Thursday, Jul 20th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை

தமன்னாவின் 23 வது பிறந்தநாள் வாழ்த்து -21.12.2012

E-mail Print PDF



நடிகை தமன்னா இன்று தனது 23ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருந்த தமன்னா சில காலம் தமிழில் தலை காட்டாமல் தெலுங்குப் பக்கம் போயிருந்தார்.

தற்போது மீண்டு(ம்) அஜித்தின் நாயகியாக தமிழ் சினிமாவில் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பிக்கவுள்ளார்.

இன்று பிறந்ந நாளைக் கொண்டாடும் தமன்னாவின் மீள்வரவு தமிழில் சிறப்பாக அமைய அவரது ரசிகர்கள் சார்பாக இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

சிறிய வயதில் (27) திருமணம் முடித்து என் வாழ்க்கையை சீரழிக்க நான் விரும்பவில்லை: அசின் ஆவேசம்!

E-mail Print PDF

நடிகை அசினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக மும்பை பட உலகில் செய்திகள் பரவியது. தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், இருவீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தி டி.வி.யொன்று இந்த செய்தியை ஒளிபரப்பியது. இதனால் அசின் ஆவேசமானார். மும்பையில் நிருபர்களை அவசரமாக சந்தித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது முட்டாள்தனமானது ஆகும். என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். எனக்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. இந்த சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று எனது வாழ்க்கையை நாசம் செய்ய நான் விரும்பவில்லை.

சினிமாவில் நான் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. விருதுகள் வாங்க வேண்டியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறவும் லட்சியம் உள்ளது. இவற்றில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. இந்த லட்சியங்கள் நிறைவேறிய பிறகுதான் திருமணம் பற்றி சிந்திப்பேன்.

இன்னும் ஏழு ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதன் பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன். சினிமா, குடும்பம் என்று இரண்டு இடத்திலும் கால் வைக்கமாட்டேன். திருமணம் ஆகிவிட்டால் சினிமாவை விட்டு விலகி விடுவேன்.

டிச. 2ஆம் திகதி விஸ்வரூபம் இசை வெளியீடு

E-mail Print PDF

உலக நாயகன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு டிச. 2ஆம் திகதி நேரு உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

நாளை, நாளை மறுதினம் என்று காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு படம் மற்றும் பாடல்கள் எப்போதுதான் வரும் என்று ஏக்கம் வர ஆரம்பித்துள்ள நிலையில் இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

சங்கர் எசன்லாய் இசையமைத்துள்ள இப்படத்திற்காக 5 பாடல்களில் 3 பாடல்களை உலக நாயகனே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் விமானம் மூலம் அடுத்தடுத்து வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த போதும் சீரற்ற காலநிலையால் அது கைகூடவில்லை.

தற்போது சென்னையில் மட்டும் பாடல்களை வெளியிடுவதோடு படத்தினை டிசம்பர் மாத இறுதி வாரத்தில் திரையிடவும் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

படப்பிடிப்பில் விபத்துக்குள்ளானார் அஜித்

E-mail Print PDF


விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்திற்காக மும்பையில் நடக்கும் படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சி ஒன்றில் அஜித் காரின் டயரில் மோதி காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

25 அடி தூரத்திலிருந்த காரிலிருந்து இன்னொரு காருக்கு தாவும் காட்சியொன்றில் டூப் இல்லாமல் பிடிவாதமாக அஜித்தே நடித்துள்ளார். இதன்போது நிலைதடுமாறி அவரது வலது கால் டயருடன் மோதுண்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சில மணி நேரம் படப்பிடிப்புக்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. ஆனால் மீண்டும் குறித்த அச்சண்டைக்காட்சியினை வலியையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக முடித்துக்கொடுத்துள்ளார்.

இச்செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது ட்விட்டரில் ஆறுதல் கூறிவருகின்றனர்.

இதில் இயக்குனர் வெங்கட் பிரபு இவ்வாறு ட்வீட் பண்ணியுள்ளார், அந்த வலியுடன் அஜித் சேர் படப்பிடிப்பபை தொடர்ந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அஜித்துடன் பேசினேன் அவர் நலமாக உள்ளார். ஆனாலும் பின்னர் ஒரு அறுவை சிகிச்சை நடந்தாலும் நடக்கலாம்.

காதலியை மணமுடிக்கிறார் சிவா

E-mail Print PDF

நடிகர் மிர்ச்சி சிவா தனது காதலியான பேட்மிட்டன் வீராங்கனை பிரியாவை மணமுடிக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக மிர்ச்சி சிவாவும் பிரியாவும்  ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் வரும் 15ம் தேதி சென்னையில் நடக்கிறது.

சென்னை-28 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. தொடர்ந்து சரோஜா, தமிழ்ப்படம், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது தில்லுமுல்லு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

Page 9 of 84

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்