Saturday, Mar 24th

Last update10:58:28 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை

பிரான்ஸில் செவாலியர் பரிசு வென்ற ஐஸ்வர்யா

E-mail Print PDF


பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயுக்கு பிரான்ஸின் கலைத்துறைக்கான செவாலியர் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

செவாலியர் விருது, பிரான்ஸில் சிவிலியனுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருது ஆகும்.

இதனை பிரான்ஸ் அரசு சார்பில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதுவர் பிரான்ஸுவாஸ் ரிசியெர் அறிவித்தார்.

உலக சினிமா மற்றும் இந்திய – பிரெஞ்சு சினிமா இடையில் நல்லுறவை வளர்த்தெடுக்கும் முகமாக சினிமா, கலை, கலாச்சாரம் போன்ற துறைகளில் ஐஸ்வர்யா ராயின் அர்ப்பணிப்பு பணிகளை நினைவுகூர்ந்து இவ்விருது வழங்கப்படுகிறது.

இதற்கு முன்பு, பாலிவுட் நடிகர் ஷாருகான், ரகு ராய், நந்திதா தாஸ், ஹாபிப் தன்வீர் மற்றும் உம்ப்மன்யு சட்டர்ஜீ போன்ற இந்திய கலைஞர்கள் ஏற்கனவே இவ்விருதை பெற்றுள்ளனர்.

இந்தியாவின் பத்மசிறீ விருதினை பெற்ற இளவயது நடிகை எனும் பெருமை பெற்றவர் ஐஸ்வர்யா ராய்.

கடந்த 2002ம் ஆண்டு அவர் நடித்த தேவதாஸ் திரைப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இந்திய தெரிவாக அனுப்பிவைக்கப்பட்டது.

பிரான்ஸ் மக்களால் அதிக பாராட்டுக்களை இத்திரைப்படம் பெற்றது. கேன்ஸ் திரைப்பட விழா நடுவர் குழுவில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை எனும் பெருமையும் ஐஸ்வர்யா ராயை சாரும்.

நேற்று(நவம்பர் 1) ஐஸ்வர்யா ராயின் பிறந்த தினம் என்பதால், அன்றைய தினம் அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உறவு

E-mail Print PDF


சுற்றுகின்ற பூமியிலே
சுழன்றுவரும் மனிதவெள்ளம்
பற்றுகின்ற உறவுமுறை நூறு! – இப்
பல்லுறவும் பொய்யெனவே கூறு!

தந்தையென்ன பெற்றெடுத்த
தாயுமென்ன இவ்வுறவு
இந்தஒரு பிறப்பில்வந்த ஒட்டு! – இது
இற்றுவிழும் புற்றுமண்ணின் ஒட்டு!

தம்பியென்ன அண்ணனென்ன
தங்கையென்ன தமக்கையென்ன
வெம்பிவிழும் பிஞ்சுகளைப் போல – பின்
விழுந்துவிடும் உறவுமுறை சால!

கூடவந்த தாரமென்ன
கூடிவந்த பிள்ளையென்ன
ஆடவந்த ஊஞ்சலென ஆடும்! – அந்த
ஆட்டம்முடிந் தால்தனியே ஓடும்!

பகையுமில்லை நட்புமில்லை
பற்றுமில்லை வெறுப்புமில்லை
புகையுமிழும் தீயெனவே ஆகும்! – ஒரு
பொய்யெனவே மெலமறைந்து போகும்!

பரிவுமென்ன பிரியமென்ன
பாசமென்ன காதலென்ன
பிரிவதற்கே வருவதிந்த உறவு! – மிகப்
பிளந்துவிட்ட நெஞ்சுகொள்ளும் துறவு!

சொந்தமென்ன பந்தமென்ன
சொச்சமென்ன மிச்சமென்ன
கந்தலென ஆகுமொரு நெஞ்சம்! – இரு
கண்வழியும் அருவிமட்டும் மிஞ்சும்!

யாருறவை உண்மையென்றும்
யாருறவைப் பொய்யென்றும்
ஓருறவைச் சொல்வதென்ன கோலம்! – இது
உளம்மயங்கிச் செய்யும்அலங் கோலம்!

உதடுசொலும் மொழியையெலாம்
உண்மைமொழி என்றுகொண்டால்
நிதமுருகி நொறுங்கிவிட நேரும்! – இந்த
நிலையுணர்ந்தால் மனத்தெளிவு சேரும்!

நீரிலெழும் குமிழிகளை
நிலையெனவே கொண்டுவிட்டால்
பாரிலெழும் வேதனைகள் கோடி! – மனம்
பதைபதைத்துச் சிதைந்துவிடும் வாடி!

காசுபணம் கல்விநலம்
கவிதைநயம் என்பதெல்லாம்
பூசுகின்ற புண்மருந்தை ஒக்கும்! – இது
போதுமிது போதுமினி துக்கம்!

உடல்கலந்து நிலவுகின்ற
உயிரொருநாள் பிரிந்துவிடும்
குடல்குலுங்க அழுதுவைப்பார் கொள்ளி! – உடன்
கூடியவர் விலகிடுவார் தள்ளி!

பாடிடும்வாய் ஈமொய்க்கும்
பாட்டெழுதும் கைவிறைக்கும்
தேடிவைத்த உறவுமுறை எல்லாம் – எரி
தீயிட்டுக் கொளுத்திவிட்டுச் செல்லும்!

மூளவைத்த கட்டைகளில்
மூச்சடங்கிக் கிடக்கையிலே
பாழும்மனம் உறவினையா நாடும்! – கண்
பாசமென்ற பேர்களையா தேடும்!

கையெரிய முகமெரியக்
காலெரிய நெஞ்செரிய
மெய்யெரிய  நெருப்பெரியும் போது – ஒரு
மென்னகையும் புன்னகையும் ஏது!

நாறுகின்ற உடலெரிந்து
நதிகலக்கும் பிடிசாம்பல்
கூறுகின்ற அன்புமொழி போலி! – வரும்
கூற்றுவனைத் தடுப்பதெந்த வேலி!

சுற்றுகின்ற பூமியிலே
சுழன்றுவரும் மனிதரிலே
பற்றுகின்ற ஓருறவும் இல்லை! – அந்தப்
பரமனடி பற்றலொன்றே எல்லை!

பீட்சா திரை விமர்சனம்

E-mail Print PDF

பிட்சா பெயருக்கு ஏற்றவாறு இளசுகளுக்கு ஏற்ற படம் தான்.  கல்யாணம் கட்டிகாமலே ஒரே வீட்டில் வசிக்கும் இருவரைச் சுற்றி நடப்பதை வைத்து முன் பாதியை நகர்த்திய இயக்குனர், பின் பாதிக்கு திகிலை துணைக்கு அழைத்திருக்கிறார்.  பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் நன்றாகவே கை கொடுத்துள்ளது கார்த்திக் சுப்புராஜுக்கு.

பிட்சா விநியோகிக்கும் இளைஞனாக வரும் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார்.  பல இயக்குனர்களின் கண் கண்டிப்பாக இந்தப் படத்தினால் அவர் மீது விழும்.  சரியாக தெரிவு செய்து நடித்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் நல்ல இடம் ஒன்று உண்டு.  அவரது பள்ளித் தோழியாகவும் ஒரே வீட்டில் கல்யாணம் கட்டிக்காமல் வாழ்ந்து கர்ப்பமாகும் பெண்ணாக வருகிறார் ரம்யா நம்பீசன்.  அவரும் நன்றாக நடித்துள்ளார்.

மிகவும் அழகாக திரைக்கதையை நெய்துள்ளர் இயக்குனர்.  திகில் நிறைந்த திரைக்கதைக்கு மிக்க உறுதுணையாக இருப்பது இசையும் ஒளிப்பதிவும்.  சந்தோஷ் நாராயணன் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் பின்னணி இசையில் பின்னி எடுத்து விட்டார்.  அதே போல் கோபி அமர்நாத்தும் ஒளிப்பதிவை திறம்படக் கையாண்டிருக்கிறார்.  திகில் படங்களுக்கு இரவு காட்சிகள் அதிகம்.  எரிச்சல் ஊட்டாமல் படத்தோடு ஒன்றி ரசிக்குமாறு படமாக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு நல்ல இயக்குனர் ஒருவர் கிடைத்துள்ளார் என நம்பலாம்.  எதற்கும் அடுத்த படத்தைப் பார்த்த பின் முடிவு எடுப்போம்.

பிட்சா சுவை நன்றாகத்தான் இருக்கிறது.

தீபாவளி ரேஸில் விஜய், சிம்பு மோதல்

E-mail Print PDF

இம்முறை தீபாவளி ரேஸில் விஜயின் துப்பாக்கியும் சிம்புவின் போடா போடி திரைப்படமும் மோதிக்கொள்ளப்போவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அதற்கேற்றவாறு நேற்று இந்த 2 படங்களினது ட்ரெய்லரும் வெளியிடப்பட்டு எதிர்பார்ப்பினையும் தூண்டியுள்ளது.

வழக்கமாக தீபாவளி என்றால் சின்ன பட்ஜெட் படங்களுடன் சேர்த்து 5 தொடக்கம் 10 வரையில் வெளியாகும் ஆனால் கடந்த 2 தீபாவளிக்கும் அவ்வாறில்லாமல் சினிமா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது தமிழ் சினிமா.

இருப்பினும் இம்முறை சிறிய பட்ஜெட் படங்களுடன் சேர்த்து 5 படங்கள் வரை வெளியாக வாய்ப்புள்ளது. குறிப்பாக விஜயின் துப்பாக்கி மற்றும் சிம்புவின் போடா போடி மற்றும் வாலு, கும்கி என ரேஸில் பல படங்கள் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விசேடமான நாட்களில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலான திரையரங்குகளை கைப்பற்றிக்கொள்வதனால் ஏனைய படங்கள், திரையரங்குகள் கிடைக்காமல் திணறும் போக்கு அண்மைக்காலங்களில் தமிழ்சினிமாவில் அதிகரித்துள்ளது.

இம்முறை விஜய்யின் துப்பாக்கி படத்திற்கான எதிர்பார்ப்பு காரணமாக பெரும்பாலான திரையரங்குகளை அது கைப்பற்றிக்கொள்ளுமாயின் இறுதி நேரத்தில் தீபாவளி ரேஸிலிருந்து சில படங்கள் விலகிக்கொள்ளவும் செய்யும் என திரையரங்க வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் துப்பாக்கி மட்டுமே நவம்பர் 9ஆம் திகதி தீபாவளி வெளியீடாக திரைக்குவரவுள்ளமையை உறுதிசெய்துள்ளது. ஏனைய படங்கள் பின்வாங்குமா அல்;லது மல்லுக்கு வருமா என விரைவில் உறுதிசெய்யப்படும்.

நாளை 3 படங்களின் இசை வெளியீடு

E-mail Print PDF

நாளை அக்டோபர் 10ம் தேதியன்று மூன்று படங்களின் இசை வெளியீடு நடக்க இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் ‘துப்பாக்கி’,

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தரண் குமார் இசையமைப்பில், சிம்பு, வரலட்சுமி நடிக்கும் ‘போடா போடி’,

சீனு ராமசாமி இயக்கத்தில் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில், விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ் நடிக்கும் ‘நீர்ப்பறவை’,

ஆகிய படங்களின் இசை வெளியீடு நாளை நடக்க இருக்கிறது. மூன்று படங்களுமே ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை எதிர்பார்ப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
இசை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கலாம்.

ஒட்டிப்பிறந்த இரட்டையராக சூர்யா

E-mail Print PDF

சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்த 'மாற்றான்'

ஐரோப்பியா, ரஷ்யா நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி வருகிறார்கள்.

மாற்றான் படத்தின் கால அளவு 168 நிமிடங்களாம். படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து, சென்சாருக்கு அனுப்ப இருக்கிறார்கள்.

ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் ஒக்ரோபர் 12ம் திகதி 'மாற்றான்' திரைக்கு வருகின்றது. 'மாற்றான்' படத்தின் தமிழ் டப்பிங், தெலுங்கு டப்பிங் என தான் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் சு+ர்யா முடித்துக் கொடுத்து விட்டார்.

Page 10 of 84

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்