Thursday, Jul 20th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம்

ஆண்களை கொல்லும் Hemophilia நோய் - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

"X" குரோமோசோம்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஆண்கள் "ஹீமோபீலியா" நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 89 பேர் ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டு உள்ளது, மருத்துவத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனித உடலில் ஏற்படும் பயங்கர நோய்களில் ஒன்றாக, ஹீமோபீலியா (Hemophilia) உருவெடுத்துள்ளது ஹீமோபீலியா பற்றிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக இந்நோய் தாக்குதலால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை கூறுகிறது.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியது: மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது, X குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் உருவாகிறது. இந்நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிதான நோய்.

ஏனெனில், ஆண்களின் உடலில் "x" மற்றும் "Y" குரோமோசோம்களும், பெண்களுக்கு "X" மற்றும் "X" குரோம்சோம்களும் உள்ளன. அதனால் ஆண்களிடம் இருக்கும் ஒரே ஒரு 'X' குரோமோசோம் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஹீமோபீலியா நோய் பாதிப்பு ஏற்பட்டு விடும்.

காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. குறிப்பாக மூட்டு பகுதிகளில் காயம்பட்டால், ரத்தக்கசிவு ஏற்படுவதுடன் உடனடியாக பெரிதாக வீங்கி விடும். இதுதான் ஹீமோபீலியாவின் அறிகுறி. உடலின் மற்ற பகுதிகளில் ரத்தக்கசிவு இருந் தாலும் பிழைக்க வைத்து விட முடியும். ஆனால் மூளை, வயிறு பகுதிகளில் உள்பக் கம் ரத்தக்கசிவு இருந்தால் மரணம் நிச்சயம்.

மரபணுவில் ஏற்படும் பாதிப்பு என்பதால், ஹீமோபிலியா நோய் உண்டாவதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆண்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு என்றாலும், குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை ஆண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட பெண்கள் காரணமாக உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மட்டும் ஓராண்டில் 89 பேர், ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது வாரந்தோறும் சராசரியாக 2 அல்லது 3 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவது அதிகரித்துள்ளது.

இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஃபேக்டர்,8 மற்றும் ஃபேக்டர்,9 ஊசி போட வேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ.5000. ஊசி, மருந்துகளின் விலை அதிகம் என்பதால் 95 சதவீத தனியார் மருத்துவமனைகள் ஹீமோபீலியாவுக்கு சிகிச்சை அளிப்பதில்லை.

ஃபேக்டர்,8 மருந்து இல்லாவிட்டால், ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ''ஃபிரெஷ் ஃபுரோஸன் பிளாஸ்மா''வை (Fresh Frozen Plasma) பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தலாம்.

இதுவும் இல்லாவிட்டால், பிளாஸ்மாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ''கிரியோபிரசிபிடேட்''டை (Cryopreci pitate)ஊசி மூலம் செலுத்த வேண்டும். இந்த நோயை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ரத்தக்கசிவு ஏற்படும்போது தேவையான ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் உயிர் வாழ முடியும். சிகிச்சை பெறாவிட்டால் உயிர் பிழைக்க முடியாது.

கண்களின் அமைப்பும் குறும்பார்வை, நீள்பார்வை விளக்கங்களும்

E-mail Print PDF

கண்கள் முகத்திலே பிறை போன்று காட்சியளித்தாலும் அவை சந்திரனைப் போன்று கோள வடிவமானவை. மண்டை ஓட்டின் முகப்பகுதியின் (கட்குழிகளினுள்) என்புக் குழியினுள் மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளன. கண்களின் வெளிப் (முற்)பகுதியை மேலும்,கீழுமாக இரண்டு கண்மடல்கள்(eye lids) பாதுகாக்கின்றன. கண்ணின் மேற்புறமாக வெளிப்பக்க ஓரத்திற் தோலினுள் கண்ணீரைச் சுரக்கும் கண்ணீர்ச் சுரப்பி (lachrymal gland) அமைந்துள்ளது.

Read more...

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்!!!

E-mail Print PDF

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது.

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும்,போதிய போசாகின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர்.

இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். அத்துடன் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

Read more...

பிரசவத்தின்போது ஏற்படும் பிரசவ வலியும் ”எபிடியூரல்” என்னும் சிகிச்சை முறையும் - தெரிந்து கொள்வோம்

E-mail Print PDF


மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்துவந்துள்ளது. அந்த நிலைமை மெல்ல மெல்ல மாறிவருகிறது. தண்டுவடத்தினுள் (முள்ளெலும்பினுள்) உள்ள ”முண்ணான்” நரம்புகளில் ஊசி மருந்து ஏற்றுவதன் மூலம் வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது இச் சிகிச்சை பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.

பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

1. குழந்தையின் எடை.

2. கருவறையில் குழந்தையின் நிலை.

3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.

4. சுருங்கும் தன்மையின் வலிமை.

5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு

என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார் கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.

இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் ”எபிடியூரல் டெலிவரி” என்பது!

எபிடியூரல் டெலிவரி” என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.

நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது.

4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.

எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும்.

5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.

ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும்.

முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார்கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும்.

ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.

எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!

குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.

ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.

இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண்களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.

''இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘

''எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரையிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவிலும், இலங்கையிலும் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘

தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்கும். ''பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘

''பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவதால் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்!''

இந்தியாவிலும் மருத்துவ சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் 'எபிடியூரல் அனெஸ்தீஸியா' மட்டும் ஏன் பரவலாகவில்லை என்று ஈரோடு மகப்பேறு மருத்துவர் சிறீமதி முருகேசன், மயக்க மருந்து நிபுணர் சித்ரா சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் கேட்டபோது...

டாக்டர் சிறீமதி: எபிடியூரல் அனெஸ்தீஸியா மூலம் வலி இல்லாத பிரசவம் என்பது, நம் நாட்டில் சமீபத்தில்தான் கண்டு கொள்ளப் பட்டுள்ளது. பரவலாக நடைமுறைப்படுத்த இயலாமைக்கு காரணம், பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவு இல்லாத குறைதான். பிரசவ நேரம் முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

ஸ்டிரைல் செய்யப்பட்ட, படுசுத்தமான பிரசவ அறை, மானிட்டர், ஆபரேஷன் தியேட்டர் என்று அனைத்தும் முழுமையாக உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இதுபோன்ற முறைகள் சாத்யமாகும். இங்கே வலி எடுத்த பின்பு தான் எங்களிடம் வருகிறார்கள். அந்த நேரத்தில் இது தேவைப்படுவதில்லை.

டாக்டர் சித்ரா: கர்ப்பிணிகள் கடைசி நேரத்திலோ அல்லது காலங்கடந்த நிலையிலோ வரும்போது அவசரமாக தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. தினம் 50 பிரசவ கேஸ் வருகிறது. முழுநேரப் பணியில் தகுதியான மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தால்தான் இந்த முறை இங்கே பரவலாக முடியும். அந்த அளவுக்கு வசதிகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உடனே வந்துவிடாது.

நன்றி

அழகுக் குறிப்பு - மூக்கு மற்றும் காது அழகு படுத்துவது எப்படி? அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

கிளி மூக்கு, குடை மிளகாய் மூக்கு, சப்பை மூக்கு, கோணல், கூர்மையான மூக்கு இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம்.

ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலைப்படத் தேவையில்லை.

மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அருக்குளிப்புபை (அசூசையை) ஏற்படுத்தும்.அதனால் முகம்வைத்து பார்க்கமாட்டார்கள்.

கடைகளில் விற்கும் பிளாக் ஹெட்ஸ் றிமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இறுகி இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்கமாட்டாது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.

Read more...

பைல்ஸ் (Piles ) எனப்படும் மூலவியாதியும் அதற்கான காரணிகளும்,

E-mail Print PDF

மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.

மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது.

மூல நோய் இரு வகைப் படும் -உள் மூலம், வெளி மூலம், உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.

1. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது அது மூல வீக்கத்தை ஏற்படுத்தி மூல வியாதியைத் தோற்றுவிக்கும். தமிழ் வைத்தியத்தில் “வயது போக, வயிறு பெருக்க, மூலம் புறப்பட” என்ற சூத்திரம் இருக்கிறது.

2. நீண்ட நாள் மலச் சிக்கல் மூலத்தைப் புடைக்கச் செய்கிறது.

3. உடற்பயிற்சி இல்லாமை, நார் சத்து இல்லாத மாவு உணவு, மூல வாசலில் எரிச்சல் என்பனவும் மூல வியாதியைத் தோற்றுவிக்கின்றன.

4. அதிக நேரம் நின்றபடி வேலை செய்தல் அல்லது அதிக நேரம் உட்கார்ந்த படி வேலை செய்தல் மூல நோய்க்குக் காரணமாகின்றது.

5.மூல நோய் பரம்பரை நோயாகவும் சில குடும்பங்களில் இடம் பெறுகிறது.

6. வயதுவ காலத்தில் முதுமையின் பரிசுகளில் ஒன்றாக மூலவியாதியும் ஏற்படுவது வழமை. இதைத் தவிர்க்க முடியும். கட்டாயமாக முதுமை அடைந்த காலத்தில் மூல நோய் ஏற்படத்தான் மேண்டுமென்ற விதி கிடையாது.

7. கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதி அழுத்தம் ஏற்படுகிறது. மகப் பேற்றின் போது குழந்தையை முக்கி வெளியேற்றும் போது மூலம் புறப்படும். ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மூல நோய் மறைந்துவிடும்.

மூலவியாதி வருவதைத் தடுப்பதற்கு சில வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள வெண்டைக்காய் போன்ற வழுவழுப்பான மரக்கறிகளையும் இலை வகை களையும் உணவாக்க வேண்டும். முதலாம் கட்ட மூலவியாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இது போதுமானது. நிறையத் தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.

வயதானவர்களுக்கு மூல இரத்தக் குழாய் வீக்கம் கூடுதலாக இருக்கும். பைன்டிங் (Binding ) என்ற சிகிச்சை முறையை மருத்துவ ஆலோசனையுடன் பயன் படுத்தி நன்மை அடையலாம். இந்தக் கட்டம் இரண்டாம் கட்ட மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.

மூன்றாம் கட்டம் பற்றி இவ்விடத்தில் பார்ப்போம். அறுவை சிகிச்சை தவிர்ந்த பிறிதொரு மருத்துவ முறையும் மூலவியாதியைக் கட்டுப்படுத்த முடியாதென்ற நிலை தோன்றும் போது அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை அப்படியானவர்களுக்கு சிறந்த நிவாரணமாக அமையும். இப்போது சில நிமிடங்களில் முடியும் லேசர் அறுவை சிகிச்சை வந்து விட்டது. அதைப் பயமின்றிப் பயன் படுத்தலாம்.

மலச்சிக்கலை தடுக்கும் வழிமுறை:

மலச்சிக்கல்
மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.

மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.

செரிமானம் எப்படி ஏற்படுகிறது?
முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது ஆரம்பமாகிறது. பிறகு உணவு வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும்.


வயிற்றிலுள்ள உணவு, அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு, சிறு குடலுக்குச் செல்கிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மை அதிகமாகும்போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.

சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத்தன்மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன் கலந்து, உணவு அமிலத்தன்மை இழந்து, நடுநிலை ((நெரவசயட)) அடைகிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன.

பெருங்குடலில் இக்கழிவுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:


1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.


மலச்சிக்கலுக்கு அக்குபிரஷர் சிகிச்சை:
அக்குபிரஷர் முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.

பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.

வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.



இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால் ‘நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும்.

கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.

நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.

Page 8 of 30

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்