Monday, Sep 25th

Last update07:30:58 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை

எந்திரன்

E-mail Print PDF

இந்திய திரையுலகமா இது... என்ற ஆச்சரியத்தை உண்டாக்கிருக்கும் படம் தான் எந்திரன். ஒரே வட்டபாதையில் சுற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை ஒரு புதிய பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறது இந்த எந்திரன். ஏன் இந்த புகழாரம்... என்பதற்கு ஒரே காரணம் இந்த படைப்பை உருவாக்கிய தமிழ் உழைப்பாளிகள்.

பொதுவாக ஒரு படத்தின் விமர்சனம் என்றால் 'இதுதான் கதை... இதற்கு பிறகு என்ன நடக்கிறது'' என்று சொல்லாம். ஆனால் எந்திரன் பொறுத்த வரை நீங்கள் விமர்சனத்தை கேட்பதை விட, இந்த பிரம்மாண்ட படைப்பை தியேட்டரில் சென்று பார்த்தால் தான் அனைத்து அற்புதங்களையும் உணர்வீர்கள். ஹாலிவுட் படங்களை பார்க்கும் போது, தமிழில் இது போன்ற படங்கள் வராத என ஏங்கிய ரசிகர்களுக்கு எந்திரன் மெகா விருந்ததாக அமைந்துள்ளது.


விஞ்ஞானி வசீகரன் தனது உழைப்பால் மனித உருவம் கொண்ட ரோபோவை உருவாக்கிறார். அதற்கு 'சிட்டி' என்று பெயர் வைக்கிறார். சில காலம் கழித்து சிட்டிக்கு உணர்வையும் கொடுக்கிறார். மனித குணங்களை உணர்ந்த ரோபோ செய்யும் குறும்புகளும், சாகஸங்களும் படம் முழுக்க பிரம்மாண்ட காட்சிகளோடு சொல்லியிருக்கிறார் ஷங்கர்.

கிரிக்கெட் போட்டியில் கங்குலி-சச்சின் பாட்னர் ஷிப் போல ஷங்கர்-ரஜினியின் பாட்னர் ஷிப் ஒரு இமலாய இலக்கை எட்டியிருக்கிறது. அதே போல எந்திரன் படைப்பிற்கு உழைத்த அனைத்து டெக்னிஷியங்களுக்கும் ஹேட்ஸ் ஆஃப்.

கலை இயக்குனர் சாபுசிரில்

ஒரு விஞ்ஞானியின் ஆய்வுக் கூடம் எப்படியிருக்கும், அவரது வீடு எப்படியிருக்கும், கருத்தரங்கங்கள் எப்படியிருக்கும் என்பதை புரிந்து வேலை செய்திருக்கிறார் சாபுசிரில், பாடல் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் தனது செட்டுகளை அமைத்து அசதாரண காரியங்களை செஞ்சி அசத்திருக்கிறார் சாபுசிரில்!

வசனகர்த்தா சுஜாதா!

அமரர் சுஜாதாவின் வசனங்கள் எளிமை...ஆனால் மகா அர்த்தமுள்ளவை, 'காதல் வந்தால் ரோபாவிற்கும் நெட்டு களண்டு விடும்' என ரோபோ சொல்லும் வசனங்கள் அரங்குகளில் கைதட்டல் பெறுகிறது. ஒரு உண்மையான எழுத்தாளர் நினைத்தால் கொசுக்கும் வசன எழுத முடியும் என நிரூபித்திருக்கிறார் சுஜாதா. மனிதனைப் போல் கொசுவிற்கும் பேசும் திறமை இருந்தால் இப்படி தான் பேசியிருக்கும் என ரசிகர்களுக்கு உணர்த்திருக்கிறார் சுஜாதா. அவரது உழைப்புக்கு இந்த படைப்பு சமர்ப்பணம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு!

எந்திரன் போன்ற படைப்பை உருவாக்க இந்த மனிதனின் உழைப்பை பாராட்டியாக வேண்டும். ஒரு கமிராமேனின் பங்கு இவ்வளவு தான் என்று சொல்வதை விட, காட்சிக்கு காட்சி அற்புதமாக உழைத்து தெளிந்த நீரோடை போல காட்சிகளை கண்ணிற்கு விருந்து படைத்திருக்கிறார் ஆர்.ரத்னவேலு. இயக்குனரின் உணர்வை உள் வாங்கி அதை அப்படியே வெளிகாட்டியிருக்கிறார் ரத்னவேலு. பாடல் காட்சியில் தெளிவும் அழகும், சாகச காட்சியில் பிரம்மாண்டத்தையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ரத்னவேலு. இந்த படத்திலிருந்து ரண்டி-க்கு (ரத்னவேலுவிற்கு) ஹாலிவுட் பட வாய்ப்புகள் வர வாய்ப்பும் உண்டு!

எடிட்டிங் ஆண்டனி!

மின்னல் வேக கதைக்கு அற்புதமாக எடிட்டிங் செய்து அசித்திருக்கிறார் ஆண்டனி. முதல் பாதியில் தொடங்கி இரண்டாவது பாதி வரை கதையை உணர்ந்து படிப்படியாக வேகத்தை கூட்டியிருக்கிறார் ஆண்டனி. விஞ்ஞான பூர்வமான ஒரு படத்திற்கு புதுவிதமான எடிட்டிங் ஸ்டைலை உருவாக்கி அசித்திருக்கிறார் ஆண்டனி.

கிராபிக்ஸ் காட்சி

அவதார்’, ‘டெர்மினேட்டர்’ உட்பட பல ஹாலிவுட் படங்களை உருவாக்கிய, அமெரிக்காவில் உள்ள ஸ்டான் வின்ஸ்டைன் ஸ்டூடியோ கிராபிக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறது.  அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரகுமான்!

எந்திரனின் திரைக்கு பின்னால் இருக்கும் இன்னொரு ஹீரோ என்றால் அது ரகுமான் தான். இந்த படத்திற்காக தனது உழைப்பை டபுள் ஆக்கி காட்சிகளுக்கு இசையமைத்துள்ளார் ரகுமான். ஒரு படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படத்தை பார்த்தால் புரியும். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சி நெருங்க... நெருங்க... அவர் ஏற்படுத்திய இசை ஒலிகளும் வியக்க வைக்கிறது. 'புதிய மனிதா பூமிக்கு வா' என்ற டைட்டல் சாங் தொடங்கி. 'அரிமா, அரிமா' சாங் வரை ரகுமானின் இசை தாளம் போட வைக்கிறது. குறிப்பாக 'பூம்.. பூம்.. ரோபா டா' 'கிளிமாஞ்ரோ' பாடல் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் கவர்கிறது. தீம் மியூசிக் இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானிற்கு இன்னொரு ஆஸ்கார் கொடுத்தால் கூட தவறில்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்கலாம். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல் வெல் டன் ஏ,ஆர்.ரகுமான்.

ரசூல் பூக்குட்டி

‘எந்திரனு’க்கான விசேஷ ஒலிகளை டி.டி.எஸ்ல மிக்ஸ் பண்ணியிருக்கார் ரசூல் பூக்குட்டி. ஸ்லம் டாக் மில்லியினர் படத்தில் டி.டி.எஸ் ஒலிகளை வித்தியசமான முறையில் எழுப்பி அனைவரின் கவனத்தை ஈர்த்த ரசூல் பூக்குட்டி, எந்திரன்  படத்திலும் தன் பாணியை கையாண்டு தனது முத்திரையை பதித்துள்ளார்.

நாயகி ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய்-ரஜினி கம்பினேஷன் அற்புதமாக பொருந்திருக்கிறது. இவரை விட பொருத்தமான ஒரு ஜோடியை இனி ரஜினிக்கு கண்டுபிடிக்கவே முடியாது. ஷங்கர் ஐஸ்வர்ய ராயை லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணித்தது தவறில்லை. கோபம், அழுகை, கொஞ்சல், கெஞ்சல், நடனம் என அனைத்திலும் ரஜினிக்கு இணையாக அசத்தியிருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து!

ஷங்கர்-வைரமுத்து-ரகுமான் கூட்டணி மீண்டும் ஒரு வெற்றி கூட்டணி என நிரூபித்துள்ளது. எந்திரனுக்கு பாட்டு எழுதுவதற்குகாக மூன்று மாதங்கள் தகவல்களை சேகரித்து அசத்தியுள்ளார் வைரமுத்து. குறிப்பாக 'அரிமா அரிமா' பாடலில் சிலிக்கான் சிங்கம் என ரஜினியை வர்ணித்த வைரமுத்துவிற்கு ஒரு சபாஷ். எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு வைரமுத்துவின் வரிகள் ஒரு சிறந்த உதாரணம்!


இயக்குனர் ஷங்கர்!

'பத்து வருஷ உழைப்பு, அதற்கு பலனே இல்லையா' எந்திரன் படத்தில் ரஜினி பேசும் வசனம் இது. ஆனால் ஷங்கருக்கு பலன் கிடைத்துவிட்டது. பத்து வருஷமாக தனது கனவுப் படத்தை மெருகுப்படுத்திய ஷங்கரின் உழைப்பை எப்படி பாராட்டுவது, வார்த்தைகளே இல்லை ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர். ஒரு தமிழன் எப்படிப்பட்ட கதையும் எடுக்க முடியும் என ஷங்கர் நிரூபித்துள்ளார். சர்வதேச அளவில் ஒரு இந்தியனால் இப்படியும் எடுக்க முடியுமா என்ற தடையை உடைத்து விட்டார் ஷங்கர். தனது கற்பனைக்கு ரஜினி மூலம் உயிர் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் ஷங்கர்.

ஷங்கரின் அசுர உழைப்பு படத்தின் காட்சிகள் மூலம் தெரிகிறது. இந்தியாவில் மீண்டும் இந்த படம் போல் வருமா... சான்ஸே இல்ல சூப்பர் ஷங்கர் சார். பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இறுதிக்கட்டத்தில் எந்திரன் படத்தை தனது திரைக்கதையை மூலம் விறுவிறுப்பாகவும், சீட் நுனியில் அனைவரையும் உட்கார வைத்திருக்கிறார் ஷங்கர். இந்த படைப்பாளின் உழைப்பிற்கு ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர். சூப்பர்... சூப்பர்...


தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்!

இரண்டு பேர் இல்லையென்றால் ஷங்கரின் கனவு நனவாகி இருக்காது. ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றொருவர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். அவர் இல்லையென்றால் இந்தப் படம் முடிந்திருக்காது. இயக்குனர் ஷங்கர் மீது நம்பிக்கை வைத்து ஷங்கரின் கனவுப் படத்தை கொண்டு வந்த கலாநிதி மாறனுக்கு நன்றிகள். படத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளைளயும் குறையின்றி செய்து கொடுத்து, தமிழ் திரையுலகிற்கும், இந்திய திரையுலகிற்கும் ஒரு அற்புத மற்றும் பிரம்மாண்ட படைப்பை வெளிக் கொண்டிருக்கிறார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். வாய்ப்பும் வசதியும் அமைத்து கொடுத்து ஹாலிவுட்டுக்கே சவால் விடும் படைப்பை கொடுத்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு நன்றிகள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்!

சான்ஸே இல்ல என்ன சொல்வது இந்த மனிதனின் உழைப்பை. ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு அழகாக இருக்கிறார் ரஜினி. இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. விஞ்ஞானியாக நடிக்கும் போது தனது நடிப்பின் அனுபவத்தை வெளிகாட்டியிருக்கிறார். அதே ரஜினி, சாதுவான ரோபோவிற்கும், விஸ்வரூப ரோபோவிற்கும் நடிப்பு மூலம் வேறுபடுத்தி நடிப்பில் உச்ச கட்டத்தை எடடியுள்ளார் நம்ம சூப்பர் ஸ்டார். விஸ்வரூப ரோபோவாக ரஜினி செய்யும் நடிப்பை வர்ணயிக்க வார்த்தை இல்லை. பஞ்ச் டயலாக் இல்லாத ரஜினி ஸ்டைல் மேனரிஸங்கள், அதிரடி அறிமுகக் காட்சி, எதுவுமே இல்லாமல் இயக்குனரின் ஷங்கரின் உணர்வுகளை உள்வாங்கி அப்படியே வெளி காட்டியிருக்கிறார் ரஜினி. பஞ்ச் டயலாக் இல்லாமல் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து இரண்டு பாதியில் மிரட்டியிருக்கிறார் ரஜினிகாந்த்.

ஒன்றுமறியாத ஒரு குழந்தையின் மனநிலையில் உள்ள ரோபோ எப்படியிருக்கும்... வில்லத்தனத்தின் மொத்த உருவம் எப்படி இருக்கும்... அத்தனைக்கும் ஒரே விடை ரஜினி எந்திரனில் செய்துள்ள வேடங்களே.

ஹேட்ஸ் ஆஃப் ரஜினி சார்!

மொத்தத்தில் 'எந்திரன்' இந்திய சினிமாவை சர்வதே அளவில் தலைநிமிர செய்துள்ளது.

பாஸ் என்கிற பாஸ்கரன்

E-mail Print PDF

நடிப்பு: ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ராஜேந்திரன், சுப்பு பஞ்சு. விஜயலட்சுமி.
இயக்கம்: ராஜேஷ்.எம் தயாரிப்பு: கே.எஸ்.ஸ்ரீனிவாசன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு: ஷக்தி சரவணன்.

ஏகப்பட்ட அரியர்ஸ் வைத்திருக்கும் அறிவாளி ஆர்யா. உலகத்திலேயே அவருக்கு பிடிக்காத ஒரே விஷயம் படிப்பு. படிப்பும் ஏறாமல், வேலையும் செய்யாமல் சுற்றித் திரியும் ஆர்யாவுக்கு வீட்டில் எப்போதும் அர்ச்சனை. அம்மா மட்டும் அன்பு. அண்ணன் சுப்பு வெட்னரி டாக்டர். அரியர்ஸ் தேர்வு எழுதப்போகும் இடத்தில் கெஸ்ட் புரபசர் நயன்தாராவை சந்தித்து அவரை ஒருதலையாக காதலிக்கிறார். தான் காதலிக்கும் நயன்தாராவின் அக்காவே அண்ணனின் மனைவியாக வந்துசேர, நேரடியாகவே அண்ணியிடம் பெண் கேட்கிறார். வேலைவெட்டியில்லாத உனக்கு எப்படி என் தங்கையைத் தர முடியும் என்று அண்ணி கேட்க, ரோசப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் ஆர்யா, எப்படி பணம் சம்பாதித்து, பெரிய ஆளாகி நயன்தாராவை கைப்பிடிக்கிறார் என்பதை காமெடியாக சொல்கிறது படம்.இந்த பாணியில் வெளிவரும் ஆயிரத்து ஒண்ணாவது கதைதான் என்றாலும் அதை சொல்லியிருக்கும் விதம் ஆயிரத்தில் ஒன்றாக இருப்பதால் பாஸ்கரன் பாசாகிறான். ஆர்யா ரொம்பவே யூத்தாக இருக்கிறார். பாக்கெட் நிறைய பிட் வைத்துக் கொண்டு பரீட்சை எழுத கிளம்புவதிலிருந்து தான் ஆரம்பிக்கும் டுட்டோரியலுக்கு ஷகீலாவை டீச்சராக கொண்டு வருவது வரை ஆர்யா அமர்க்களப்படுத்துகிறார்.  நயன்தாராவுடனான ரொமான்டிக்கில் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட்டாகிறது. படத்தை தூக்கி நிறுத்தும் இன்னொரு ஹீரோ சந்தானம். ‘கிரி’ படத்தில் வடிவேலுக்கு பேக்கரி கிடைத்த மாதிரி சந்தானத்துக்கு சலூன் கிடைத்த பிளாஷ் பேக்கிலிருந்து ஆர்யாவின் வலது கரமாக இருந்து அவர் படும் அவஸ்தை ஒவ்வொன்றும் காமெடி பெக்.

வேலையில்லாத ஆர்யாவை அவமானப்படுத்தி அனுப்பும் நயன்தாராவின் அப்பா சித்ரா லட்சுமணனை அவருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் புகுந்து, புல் மப்பில் சந்தானம் பண்ணும் கலாட்டா தியேட்டரை அதிர வைக்கிறது. நயன்தாரா எப்போதும் போல அழகுதாரா. ஆர்யாவை பணம் சம்பாதிக்க தூண்டும் போது அவர் அதை மதிக்காமல் பேசும்போது துடிப்பதும், காதலை மனசுக்குள் மறைத்து கண்டிப்பை வெளியில் காட்டும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். இவர்களுக்கு அடுத்து கவனிக்க வைக்கிறவர்கள், சுப்பு பஞ்சு&விஜயலட்சுமி ஜோடி. இளையராஜாவின் 80&களின் பின்னணி இசையில் இவர்கள் காதல் வளர்ப்பதும், இவர்கள் முதலிரவு ஆர்யாவால் தடைபடுவதும் அப்போது இருவர் காட்டும் இருவித உணர்வுகளும் யதார்த்தமான அழகு. யுவனின் இசையும், ஷக்தி சரவணனின் ஒளிப்பதிவும் காதுக்கும் கண்ணுக்கும் இனிமையாக இருக்கிறது. டுட்டோரியல் கல்லூரி கலாட்டாக்களில் யதார்த்தம் இல்லை. ஆனாலும் பார்வையற்ற ஆசிரியையும் அவர் தொடர்பான காட்சிகளும் நெகிழ வைக்கிறது. ஒரு வங்கி அதிகாரியின் பாராட்டு விழாவில் ஒருவர் குடித்துவிட்டு வம்பு செய்வதை வேடிக்கை பார்ப்பது, எந்தவித அழுத்தமான காரணமும் இல்லாமல் நயன்தாராவுக்கு ஆர்யா மீது காதல் வருவது, ‘நான் கடவுள்‘ ராஜேந்திரனின் வில்லத்தனம் ஆகியவை காமெடி படத்தில் கண்டுகொள்ள தேவையில்லாத குறைகள்.கொஞ்சம் ரொமான்டிக், நிறைய காமெடி மூலம் இருக்கையில் அமர வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.எம்.

வந்தே மாதரம்

E-mail Print PDF



நடிப்பு: மம்மூட்டி, அர்ஜுன், சினேகா, தீபக் ஜெதி.
இயக்கம்: டி.அரவிந்த்
தயாரிப்பு: ஹென்றி
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ், எம்.வி.பன்னீர் செல்வம்.

இந்தியாவின் நதிகளை இணைத்து அதன் மூலம் விவசாய பிரச்னைகளை தீர்த்து வல்லரசு நாடாக்க முயற்சிக்கிறார் பிரதமர். இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத பயங்கரவாத கும்பல் ஒன்று இந்த திட்டத்தை சீர்குலைக்க தீபக் ஜேதி தலைமையில் ஒரு கூட்டத்தை அனுப்புகிறது. அதை உளவுத்துறை அதிகாரிகளான மம்மூட்டியும், அர்ஜுனும் எப்படி முறியடித்து நாட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பது கதை.

தீவிரவாதிகள் ஊடுருவல் பற்றி டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் வருகிறது. அதை தொடர்ந்து கொச்சி துறைமுகத்தில் ஒரு கொலை நடக்கிறது. இரண்டையும் தொடர்புபடுத்தி மம்மூட்டியும், அர்ஜுனும் விசாரணையைத் துவங்குவதிலிருந்து விறுவிறுப்பு துவங்குகிறது. திடீர் திருப்பங்களோ, அதிரடி மாற்றங்களோ இல்லாமல் விசாரணையும், துப்பறிவும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதாலும், எப்படியும் ஹீரோக்கள் தீவிரவாதிகளை அழித்து நாட்டை காப்பாற்றி விடுவார்கள் என்பது நமக்குத் தெரிவதாலும் காட்சியோடு ஒன்ற முடியவில்லை. ஆனாலும் தரையில் கன்னிவெடிகள் இருக்க, மரத்தின் மீதே நடக்கும் சண்டை, சாலையில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தீவிரவாதி தப்பிப்பது, பிரதமரின் பொதுக்கூட்டத்தை குண்டு வைத்து அழிக்க போடும் திட்டம் என பிரேமுக்கு பிரேம் காட்சி பிரமாண்டங்கள் பிரமிக்க வைக்கிறது.
கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடமிருந்து உண்மையை வரவழைக்க, அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவன் 20 வருடம் கோமா நிலையில் இருந்ததாக நாடகமாடி உண்மையை வரவழைக்கும் அந்த நாடகம் நல்ல ஐடியா.

மம்மூட்டியும், அர்ஜுனும் துடிப்பு மிக்க உளவுத்துறை அதிகாரிகள் கேரக்டருக்கு கச்சிதம். இருவரின் மிடுக்கு உண்மையான அதிகாரிகளுக்கு ரோல் மாடலாகலாம். சண்டை காட்சிகளிலும் இருவரும் வயதை மறந்து கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சினேகா வரும் காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். எடுத்த ஒரு டூயட்டை வீணாக்க வேண்டாம் என்று முதல் ரீலிலேயே அதனை காட்டிவிட்டு கதைக்கு வந்து விடுகிறார்கள். இடையில் காணாமல் போகும் சினேகா, திடீரென வந்து செத்துப்போவதில் அனுதாபம் பிறக்கவில்லை. அவ்வப்போது திணிக்கப்படும் குத்துப்பாடல்கள் கதையின் டென்ஷனை குறைக்க பயன்பட்டிருக்கிறது. மம்மூட்டி, அர்ஜுனுக்கு பிறகு மூன்றாவது ஹீரோ கேமரா. அதனை ராஜேஷ் யாதவும், பன்னீர் செல்வமும் அற்புதமாக கையாண்டிருக்கிறார்கள். ஆக்ஷன் படத்துக்கான பின்னணி இசையை தந்திருக்கிறார் இமான். முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் வில்லன் என்பதால் அர்ஜுனை அன்வராக்கியும், மம்மூட்டியை ஹீரோவாக்கியும், நாசரை பிரதமராக்கியும் சமரசம் செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர் அரவிந்த். பிரமாண்டத்தில் செலுத்திய கவனத்தை கதையிலும், காட்சி அமைப்பில் செலுத்திய கவனத்தை திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் மெகா ஆக்ஷன் படமாக அமைந்திருக்கும்.

துரோகி

E-mail Print PDF

நடிப்பு: ஸ்ரீகாந்த், விஷ்ணு, பூனம் பஜ்வா, பூர்ணா, பூஜா, தியாகராஜன்.
இயக்கம்: சுதா.கே.பிரசாத் தயாரிப்பு: இந்திரா இன்னோவேஷன்ஸ்
இசை: செல்வ கணேஷ் ஒளிப்பதிவு: அல்போன்ஸ் ராய்.

பெண் இயக்குனர்கள் என்றால் மென்மையான கதையை இயக்குபவர்கள் என்ற மரபுகளை உடைத்து முதன் முறையாக சுதா.கே.பிரசாத் இயக்கியிருக்கும் பக்கா ஆக்ஷன் படம். ஸ்ரீகாந்தும், விஷ்ணுவும் வட சென்னையின் நெரிசலான பகுதியில் பிறந்து வளரும் நண்பர்கள். தங்களது அன்பான டீச்சர் பூஜாவை, லோக்கல் தாதா ஒருவன் கொலை செய்ய, அவனை தூக்குகிறார்கள். கொலை செய்தது விஷ்ணுதான் என்று ஸ்ரீகாந்த் காட்டிக் கொடுக்கிறார். இருவருக்குள்ளும் விரோதம் வளர்கிறது. படிக்க ஆசைப்படும் ஸ்ரீகாந்த், தாதா தியாகராஜனிடம் சேர்கிறார். படிப்பில் ஆர்வம் இல்லாத விஷ்ணு, ஐ.பி.எஸ் அதிகாரியாகும் லட்சியத்தோடு இருக்கிறார். இருபெரும் துருவங்களான இருவரும் ஒருவருக்கொருவர் எப்போதும் மோதிக்கொண்டிருக்கிறார்கள். காலை வாருவதும் கழுத்தை பிடிப்பதுமாக நகரும் இவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பம். விஷ்ணு ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், ஸ்ரீகாந்த் தாதாவாகவும் எதிரெதிர் களத்தில் நிற்கிறார்கள். இறுதி வெற்றி யாருக்கு என்பதை பரபரப்பான திருப்பங்களோடு சொல்வது மீதிக் கதை.

வட சென்னை வாழ்க்கையை சினிமா சாயம் பூசாமல் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் சிறுவர்களின் பேச்சிலும், நடவடிக்கையிலும் பிஞ்சில் பழுத்த சினிமாத்தனம் இருக்கிறது. நடுரோட்டில் கொலை செய்துவிட்டு ரத்த கத்தியுடன் நிற்கும் தாதாவிடம் 12 வயது சிறுவன் “நான் உங்கிட்ட சேரணும், இந்த ஊரே என்னை பார்த்து பயப்படணும்” என்று சொல்லி நிற்பதும், தாதாவும் அவன் கையில் கத்தியை கொடுத்து சேர்த்துக் கொள்வதும் சிறுவர்களின் மனதை குதறிப் போடும் காட்சி.

சிடுசிடுவென்றிருக்கும் ராயபுரம் இளைஞன் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் விஷ்ணு, மூக்கு விடைக்க ஸ்ரீகாந்துடன் மோதும்போதும், போலீஸ் அதிகாரியாகி கடுமை காட்டும்போதும், காதலி இறந்து விட்டதாக கதறும்போதும் விஷ்ணு நடிப்பில் முதிர்ச்சி. மென்மையான கேரக்டர்களில் வலம் வந்த ஸ்ரீகாந்த், முதன் முறையாக அழுக்குப் பையனாக அவதாரம் எடுத்திருக்கிறார். பாடி லாங்குவேஜும் வசன உச்சரிப்பும் அவரை நிஜ தாதாவாக மாற்றுகிறது. ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை தகுதியும் தனக்கு உண்டு என்பதை நிரூபித்திருக்கிறார். ரயில் தண்டவாளத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கும் அவர் ஒவ்வொரு ரயில் கிராசாகும்போது எழுப்பும் மரண ஒலியும், உயிர் தப்பும்போது ஏற்படும் திருப்தியும், விஷ்ணுவால் காப்பற்றப்படும் போது ‘இதற்கு நான் செத்தே போயிருக்கலாம்’ என்று வெறுப்பு காட்டுவதும் அபாரம். மகன் கெட்டவன் என்பதை அறிந்து ‘என் ரத்தம் இவ்வளவு அழுக்கா’ என்று கேட்கும் வித்தியாசமான தாதாவாக தியாகராஜன், நீண்ட நாட்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

அன்பான டீச்சராக பூஜா மனதில் பதிகிறார். பூனம் பஜ்வா வழக்கம்போல காதல் கம் கவர்ச்சி வேஷம் கட்டுகிறார். ஸ்ரீகாந்தை வலிந்து, மிரட்டி காதலிக்கும் தெனாவெட்டு பெண்ணாக பூர்ணா. ஒளிப்பதிவும், இசையும் ஆக்ஷன் படத்துக்கான பங்கை சரியாக செய்திருக்கிறது. இரு இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்பாகவும், அளவுகடந்த பகையாகவும் இருக்கிறார்கள் என்ற ஒரு வரி கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதையை எழுதியிருப்பதிலும், அதை படமாக்கியிருப்பதிலும் இயக்குனர் தெரிகிறார்.

ஆக்ஷன் கதையில் லாஜிக் பார்க்க வேண்டாம்தான். ஆனாலும் சிறுவர்களின் வன்முறை, ஐ.பி.எஸ் செலக்சனுக்கு சென்ற ஒருவனை செலக்ஷன் அதிகாரி ரவுடிகளை, களை எடுக்க அனுப்புவது, டீச்சரை கொலை செய்த இளைஞனை, ஒரு போன் காலில் விடுதலை செய்வது, தாதா அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் நிற்பது, எந்த கொலையையும் போலீஸ் கண்டு கொள்ளாமல் இருப்பது, தாதா கூட்டத்துக் கிடையே போலீஸ் சமாதானம் செய்து வைப்பது போன்றவை லாஜிக் கொலை.

நடிகை அசினுக்கு கறுப்புக் கொடி

E-mail Print PDF

நடிகை அசினுக்கு கறுப்புக் கொடி காட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே விஜய்யுடன் காவலன் படப்பிடிப்பில் அவர் பங்கேற்ற போது இந்த போராட்டம் நடந்தது.

ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததைக் கண்டிக்கும் வகையில் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்தன.

ஆனால் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார். அவருக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் திடீரென்று ஆதரவு தெரிவித்ததால், தடையை மீறியதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை.

ஆனால் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அசினுக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்பினால் அவர் இனி தமிழகம் வரமுடியாது என்ற நிலை இருந்தது.

ஆனால் இதற்கெல்லாம் அசின் கவலைப்பட்டவராகத் தெரியவில்லை. தனது செயலை நியாயப்படுத்தியதுடன், விஜய்யுடன் காவலன் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார், பலத்து பாதுகாப்புடன். எந்த எதிர்ப்பும் இல்லை.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இலங்கை சென்றது குறித்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல மறுத்தார்.

இந்நிலையில் காவலன் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நடந்து வருகிறது. நடிகர் விஜய்-அசின் நடிக்கும் இப்படத்தில் வடிவேல் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

நேற்று நடிகர் விஜய்-அசின் நடித்த காட்சிகள் மேட்டுப் பாளையத்தில் படமாக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் இந்த படப்பிடிப்பு நடந்தது. விஜயை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களைப் பார்த்து கும்பிட்டபடி விஜய் வந்தார்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள அசின் மேட்டுப்பாளையம் வந்தார். நடிகர் வடிவேலு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படப்பிடிப்பு 5 நாட்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் நடக்கிறது.

அசின் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு எதிராக திடீரென்று கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. 'அசின் இனி தமிழ்ப்படங்களில் நடிக்கக்கூடாது' என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

உடனடியாக போலீசார் வந்து கறுப்புக் கொடி காட்டியவர்களில் 4 பேரைக் கைது செய்தனர்.

எந்திரன் - ர‌சிக‌ர்க‌ள் ‌விய‌ப்பு

E-mail Print PDF

ர‌ஜினியின் எந்திரன் இன்று வெளியாகியுள்ளது. துபாய் போன்ற சில வெளிநாடுகளில் நேற்றே படம் வெளியானது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் அனிமேஷன் மற்றும் ஆ‌க்சன் காட்சிகளை வியந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தின் இறுதி 20 நிமிடங்கள் அருமையாக உள்ளதாக அவர்கள் தெ‌ரிவித்துள்ளனர்.

இந்த பாஸிடிவ் மவுத் டாக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிக‌ரித்துள்ளது. சென்னை மற்றும் புறநக‌ரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் வெளியாகியுள்ளது. அப்படியிருந்தும் எந்த திரையரங்கிலும் ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Page 84 of 84

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்