடியேற்ற தினம் கணிக்கப் பெறுகின்றது. சுருக்கமாக சொல்வதானால் ஒவ்வொரு வருடமும் கதிர்காமக் கந்தனின் தீர்த்த தினத்தில் இவ் ஆலயத்திலும் தீர்த்த உற்சவம் நிகழ உள்ளது. இவ் ஆலயத்தில் 12 தினங்கள் மஹோற்சவ விழா நிகழ்வதால்; அதன் பிரகாரம் இவ் வருடம்:

கொடியேற்றம்: 27.07.2017
தேர்த்திருவிழா: 06.08.2017

தீர்த்தம்: 07.08.2017

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்

வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்

வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்

துள்ளியோடும் தொடர்வினைகளே!

அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய

தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.

பொருள்: யானைமுகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வெற்றிமுகம் கொண்ட

அப்பெருமானை வழிபடுவோருக்கு நல்ல புத்தி உண்டாகும். வெள்ளை நிறம் கொண்ட தந்தத்தையுடைய அவர்,

நம்மைத் தொடரும் தீவினைகளைப் போக்கி அருள்வார். தொப்பையப்பனாகிய விநாயகப்பெருமானுக்கு இனிமையான

அப்பம், மா,பலா, வாழைப்பழங்கள், அன்னம் ஆகியவற்றைப் படைத்து வழிபட நம் வினைகள் வேரோடு அகன்றுவிடும்.

இவ் இல்வாழ்க்கையில் சித்தியும்,  முக்தியும் பெறுவதற்காக மானிடராக பிறந்திருக்கும் நாம்;

சித்தி, முக்தி என்னும் இரு சக்திகளையும் தம் சக்திகளாகப் பெற்று; மிகவும் பழமையும், கீர்த்தியும், நிறைந்து சாந்தைப் பதிதனில்

அருள்பாலிக்கும் சித்திவிநாயகரை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு, எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கடாட்சத்தை பெற்று உய்வோமாக

நன்றி

மரண அறிவித்தல் - திருமதி மதியாபரணம் சிவலிங்கம் அவர்கள் - காலையடி

E-mail Print PDF

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதியாபரணம் சிவலிங்கம் அவர்கள் (23,02 2017) இன்று தனது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - உயர்திரு. செல்லத்துரை இரத்தினதுரை (இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்கள் - இறுதிக் கிரியை இன்று 11.02.2017

E-mail Print PDF

 

காலையடி பண்டத்தரியைப் பிறப்பிடமாகவும், பணிப்புலம் அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற அரச தபால் அதிபர் திரு செல்லதுரை இராத்தினதுரை அவர்கள் 09,02 2017 இன்று சிவபதம் எய்தினார்.

அன்னார்; அமரர்களான செல்லத்துரை - சரசு தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்;

அமரர்களான சோமசுந்தரம் - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்;

பகவதி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்;

கலாமதி, கோமதி,  சுமதி, ரகுபதி, அகிலன்,  இந்துமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்;

மனோகரன்,  இளங்கீரன், தறுமலிங்கம், யாளினி, சிவஜா, யாதவன், ஆகியோரின் அன்பு மாமனாரும்;

இ. தர்சிகா, இ. துவிபன், இ. நிறோசிகா, ம. பரிசித், த. திவோசன், த. ஆரபி, யா. மாதங்கி, யா. சேயவன், யா. சௌமியன், அ. தீரன், அ. யானன், ர. அபிரா, ர. றொனால்ட்  ஆகியோரின் பாசமிகு பேரனாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.02.2016 சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகின்றோம்.

தகவல்:

மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதர-சகோதரிகள், மைத்துனர்

துயர்பகிர:

(0094) 21-2051678

 


மரண அறிவித்தல் - உயர்திரு சின்னையா சுந்தரலிங்கம் அவர்கள் இளைப்பாறிய இ.போ.ச நடத்துனர்- 07.02.2017

E-mail Print PDF

Image may contain: 1 person

உயர்திரு. சின்னையா சுந்தரலிங்கம் அவர்கள் - இளைப்பாறிய இ.போ.ச நடத்துனர்

பிறப்பு: 05.01.1943                                                     இறப்பு: 07.02.2017

சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்திரு. சின்னையா சுந்தரலிங்கம் அவர்கள் 07.02.2017 இன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார் காலஞ்சென்ற சின்னையா - கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும்;

காலஞ்சென்ற வீரசிங்கம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்;

சிவபதமெய்திய நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்;

சத்தியவாணி(சுவிஸ்), வினோதினி (டென்மார்க்), மதிமாறன் (ஜேர்மனி ) ஜெயதயாளினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

சந்திரசேகரன், பத்மநாதன், துஷாந்தி, ஜெயநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;

சங்கீதா, சஜீந்தா, சஜீபன், சுஜானா,சுஜானி, சூர்யா, கிஷான், அபினேஸ், ஜஸ்வன், ஜெயஜனனி,ஜெனனி, ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு பேரனாரும்;

காலஞ்சென்றவர்களான, மகாலிங்கம், செந்தில்மணி, ஏரம்பமூர்த்தி, பரமேஸ்வரி, தயாபரன், மற்றும் குலமணி ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்;

அன்னாரது இறுதிக்கிரியைகள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சாந்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்படும்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்


தகவல் குடும்பத்தினர்
Page 8 of 124

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்