Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம்

சுவைன் fப்ளூ (இன்புளுவென்ஸா) எனும் பன்றிக் காய்ச்சலும் தடுப்பு மருந்தும்

E-mail Print PDF

பன்றி

உயிர்க்கொல்லி நோயான பன்றி காய்ச்சல் “சுவைன் fப்ளூ” (Swine Flu) என்பது, H1N1 என்ற ஒரு வகை வைரஸால் பரவுகிறது.  இது (Orthomyxoviridae) “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது.  “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன.  இதில் H1N1; H1N2; H3 N2 போன்ற வைரஸ் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சில பிரதேசங்களில் இன்புளுவென்ஸா நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளதகவும் மக்களை விளிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது உயிர் கொல்லி நோயாகும். இந்நோய் இன்புளுவென்சா- A, இன்புளுவென்சா- B, மற்றும் இன்புளுவென்சா- C என்னும் மூன்று வகையான வைரஸஸினால் ஏற்படுகிறது.  இதில் இன்புலியன்சா A யினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது.  இந்நோயை பரப்பும் வைரஸ் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள்.  பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு ஆர்த்தோமிக்சோவிரிடே குடும்பத்தை சேர்ந்த வைரஸினால் பரவுகிறது.

பன்றிக் காய்ச்சலின் தீவிரத்தை ஆறு கட்டங்களாக உலக சுகாதார நிறுவனம் பிரித்துள்ளது.  தற்பொழுது மூன்றாவது கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்திற்கு இந்நோய் தீவிரமடைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்சிகோவிலும்,  அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்களில், பன்றி, பறவைகள் மற்றும் மனிதர்களுக்கான ஜீன்கள் ஒருசேர அமைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வைரஸ் அமைப்பு இதுவரை உலகில் எங்குமே இல்லை.  இந்த புதிய வைரஸ் மனிதர்களிடம் அதிவேகமாக பரவி தாக்கி வருகிறது.

பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகைத் (வைரஸ்) தீநுண்மம், 1918இல் பரவி ஏறக்குறைய 50 மில்லியன் மனித உயிர்கள் இறப்பதற்குக் காரணமாயிருந்தது., எசுப்பானிய ஃப்ளூ என்றழைக்கப்படும் கொள்ளை நோயின் பரம்பரையில் வரும் ஒரு வகைத் தீநுண்மமே ஆகும்.  ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய எச்1என்1 தீநுண்மம் ஆகும்.. இது இன்ஃப்ளுயென்சா ஏ வகைத் தீநுண்மத்தின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுறுக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது.

உயிர்க்கொல்லி நோயான பன்றிக்காய்ச்சல் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உலக மக்கள் தொகை 660 கோடியில்; H1N1 வைரஸினால் பாதிக்க பட்டவர்கள் 1,77,457 பேர் எனவும். இன்நோயினால் 06.08.09 அன்று வரை இறந்தவர்கள் 1462 எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்

வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும்.  உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, இருமல், தலைவலி, சோர்வு, களைப்பு, பசியின்மை போன்றவை வரும்.  முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும்.  பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.

Read more...

நீரழிவு நோயும் அதன் தாக்கங்களும்

E-mail Print PDF

உடம்பு

நீரழிவு நோய் என்றால் என்ன?

நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வழங்குகின்றது. குளுக்கோஸில் இருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ள இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreas) என்னும் சுரப்பி உள்ளது. இங்குதான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் (சீனியின்) அளவு அதிகமாகிறது.

இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான குளுக்கோஸ் அல்லது சீனி இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் "சுய கட்டுப்பாடுடன்" வாழவேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.

Read more...

இரத்தமும் தேவையும்

E-mail Print PDF

இரத்தமும் தேவையும்:

இரத்தம்

எமது குருதியில் செங்குருதிச் சிறு துணிக்கைகள், வெண்குருதிச் சிறு துணிக்கைகள், குருதிச் சிறு தட்டுக்கள், திரவவிழையம் என்பன அடங்குகின்றன. இரத்த வங்கி, தானமாக வழங்கப்படும் குருதியிலிருந்து இவையனைத்தையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கின்றது.

இவ்வாறு தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட பகுதிகள் குளிரூட்டியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுத் தேவையான நோயாளர்களுக்கு வழங்கப்படுகிறது. குருதியின் பிரிவுகள், குருதி மூலம் பரவும் நோய்களான எய்ட்ஸ், செங்கமாலை போன்றவை இரத்த தானம் செய்யும் ஒவ்வொருவருடைய குருதியிலும் உள்ளதா எனப் பரிசீலிக்கப்படுகிறது.

குருதித் திரவவிழையம் ஒரு வருடம் வரை அதி குளிரூட்டியில் வைக்கப்பட்டு அதன் தரம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு பொருத்தமான நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. செங்குருதிச் சிறு துணிக்கை வகைகள் இரத்த வங்கியின் குளிரூட்டியில் 2°செ-6°செ இல் வைத்து 35-42 நாட்கள் வரை பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் வாசிக்க கீழே உள்ள் read more என்ற பொத்தானை அழுத்தவும்

Read more...

இரத்தமும் இரத்த அழுத்தமும் - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

இதயம்:

இதயத்தின் அழகிய துடிப்புகளே உயிருக்கு அடையாளம். 
துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி. 
துடிப்புகளின் மவுனம் அதுவே மரணம். 
இறைவனின் படைப்புகளில்  ஓர் அற்புதத் தொழிற்சாலை.

ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், நெஞ்சு வலி மற்றும் படபடப்பு இன்னும் இது போன்ற வியாதிகளின் கதாநாயகனே இந்த இதயம் தான்.

உடல் உறுப்புகளில் முக்கியமானவை இதயம், சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப் பை, கல்லீரல் போன்றவை. இவைகள் மிக முக்கியமானவை. மற்றவைகள் எல்லாம் இந்த உறுப்புகளைச் சார்ந்தவையே.

Read more...

Page 30 of 30

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்