Friday, Nov 17th

Last update02:47:21 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை

விஸ்வரூபம் பேச்சில் இணக்கம்

E-mail Print PDF

அரச அதிகாரிகள், முஸ்லீம் குழுக்கள் மற்றும் கமல்ஹாசன் தரப்பினரிடையே நடந்த 6 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விஸ்வரூபம் படப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் ஊடகங்களுக்குப் பேசியுள்ளார்.
படத்தில் வரும் சில ஒலிக் குறிப்புக்களை நீக்க தான் ஒப்புக்கொண்டிருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஆனால் எந்தெந்த ஒலிக்கீற்றுக்கள் நீக்கப்படுகின்றன என்பது குறித்து எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தாம் நீக்க சம்மதித்துள்ள விடயங்களை திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் மத்திய சபையிடமும் சமர்ப்பிக்கவுள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.

பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர உதவிய தமிழக முதல்வருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இரு தரப்பும் திருப்தி
தமிழக அரசு படத்தை வெளியிட விதித்த தற்காலிகத் தடையை எதிர்த்து தாம் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்த கமல், அரசும் தடையை திரும்பப் பெறும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
படம் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

தமது கோரிக்கைகளை கமல்ஹாசன் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இருதரப்பினருக்கும் பேச்சுவார்த்தையில் முழு திருப்தி கிடைத்துள்ளதாகவும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட முஸ்லீம் தரப்பினர் கூறியுள்ளனர்.

வட-நோர்வேயின் காணக் கிடைக்காத அதிசய காட்சிகள்

E-mail Print PDF

வட-நோர்வேயில் அதிசய காட்சிகள் பதியப் பெற்றுள்ளன

காட்சிகளை கண்டு களிக்க இங்கே அழுத்துங்கள்

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகை

E-mail Print PDF

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறிவிஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

தொடர்ச்சியாக சினிமாக்கள் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய எதிர்ப்புத் துவேசத்தைக் காட்டுவதின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும், சித்தரித்துள்ளதுடன் முஸ்லிம்கள் புனிதமாக கருதும் திருமறைக் குர்ஆனையும் கொச்சைப்படுத்தி இத் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

21ம் தேதி திங்கள் கிழமை தமிழ்நாட்டில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு இத்திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. விஸ்வரூபம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் இது வரைக்கும் எந்தத் திரைப்படத்திலும் இல்லாத அளவு இஸ்லாத்தையும், முஸ்லிம்களும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் பலம் மிகு இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளதுடன், இந்தியாவில் எந்தவொரு திரையரங்கிளும் இத்திரைப்படத்தை ஓட விடமாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

இலங்கையிலும் இத்திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலங்கை திரைப்பட வெளியீட்டுக் கூட்டுத்தாபனத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மற்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கும் இத்திரைப்படத்தை தடை செய்யும்படி கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 25ம் திகதி விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இலங்கையில் கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கிலும் இத்திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(25-01-2013) ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக இன்று நடந்த ஜமாத்தின் தலைமை நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அப்பாவானார் நடிகர் கார்த்தி!

E-mail Print PDF

14.01.2013

நடிகர் கார்த்தி - ரஞ்சனி தம்பதியினருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

கார்த்தி - ரஞ்சனி திருமணம் 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் 03ஆம் திகதி பெரியோர்கள் நிச்சயித்தபடி நடைபெற்றது.

இத்தம்பதியினருக்கு இபெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் வைத்தியசாலையில் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படம் வெளியாகியது. இந்நிலையில் குழந்தையும் பிறந்தமையினால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் கார்த்திக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் இத்தருணத்தில் நாமும் வாழ்த்துவோம்

ஜன.25இல் விஸ்வரூபம் 500 திரையரங்குகளில் திரையிடப்படும் : கமல்

E-mail Print PDF

உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்து, நடித்து, இயக்கியிருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் எதிர்வரும் 25ஆம் திகதி திரையிடப்படும் என கமல் ஹாசன் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார்.

டீ.ரீ.எச்சில் குறித்த பிரச்சினைகளால் தள்ளிப்போய்க்கொண்டிருந்த விஸ்ரூபம் திரைப்படம், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநயோகஸ்தர்களின் ஆதரவுடன் 500 திரையரங்குளில் தமிழ்நாட்டில் வெளியாகவுள்ளது.

இது குறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ஆம் திகதி 500 அரங்குகளுக்கு குறையாமல் தமிழக மெங்கும் திரையிடப்பட இருக்கிறது. எனது தொலைநோக்கை புரிந்துகொண்டு டீ.ரீ.எச் என்ற புதிய முயற்சிக்கு துணை நிற்க தயாரான என் திரையரங்க உரிமையாளர் மற்றும் விநியோகஸ்த சகோதரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

தனிமனிதனை மதித்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டீ.ரீ.எச்சில் விஸ்ரூபம் படம் திரைக்கு வந்து 3 நாட்களுக்கு பின்னரே வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டை ஒத்திவைத்திருக்கிறார்

E-mail Print PDF

நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டை ஒத்திவைத்திருக்கிறார். ஆனால் புதிய தேதி எதனையும் அவர் அறிவிக்கவில்லை. டிடிஹெச் வழியில் தொலைக்காட்சியாக அப்படம் ஒளிபரப்பாவது உறுதி என்றும் ஆனால் எப்போது என்ற விவரம் பின்னால்தான் அறிவிக்கப்படும் என்றும் இன்று புதன் கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

டிடிஹெச் வழியே ஒளிபரப்புவது திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கடுமையாக பாதிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். அப்படிச் செய்வதானால் தமிழக திரையரங்குகளில் விஸ்வரூபத்தினைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் எனவும் அறிவித்தனர். எதிர்வரும் ஜனவரி 11ஆம் நாளன்று படம் வெளியிடப்படும் என்றும் அதற்கு முந்தைய நாளில் டிடிஹெச் வழியாகத் திரையிடல் எனவும் கமல் முன்பு கூறியிருந்தார்.

இணைப்புக்கு ஆயிரம் ரூபாய் என்று டிடிஹெச் நிறுவனங்களும் வசூலிக்கத் தொடங்கின. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, அவர்களுக்கும் நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து இறுதிக்கட்டத்தில் கமல் வெளியீட்டுத்திட்டத்தையே ஒத்திவைக்க நேரிட்டிருக்கிறது.

அஞ்சவில்லை

ஆனால் கமல்ஹாசனோ யாருடைய அழுத்ததிற்கும் அஞ்சி அவ்வாறு ஒத்திப்போடவில்லை, தனது சௌகரியங்களை முன்னிட்டே என்றார்.

இப்பிரச்சினை தொடர்பாக தன் முயற்சிகளுக்கு இடையூறு உருவாக்க முயற்சித்ததாக திரையரங்கு உரிமையாளர் அமைப்பைச் சேர்ந்த சிலர் மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

மீண்டும் டிடிஹெச் மூலம் வெளியிடுவது சரியான வழி அனைவருக்கும் நலம் பயக்கும் எப்படியும் தொழில் நுட்ப முன்னேற்றத்தினை எவராலும் தடுத்துவிடமுடியாது என்றார்.

டிடிஹெச் மூலம் காண எவ்வளவு பேர் முன்வந்திருக்கின்றனர் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

Page 8 of 84

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்