Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம்
 

குளிர்கால ஒன்றுகூடலும் ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டியும் -கனடா பண்கலை பண்பாட்டுக் கழகம் - இன்று 25.12.2014

E-mail Print PDFஆங்கில சொற்கூட்டல் போட்டிகள் 25.12.2014 திகத பகல் 1.00 மணி முதல் 3840 finch ave E.  அமைந்துள்ள பொலிற்றன் விழா மண்டபத்தில் நடைபெறும்.

இவ்வாண்டுக்கான குளிர்கால ஒன்று கூடலும் கலை நிகழ்ச்சிகளும் 25.12.2014 திகதி மெற்றோ பொலிற்றன் விழா மண்டபத்தில் மாலை 6.30 மணி முதல் சிறப்பாக இடம்பெறும்.

இவ் விழாவில் பங்கு பற்றி சிறப்பிக்க குடும்ப சமேதராக வருகை தருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

தொடர்புகளுக்கு
416-731-2829
(416) 829-7063

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2014 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு தரம் பிரிக்கப்பெற்று தரங்கான சொற்கள் கீழே தரப்பெற்றுள்ளன. தங்கள் பிள்ளைகளின் பிறந்த ஆண்டிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் பிறந்த ஆண்டினை உறுதிப்படுத்த அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

 

தரம் - JK & SK

Apple
king
ball
jaw
boy
just
bill
hold
hat
lion
cat
miss
milk
salt
land
tray
nail
two
new
zoo
bug
yell
bus
bus
farm
add
gum
gift
girl
flag
fish
file
gift
joke
free
box
gate
goat
man
jam


தரம் - GRADE 1&2

about*
hill
job
doing
jump
daddy
just*
father*
keep
feed
king
feel
land
feet
last
fell*
late
going*
lay
gold
left
gone
made*
grade*
make*
grass
many*
have*
meat
hear*
men
help
add
here*
after
ago
any
baby*
back
bad
bag
base
brown
bus
buy*
bring
candy
change
child
city
clean*
dear
deep
deer


தரம் - Grade 3 &4

across
scare
group
second
haven't*
since
happened*
slowly
harden
stories
instead*
against
known
answer*
laugh
awhile*
middle
between
minute
board
mountain
bottom
ninth
breakfast
ocean
broken
office
build
parent
building
peanut
captain*
pencil
carried
picnic
caught*
police
charge*
Saturday*
chicken
pretty
circus
raise
discover
quite
doctor*
radio
doesn't
really
dollar
fracture
eighth*
during
everybody*
example
except
excuse
field*
fifth
following
good-by*


தரம் - Grade 5 & 6

although
coincidence,
America
vacuum
among
grocery,
arrive
horrible
attention
resemble,
beautiful*
scissors,
countries
identical,
course*
obedience,
cousin*
necessary,
decide
different*
evening
favorite
finally*
future
happiest
happiness
important
interest
piece
planet
present
president
principal*
probably*
problem
receive*
sentence
several
special
suddenly
suppose*
surely*
surprise*
they're*
through
usually
continue,
adventure,
gracious,
drought,
disaster,
chemical,
surgery,
knowledge,
pursue,
serious,
orchestra,
believe,
legible,
establish,
cooperate,


தரம் - Grade 7 & 8

coincidence,
ceramic,
vacuum,
essential,
grocery,
poisonous,
horrible,
ingredient,
prefer,
concept,
resemble,
frequency,
scissors,
nocturnal
government,
durable
ignore,
masquerade
column,
parachute
science,
backgammon
responsible,
apostrophe
character,
partial,
schedule,
rhythm,
conscience,
imaginary,
sentence,
constitution,
generosity,
economic,
endeavor,
cylinder,
abbreviate,
picturesque,
molecular,
amateur,
unique,
mischievous,
approximate,
descendant,
epidemic,
communicate,
scheme,
substitute,
acknowledge,
gigantic,
contagious,
legislature,
rehearsal,
prosperous,
tragedy,
sanctuary,
necessary,
customary,
aerial,
category,
definite,
benevolent,
politician,
vocalize,
threaten,
priority,
intercept,
declaration

 

 

தகவல்: பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

 

 

 


குளிர்கால ஒன்றுகூடலும் நத்தார் தின கொண்டாட்டமும் - அழைப்பிதழ் - 25.12.2014 - பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

E-mail Print PDF

தொடர்புகளுக்கு: விஜி அவர்களை அழையுங்கள்

தகவல்: புலேன் அவர்கள்

பண்கலை பண்பாட்டுக் கழகம் - பேச்சுப்போட்டி - 09.11.2014 - பேச்சுக்கள் இணைப்பு

E-mail Print PDF


கனடா பண்கலை பண்பாட்டுக்கழக வாணி விழா 2014 ஒக்டோபர் 18 சனிக்கிழமையில் கந்தசாமி விமலன் அரங்கில் சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பித்த அத்தனை உறவுகளுக்கும் நிகழ்ச்சிகளை வழங்கியவர்க்கும் கனடா பண்கலை பண்பாட்டுக் டுக்கழகம் நன்றியை தெரிவத்துக்கொள்கின்றது.

கனடா பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் பேச்சுப் போட்டிகள்

நவம்பர் மாதம் 9ஆம்நாள் மு. ப. 11:00 மணி முதல் பி. ப. 3:00 மணி வரை

5739 Finch Av.  E
Scarburough வில் நடை பெறும்

பேச்சுப்போட்டிப் படிகளை இணையத்தளங்களில் இருந்து பெற்று உங்கள் பிள்ளைகளை தயார்ப்படுத்துங்கள்.

அத்துடன் குளிர்கால ஒன்றுகூடலுக்கான நிகழ்ச்சித்தயாரிப்புகளை மேற்கொள்வதுடன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கனடா பண்கலைபண் பாட்டுக்கழகம் கேட்டுக்கொள்கின்றது.

தொடர்புகளுக்கு:

கமலேஸ்: 647-781-4997
மனுவேந்தன்:416-569-5121

பேச்சுப் போட்டிக்கான பேச்சுக்கள் கீழே தரப்பட்டுள்ளன. பங்குபற்றுவோர் தங்கள் வயதிற்கு உரிய  பேச்சுக்களை இவற்றுள் தேர்ந்தெடுத்து மனப்பாடம் செய்து போட்டிகளில் பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பண்கலைப் பண்பாட்டுக் கழகம் -கனடா

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்வதோடு, எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”

 

பேச்சுப் போட்டிக்கான பேச்சுக்கள்

6 வயதுக்கு உட்பட்டோர்
அம்மா

எங்களைப் பெற்றவள் அம்மா. நாங்கள் உலகில் முதலில் கண்ட தெய்வமும் அம்மாவே.
பாலூட்டித் தாலாட்டி வளர்ப்பவள் எங்கள் அம்மா. நல்ல உணவுகள் தருவாள். முகம் மலர்ந்து கட்டி அணைத்து முத்தமும் தருவாள். எங்கள் கவலைகள் நீங்கக் கதைகளும் கூறுவாள். பாட்டுப் பாடியும் வளர்ப்பாள். நாங்கள் குறும்புகள் செய்தால் பொறுமையோடு புத்திமதிகள் கூறி நம்மை நல்வழிப்படுத்துவாள். நல்லவர்களாக நாம் வாழ வழிகாட்டுவாள். நல்வழி காட்டும் அம்மாவை நாம் தினமும் வணங்க வேண்டும். அவரது சொற்கேட்டு நடக்க வேண்டும்.

“தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை” என்றார் ஔவைப்பாட்டி. அன்பே வடிவான அம்மாவை மதித்து வாழ்வோம். அவர் பெருமை கொள்ள வாழ்ந்து காட்டுவோம். அம்மாவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நல்லவர்களாக “நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மை செய்வோம்”.

வணக்கம்


9 வயதுக்கு உட்பட்டோர்

இறை வழிபாடு


இவ்வுலகில் எண்ணில்லாத உயிரினங்கள் வாழ்கின்றன. அவை ஓர் அறிவுடைய புல், பூண்டு முதல் ஆறு அறிவுடைய மனிதன் வரை அடங்கும். விலங்குகள் ஐந்து அறிவுடையவை. ஆறாவது அறிவான பகுத்தறிவுடையவன் மனிதன் மட்டுமே. எதையும் ஆராய்ந்து, அறிந்து, தெரிந்து செய்யும் வாழ்வே மனித வாழ்வு.

உலகில் பல சமயங்கள் உள்ளன. இறைவனுக்கு ஊரில்லை, பேரில்லை, அவன் விருப்பு, வெறுப்பு அற்றவன். குணம், குறிகளைக் கடந்து நிற்பவன். உருவம் இல்லாதவன். அதனாலேயே நம் முன்னோர்கள் இந்துசமயத்தில் இறைவனை நினைக்கும் வண்ணம் குறியீடாகப் பல உருவங்களைப் படைத்தனர். அவ் உருவங்களுக்குப் பெயரும் இட்டனர்.

புத்தரால் பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. யேசுநாதரால் கிறிஸ்தவ சமயம் உருவானது. முகமது நபிகளால் இஸ்லாம் சமயம் உருவாகியது.

இறைவழிபாட்டில் மனத்தூய்மை மிக இன்றியமையாதது. இறைவனை நாம் மனத்தூய்மையுடன் வழிபட வேண்டும். தினமும் காலையும், மாலையும் இறைவழிபாடு செய்தல் அவசியமாகும். பிற உயிர்களுக்கு நாம் எவ்விததீமையும் செய்யக் கூடாது. பொய் சொல்லுதல், களவுசெய்தல், புறம் கூறுதல், தீய வார்த்தைகளைப் பேசுதல், மது அருந்துதல் என்பன பாவச் செயல்களாகும். பிற உயிர்களுக்குச் செய்யும் நன்மைகளே இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும்.

எல்லா மதங்களும் “இறைவன் அன்பே வடிவானவன்”; எனக் கூறுகின்றன. நாம் எந்தச் சமயத்தைப் பின்பற்றுகிறோமோ அதன்வழி நிற்போம். “எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி, அகிம்சை வழிநின்று, அறவாழ்வு வாழ்வோம்.”

வணக்கம்


12 வயதுக்கு உட்பட்டோர்

விபுலாநந்த அடிகள்

ஈழம் தந்த முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகள். அவர் தமிழ் உலகம் கண்ட பேரறிஞர். அரும் பெரும் அறிஞர். தமிழ் மொழிக்கு அளப்பரிய பணிகள் புரிந்தவர். தமிழ்ச் சிறுவர்களின் வளர்ச்சிக்குப்  பயன்தரும் பணிகள் செய்தவர். ஆசிரியர், கல்லூரிமுதல்வர், பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர் முதலிய பொறுப்புகளை வகித்ததுடன் நூலாசிரியராகவும் விளங்கியவர்.

இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் உள்ள காரைதீவுக் கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இளமையிலேயே தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றார். உயர் கல்வியை மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித மைக்கேல் கல்லூரியில் பயின்றார். மேலும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவியற்றுறைப் பட்டதாரியானார்.

இவர் யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமை ஆற்றினார். இவரது உள்ளம் துறவு வாழ்வை நாடியது. இவரது துறவுப் பெயரே சுவாமி விபுலாநந்தர் ஆகும். தமிழ் மொழியையும், இறைநெறியையும் வளர்க்கப் பல பள்ளிகளை அமைத்தார்.

இவரது ஆராய்சித் திறனின் பயனாக ஆங்கிலவாணி, யாழ்நூல், மதங்கசூளாமணி ஆகிய நூல்கள் உருவாகின. தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளுள் முதன்மையானது அவர் எழுதிய “யாழ்நூல்” ஆகும். இவரது கல்வித் திறமையால் “தமிழ்நாட்டின் முதலாவது தமிழ்ப் பேராசிரியர்” எனும் சிறப்பினையும் பெற்றார். காரைதீவிலுள்ள சாரதா வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி ஆகியன இவரால் நிறுவப்பட்டவையே.
தமிழ் மொழிக்கும், சமயத்திற்கும் தொண்டாற்றிய அடிகளார் இறைவனிடத்து அளவற்ற பக்தி கொண்டவர். சிறுவர்களாகிய நாம் இவரையும் இவர்போன்ற தமிழ்ப் பெரியார்களையும் மனதில் நிறுத்திப் போற்றுவோம்.

வணக்கம்.


15 வயதுக்கு உட்பட்டோர்

மாணவர் கடமை

“இளமையிற் கல்” என்பது ஔவையார் கூறிய வாக்கு. அதற்கு இணங்க எங்கள் பெற்றோர்கள் எங்களைப் பாடசாலைக்கு அனுப்பி கல்வி கற்பிக்கிறார்கள். பாடசாலையில் நாம் ஒழுக்கமாக இருந்து ஆசிரியர் கற்பிக்கும்; பாடங்களை ஒழுங்காகப் படிக்க வேண்டும். ஆசிரியர் பணிக்கும் வேலைகளைச் செய்ய வேண்டும். திறமையாகவும், ஒழுக்கமாகவும் திகழும் மாணவர்கள் நன்மாணாக்கர் என அழைக்கப்படுகின்றனர்.

கனடாவில் பலஇன மக்கள் படிக்கும் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களாகிய நாமும் சேர்ந்து படிக்கிறோம். ஒவ்வொரு இன மாணவர்களும் வித்தியாசமான பழக்கவழக்கங்களை உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். அவ்வாறே தமிழ் மாணவர்களாகிய எங்களது பழக்கவழக்கங்களும் வித்தியாசமானவையே. எப்படி இருந்தாலும் நாம் மாணவர் என்ற நிலையில் அவர்களோடு அன்பாகவும், பண்பாகவும் பழகவேண்டியது அவசியமாகும். ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் எங்கள் கலாச்சாரத்தை அதன் தனித்துவத்தை மறக்கக்கூடாது. அவ்வாறு நாம் வாழும்போதுதான் எங்களை மற்றவர்கள் தமிழ் மாணவர்களாகக் கருதுவார்கள். எங்கள் சமுதாயத்தின் பெருமையை உணர்வார்கள். “தொட்டிற் பழக்கம் சுடுகாடுவரை” என்பதற்கிணங்க, மாணவர்களாகிய நாம் இளமையில் இருந்தே எங்கள் பண்பாட்டிற்கு அமைய வாழவேண்டும்.

கல்வி கற்கும் மாணவர்களாகிய நாம்; “தேன்தரும் நன்மலர்களை நாடிடும் வண்டினம்” போல பயன்தரும் நன்நூல்களைத் தேடிப்படித்திடல் வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான அறிவினைத் தரும் நூல்களைக் கற்றிடல் வேண்டும். பாடசாலைகளிலோ அல்லது வேறிடங்களிலோ பண்பாடற்ற மாணவர்களுடன் பழகுவதைத் தவிர்த்தல் வேண்டும். “இளமையிற் கல்வி சிலையில் எழுத்துப்போல்” மனதில் பதியக்கூடியது. அக்கல்வியறிவு வாழ்க்கையில் பயன்தரக்கூடியது. ஆதலால் நம் இளமைப்பருவத்தில் பயனுள்ள பாடநூல்களுடன் வாழ்க்கைக்குத் துணைபுரியும் நீதிநூல்களையும், சமயநூல்களையும் படிக்க வேண்டும்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

என்ற வள்ளுவன் வாக்குக்கமைய இளமையில் அவற்றின் பொருளறிந்து கற்கவேண்டும். கற்றதை பின்பற்றிவரின் நம் வாழ்வில் சமுதாயம் போற்றும் நன்மனிதர்களாக நாம் திகழமுடியும்.
உண்மையில் மாணவப் பருவத்தில் நாம் எதிர்காலம் பற்றிய சிந்தனை அற்றவர்களாக இருக்கின்றோம். இலகுவில் உணர்ச்சிகளுக்கு ஆட்படும் மனநிலை கொண்டவர்களாக உள்ளோம். ஓர் மாயையான உலகில் சஞ்சரிக்கின்றோம். அதனாற்றான் ஔவைப்பாட்டி மாணவர்களாகிய எங்களுக்கு “மேன்மக்கள் சொற்கேள்” என அறிவுரை கூறியுள்ளார். அதற்கிணங்க தந்தை, தாய், குரு ஆகியோரின் சொற்கேட்டு நாம் வாழவேண்டும்.

“அடித்தளம் வலிமையாக இருப்பின் கட்டிடம் உறுதியாக இருக்கும்” என்பதுபோல் இளமையிற் கற்கும் கல்வியும், ஒழுக்கமும் சிறப்பாக அமையுமாயின் மாணவர்களாகிய எங்கள் வாழ்க்கை என்றென்றும் உறுதியானதாக அமையும். சென்ற இடமெல்லாம் சிறப்பாக வாழ முடியும்.

வணக்கம்18 வயதுக்கு உட்பட்டோர்

விஞ்ஞானத்தின் விளைவுகள்

விஞ்ஞானத்தின் விளைவாக இன்று இந்த  நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியோர;களே, எமது பேச்சுக்களை செவிமடுத்து நடுநின்று தீர;ப்புக்கூறவுள்ள நடுநிலையாளர;களளே வணக்கம்!
மனித நாகரீக வளர;ச்சியில் விஞ்ஞானம் மிகமுக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது என்பது நாமனைவரும் அறிந்த உண்மை. மனித வரலாற்றைச் சற்றுப் பின்நோக்கிப் பார்ப்போமேயானால், எம் முன்னோர; கடந்துவந்த பாதை எத்துணை ஆபத்துக்களையும், சிரமங்களையும் கொண்டிருந்தது,  என்பது நன்கு புலனாகும். ஆதியில் குகையில் வாழ்ந்த மனிதன் படிப்படியாக முன்னேறி அவன் இன்று இயற்கையின் கட்டுப்பாடுகளைக் கடந்து தான் இயற்கையைக் கட்டுப்படுத்துமளவிற்கு முன்னேறியுள்ளான் என்றால் அது புதிய கண்டுபிடிப்புக்களினாலேயே ஏற்பட்டது என்பதனை அறுதியிட்டுக்கூறலாம்.

ஆதியில் இயற்கை அழிவுகளுக்கு அகப்பட்டு எமது முன்னோர் மீளமுடியாது மாண்டு போன கதைகள் எதை உணர்த்துகின்றன. மலேரியா, மஞ்சள் காய்ச்சல், கொள்ளை, வாந்திபேதி, சின்னம்மை, பெரியம்மை, பொக்குளிப்பான், பிளேக் போன்ற நோய்கள் மன்பதையை அழித்தொழித்த உயிர்கொல்லி நோய்கள் இன்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட உதவியது அறிவியல் வளர்ச்சியின் காரணமாக அமைந்த கண்டுபிடிப்புக்கள்தான் என்பதனைக் கூறுவதில் பெருமிதம் அடைகின்றேன்.

அதுமட்டுமல்ல அண்மையில் உலகையே உலுக்கிய எயிட்ஸ், பறவைக் காய்ச்சல் எனப்படும் பயங்கர நோய்கள் வேகமாக உலகெங்கும் பரவிவந்து சடுதியில் ஆட்பலி கொள்ளத் தொடங்கின. ஆறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக திறன்மிக மருத்துவத்தினால் அவற்றைத் தடுத்தனர். அவ்விதம் தடுத்திராவிட்டால் இன்று மனித இனத்தில் பாதிப்பேருக்குமேல் அழிந்துபோயிருப்பர். இன்று எயிட்ஸ் எனப்படும் உடலின் எதிர்ப்பு நிலையை மந்தமடையச் செய்யும் நோய் உலகெங்கும் பரவி மனித உயிர்களைக் குடித்துவந்தது எனினும் அதனைக்கூட அறிவியல்துறை இன்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

வருடக்கணக்காக என்ன நோய் என்றே அறியப்படாமல் மாண்டு வந்த மனித இனம் இன்று ஒருவருக்கு நோய் வந்தால் அது என்ன என்பதனை மிக விரைவில் கண்டறிந்து அதற்கேற்ப வைத்தியப் பராமரிப்புச் செய்யப்படுகின்றது. அதற்கு இன்று வளர;ச்சியடைந்துள்ள  நவீன தொழில் நுட்ப வளர்ச்சியே என்று ஆணித்தரமாகக் கூறலாம்.

இவை ஒருபுறமிருக்க மனிதன் இன்று நிலவுக்கு மட்டுமல்ல அகிலத்தில் என்ன நடக்கின்றது என்பதனை  அறிந்துகொள்ள, வெளியுலகிற்கு செய்மதிகளை அனுப்பி புதுப்புதுத் தகவல்களைக் கண்டறிகின்றான்.  அதுமட்டுமன்றி நாம் உலகின் எந்தப் பாகத்திலிருப்போருடனும் உடனடியாகத் தொடர்புகொள்ள, பிரயாணம் செய்ய, அவர்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பினை எமக்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புககள் தந்துள்ளன. வானொலி, தொலைபேசி, விமானப் போக்கு வரத்து, கணனி போன்றன விஞ்ஞான வளர்ச்சியின் விளைவுகளே என்றால் தவறாகாது.

இவை ஒருபுறமிருக்க இன்னொருபுறம் விஞ்ஞானத்தின் விளைவுகளாக பல தீங்குகளும் மனித சமூகத்திற்குக் கிடைக்கத்தான் செய்கின்றது என்பதும் கருத்திற் கொள்ளப்படவேண்டியதொன்றாகும். நவீன ஆயுதங்களின் கண்டுபிடிப்புக்கள் மனித இனத்தின் பாதுகாப்புக்குமட்டுமன்றி அதன் அழிவிற்கே கூடியளவிற்குப் பயன் படுத்தப்படுகின்றன. அணு ஆயுதங்கள் உலகில் பேரழிவைக் கொண்டுவரத்தக்கன. இரண்டாம் உலகப் போருக்குக் காரணமே இந்த அறிவியலின் வளர்ச்சியும் அதன் கண்டுபிடிப்புக்களும் தான் என்பதிலும் நியாயம் இல்லாமலில்லை.

ஆனால் நாம் அவற்றை நல்ல நோக்கத்திற்காகப் பயன்படுத்துவமேயானல் அதனால் பெரும் பயனை மன்பதை அறுவடை செய்யும் என்பது மறுக்கப்படமுடியாதது. யப்பான் மீது ஈவிரக்கமின்றி  அணு ஆயுதத்தைப்பிரயோகித்தது அமெரிக்க வல்லரசு. இதனால் அங்கு கிரோசிமா, நாகசாக்கி என்னும் இரு நகரங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டன. அந்தக் காற்றலையைச் சுவாசித்த சூழலில் உள்ள மக்கள் இன்றும் அதன் பாதிப்புக்கு உள்ளாகி கூன், குருடு, முடம், செவிடாகி வாழ்கின்றார்கள். இந்தத் தாக்கம் அவர்களோடு மட்டும் நின்று விடாது பரம்பரை பரம்பரையாகத் தாக்கத்தைத் தருகின்ற துர்ப்பாக்கிய விளைவுகள் அறிவியலின் கண்டுபிடிப்புக்களால் ஏற்பட்டவை எனினும் அதனையும் பெரிய வல்லரசுகள் தமது ஆதிக்க மேலாண்மைக்காகப் பயன்படுத்துவது நிறுத்தப்படவேண்டி ஒன்று.

சுலபமாக பணத்தைத் திரட்டிக்கொள்ளும் ஒரு வழியாக ஆயுத உற்பத்தியோடு பல்லாயிரக் கணக்கான உற்பத்திகள் கைத்தொழில் மையங்களினால் ஏற்படுத்தப் படுகின்றன. இதனால் இன்று சூழல் மாசடைந்து வருகின்றது. நிலம், நீர், காற்று ஆகிய மனிதனுக்கு இன்றியமையாத இயற்கையின் கொடைகள் மாசாக்கப்பட்டு மனிதன் பல நோய்களுக்கு ஆளாகுவதற்கு விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பக்களே காரணம் என்றால் தவறாகாது.  ஆதிக்கப் போராட்டங்கள் காரணமாக குண்டு மழைகள் பல நாடுகளில் பொழியப்படுகின்றன. அவற்றால் வரும் நச்சுப்புகை காற்றில் கலப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்ர். இது விஞ்ஞானத்தின் தவறா அல்லது கண்டுபிடித்தவரின் தவறா அல்லது அதனைப் பயன்படுத்துவோரின் தவறா என்பதனை உலகம் சிந்திக்கவேண்டும்.

விஞ்ஞானத்தின் விளைவுகளுக்கு இரண்டு முகங்கள் உண்டு நல்லனவற்றைச் செய்யத விஞ்ஞானம்  தீயனவற்றிற்கும் பயன்படுகின்றது. அதன்விளைவுகளுக்கு மன்பதை முகம் கொடுக்கவேண்டிய நிலைக்குதத் தள்ளப்பட்டுள்ளது. விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புக்களை மன்பதையின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தினால் அதன்விளைவு நன்மை அளிப்பதாக அமையும் எனக்கூறி எமது சூழலை நாம் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் எனவேண்டி சந்தர்ப்பத்திற்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்


கனடா பண்கலை பண்பாட்டு கழக வாணி விழாவும் கலை நிகழ்ச்சியும் oct 03 -2014 வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.  தவிர்க்கமுடியாத காரணங்கள் காரணமாக குறிப்பிட்ட தேதியில் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் வாணி விழாவும் கலை நிகழ்ச்சியும் பிறிதொரு நாளில் நடத்தப்பெறும் என்பதை தெரிவிப்பதுக்கொள்ளுகின்றோம்.

வெகுவிரைவில் புதிய இடமும் நாளும் அறிவிக்கப்படும்.

நிர்வாகம்
பண்கலை பண்பாட்டுக் கழகம்

ஆண்டு தோறும் கனடா பண்கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்பெறும் வாணி விழா (விஜயதசமி - நிறைவு நாள்) இவ்வாண்டு 2014 ஒக்டோபர் மாதம் 03 நாள் வெள்ளிக் கிழமை Bellamy Ellsmere சந்திப்பில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலயத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இவ்விழாவில் உறவுகள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பண்கலை பண்பாட்டுக்கழக அன்புடன் அழைக்கின்றனர்.

இவ்விழாவை முன்னிட்டு நடத்தப்பெறும் பேச்சுப்போட்டிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

தகவல்
பண்கலை பண்பாட்டுக்கழகம்- கனடா

கமல்: 647-781-4997
வேந்தன்: 416-731-2829

Page 9 of 37

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்