Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம்

அந்த மூன்று நாட்களும் அதன்போது ஏற்படும் மாற்றங்களும் - வெட்கப்படாது, கூச்சப்படாது அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

தீட்டு, வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, மாதவிலக்கு, மாதவிடாய், சுகமில்லை... பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள். அதை வைத்துத்தான் எத்தனை (மூட)நம்பிக்கைகள், பயங்கள்..

மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம்படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்... இப்படி பல கூடாதுகள்.

கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்கு கொடுத்தனுப்புவார்கள். பேய் அடித்துவிடுமாம்!

இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்கு பற்றி கசப்பான உணர்வை பெண்கள் மனதில் பதிய விடுகிறது. இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு எல்லாம் சேர, “ஏன்தான் பெண்ணாக பிறந்தோமோ” என்ற சலிப்பு தட்டுகிறது.

மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இக் கட்டுரை

அந்த மூன்று நாட்களில் (சிலருக்கு கூடலாம், குறையலாம்) உண்டாகும் அத்தனை பிரச்னைகளை பற்றியும் பிரபல மகப்பேறு நிபுணர்கள் டாக்டர் ஞானசௌந்தரி, டாக்டர் தமிழிசை, டாக்டர் சுமதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோர் துணையோடு சுலபமான கேள்வி-பதில் வடிவில் விபரங்கள் தரப்பெற்றுள்ளன.

கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் கேட்டு வாங்கக் கூட அத்தனை தயங்கும் நாம் எப்படி எம் பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு பற்றி புரியவைக்கப் போகிறோம்? நம் உடல் பற்றி, அதன் மாற்றங்கள், இயல்பு, பிரச்னைகள் பற்றி தாய்மர்கள்தான் தயங்காமல் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

Read more...

நாளைய உலகம் உங்கள் கையில்

E-mail Print PDF

"நாளைய உலகம் உங்கள் கையில், நாளைய தலைவர்கள் நீங்கள்தான், எதிர்கால நட்சத்திரங்கள்" இப்படியாக தேசிய அளவில் நீங்கள் பேசப்படுகிறீர்கள். எதிர்காலம் உங்களால் வளம் பெறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் உலக மாந்தர்.

குடும்ப அளவில் நோக்கினால் 'நாளை குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்கையில், சகோதரங்களை கரை சேர்க்கும் பொறுப்பு, குடும்பக் கடன்களை தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமை' எனப் பல உங்களைக் எதிர்பார்த்திருக்கின்றன. இவற்றில் பல உங்களுக்கு எதிர்காலத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கப் போகின்றன. சில புகழின் உச்சங்களுக்கும் இட்டுச் செல்லப் போகின்றன. வேறு பல கடமைகள் உங்களுக்கு உற்சாகம் அளிக்காவிட்டாலும் மகிழ்வைத் தராது போனாலும் கட்டாயம் செய்ய வேண்டியவை.

நாட்டிற்காகவும் வீட்டிற்காகவும் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. ஆனால் இவற்றை முன்னெடுப்பதற்கு அத்திவாரம் உங்கள் நலன் மட்டுமே. அது நல்ல நிலையில் இருக்க வேண்டும். நலம் என்பது உடல் நலம் மட்டுமல்ல. உடல், உள்ளம், சமூக நோக்கு, ஆன்மீகப் பார்வை யாவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதாகக் கொள்ளலாம்.

Read more...

ஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும் சிகிச்சைகளும்

E-mail Print PDF

பொதுவாக தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும். தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான நோய் என்றாலும், அதில் சில வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாக வித்தியாசமாகவும் ஏற்படுவதுண்டு. தலைவலி சாதாரண காரணத்தினாலும் வரலாம், தீவிர பாதிப்பினாலும் வரலாம்.

மண்டை ஓட்டைச் சுற்றியிருக்கும் தமனி, சிரை, தோல் வழியேதான் முதலில் வலி உணரப்படுகிறது. பிறகு ரத்தக் குழாய்களின் மூலம் பரவி தலையின் இருபுறங்கள் மற்றும் கழுத்துக்கும் பரவுகிறது. கண்கள், மூக்குத் துவாரங்கள், பற்கள் வழியாகவும் தெரியலாம். பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும்.

சாதாரண தலையிடியானது தலையில்  அமைந்துள்ள (முகம் உட்பட) தசை நார்கள் அதிகமாக இறுக்கப்படுவதினால்தான் பெரும்பாலான தலைவலிகள் ஏற்படுகின்றன. தசை நார்கள் அதிக நேரம் இழுக்கப்படும்போது, கடைசியில் அது தலைவலியாக உருவெடுக்கின்றது. தலைவலி வருவதற்கு கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், போதிய உணவின்மை, மன அழுத்தம் ஆகியவை காரணங்களாகும்

அத்துடன், உயிராபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையளற்சி (encephalitis), மிக உயர் இரத்த அழுத்தம், மூளைக் கட்டிகள் போன்றவற்றின் அறிகுறிக்யாகவும் தலையிடி ஏற்படுகின்றது.

பெண்களிடையே மாதவிலக்கு காலங்களில் காணப்படும் மிகப் பெரும்பாலான தலிவலிகளுக்கு, பெண்மை இயக்குநீர் (estrogen) அளவின் ஏற்ற இறக்கமே இதற்கு காரணமாகும்.

பொதுவாக சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிறின், பரசித்தமோல், இபுபுரோபின், போன்ற வலிநீக்கி மாத்திரைகளே போதுமானதாக இருக்கக்கூடும்.

ஆனால், சில குறிப்பிட்ட வகைத் தலையிடிகளுக்கு வேறு பொருத்தமான மருத்துவ முறைகள் தேவைப்படக்கூடும். இத் தலைவலியானது, மன அழுத்தம், சிலவகை உணவுகள் போன்ற ஏதாவது ஒரு காரணியுடன் தொடர்புபடுத்திக் கண்டறிய முடியுமானால் அவற்றை  தவிர்ப்பதன் மூலம் தலையிடி ஏற்படாது தடுக்கலாம்.

தலைவலி வகைகள்
1. மன உளைச்சல் தலைவலி
2. சைனஸ் தலைவலி
3. விபத்துகளுக்குப் பின்னால் ஏற்படும் தலைவலி
4. தமனிகள் தொடர்பான தலைவலி
5. தொற்றுகளினால் ஏற்படும் தலைவலி
6. வளர்சிதை மாற்றம் சம்பந்தமான தலைவலி
7. தலையிலுள்ள கண், மூக்கு, பல், வாய் மற்றும் முகம் ஆகியவற்றின் உருவ அமைப்புடன் தொடர்புடைய தலைவலி.
8. தலையிலுள்ள உறுப்புகளின் நரம்புகளில் பிரச்சனைகளால் வரும் தலைவலி
9. குழந்தைகளுக்கு வரும் தலைவலி
10. வயதானவர்களுக்கு வரும் தலைவலி
11. ஒற்றைத் தலைவலி

மன உளைச்சல் தலைவலி
கழுத்தின் பின் தசைகளில்தான் இந்த வலி உருவாகும். இரவு உறக்கத்திற்குப் பிறகு தசைகள் இறுகி வலி ஆரம்பமாகும். ஒவ்வொரு முறை இந்த மன உளைச்சல் ஏற்படும்போதும் கழுத்தின் பின் தசையில் இறுக்கம் ஏற்பட்டு வலி ஆரம்பமாகும்.

இரண்டு பக்கமும் வலி வரலாம். தலையை இறுக்கமாகப் பிடித்தாற்போல் இருக்கும். நீண்ட காலமாக இருக்கும். 25 – 30 வயதில் ஆரம்பிக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும்.

சைனஸ் தலைவலி
மூக்கு அடைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். தலைவலி இருக்கும். மூக்கிலிருந்து நீர் வடியலாம். குனிய முடியாது. கண்களுக்கு மேலும் கீழும் வலி இருக்கும். முன் மண்டை முழுவதும் பரவி வலிக்கும். கண்களுக்கு அடியில் இருக்கும் காற்றறைகளில் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி கடுமையாக இருக்கும்.

தமனிகள் தொடர்பான தலைவலி
மூளைக்கு குளுக்கோசும் ஆக்ஸிஜனும்தான் உணவு. இவை ரத்த நாளங்கள் (தமனி) வழியே மூளைக்குக் கிடைக்கின்றன. இவை செல்லும் பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டால் மூளைக்குக் கிடைக்க வேண்டிய உணவு சரியாகக் கிடைக்காது. அப்போது மூளையின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. இந்த தமனிகளின் பாதையில் கொழுப்புக் கட்டிகள் அடைத்துக் கொள்வதால் இந்தக் குழாய் இறுகி, ரத்த ஒட்டம் சீராக இல்லாமல் தடைபட்டுப் போகலாம். அப்போது அதன் அறிகுறிகளும் தலைவலியும் ஏற்படுகின்றன.

இரத்தக் கசிவால் ஏற்படும் தலைவலி
ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அது அதிக அழுத்தம் காரணமாக வெடித்து ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது திடீரென அவருக்கு மண்டையைப் பிளப்பது போல தலைவலி ஏற்படும். இதுவே நீண்ட நேரத்திற்கு ரத்தக் கசிவு இருந்தால் மூளை வீங்கத் தொடங்கும்.

வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலி
சுவாசிக்கும் காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் தலைவலி ஏற்படும். அதோடு நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள், ரத்த சோகை, இதயத் துடிப்பில் ஒழுங்கின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் வரலாம்.

தொற்றுகளினால் ஏற்படும் தலைவலி
எச்.ஐ.வி கிருமிகள் தாக்கிய எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மூளையில் மெனிஞ்சைடிஸ் மற்றும் கட்டிகள் தாக்கத்தாலும் தலைவலி ஏற்படும். மூளையின் உள்ளே தொற்றுகளின் தாக்கத்தால் அழுத்தம் அதிகமாகிறது. அதனால் உள்ளே நாளங்கள் இழுக்கப்பட்டு தாங்கமுடியாத தலைவலி ஏற்படும். தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பக்கூடிய இந்த வலி தலையை முன்னோக்கி குனியும்போது அதிகரிக்கும்.

ஒரே நாளில் பலமுறை விட்டுவிட்டு வரும் க்ளஸ்டர் (Cluster) தலைவலி
தூங்க முடியாமல் கண் இமைகள் படபடத்து அடித்துக் கொள்ளும். வியர்த்துக் கொட்டும். காலை, மதியம், மாலை என்று எப்போது வந்தாலும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் சரியாகத் தாக்கும். நோயாளிக்கு அதிக எரிச்சலைக் கொடுக்கும். படுத்துக் கொண்டு இருப்பதைவிட உட்கார்ந்தால் சற்று சௌகரியமாக இருக்கும். இருட்டான அமைதியான அறையை நோயாளிகள் நாடுவார்கள். கண்ணைச் சுற்றியுள்ள தமனிகளின் அசாதாரணத் தன்மையால் இந்த வலி ஏற்படுகிறது.

நீண்ட நாள் தலைவலி
மாதம் 15 நாட்களுக்குத் தலைவலி வந்து தொல்லை தருகிறது. வலியின் தீவிரம், இடம், தன்மை என்று அதன் ஒவ்வொரு தாக்கத்திலும் வேறுபடும். அதுமட்டுமின்றி தலைவலியுடன் வயிற்றுப் புரட்டல், வாந்தி, எரிச்சல், மனச்சோர்வு, ஞாபகத்திறனில் பிரச்சனை, பதட்டம் போன்ற பல்வேறு பிரச்சனை களும் இவர்களுக்கு இருக்கலாம்.

தலையில் அடி மற்றும் அது சார்ந்த தலைவலி
தலையில் சாதாரண காயம் ஏற்பட்டு அடிபட்ட 30 நிமிடங்களுக்குள் நினைவிழப்பு ஏற்பட்டிருந்தாலும் தலைவலி வரும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வாழ்நாள் முழுவதும்கூட இந்த தலைவலி தொடர வாய்ப்பு உள்ளது. விபத்து ஏற்பட்டு 1 வாரம் முதல் 3 மாதங்கள் வரை எப்போது வேண்டு மானாலும் வலி ஆரம்பிக்கலாம்.

ஒற்றைத் தலைவலி

உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும்  ஒற்றைத் தலைவலி - மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும்.

குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது. இதன் முக்கியமான அறிகுறிகளாக குமட்டல், வாந்தி, ஒளி, ஒலிக்கான சகிப்புத் தன்மை குறைவு என்பன இருக்கின்றன.

ஒற்றைத் தலைவலி நோயாலிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினருக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்பட சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். பார்வைப் புலத்தில் மாற்றங்கள் ஏற்படல் (உ.ம்: பிரகாசமான ஒளி, கறுப்புப் புள்ளிகள், "Z" வடிவங்கள் தெரிதல்), கழுத்து, தோள்மூட்டுப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படல், உடற் சமநிலை குழம்புதல், பேச்சில் தடுமாற்றம் ஏற்படல், மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் என்பவையே பொதுவான அந்த எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கின்றன.

இவ்வகையான எச்சரிக்கை அறிகுறிகள் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடம் தொடக்கம் 1 மணித்தியாலம் முதல் ஏற்படலாம். இவ்வாறான ஒற்றைத் தலவலி ஏற்கப்பட்ட அல்லது மரபார்ந்த ஒற்றைத் தலைவலி (Classical migraine) எனவும், அப்படி பிரத்தியேகமான எச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பொதுவான ஒற்றைத் தலைவலி (Common Migraine) எனவும் அழைக்கப்படுகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது ஒளி, ஒலிக்கு சகிப்புத்தன்மை குறைவதால். இதனால் அவதிப்படுபவர்கள் இருளான, அமைதியான நிலையில் இருக்க விரும்புவார்கள்.

ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் பெண்களில் அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் சமநிலை மாற்றங்களும் காரணமாகக் கருதப்படுகிறது.

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரோடோனின் (Serotonin) அல்லது 5-ஐடிராக்சி டிரிப்டமைன்  எனப்படும் ஒரு ஒற்றை அமைன் நரம்பு சமிக்ஞை கடத்தியாக செயல்பெறும் வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன.

பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் நம்பப்படுகின்றது.

ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்கும். ஆண்களுக்கு 25 – 55 வயதில் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். பெண்களுக்கு இன்னும் சற்று முன்பே ஆரம்பித்துவிட வாய்ப்பு உண்டு. மாதத்துக்கு ஒருமுறை முதல் ஐந்து முறைக்கு மேலும் வரலாம். தலையின் ஒருபக்கம் உள்ளே லேசாகத் துடிக்க ஆரம்பிக்கும். இது தொடர்ந்தும் இருக்கலாம். சிறிது இடைவெளி விட்டும் இருக்கலாம்.

ஒற்றைத் வலியின் ஆரம்ப அறிகுறி
தினசரி வேலைகளைச் செய்ய முடியாதபடி வலி அதிகரித்தல். சாதாரண வேலைகளைக் கூட செய்ய முடியாதபடி கடுமையாக இருக்கும். திடீர் வயிற்றுப் புரட்டல் ஏற்படும். எந்த உணவுப் பொருளையும் பார்க்கவே பிடிக்காது.

காரணமின்றி வாந்தி ஏற்படும். ஒவ்வாத பொருளைச் சாப்பிட்டது போல, என்ன சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஒன்றுமே சாப்பிடத் தோன்றாது. வெளிச்சத்தினால் தலைவலி அதிகமாவதால் கதவுகளை மூடுவார்கள். விளக்கை அணைத்துப் போர்வைக்குள் முடங்குவார்கள். இருட்டு இவர் களுக்கு இதமாக இருக்கும். குண்டூசி போட்டால் கேட்கும் சத்தம்கூட இவர்களுக்கு எரிச்சல் தரும். நிசப்தமாக இருக்கும் இடத்தைத் தேடிச் செல்வார்கள்.

வலி தீவிரமடையும்போது சுத்தியால் தலைக்குள் அடிப்பதுபோல் இருக்கும். கண்ணைத் திறக்க முடியாது. ஆளை நிலைகுலையச் செய்யும். சிலருக்குத் தற்கொலை எண்ணம்கூட தலை தூக்கும்.

தலைக்குள்ளே வெளிச்சம் மினுமினுப்பது போல இருக்கலாம். புள்ளியாகவும் தெரியலாம். பட்டை பட்டையாக பல நிறத்தில் பட்டைகள் தலைக்குள் பரவி வருவது போலத் தோன்றும்.

கழுத்து வலி வருவது இயல்பு. குனிய, நிமிர முடியாது. அது மட்டுமின்றி கண்கள் சிவந்து அரிக்கலாம். கண்ணிலிருந்து நீர் வடியலாம். தலைவலி ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

பலவித நிறங்களில் வெளிச்சம் தலைக்குள்ளே தெரிவதும் இருக்கலாம். சிலருக்கு எதிர்மாறாக பார்வையே பறிபோனது போல ஒரே இருட்டாகவும் இருக்கலாம்.
உடலின் ஒரு பகுதி உணர்ச்சியின்றி மரத்துப் போகலாம். தலைவலியுடன் சேர்த்து இந்த உணர்ச்சியின்மையும் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு உடலின் ஒரு பாகத்தில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு இருக்கும். உடல் தளர்ச்சியுறும். பொதுவாக வலி ஆரம்பித்து அதன் தீவிர நிலையை அடைய 3 – 4 மணி நேரம் ஆகலாம். மூளையின் மத்திய நரம்பு மண்டலத்தின் சீர்க்கேடுகளால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

இதற்கான காரணம், மூளை இயக்கத்திற்கு தேவையான செட்டடோனின் ஹோர்மோன் போதுமான அளவு மூளைக்குக் கிடைக்காத காரணத்தால் பெருமூளை ரத்த நாளங்கள் சுருக்கி ரத்த ஓட்டம் தடைப்பட்டு ரத்த மண்டல அழற்சி ஏற்படுகின்றது என ஆராட்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிக சூரியவெம்பம், வானிலை அழுத்த மாற்றங்கள், காற்றோட்ட மற்ற புழுக்கமாக அறைகளில் தங்குதல், அடிக்கடி உறங்கும் முறையை மாற்றிக் கொள்ளுதல், வேலையிலும் ஓய்விலும் மாறுதல்களை உண்டாக்கிக் கொள்ளுதல், ஏதாவது ஓரிடத்திற்கு சென்றிருந்த போது தலைவலி வந்திருந்தால், அதே இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் செல்ல நேர்ந்தாலும் தலைவலி வருதல், மதுவகைகள், சில கீரைகள், பாலடைக்கட்டி, தயிர், வினிகர், சொக்லேட், ஆடு மற்றும் கோழி போன்றவற்றின் ஈரல், ஈஸ்ட்ரோ ஜென் ஹேர்மோன், மிக அதிகமான உறக்கம், உறக்கமின்மை, மிகைபசி, இறைச்சி, தலைவலி அடிபடுதல், உடலின் உட்புற உறுப்புகளில் உண்டாகும் நோய்கள், அதிக மருந்து சாப்பிடுதல், மாதவிலக்கு, கர்ப்பம். மோசோசோடியம் குளுட்டாமேட், கவலை, மனஇறுக்கம், அசதி, வாய்வழி சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை மைக்ரேன் தலைவலியை உண்டாக்குகின்றன.

இவ்வாறு நிகழ்வதை பல விடயங்கள் தூண்டுகின்றன. ஒருவருக்கு எந்தெந்த விடயங்கள் தலைவலயைத் தூண்டுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் தலைவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் (காரணங்கள்)
* மன அழுத்தம்…
* ஒரு முடிவெடுக்கத் தீவிரமாக யோசிக்கும் போது…
* அழும்போதோ, முடித்த பின்போ….
* வானிலையில் மாற்றம் ஏற்படும்போது….
* சிரிக்கும்போது….
* உடலுறவுக்குப் பிறகு…
* பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகும்போது…
* குறிப்பாகப் பெண்கள், போர்வையால் முகத்தை மூடி தூங்கும்போது சுவாசித்த கார்பன்-டை ஆக்ஸைடையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் போது…
* ஒருவேளை உணவைத் தவிர்க்க நேரும்போது…
* காபி குடிக்கத் தவறும்போது… (அப்பழக்கம் உள்ளவர்கள்)
* சூரிய வெளிச்சம் படும்போது…
* பெட்ரோல் போன்ற கடின வாசனைகளை நுகரும் போது…
*ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன்…
* விரதம் இருக்கும்போது…..
* தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்…
* புழுக்கம் அதிகரிக்கும் போது…
* அதிக பயணம்…
* அயர்ச்சி…
* அதிக சத்தம் மற்றும் அதிக வெளிச்சம்…
* சாக்லேட் சாப்பிடும்போது…
* சீஸ், பன்னீர் சாப்பிடும்போது….
* புளிக்க வைக்கப்பட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது..
* குளிரூட்டப்பட்ட பானங்களைப் பருகும்போது…
* அதிகமாக காபி,டீ அருந்தும்போது…
* ஃபாஸ்ட்ஃபுட் வகைகளைச் சாப்பிடும்போது…
* மின் விசிறி அல்லது ஏசியின் தாக்கம்…
* எல்லாவிதமான உடல் இயக்கத்திற்குப் பிறகும்…
* விருந்து, கேளிக்கை, சினிமா என்று நேரம் கழித்துவிட்டு வந்தபிறகு…
* எண்ணைக் குளியலுக்குப் பின்பு….
* தலைக்கு சாயம் அடிக்கும்போது…
* வெந்நீர் குளியலுக்குப் பின்பு…
* வலிப்பு இருப்பவர்களுக்கு….
* இறுக்கமான உடை அணிவது…
* தலை வாரும்போது…
* தலையணை…
* வெப்பம்…
* விதம் விதமாக அணியும் கண்ணாடி…
* கழுத்து மற்றும் தலையைச் சுற்றி இறுக அணிந்து கொள்ளும் அணிகலன்கள் அல்லது ஆடைகள் அணிவதனால்…
* குளிர்…இது போன்ற காரணிகள் தோலில் அதீத உணர்வை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும்..
* முடியைப் பின்னால் இழுத்துக் கட்டும்போது…
* ஷேவ் செய்யும்போது…
* கண்ணாடி அணியும்போது…
* கான்டாக்ட் லென்ஸ் அணியும்போது…
* நெக்லஸ் அணியும்போது…
* இறுக்கமான உடை அணியும்போது…
* முகத்தில் தண்ணீர் வேகமாக பட்டு குளிக்கும் போது…
* கையிலோ, தலையணையிலோ முகத்தை மூடி இருக்கும்போது…
* வெந்நீரில் முகத்தைக் கழுவும்போது…
* பெண்களின் மாதவிலக்கின் போது….
* குளிர்ந்த நீரில் முகம் கழுவும்போது – போன்ற ஏதாவது ஒன்றால் ஒற்றைத் தலைவலி ஆரம்பமாகலாம்.

தூண்டும் காரணிகள்
85% நோயாளிகளுக்கு தலைவலியை மோசமாக்கும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகளை கண்டறிந்துவிட முடியும். மாதவிலக்கு, மன அழுத்தம், மாதவிலக்கின் போது மன அழுத்தம், மது அருந்துதல், நாள்பட்ட சீஸ், நைட்ரேட் மாத்திரைகள், உயர்வான இடத்தின் அழுத்தம், அதிக சத்தம், அதிக வெளிச்சம், புகை, சிகரெட், வெப்பம் போன்றவை.

முகம் கழுவுவது, ஷேவ் செய்வது, சாப்பிடுவது, பேசுவது, குளிர்ந்த காற்றை சுவாசிப்பது, பல் துலக்குவது போன்ற சாதாரண நடவடிக்கைகள் கூட இந்த நிலையைக் கொண்டு வரலாம். அது மட்டுமின்றி விழுங்குதல், மெல்லுதல், பேசுதல், இருமுதல், கொட்டாவி விடுதல் கூட தலைவலிக்கு காரணிகளாக அமைந்துவிடும்.

இருமல், தும்மல், எடை தூக்குதல், குனிதல் போன்றவற்றால் கூட தலைவலி வரலாம். உடலுறவில் உச்சக்கட்ட நிலையை அடைவதற்கு முன்போ அல்லது பின்போ மண்டையைப் பிளப்பது போன்ற தீவிர வலி தோன்றலாம்.

வயாக்ரா போன்ற வேதிப் பொருட்கள் அடங்கிய மருந்துகளை ஆண்மை குறைபாடு உள்ள ஆண்கள் உபயோகிக்கும்போது ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். வாய் வழியே சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் கூட தலைவலியை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. தலைவலி ஆரம்பித்தவுடன் படுத்துக் கொள்ள முயற்சி செய்யவும். இருண்ட அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதமாக அழுத்திவிடுதல், ஒத்தடம் போன்றவையும் இதமளிக்கும்.

மன அழுத்தம்தான் பல நோய்களுக்குக் காரணம். அதைச் சரியாக கையாளுவது நம் கையில்தான் உள்ளது.

உடற்பயிற்சி செய்யும்போது வேதிப்பொருள் மூளையில் சுரக்கிறது. இது அதிகம் சுரக்கும்போது மகிழ்ச்சி, சிரிப்பு போன்ற உணர்வுகளும் நியூரான்களுக்கு இடையே சீராகக் கடத்தப்பட்டு மனம் நல்ல நிலையில் வைக்கப்படுகிறது. மனம் அமைதி அடைகிறது.

நம் மூளையில் இருந்து மெல்லிய மின் வீச்சுகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு வெளிவரும் மின்வீச்சுகளை விநாடிக்கு இத்தனை சுற்றுகள் (சைக்கிள்) என்று கணக்கிட்டு, டெல்டா, தீட்டா, ஆல்பா, காமா என்று ஐந்து நிலைகளாகப் பிரிக்கிறார்கள். இந்த ஒவ்வொரு சைக்கிள் நிலையும் நம் உடலிலும், மனதிலும் மாற்றம் உண்டாக்கும்.

*டெல்டா நிலை என்பது ஒருவரின் ஆழ்ந்த தூக்கத்தில் தோன்றும். இதை விநாடிக்கு <4HZ
* தீட்டா நிலை, விநாடிக்கு <8HZ இதில் மிதமான அசதி நிலை இருக்கும்
* ஆல்ஃபா மின் அலைகள். தூக்கத்துக்கும், விழிப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் 8-13HZ அளவில் இருக்கும்.
* பீட்டா மின் அலைகள் 13-28HZ என்ற அளவில் இருக்கும். >28HZக்கு மேலும் (படித்தல், எழுதுதல், உடற்பயிற்சி செய்தல்) போன்ற உடல் இயக்கங்களின் போதும் இருக்கும்.

தலைவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை
* நேரத்தை சரியாக திட்டமிடவும். உறங்கவும், விழிக்கவும் நேரத்தை நிர்ணயிக்கவும்.
* முறையான சமச்சீர் உணவை உட்கொள்ளவும்
* ஒழுங்கான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்.
* தலைவலியைத் தூண்டும் காரணிகளை அடையாளம் கண்டு தவிர்க்கவும்.
* வலி ஏற்படும் சந்தர்ப்பம் மற்றும் சாத்தியமான தூண்டு காரணிகளைக் குறித்து வைக்கவும்
* தூண்டு காரணிகளைக் கட்டுப்படுத்தினால், அதனால் மருந்தின் அளவு குறையும்.
* தரப்படும் மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ளவும்.
* எரிச்சலூட்டும் உரத்த இரைச்சலைவிட்டு விலகி இருக்கவும்.
* முடிந்தவரை வெயில்படாமல் ஒதுங்கி இருக்கவும்.
* வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

தலைவலியின் மற்ற காரணங்கள்
வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வரலாம்.

டிரைஜெமினல் நியூரால்ஜியா
40 வயதிற்குப் பிறகே பெரும்பாலும் தாக்கக் கூடியது. ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப்பு உண்டு. மின் அதிர்வு போல வலி இருக்கும். கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு பக்கமாக வலிக்கும். ஒற்றைத் தலைவலியைப் போல மெல்லுதல், பேசுதல், விழுங்குதல், குளிர்நீரில் முகம் கழுவுதல், பல் துலக்குதல் போன்ற எது வேண்டுமானாலும் வலியைத் தூண்டலாம்.

கண் தொடர்பான நோய்கள்
ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால் கண்ணில் மட்டுமின்றி தலைவலியும் ஏற்படலாம்.

பக்கவாதம்
இரத்தக் கொதிப்பால் மூளையின் ரத்தக் குழாய் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் தமனி வெடித்துவிட வாய்ப்பு உள்ளது. இதனால், ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது மூளை வீங்கத் தொடங்கும். மூளை வீங்கும்போது மூளையின் உறை இழுபடும். இதனால் கடுமையான தலைவலி ஏற்படும்.
தலைச்சுற்றல்

இது காதின் மையப்பகுதியின் நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் ஏற்படும் நோய். நோயாளிகளுக்குக் கழுத்து மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றலுடன் வாந்தியும் இருக்கும். உளவியல் ரீதியான பிரச்சனைகள்

மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை செய்யும் எண்ணம் ஆகியவை ஒற்றைத் தலைவலி நோயாளி களுக்கு அவ்வப்போது வந்து போகும்.

சைனஸ் தலைவலி
கண்களுக்கு கீழே உள்ள எலும்பறைகளில் காற்றுக்குப் பதிலாக நீர் கோர்த்துக் கொண்டு தலை வலி ஏற்படும்.

பல் நோய்கள்
பல்லில் அடிபட்டாலும், நோய்த் தொற்று ஏற்பட்டாலும், தலைவலி ஏற்படலாம். குளிர்ந்த அல்லது சூடான பானம், பல்லில் படும்போது வலி தீவிரமாகும். மிகக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும்.

தைராய்டு குறைவு
தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறையும்போது தலைவலி வரலாம். சரியான ஹார்மோன் சிகிச்சை அளித்த பிறகு வலி போய்விடும்.

வயதானவர்களுக்கு வரும் ஒற்றைத் தலைவலி

50 வயதிற்கு மேல் ஆண்களுக்குத்தான் ஒற்றைத் தலைவலி வாய்ப்பு அதிகம். வயதானவர்களைத் தாக்கும்போது, தலைவலியைவிட பளிச்சென வெளிச்சம் தோன்றுதல், கண் பார்வையில் சீர்க்கேடு போன்ற அறிகுறிகள் அதிகமிருக்கும். கழுத்தெலும்பு தேயும் நிலை நிறைய பேருக்கு உண்டு. பொதுவாக வயதானவர்களுக்கு தேய்வு இருக்கும்போது தலைவலி வரலாம்.

டெம்பொரல் ஆர்ட்ரைட்டிஸ்
கபாலத்துடன் முகத்தை இணைக்கும் தமனிகள் பாதிக்கப்படும்போது தலைவலி வரலாம். நோயாளிக்குத் திடீர் தலைவலியுடன் காய்ச்சலும் வரலாம். அது மட்டுமின்றி மெல்லும் போது தாடையில் வலி, விழுங்கும்போது நாக்கில் வலி, கண்பார்வையில் பாதிப்பு, இரட்டைப் பார்வை, காதில் ரீங்காரம் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படும்.

தலைவலி எவ்வளவு நேரம் நீடிக்கும்?
72 மணி நேரம் வரை நீடிக்கலாம். பொதுவாக 60% பேருக்கு ஒரு பக்கம் வலி இருக்கும். மீதி பேருக்கு இருபக்கமும் இருக்கும்.
தலைக்குள் மின்னல் போல் வெளிச்சம் உணர்வார்கள். ஒருபக்க பார்வை தற்காலிகமாக இருக்காது. நிறங்களுடன் கூடிய தாறுமாறான பட்டைகள் தலையில் பரவுவது போல் இருக்கும். உடலின் ஒரு பகுதி மரத்துப் போகலாம். கை., கால் உள்பட முகத்தில் நாக்கு, உதடுகள் கூட மரத்துப் பலமிழந்து விடும்.

குழந்தைகளுக்கு வரும் ஒற்றைத் தலைவலியின் தன்மை என்ன?
இருபக்க தலைவலியாக இருக்கும். வலியின் நேரம் 2 மணி நேரத்துக்குக் குறைவாக இருக்கும்.

மாதவிலக்குடன் ஒற்றைத் தலைவலி தொடர்பு?
பெரும்பாலான நோயாளிகளுக்குத் தலைவலி அதிகரிக்க மாதவிலக்கு முக்கிய காரணமாகும். மெனோபாஸ் ஆனவுடன் பெரும்பாலானவர்களுக்கு நோய்த்தாக்கம் குறைய ஆரம்பிக்கலாம். கர்ப்பத்தின் போது பெரும்பாலானவர்களுக்கு தாக்கம் முற்றிலும் குறைகிறது.

க்ளஸ்டர் தலைவலி (Cluster Headache )யின் தன்மை என்ன?
இது பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் வரும். மூளையின் முன் பகுதியில் ஆரம்பிக்கும். பெரும் பாலும் ஒரு பக்கம்தான் இருக்கும். பொதுவாக முதல்நாள் ஆரம்பித்த அதே நேரத்தில் அடுத்த நாளும் ஆரம்பிக்கும். இரண்டு வாரத்தில் நின்றுவிடும். சிலருக்கு வருடக் கணக்கிலும் நீடிக்கலாம். குறிப்பாக இந்த வகை தலைவலி சீராக ஒரே காலத்தில் ஏற்படும். உதாரணத்துக்கு ஒரு வருடம் குளிர்காலத்தில் வந்தால் மறுமுறையும் குளிர்காலத்தில் வரலாம். மதுபானம், நைட்ரோ கிளிசரைடு கலந்த மருந்துகளை உபயோகப் படுத்தும்போது தீவிரமாகலாம்.\

சைனஸ் தலைவலியின் தன்மை என்ன?
தலையின் முன் பகுதியில் கடுமையான வலி இருக்கும். காய்ச்சல் வரலாம். மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் சளி மூக்கின் வழியே வெளியேறலாம். தலையை அசைத்தாலோ குனிந்தாலோ வலி அதிகரிக்கலாம். கண்களுக்குப் பின் பகுதியில் வலி இருக்கும்.

ஆபத்தான தலைவலி என்பது என்ன?
ஒருவர் தன் வாழ்நாளில் அதுவரை தலைவலியை சந்தித்தே இருக்கமாட்டார். ஆனால் திடீரென ஒரு நாள் மண்டையைப் பிளப்பதைப்போல வலி ஏற்பட்டால், அது சாதாரணமானது அல்ல. மூளையில் ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் கசிய ஆரம்பித்திருக்கும். இதனுடன் கழுத்து மற்றும் முதுகு வலியும் இருக்கலாம்.
தொடர்ந்து ஏற்படுகின்ற தலைவலி, நாளுக்கு நாள் அதிகமாகின்ற தலைவலி, இடைவிடாத தலை வலி, காய்ச்சல், வலிப்பு மற்றும் வாந்தியுடன் கூடிய தலைவலி ஆபத்தானது.

உடலுறவுக்கும் தலைவலிக்கும் சம்பந்தம் உண்டா?
உடலுறவை பாதிநிலையில் விலக்குவது, விந்து வெளியேறுவதில் பிரச்சனை இருப்பின் அதற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள், விந்து முந்துதல் போன்றவை தலைவலியின் காரணங்களாகும். பொதுவாக இரண்டு புறமும் வலிக்கும். உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைவதற்கு சற்று முன்பு ஆரம்பித்து விடும்.
பெற்றோருக்கு ஒற்றைத் தலைவலி இருந்தால்

குழந்தைகளுக்கும் வருமா?
கண்டிப்பாக வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் தலைவலி வரும் வாய்ப்பு அதிகம். ஒற்றைத் தலைவலி இருக்கும் குடும்பத்தில் வாரிசுகளுக்கும் வரும்

மருந்துகள்:
இது போன்று ஒற்றைத் தலைவலி அல்லது பொதுவான தலைவலி அடிக்கடி வரும் போது, டாக்டர்களை அணுகித்தான் மருந்துக்களை சாப்பிட வேண்டும். தங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் அல்லது தலைவலிக்கு மருந்துக் கடைகளில் தரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் முறையானது அல்ல.

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்

ஒற்றை தலைவலியிலிருந்து உடனே விடுபட மருந்து மாத்திரைகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையே சிறந்தது. நோயின் தன்மை, நோயின் தீவிரம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

சிகிச்சை
· நீங்கள் ஓற்றைத் தலைவலி நோயாளியானால், அதைத் தூண்டும் காரணிகளை அனுபவத்தின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் நோய் தோன்றுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

· தலைவலி வந்துவிட்டால் சப்தமற்ற அமைதியான இடத்தில் ஆறுதல் எடுங்கள். ஒளி குறைவான அல்லது இருண்ட அறை உசிதமானது.

· முடியுமானால் சற்று நேரம் தூங்குங்கள்.

· கடுமையான தலைவலியானால் டிஸ்பிரின் போன்ற கரையக் கூடிய அஸ்பிரின் மாத்திரைகளில் இரண்டைக் கரைத்துக் குடியுங்கள். சிலர் இபூபுருவன் 400 மிகி மாத்திரை ஒன்றை உட்கொள்வதுண்டு.

· வாந்தியும் கலந்திருந்தால் டொம்பெரிடோன் 10மிகி மாத்திரைகளில் இரண்டு அல்லது புரொமெதசீன் 25மிகி மாத்திரையில் ஒன்று விழுங்கலாம்.

· மிக அடிக்கடி தலைவலி வருவதாயிருந்தால் அதைத் தடுப்பதற்கு சில மாதங்களுக்கு தினசரி தடுப்பு மாத்திரைகள் உண்ண நேரலாம். அது மருத்துவ ஆலோசனையுடன் அவரது வழிகாட்டலில் மட்டும் செய்ய வேண்டியதாகும்.

இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள். ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது. சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது.

எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம். இப்போது அந்த ஒற்றைத் தலைவலியை போக்க எந்த உணவுகள் உதவுகிறது என்று பார்ப்போமா

கீரைகள் :

கீரைகளில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்து கடுமையான ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி இந்த சத்துக்கள் நவதானியங்கள், கடல் உணவுகள் போன்றவற்றிலும் அதிகம் நிறைந்துள்ளது.

மீன்:
கடல் உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒற்றைத் தலைவலியால் உடலினுள் ஏற்படும் உள்காயங்களை குணப்படுத்தும்.

பால் :
பாலிலும் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. அதிலும் பாலில் உள்ள வைட்டமின் பி என்னும் ரிபோஃப்ளேவின், உயிரணுவின் ஆற்றலை அதிகரிக்கும். உயிரணுவின் ஆற்றலானது குறைவதால் தான் ஒற்றை தலைவலியே உண்டாகிறது.

ஆளி விதை:
இந்த சிறிய விதையில் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்தும் சத்துக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

காபி:
உண்மையில் தலை வலிக்கும் போது ஒரு கப் காபி குடித்தால், தலைவலியானது குணமாகிவிடும். அதிலும் குறைவான அளவில் மட்டும் காபியை குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள் தலைவலியைக் கட்டுப்படுத்தும்.

ரெட் ஒயின்:
தைரமின் என்னும் ஆன்டி-ஆசிட் ஒயின் மற்றும் பீரில் அதிகம் உள்ளது. எனவே ஒரு டம்ளர் ரெட் ஒயின் அல்லது பீர் குடித்தால், கடுமையான ஒற்றை தலைவலியை சரிசெய்ய முடியும்.

தினை (millet):
முழு தானியங்களில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே முழு தானியங்கள் மற்றும் தினையை சாப்பிடுவது நல்லது.

ப்ராக்கோலி :
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் மக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே ப்ராக்கோலியை வேக வைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பை சேர்த்து சாப்பிட வேண்டும்.

இஞ்சி :
ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சியானது தலை வலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. எனவே தலை வலிக்கும் போது, உண்ணும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்து

தலைவலி மூளையுடன் சம்பந்தப் பெற்றிருப்பதனால் மூளையின் அமைப்பைப் பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல் உபயோகமானது

மூளையின் அமைப்பு
மூளையும் தண்டுவடமும் சேர்ந்ததுதான் நரம்பு மண்டலம். இவை மூன்றடுக்கு உறையால் போர்த்தப்பட்டிருக்கும். இந்த உறைக்கு மெனிஞ்சஸ்என்று பெயர்.
* மூளை, கபாலத்தின் உள்ளே மிகவும் பத்திரமாக மிதந்து கொண்டிருக்கிறது. கபாலத்துடன் உராய்ந்து விடாமல் இருக்க மூளைத் தண்டுவடத் திரவம் மூளையைப் பாதுகாக்கிறது.
* உடலின் வலது பகுதியை இடப்பக்க மூளையும், இடதுபகுதியை வலப்பக்க மூளையும் கட்டுப் படுத்துகின்றன.

வலதுபக்க மூளையின் செயல்கள்:
1. சைகை மொழித் தகவல் பரிமாற்றம் உடல் அசைவுகள் மூலம் தகவல் பரிமாற்றம், தொடுதல் மற்றும் பகுத்தறிவு.
2. சிறு தகவல்களை ஒருங்கிணைத்து முழுமையான தகவல்களைப் பெறுதல்.
3. உணர்வுகள் மற்றும் கற்பனைகளைப் புரிந்து கொண்டு செயல்படுதல்.
4. கலை உணர்வு மற்றும் படைப்பு ஆற்றல்களை வெளிப்படுத்துதல்.
5. கற்பனை, நுண்ணறிவு, கலை ஆர்வம், இசையில் நாட்டம், முப்பரிமாண உணர்வு போன்றதிறமைகள் வளர்ச்சி அடைவதுடன் உடலின் இடதுபக்க இயக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

இடது பக்க மூளையின் செயல்கள்:
1. சொற்கள், பெயர்கள், கருத்துகள்
2. செய்திகளை ஆராய்ந்து, பகுத்து, ஒழுங்குபடுத்துதல்
3. முடிவுகளை எடுப்பதற்கு ஆய்ந்து செயல்படுதல்
4. சிந்தனை ஆற்றல்
5. ஊகம், அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் ஆர்வம்,

இசையில் நாட்டம், முப்பரிமாண உணர்வு போன்ற திறமைகள் வளர்ச்சி அடைவதுடன் உடலின் வலதுபக்க இயக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது. சாதாரணமாக எல்லோருக்கும் மூளையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதனால்தான் வலதுபக்க உறுப்புகளை அதிகம் உபயோகிக்கிறோம். சிலருக்கு இடதுகைப் பழக்கம் உண்டு. அவர்களுக்கு மூளையின் வலது அரைக்கோளத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம்.

மூளையில் வலியுணரிகள் இல்லாததால், மூளை வலியை உணராது. தலைப் பகுதியில் அமைந்த சில நரம்புத் தொகுதியின் பகுதிகள், தொண்டை, முகம், வாய் போன்ற பகுதிகளில் காணும் சில நரம்புகள் என்பன காயப்படக் கூடியவை. மூளையுறை, குருதிக் கலங்கள் என்பன வலியை உணரக்கூடியவை. தலைவலிகள் பெரும்பாலும், மூளையுறையில் அல்லது குருதிக்கலங்களில் ஏற்படக்கூடிய இழுவை அல்லது உறுத்தல் காரணமாக உண்டாகின்றன. தலையில் காணப்படும் தசைநார்களும் வலியை உணரக்கூடியவை.

 

949.05.03.2015

இரத்தம் எனும் உயிர்த் திரவமும் அதில் அடங்கியுள்ள துணிக்கைகளின் பணியும் - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

No automatic alt text available.

உயிரினங்களின் உடல் இயக்கம் இரத்த ஓட்டத்தினால் நடைபெறுகின்றது என்றால் வியப்பில்லை. அதற்கான முக்கிய காரணம் இரத்தத்தில் அடங்கியுள்ள மூலப் பொருட்களின் சேவையே எனலாம். உடலின் உடற்செல்களுக்குத் தேவையான எரிபொருளை (ஆக்சிஜன்) சுமந்து செல்பவை இரத்தமே. செல்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக நுரையீரலுக்கு சுமந்துவரும் துப்புரவு பணியாளரும் இரத்தமே. இரத்தத்தில் பிளாஸ்மா எனும் திரவமும், இரத்த செல்கள் எனும் நுண்பொருட்களும் உள்ளன.

பிளாஸ்மா மஞ்சள் நிறம் கொண்டது. பிளாஸ்மாவில் ஆல்புமின், பைபிரினோஜென், குளோபுலின் எனும் 3 முக்கிய புரதப்பொருட்கள் உள்ளன. இந்த புரதப் பொருட்கள் குறைந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். காயம்பட்ட இடத்தில் இரத்தம் கட்டியாக உறைய பைபிரினோஜென் அவசியம். குளோபுலின் தொற்று நோய்களை எதிர்த்து போராடும்.

மீண்டும் மீண்டும் தொற்று நோய் ஏற்படுபவர்களுக்கு குளோபுலின் புரதம் குறைந்திருக்கலாம். பிளாஸ்மா திரவத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லட் எனப்படும் ரத்தத்தட்டுகள் ஆகியன மிதக்கின்றன. சிவப்பணு இருபுறமும் குழிந்த தட்டுபோல இருக்கும். 7 மைக்ரான் அளவு விட்டம் கொண்டது.

Read more...

“இளவயதுக் கர்ப்பமும்” அதன் வேதனைகளும்

E-mail Print PDF

அண்மைக் காலமாக வட மாகாணத்தில் பெண் பிள்ளைகள் இளவயதில் கர்ப்பமடைவது அதிகரித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. இளம் பராயத்தில் (ரீன் ஏய்ச்) இருக்கும் பெண் பிள்ளை ஒருவர் தனது 19 வயது நிறைவடைவதற்கு முன்னர் கர்ப்பம் தரித்தல் என்பது “இளவயதுக் கர்ப்பம்” என அழைக்கப்பெறுகின்றது.

பல சமூக கட்டுப்பாடுகளுடன் தனித்துவமான பண்பாடு, கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்த தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுள்ள இம் மாற்றம் வடமாகாண சமூகத்தை அதிர்வுக்குள்ளாக்கும் சமூகப் பிரச்சினையாக தலை தூக்கியுள்ளது. இவ்வாறு இளவயதில் கர்ப்பம் அடைவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

தற்போது யாழ்.குடாநாட்டில் இளவயதில் கர்ப்பம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இந்தப் பெண்பிள்ளைகளின் பெற்றோரே முக்கிய காரணம் என யாழ் பல்கலைக்கழக மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் மூத்த விரிவுரையாளரும் ஆலோசகருமான க.முகுந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு பாலியல் தொடர்பான அறிவு போதியளவு இல்லாமையும் மற்றும் பெண் பிள்ளையின் தாயார் மனம் விட்டு பெண் பிள்ளைகளுடன் பேசாமை போன்ற காரணங்களால் தனக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை, மாற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்டுவதில்லை. இதனாலேயே உலகத்தைப் புரிந்து கொள்ளாத 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தம் நிறைவடைந்த பின்னர், வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட தாக்கங்களும், பெரும் மாற்றங்களும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்றைய இளம் தலைமுறை சிறிய வயதிலேயே கணினி மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடு உடையவர்களாக இருப்பதாலும், இளம் வயதிலேயே பாலியல் தூண்டுதலுக்கு உள்ளாகிறார்கள். இன்றைய பள்ளிகளில் மிகப்பெரும் சவாலாக இருப்பது, கல்வியைவிட, இத்தகைய பாலினக் கவர்ச்சியும், அதைத் தொடர்ந்த காதலும் காமமும்தான். அதனால் இளைஞர்களும், யுவதிகளும் தூண்டப் பெற்று பலாபலன்களையும், பாதுகப்பான முறையையும் அறியாது இரகசிய உடலுறவு கொள்வதன் மூலம் ளவயது கர்ப்பம் அதிகரிக்க காரணமாகின்றது.

அத்துடன், பாடசாலைப் பருவத்தில் தோன்றும் நன்மை தீமை அறியாத பருவக் காதலை உண்மைக் காதல் என தவறாக புரிந்து கொண்டு செயல் பெறுவதாலும், போதைப் பொருள் முதலியவற்றின் அடிமையாகி அதன் போதையில் தவறாக நடப்பதனாலும் இளவயது கர்ப்பம் அதிகரிக்க காரணமாகின்றது.

மேலும் வட மாகாணத்தில் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் காணப்படுவதால். தாய் தொழிலுக்காக வெளியே செல்ல வயதுக்கு வந்த பிள்ளைகள் தனியாக இருக்கும் சூழ்நிலைமையும் அங்கு இளவயது கர்ப்பமும் அதிகரித்து காணப்படுகின்றமைக்கு காரணமாகி பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

அவை மட்டுமன்றி இளம் பெண்கள் தனியாக இருக்கும்போது பாலியல் அத்துமீறல்கள்  மூலமும் இளம் கன்னிகள் கர்ப்பமாகும் சந்தற்பங்களும் அதிகமாக காணப்படுவதும் ஒரு காரணமாக அமைகின்றது.

இன்னும் ஒரு சிலர், வறுமை காரணமாகவும்; உற்றார், உறவுகளற்ற நிலையில் தனிமையாக வாழ்வதும்; சந்தற்பம் சூழ்நிலையால் காதல் என ஏமாறுதலும், உதவி செய்தோருக்கு உபகாரமாகவும். தம் உடலை வழங்கி தாமும் கர்ப்பமாகி வாழ்வை இழப்பதோடு தமது குடும்பத்திற்கும் கெட்ட பெயரை வாங்கி விடுகின்றார்கள்.

வெளிநாடுகளில் பாலியல் சம்பந்தமான விளிப்புணர்வு இளம் பராயத்திலேயே கற்பிக்கப் பெறுவதுடன், அங்கு காணப்பெறும் கலாச்சாரம், பண்பாடு அவர்களை ஒதுக்கி வைப்பதில்லை. அத்துடன் பாதுகாப்பான கலவி முறை பற்றியும் அவர்களுக்கு விப்புணர்வு ஏற்படுத்தப் பெற்றுள்ளன. மேலும் இளவயதினர் கர்பமாகி விட்டால் அதனை இல்லாது செய்வதற்கும் வசதிகள் காணப்பெறுகின்றன. எனவே வெளிநாடுகளில் இளவயதுக் கர்ப்பம் பிரச்சனையாக இருந்தாலும்; மிகப் பெரிதாக தாக்குவதில்லை என்றே சொல்லலாம்.

இளவயது கர்ப்பம் தரித்தல் காரணமாக படித்து பட்டம் பெறக்கூடிய தகமையில் இருந்தும் தமது கல்வியைத் தொடர முடியாதவர்களாகவும், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்புக்களை எதிர்நோக்கி சமூகத்திற்கு முகம் கொடுக்க முடியாது வீட்டினுள் முடங்கிக் கிடந்து மனநோயாளியாகி தற்கொலை முயற்சி செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அல்லது எதிர்காலத்தை சூனியமாக்குகின்றார்கள்.

யாழ். மாவட்டத்தில் 12 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 44 வைத்தியசாலைகள் உள்ளன. குறித்த வைத்தியசாலைகளில் 2009ஆம் ஆண்டு 18வயதிற்கும் குறைந்த 373 பெண்களும், 2010ஆம் ஆண்டு 464 பெண்களும், 2011ஆம் ஆம் ஆண்டு 440 பெண் பிள்ளைகளும், 2012ஆம் ஆண்டு 419 பெண் பிள்ளைகளும், கடந்த ஆண்டு 318 பெண் பிள்ளைகளும் இளம் வயதில் கர்ப்பம் தரித்து அனுமதிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தெரிவிக்கின்றது.

யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 2013ஆம் ஆண்டு 318 பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரித்திருந்ததாக தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் 12 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள 44 வைத்தியசாலைகள் தவிர, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையும் அங்குள்ளது.

கடந்த ஆண்டு ஆண்டு (2013) ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரையான காலப் பகுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் 18 வயதிற்கு உட்பட்ட 190 பெண் பிள்ளைகள் கர்ப்பம் தரித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் செய்திச் சேவை ஒன்றிற்கு தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு (2014) ஜனவரி மாதத்தில் மாத்திரம் யாழ். போதனா வைத்தியசாலையின் 18 ஆம் வாட்டில் 02 பெண் பிள்ளைகளும், 20 ஆம் வாட்டில் 11 பெண் பிள்ளைகளும், 21 ஆம் வாட்டில் 02 பெண் பிள்ளைகளும், 22 ஆம் வாட்டில் 01 பெண் பிள்ளையும் இளவயது கர்ப்பத்துடன் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயினும் இந்தப் பிரச்சினை வட மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளதென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

யாழ். மாவட்டத்தில் யௌவன பருவத்திற்கான சிகிச்சை நிலையங்கள் ஊடாக பெண் பிள்ளைகளுக்கு திருமணத்தை பிற்போடுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சிலவேளைகளில் அவர்கள் இளவயதில் திருமணம் செய்தாலும் குழந்தைப் பேற்றினை பிற்போடுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

இத்தகைய ஆலோசனைகள் ஆரோக்கியமானதா என்ற கேள்வியும் சமூகத்தில் நிலவுகின்றது. வடமாகாணத்தில் பெரும் சமூகப் பிரச்சினையாக காணப்படுகின்ற இளவயது கர்ப்பம் தொடர்பான விவகாரம் குறித்து சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சு ஆகியன அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். அத்துடன் ஊர்ச் சனசமூக நிலையங்கள், பாடசாலைகள் ஊடாகமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கட்டாயாமாகின்றது.

இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களினதும், பெண் பிள்ளைகளினதும் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகவுள்ளது.

பெண்கள் சமூகத்தில் கேள்விக்குறிகளாக மாறுவதை தடுத்து நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் ஆற்றல்களை பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

நன்றி

சலரோகம் எனும் நீரழிவு நோயும் அதற்கான காரணிகளும் சிகிச்சைகளும் - யாழ் வைத்தியபீட மாணவர்களினால் வெளியிடப் பெற்ற வீடியோ இணைப்பு

E-mail Print PDF

சலரோகம் - நீரழிவு நோய் என்றால் என்ன? இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள ”குளுக்கோஸ்” வழங்குகின்றது. இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை திசுக்களில் பெற்றுக் கொள்வதற்கு ”இன்சுலின்” என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது.

வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி அமைந்துள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும்போது, உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெற முடியாது போகின்றது. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோசின் அளவு அதிகமாகிறது. இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரையானது இதயம், சிறு நீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது.

கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. காரணம், போதுமான அளவு இன்சுலினை சுரக்கும் தன்மையை அது இழந்து விடுவிடுவதால் உடம்பில் உள்ள கலன்கள் தமக்குத் தேவையான குளுக்கோஸை பெறமுடியாது போவதுடன், இரத்தத்தில் குளுக்கோசின் செறிவு அதிகரிக்கின்றது. இந் நிலையே சலரோகம் - நீரழிவு என அழைக்கப் பெறுகின்றது.

இரத்தத்தில் குளுக்கோசின் அளவை கட்டுப்பாடில் வைத்திருக்க உதவும் உடல் உறுப்புகளில் ஒன்றான சதையி என்றழைக்கப் பெறும் கணயம் பற்றி அறிந்திருப்பது முக்கியமாகின்றது.

”சதையி” என்னும் கணையம்” 75 கிராம் எடையும், சுமார் 15 செ.மீ. நீளமும் உடைய ஓரு உறுப்பு. வயிற்றின் பின்புறத்தில் அடிவயிற்றுக்கும், முதுகெலும்புக்கும் நடுவே உள்ளது. ஒரு பக்கம் முன் சிறுகுடலின் வளைவிலும், மறுபக்கம் மண்ணீரலையும் தொட்டுக் கொண்டிருக்கும்.

கணையம் ஜீரணத்திற்கான “என்ஸைமைகளை” மட்டுமன்றி மூன்று ”ஹார்மோன்களையும்” சுரக்கின்றது. ”என்ஸைமை” சிறு குடலுக்கும், ”ஹார்மோன்களை” இரத்தத்துக்கும் அனுப்பும்.

கணையத்தின் வால் பகுதியின் உட்புறத்தில் ”லாங்கர்ஹான்” திட்டுகள் என்னும் நாளமில்லாச் செல்களினால் ஆன திட்டுகள் எண்ணிக்கையில் சுமார் பத்து லட்சம் உள்ளன. இந்த லாங்கர்ஹான் செல்கள் “ஆல்பா” செல்கள் எனவும் “பீட்டா” செல்கள் எனவும் இருவகைப்படுகின்றன.

இதில் ”ஆல்பா” செல்கள் குளுகோகான்” என்னும் ஹார்மோனையும், “பீட்டா” செல்கள் ”இன்சுலின்” என்னும் ஹார்மோனையும் சுரக்கின்றன. நமது உடலில் நடைபெறுகின்ற வளர்சிதை மாற்றத்தில் பெரிதும் பங்கு கொள்ளும் இந்த இரண்டு ஹார்மோன்களும் கீழ்ப்பெரும் சிரையினுள் சுரக்கப்பட்டுக் கல்லீரலை சென்றடைகின்றன.

இந்த இரண்டு ஹார்மோன்களை தவிர “சோமடோஸ்டேசன்” என்ற ஹார்மோனும் கணையத்தால் சுரக்கப்படுகிறது. இந்த மூன்று ஹார்மோன்கள்.
1. இன்சுலின் – திசுக்களுக்கு குளுகோஸை கொண்டு சேர்க்கிறது.
2. குளுகோகான் – இன்சுலினுக்கு எதிர்மாறான தன்மை உடைய ஹார்மோன். ரத்தத்தில் சர்க்கரை குறைந்தால் கல்லீரலை தூண்டி அது சேமித்து வைத்திருக்கும் குளுக்கோஸை ரிலீஸ் செய்யுமாறு தூண்டும்.
3. சோமடோஸ்டேசன் – மேலே சொன்ன 2 ஹார்மோன்களையும் தேவைப்படும் போது, சுரக்காமல் தடுக்கும்.

கணைய பாதிப்படைய காரணங்கள்.
1. மல்டிபில் என்டோக்ரைன் நாளமில்லா சுரப்பிகளின் புற்றுநோய் / புற்று நோயில்லாத கட்டிகள், வீக்கம் இந்த வியாதி நாளமில்லா சுரப்பிகளை தாக்கும் அபூர்வ வியாதி.
2. தசை அழிவு நோய்: இந்த வியாதி உடலின் தசைகளை தாக்கும் கொடிய நோய் தீவிரமானால் டயாபடீஸ், மற்றும் பல தீவிர நோய்களை உண்டாக்கும்.
3. அட்ரீனலின், பிட்யூடரி சுரப்பிக் கலவைகள், இதர துணை நோய்கள்.
4. மரபணுக்களின் மாற்றம்.
5. சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்.
6. ஹேமோகுரோமடோசிஸ் இந்த பரம்பரை வியாதி, உடலில் அதிக அளவு இரும்புச்சத்து சேருவதால் வரும்.

கணையத்தின் “பீடா” செல்கள் இன்சுலின் உற்பத்தி செய்வது ஒரு தொடர்ச்சியான நிரந்தர செயல்பாடு. இந்த செயல் ரத்தத்தின் உள்ள குளூக்கோஸ் அளவை சார்ந்திருப்பதில்லை. அதிகமானால், பீடா செல்களில் (செல்லின் சைடோப்ளாஸத்தில் உள்ள இடம்) சேமித்து வைத்து கொள்ளும்.

சாப்பிட்டவுடன் ரத்த குளூக்கோஸ் அளவுகள் ஏறும். கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் திட்டுக்களில் உள்ள ‘பீடா’ செல்கள் உடனே இன்சுலினை சுரக்கும். சுரந்து ரத்தத்துக்கு செலுத்தும். உடலில் உள்ள செல்களில் மூன்றில் இரண்டு பங்கு செல்களுக்கு குளூக்கோஸை கொடுக்க இன்சுலின் உதவுகிறது.

எரி சக்தியாகவோ. இல்லை சேமித்து வைக்கவோ என்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது இன்சுலின். கல்லீரலில் மற்றும் தசை செல்களில் அதிக குளூக்கோஸ் கிளைக்கோஜன் என்ற பெயரில் சேமிக்கப்படும். குளூக்கோஸ் லெவல் குறைந்தால் உடனே குளூக்கோஸாக உருவெடுத்து குறையை நிறை செய்யும். இதற்கு உதவுவது இன்சுலினுக்கு எதிர்மாறான ஹார்மோன் குளுகோகான். இந்த பரிமாற்றம் நேர்வது கல்லீரலால் மட்டுமே. தசை திசுக்கள் இந்த பரிமாற்றம் செய்யும் திறன் அற்றவை.

முதலில் கீழ்க் காணும் அறிகுறிகள் ஏதேனும் ஒன்று அல்லது எல்லமே உங்களுக்கு தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று குறுதிச் சோதனை செய்து கொள்ளலாம்.

சலரோகம் பற்றிய விளிப்புணர்வு வீடியோ

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

குதி - 4

குதி - 5

பகுதி - 6

பகுதி - 7

 

Read more...

Page 4 of 30

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்