Saturday, Mar 24th

Last update10:58:28 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு

மரண அறிவித்தல் - செல்வன் ரூபன் ருகிஷ்னன் - சுவீடன் - 01.04.2017

E-mail Print PDF

Image may contain: 1 person, standing

மலர்வு: 09.05.2017                                   உதிர்வு: 01.04.2017

சுவீடன் Helsingborg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரூபன் ருகிஷ்னன் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்; ரூபன் - கிரிஷா தம்பதியினரின் அன்பு மகனும்;

காலஞ்சென்ற செல்லத்துரை - நாகரத்தினம் தம்பதியினரதும்; ரவீந்திரன் - வனிதா  தம்பதியினரதும் அன்புப்  பேரனும்;

காலஞ்சென்ற தெய்வேந்திரம் – விவேகம்மா  தம்பதியிரின் அன்புப் பூட்டப் பிள்ளையும்;

மதிவதனன் ஜீவராணி, சசிவதனன் நாகராணி, செல்வவதனன் பிரவீனா, பிரேம் யசித்தா, எபி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்;

சிவரூபன்  மைதிலி,  வசிகரன்  தட்சாஜினி ஆகியோரின் அன்பு மருமகனும்;

செளமியா, சஞ்சய், சயின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

தஸ்மிகா, தட்சிகா, சயானா, சயந், சயிந், செபிஸ்னன், செயினா, செனுயா ஆகியோரின் அன்பு  உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

இறுதிக் கிரியைகள்: வியாழக்கிழமை 06.04.2017, 11:30 மு.ப — 02:00 பி.ப

முகவரி:         Pålsjö kapell, Kullavägen 94, 254 54 Helsingborg, Sweden

தொடர்புகளுக்கு

ரூபன்(அப்பா) — சுவீடன்

செல்லிடப்பேசி:      +46735773560

மதி — சுவீடன்

செல்லிடப்பேசி:      +46760084381

சசி — சுவீடன்

செல்லிடப்பேசி:      +46704549916

செல்வன்(பெரியப்பா) — சுவீடன்

செல்லிடப்பேசி:      +46760730495
மரண அறிவித்தல் - ஆறுமுகம் செட்டியார் பஞ்சாட்சரம் செட்டியார் அவர்கள் - 31.03.2017 - கனடா

E-mail Print PDF

Image may contain: 1 person

செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்; மூளாய் - கூட்டுறவு வைத்தியசாலை உத்தியோகத்தராக கடமையாற்றிவரும்; தமக்கு பரம்பரையாக வந்த சாந்தை சித்திவிநாயர் ஆலயத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்து ஆலயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்த கொடை வள்ளலும், கனடா- மொன்றியாலில் வசித்து வந்தவருமான உயர்திரு. ஆறுமுகம் செட்டியார் பஞ்சாட்சரம் செட்டியார் அவர்கள் 31.03.2017 அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; ஆறுமுகம் செட்டியார் மங்களம் தம்பதியினரின் அன்பு மகனும்;

சமாதியாகிய நல்லம்மா அவர்களின் அன்புமிகு கணவரும்;

சாரதா, சாவித்திரி, வாசு, விஜி, சண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்மாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்பெறும்.

தகவல்: சாந்தை - சித்திவிநாயகர் ஆலய பரிபாலகர்கள்

 

 

 


சாந்தை சித்திவிநாயகர் மஹோற்சவ விழா - 2017 முன்னறிவித்தல்.- விளக்கங்களுடன்:

E-mail Print PDF

Image may contain: text

ஆடி மாதத்தில் பௌர்ணமி திதியில் தீர்த்த உற்சவம் நிகழக்கூடியதாக மஹோற்சவ விழாவுக்கான கொடியேற்ற தினம் கணிக்கப் பெறுகின்றது. சுருக்கமாக சொல்வதானால் ஒவ்வொரு வருடமும் கதிர்காமக் கந்தனின் தீர்த்த தினத்தில் இவ் ஆலயத்திலும் தீர்த்த உற்சவம் நிகழ உள்ளது. இவ் ஆலயத்தில் 12 தினங்கள் மஹோற்சவ விழா நிகழ்வதால்; அதன் பிரகாரம் இவ் வருடம்:

கொடியேற்றம்: 27.07.2017
தேர்த்திருவிழா: 06.08.2017

தீர்த்தம்: 07.08.2017

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்

வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்

வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்

துள்ளியோடும் தொடர்வினைகளே!

அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய

தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.

பொருள்: யானைமுகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வெற்றிமுகம் கொண்ட

அப்பெருமானை வழிபடுவோருக்கு நல்ல புத்தி உண்டாகும். வெள்ளை நிறம் கொண்ட தந்தத்தையுடைய அவர்,

நம்மைத் தொடரும் தீவினைகளைப் போக்கி அருள்வார். தொப்பையப்பனாகிய விநாயகப்பெருமானுக்கு இனிமையான

அப்பம், மா,பலா, வாழைப்பழங்கள், அன்னம் ஆகியவற்றைப் படைத்து வழிபட நம் வினைகள் வேரோடு அகன்றுவிடும்.

இவ் இல்வாழ்க்கையில் சித்தியும்,  முக்தியும் பெறுவதற்காக மானிடராக பிறந்திருக்கும் நாம்;

சித்தி, முக்தி என்னும் இரு சக்திகளையும் தம் சக்திகளாகப் பெற்று; மிகவும் பழமையும், கீர்த்தியும், நிறைந்து சாந்தைப் பதிதனில்

அருள்பாலிக்கும் சித்திவிநாயகரை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு, எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கடாட்சத்தை பெற்று உய்வோமாக

நன்றி

மரண அறிவித்தல் - திருமதி மதியாபரணம் சிவலிங்கம் அவர்கள் - காலையடி

E-mail Print PDF

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதியாபரணம் சிவலிங்கம் அவர்கள் (23,02 2017) இன்று தனது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

Page 10 of 127

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்