Tuesday, Jul 17th

Last update02:52:36 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு

கனடா ஐய்யப்ப சுவாமி ஆலய மகர மண்டல பூசை 17.12.2017 நாளை ஞாயிற்றுக்கிழமை பணிப்புலம் மக்களின் பூஜை

E-mail Print PDF

17.12.2017 நாளை ஞாயிற்றுக்கிழமை பணிப்புலம் மக்களின் பூஜையாக அமைகின்றது. அனைத்து அன்பு உள்ளங்களையும் இப் பூசையில் கலந்து ஐயப்பன் அருள் பெற வேண்டுகின்றோம்.

Image may contain: 4 people, crowd

மரண அறிவித்தல் - ”பெரியார்” உயர்திரு. சபாபதி அழகரட்ணம் ஐயா அவர்கள் - 11.12.2017

E-mail Print PDF

Image may contain: 1 person, text

பணிப்புலம் பெற்றெடுத்த மாண்பு மிகு உத்தமன் ”பெரியார்”  உயர்திரு. சபாபதி அழகரட்ணம் ஐயா அவர்கள் 11.12.2017 திருகோணமலையில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; சிவபதம் எய்திய சபாபதி + விசாளாச்சி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வனும்;

சிவபதம் எய்திய சின்னையா + தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

சிவபதம் எய்திய சிவகங்கா அவர்களின் அன்புக் கணவரும்;

சிவபதம் எய்திய சிவயோகம், சண்முகலிங்கம், மற்றும் குமாரசிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரனும்;

சந்திரகாசன், குலேந்திரன், கௌரி, மாலதி, பகீரதன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்;

சிவராகினி, சுனிதா, சக்திவேல் (சிவபதம்), செந்தில்நாதன், சிவலதா, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;

சாமினி, ரிசாந்த், சுஜீவன், சபீசன், அனுகங்கா, சித்திரா, மயூரி, அரவிந்தன் (சிவபதம்), அருணன், திசாயினி, துவீபன், பிரபஞ்சன், கீர்த்தனா, கௌதமன் ஆகியோரின் பாசமிகு பேரனாரும்;

கீரன், ஜெயன், நிலானி, அருண் ஆகியோரின் பாசமிகு பூட்டனாருமாவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் 12.12.2017 செவ்வாய்க்கிழமை திருகோணமலை விகாரை வீதி - இலக்கம். 19/C1 ல், அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று;

அன்பினாரின் பூதவுடல் பி.ப. 4:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும். .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்


பணிப்புலம் ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய தற்போதைய பூசகர்கள் உண்மையில் இவ் ஆலய ஆதீனகர்த்தாக்களா? அல்லது தர்மகர்த்தாக்களா? – ஓர் அலசல் - ஆதாரங்களுடன்

E-mail Print PDF

Image may contain: indoor

பணிப்புலம் ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய தற்போதைய பூசகர்கள் இவ் ஆலய ஆதீனகர்த்தாக்களா? அல்லது தர்மகர்த்தாக்களா? – ஓர் அலசல் – பல ஆதாரங்களுடன்

”ஆதீனகர்த்தா” என அழைக்கப் பெறுபவர்; ஓர் ஆலயத்தை ஸ்தாபித்து பரிபாலித்து வருபவர் அல்லது அவரின் பரம்பரயில் வந்தோரைக் குறிக்கும்.

”தர்மகர்த்தா” என அழைக்கப் பெறுபவர் ஓரு ஆலயத்தை பரிபாலிப்பதற்காக பொதுமக்களால் அல்லது ஆதீனகர்த்தாவினால் நியமிக்கப் பெற்றோரைக் குறிக்கும்.

பூசகர் வேலாயுதர் கனகர் அவர்கள் தமது இவ் ஆலயமும், அசையும் அசையா சொத்துக்களும் தனக்கு உரியது என ஆட்சிப்படி (தாய் உறுதி இல்லாது) உறுதி இலக்கம் 11265 இலக்க உறுதியை பிரசித்த நொத்தாரிஸ் வீ. சீனிவாசகம் அவர்கள் மூலம் முடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சுழிபுரம் இறை “பணிப்புலம் பரப்பு நிலம் இலாச்சம் (ஏழு) 7 என்னும் ஆதனத்தில் எழுந்தருளியிருக்கும் மகாமுத்துமாரி அம்மன் கோவிலும் அதனைச் சேர்ந்த ஆதனமும், அசையும் அசையா சொத்துக்களுக்கும் சுழிபுரத்தைச் சேர்ந்த வேலாயுதர் கனகர் என்பவர் ஆட்சிப்படி உரிமையாளராகவும், தர்மகர்த்தாவாகவும், மனேச்சராகவும், பூசகருமாக உள்ளார் என உறுதிப்படுதப் பெற்றுள்ளது.

அதன் பிரகாரம்; பூசகர் வேலாயுதர் கனகர் அவர்கள் இவ் ஆலயத்தின் தர்மகர்த்தாவாக இருந்துள்ளார் என்பது புலனாகின்றது. இவ் ஆலய ஆதீனகர்த்தாவாகிய விநாயகர் முருகர் அவர்கள் தொழில் நிமித்தம் வெளியூர் செல்லவேண்டி இருந்தமையால் அப்பொறுப்பை அவரோடு இணைந்து பூசைகளுக்கு உதவிகள் செய்து வந்த அம்பிகை அடியாரான கனகர் வேலாயுதர் அவர்களுக்கு ஒப்படைத்ததாகவும் அதன் பின்னர் பூசகர் வேலாயுதரின் மகன் பூசகர் வேலாயுதர் கனகர் அவர்கள் அப் பொறுப்பை ஏற்று ஆலயத்தை பரிபாலித்ததாகவும் செவிவழி வந்த கதைகள் உறுதி செய்கின்றன.  அதன் பின்னர் பூசகர் வேலாயுதர் கனகர் அவர்கள் தமது ஆட்சி உரிமையை காட்டி 1906 ல் உறுதி முடிதி முடித்துள்ளார்.

பூசகர் கனகர் அவர்கள் முதுமை அடைந்ததும் அவர் தமக்கு இவ் ஆலயத்தில் இருந்த உரிமைகள் அனைத்தையும் பிரசித்த நொத்தாரிஸ் தா. வைத்திலிங்கம் அவர்கள் 15.02.1934 அன்று அத்தாட்சிப் படுத்திய உறுதி 399 மூலம் குறித்த ஆலயத்தின் உரிமைகளையும், ஆதனங்களின் உரித்துக்களையும் தனது பிள்ளைகளான சுப்பையா, கந்தையா, வேலாயுதம், தம்பிப்பிள்ளை ஆகியோருக்கு சமபங்காக கையளித்து ஆலயத்தின் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார்.

இவர்களுள் பூசகர் கனகர் சுப்பையா அவர்கள் பிரசித்த நொத்தாரிஸ் ஆ. வ. சதாசிவம் அவர்கள் 07.01.1955 ம் திகதி அத்தாட்சிப்படுத்திய உறுதி இலக்கம் 3029 உறுதி மூலம் (தனக்கு பிள்ளைகள் இல்லாத காரணத்தினால்) இவ் ஆலயத்தில் தமக்கு இருந்த  ¼ பங்கிற்கான சகல உரிமைகளையும் சகோதரரான பூசகர் கனகர் கந்தையா அவர்களுக்கு கையளித்து ஒப்படைத்திருந்தார்.

பூசகர் கனகர் கந்தையா அவர்கள் தமது (¼ + ¼ = ½) ½ பங்கிற்கான எல்லா உரிமைகளையும் தனது மகன் சதாசிவத்திற்கும், பெண் பிள்ளைகளான லங்காதேவிக்கும், பரமேஸ்வரிக்கும்  பிரசித்த நொத்தாரிஸ் இராசசுந்தரம் கந்தையா அவர்களினால் 06.04.1959 ம் திகதி முடிக்கப் பெற்ற உறுதி இலக்கம் 22299 மூலம் தமது உரிமைகளை வழங்கியுள்ளார்.

பூசகர் கனகர் வேலாயுதம் அவர்களும், பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களும் தமது பங்குகளை எவருக்கும் ஒப்படைக்காது சமாதியானதால் அவர்களின் பின் உரிமைகாரர்களை தேர்ந்தெடுப்பதற்கு நீதிமன்றை நாடவெண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதனால்; அப்போது ½ பங்கு உரிமையுடன் இருந்த பூசகர் கந்தையா சதாசிவம் அவர்களின் சட்டத்தரணி சங்கரப்பிள்ளை அவர்கள் நீதிமன்றில் வழக்கு இலக்கம் TR-74 ல் சமர்ப்பித்த வேண்டுதலை ஏற்று விசாரணை செய்த யாழ்/மாவட்ட நீதிமன்றம் சமாதியான இரு பங்காளிகளினதும் பங்குரிமைகள் அவரவர்களின் ஆண் பெண் பிள்ளைகளும், அப்போதைய மருமகன்மாருக்கும் வழங்கப்பட வேண்டும் (பின்னுரிமைகாரர்களாகள்) என தீர்ப்பு வழங்கியது.

இவர்களுள் பூசகர் கனகர் வேலாயுதம் அவர்களின் பின்னுரிமை காரர்களில்; வேலாயுதம் கனகசபாபதி, வேலாயுதம் இராசதுரை,  வேலாயுதம் பாலசுப்பிரமணியம், வேலாயுதம் திருச்செல்வம் ஆகிய நான்கு மகன்மாரும் ஒன்றிணைந்து இவ் ஆலயத்தில் தமது தந்தை (கனகர் வேலாயுதம் அவர்களின்) வழியில் வந்த சகல உரிமைகளையும்; பிரசித்த நொத்தாரிஸ் ஆ. குமாரசுவாமி அவர்கள் முகதாவில் அத்தாட்சிப்படுத்திய உறுதி இலக்கம் 6648 மூலம் சகோதரரான சிவஸ்ரீ வேலாயுதம் பேரின்பநாதனுக்கு 02.06.2002 ம் திகதி ஒப்படைத்தனர். அதனால்; அவர்கள் நால்வரும் இவ் ஆலயத்தில் தமக்கு இருந்த சகல உரிமைகளையும் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(1906 முதல் 2012 வரையான காலப்பகுதியில் முடிக்கப் பெற்ற (11265, 399, 3029 , 22299, 6648, 1405) உறுதிகள் யாவும் தற்போதய பரிபாலகர்களும் அவர்களின் மூதாதையினரும் இவ் ஆலயத்தை பரிபாலித்து பூஜைகள் செய்யும் தர்மகர்த்தாக்களாகவே இருந்துள்ளார்கள் அல்லது இருக்கின்றனர் என உறுதியாக கூறுகின்றன.

இவ் ஆலயம் சம்பந்தமாக; யாழ் மாவட்ட நீதிமன்றில் நடைபெற்ற நம்பிக்கை சொத்து 74 இலக்க வழக்குகளில் (16.09.1966 முதல் 23.11.1979 வரையான காலப்பகுதியில்) காலத்திற்கு காலம் வழங்கப் பெற்ற தீர்ப்புகளில் இவர்கள் யாபெரும் தர்மகர்த்தாக்கள் என தெளிவாக குறிப்பிடப்பெற்றுள்ளன.

இவ் ஆலயம் 1810 ம் ஆண்டு வினாயகர் முருகர் என்பவரால் ஸ்தாபிக்கப் பெற்றதாக 1892 ம் ஆண்டு முருகர் அருணாசலம், முருகர் கோவிந்தர் ஆகியோரினால் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் யாழ்/கச்சேரியில் பதிவாகியுள்ளதாக அறிய முடிகின்றது.

அதன் பிரகாரம்; ஆலய ஸ்தாபகர் விநாயகர் முருகர் அவர்கள் இவ் ஆலயத்தின் ஆதீனகர்த்தாவாக விளங்குகின்றார். அவர் பரம்பரையில் வந்த நாராயாணபிள்ளை தியாகராஜா அவர்களும் அவரின் மூதாதையினரும் இவ் ஆலய ஆதீனகர்த்தா என்ற உரிமையுடன் இவ் ஆலய மஹோற்சவ விழாவின்போது கொடியேற்றத் திருவிழா உபயகாரர்களாக 1976 ம் ஆண்டு வரையும், அதன் பின்பு 1985 முதல் 1993 வரை உள்ள காலப் பகுதியிலும் உபயம் செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆலயத்தில் சுழிபுரம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பிராமண குருமார் நைமித்திய, காமிக பூசைகளையும் கும்பாபிஷேகங்களையும் 1970 ம் ஆண்டுவரை செய்து வந்ததுடன்; 1970 ம் ஆண்டு முதல் 1976 ம் ஆண்டு வரை அவர்கள் நித்திய (3 நேரம்), நைமித்திய, காமிக பூசைகளையும் பொது மக்களால் தெரிவு செய்யப் பெற்ற ஆலய பரிபாலன சபை நிர்வாகத்தின் கீழ் செய்து வந்துள்ளனர்.

தற்போதைய பூசகர்களினால் 23.12.1988 திகதி, இந்து கலாச்சார திணைக்களத்தில்  HA/5/JA/116 இலக்கத்தின் கீழ் இவ் ஆலயம் ஒரு பொது ஆலயம் என பதிவு செய்துள்ளனர்.

பொது ஆலயங்கள் மட்டுமே இந்து கலாச்சார திணைக்களத்தில் பதிவுசெய்ய முடியும் என்பது பொது விதியாகும். இந்து ஆலயங்கள் பதிவு செய்வதற்கான விதிமுறைகள் (அறிவுறுத்தல்கள்) கீழே பதிவாகியுள்ளன).

ஆனால்; தற்போதைய பூசகர்கள் அண்மைக்காலத்தில் இருந்து இவ் ஆலய ஆதீனகர்த்தாக்கள் தாமே என CD மூலமாகவும்; ஆலய உற்சவ நோட்டீஸ்கள் மூலமாகவும் விளம்பரம் செய்து வருவது பொது மக்களுக்கு சந்தேகத்தையும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் ஏன் திடீரென ஆதீனகர்த்தாக்கள் என தம்மை அறிமுகம் செய்கின்றார்கள் என்பதற்கான காரணம் தேடுகையில்; அவர்கள் வளர்ந்து வரும் சந்ததியினரை திசைதிருப்பும் நோக்கில் செயல் பெறுவதாக உணர முடிகின்றது. அவர்களில் சிலர் இவ் ஆலயத்தில் தமக்கு இருந்த உரிமைகள் யாவற்றையும் தனது சகோதரனுக்கு உறுதி மூலம் ஒப்படைத்த பின்னர் பொதுமகனாக வாழ்ந்துவரும் இலிங்கதாரி ஒருவரும் இவ் ஆலய ஆதீனகர்த்தா என பிரசித்தம் விளம்பரப் படுத்தப் பெற்றுள்ளமை சந்தேகப்பட வைக்கின்றது.

அத்துடன்; பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்தை தற்போது பரிபாலித்து வரும் பூசகர்கள் வெளியிட்டுள்ள CD யில் தொடக்கமாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் (”சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்) என்னும் சுலோகம் பதிவிலிடப்பட்டு ஆலய வரலாற்றை தமக்கு சார்பாக மாற்றி பொய் உரைத்துள்ளனர். மந்திரம் சொல்லியபின், அல்லது சிவபூசை செய்தபின் பொய் உரைத்தால் பாவம் இல்லை என்பது அவர்களின் ஐதீகமாக இருக்கலாம்.

CD யில் பதிவாகியுள்ள வரலாற்றில் தமது மூதாதையினரால் சுமார் 350 வருடங்களுக்கு முன்னர் இவ் ஆலயம் ஸ்தாபிக்கப் பெற்றதாகவும்; ஸ்தாபகர் பரம்பரையில் வந்த தாமே இவ் ஆலயத்தின் ஆதீனகர்த்தாக்கள் எனவும், தமது பரம்பரையினரே இவ் ஆலய நித்திய நைமித்திய, காமிக பூசைகளை ஆரம்பகாலம் முதல் செய்து வருவதாகவும், உரையாகவும், பாடலாகவும் பதியப் பெற்ற CD யை ஆலயத்தில் திரும்பத் திரும்ப ஒலிபரப்புச் செய்து எதிர்கால சந்ததியினரை ஏமாற்ற முயற்சிப்பதாக தெரிகின்றது.

ஆனால் அவர்களிடமுள்ள உறுதிகளிலும், மாவட்ட நீதிமன்ற தீர்ப்புகளிலும் அவர்கள் தர்மகர்த்தாக்களாக உள்ளனர் என உறுதியாக கூறப்பெற்றுள்ளன.

இவ் ஆலயத்தில் சுழிபுரம் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பிராமண குருமார் பூசைகள், கிரியைகள் செய்து வந்ததும், 1946 ம் ஆண்டு மிருக பலி நிறுத்துவதற்காக குமாரசாமிக் குருக்கள் ”பூகட்டிப் பார்த்ததும், ஆலயத்தின் தர்மகர்த்தாக்களாக பெண்களும் இருக்கலாம் என்பதும், 1979 ம் ஆண்டுவரை தாமும் தமது பரம்பரையினரும் மாமிசம் சாப்பிட்டு வந்தமையும், 1976 ம் ஆண்டுவரை திருப்பணிச் சபை இயங்கி வந்தமையும், 1985 ஆண்டு முதல் 1993 ஆண்டு வரை இவ் ஆலயத்தில் ”ஆலய பரிபாலன் சபை இயங்கி வந்தமையும் வேண்டும் மென்று மறைக்கப் பெற்றுள்ளதுள்ளது.

அத்துடன்; ஆலய பரிபாலன முகாமைத்துவ திட்டத்திலும் ஆலய ”தர்மகர்தாஎன குறிப்பிடப் பெற்றுள்ளது.

இவ் வழக்கின் மனுதாரரும், ஆலய ½ பங்கிற்கு உரித்துடையவருமாகிய பூசகர் கந்தையா சதாசிவம் அவர்கள் சார்பாக சட்டத்தரணி திரு. தா. சங்கரப்பிள்ளை அவர்களால் யாழ்/மாவட்ட நீதிமன்றில் வழக்கு இலக்கம் TR – 74 ல் 11.04.1979 ம் திகதி சமர்ப்பிக்கப் பெற்ற “ஆலய பரிபாலான நடைமுறைத் திட்டம் 23.11.1979ம் திகதி விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது; இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப் பெற்ற “ஆலய பரிபாலான நடைமுறைத் திட்டத்தினைஒருமனதாக ஏற்றுக் கொண்டமையால் அன்றே நீதிமன்றினால் அங்கீகரிக்கப் பெற்று அதனை நடைமுறைப் படுத்துவதற்கான கட்டளையும் பிறப்பிக்கப் பெற்றது. அதன் பிரகாரம் இவ் ஆலய பரிபாலனம் நடாத்துவதாக ஒப்புக் கொண்டு சமூகம் அளித்திருந்த அனைவரும் ஒப்பமிட்டுள்ளனர்.

23.11.1979 திகதி அங்கீகரிக்கப் பெற்ற ஆலய பரிபாலன நடைமுறைத் திட்டம்:

ஆலய பங்குரிமைகாரர் பின்பற்ற வேண்டிய “ஆலய பரிபாலன நடைமுறைத் திட்டம்கூறுவதாவது:

1. யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சுழிபுரம் இறை பணிப்புலம் பரப்பு நில இலாச்சம் ஏழு என்னும் காணியில் எழுந்தருளியிருக்கும் மகாமுத்துமாரி அம்மன் கோவிலும் அதைச் சேர்ந்த அசைவுள்ள அசைவற்ற ஆதனங்களும் ”சமயத்தரும நம்பிக்கைச் சொத்தாகும்.

2. பதில் வழக்காளியாகிய கந்தையா சதாசிவமும், இவ்வழக்கின் ஆரம்பத்தில் எதிராளிகளாயிருந்த கனகர் வேலாயுதத்தினதும், கனகர் தம்பிப்பிள்ளையினதும் உரிமைக்காரர்களுக்காக வேலாயுதம் பேரின்பநாதனும், தம்பிப்பிள்ளை இராமகிருஷ்ணனும் தற்போதைய பரம்பரைத் தர்மகர்த்தாக்கள் ஆகவும்; பரம்பரை பூசகர்களாகவுமிருப்பார்கள். இவர்களில் கந்தையா சதசிவத்திற்கு அரைப்பங்கு உரிமையும் மற்றைய இரு பங்காளர்களுக்கும் நாலிலொரு பங்கு உரிமையும் உரியது.

3. கந்தையா சதாசிவம் தனது அரைப்பங்கு உரிமைக்கு தனக்குப்பின் தர்மகர்த்தாவாகவும், பூசகராகாவும் உரிமையுடையராவதற்கு தனது பிள்ளைகளில் ஒருவரை நியமிக்க வேண்டும். அவ்வண்ணம் நியமிக்காதவிடத்து அவரின் உரிமைகாரர் எல்லோரும் ஏகோபித்து அவரின் உரிமைகாரர்களுள் ஒருவரை நியமிக்கலாம். அவ்வண்ணம் ஒருவரை நியமிக்க முடியாவிடில் நீதிமன்றத்துக்கு மனுச் செய்து தகுதியான ஒருவரை நியமித்துக் கொள்ளலாம்..

4. சொல்லப்பட்ட காலஞ் சென்ற தம்பிப்பிள்ளையினதும், வேலாயுதத்தினதும் உரிமைகாரர்களாகிய எதிர்வாதிகள் மேற்படி கோவிலின் பரம்பரைத் தர்மகர்த்தாவாகவும், பரம்பரைப் பூசகர் ஆகவும், அரைப்பங்கு உரித்து உடையவர்கள் ஆவர்.

5. தம்பிப்பிள்ளையினதும், வேலாயுதத்தினதும் உரிமைகாரர்களில் அனேகமானவர்கள் சிறுபிள்ளைகளாகய் இருக்கிறபடியால் வேலாயுதத்தின் இடத்திற்கும் பேரின்பநாதனையும், தம்பிப்பிள்ளையினிடத்திற்கு இராமகிருஷ்னனையும் இதனையடுத்த ஆறு வருடங்களுக்கு அரைப் பங்கு உரித்துடைய தர்மகர்த்தாக்களாகவும் மனேச்சர்களாகவும் கடமையாற்றும் உரித்துடையவர்களாக இதனால் அதிகாரம் அளிக்கப்படுகின்றது.

6. ஆறு வருடங்களுக்குப் பின் வேலாயுதத்தின் உரிமைகாரர் அவர்களுக்குள் ஒருவரையும், தம்பிப்பிள்ளையின் உரிமைகாரர் அவர்களுக்குள் ஒருவரையும் முறையே தங்கள் தங்கள் நாலிலொரு பங்கிற்கு தர்மகர்த்தாவாகவும், மனேஜராகவும் நியமிக்க வேண்டும். பூசகராகவும் நியமிக்க வேண்டும்.

7. மேற்கூறிய பிரகாரம் காலத்துக்குக் காலம் நியமிக்கப்படும் தர்மகர்த்தாக்களில் கந்தையா சதாசிவம் அல்லது அவரின் இடத்திற்கு வருபவர்களுக்கு அரைப்பங்கு உரிமையும் தம்பிப்பிள்ளையின் இடத்திற்ககு அல்லது இராமகிருஷ்னனின் இடத்திற்கு வருபவர்களுக்கு நாலிலொரு பங்கு உரிமை உடையவராவர்.

வேலாயுதத்தின் இடத்திற்கு அல்லது பேரின்பநாதனின் இடத்திற்கு வருபவருக்கு நாலிலொரு பங்கு உரிமை உடையவராவார்.

8. மேலே சொல்லப்பட்ட அரைப்பங்கு உரித்துடையவர் இரண்டுவருடங்களுக்கும், மற்றைய நாலிலொருபங்கு உரித்துடையவர்கள் ஆளுக்கு ஒவ்வொரு வருடமுமாக நாலு வருடங்களுக்கு ஒருமுறை மாறும். இத் திட்டப்படி தர்மகர்த்தாவாகவும், மனேச்சர்களாகவும் பூசகர்களாகவும், கோயில் உரிமையுடையவர்களாகாவும் இக் கோயிலை பராமரித்து வரவேண்டும்.

9. மேலே விபரிக்கப்பட்டவர்களே இக்கோயிலை தங்களுக்குரிய கால எல்லைக்குள் மனேச்சரும், முகாமையாளரும், பூசகராகவும் கோயிலை நடாத்தவும், அவ்வக் காலத்து கோயிலிருந்து வரும் சகல வருமானங்களையும் எடுத்து கோயிலுக்குத் தேவையான செலவுகளைச் செய்து மிகுதி ஏதேனும் இருப்பின் அதனை தமது ஊதியத்திற்கு உபயோகிக்கலாம்.

10. இம் மூன்று பங்காளிகளும் சேர்ந்து கோயிலின் பொதுவான விடயங்களை ஒன்று கூடித் தீர்மானிக்கவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் உரித்துடையவராவர். அவரவர்களின் பூசை முறையான காலத்தில் கோயிலின் பொது விடயங்கள் தவிர்ந்த நாள்வீத நடைமுறையலுவல்களில் அவ்வப்போது பூசையுடையவர்களின் தீர்மானப்படி நடத்தலாம்.

இவ் ஆலய ஸ்தாபகர் பரம்பரையில் வந்த ஆதீனகர்த்தா நாராயாணபிள்ளை தியாகராஜா அவர்களினாலும், அவர்களின் மூதாதையிராலும் (முதலாவது திருவிழாவான) கொடியேற்றத் திருவிழா உபயகாரர்களாக செய்து வந்துள்ளனர். ஆனால் 1993 முதல் இன்றுவரை தற்போதய ஆலய பரிபாலகர்கள் தங்கள் உபயமாக மாற்றி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்களில்; ஊர் வழமைப்படி; திருவிழாக்கள் நடைபெறும் ஆலயமாயின் ஆலயத்தின் முதலாம் (கொடியேற்ற) திருவிழாவும்; பொங்கல் நடைபெறும் ஆலயமாயின் முதல் பொங்கல் பானைவைப்பதும்; மிருகபலியிடும் ஆலயமாயின் முதலாவதாக பலியிடும் ஆட்டுக் கடாவும்; ஆலய ஆதீனகர்த்தா பரம்பரையினரின் உபயமாக எல்லா ஆலயங்களிலும் செய்யப் பெற்று வருவது சம்பிரதாயமாக இருந்து வருகின்றமை வெளிப்படை.

இந்து ஆலயமொன்றை இந்து கலாச்சார திணைக்கழத்தில் பதிவு செய்வதற்கு கீழ் காணும் விடயங்கள் தகமைகளாக குறிக்கப் பெற்றுள்ளன.

1. தனியாருக்கு அல்லது தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமான ஆலயமாயின் பதிவினை மேற்கொள்ள முடியாது.

(ஆனால் இவ் ஆலயம் HA/5/JA/116 இலக்கத்தின் கீழ் பதிவாகியுள்ளது). எனவே இக் கோயில் தனியொருவருக்கோ அல்லது குடும்பத்திற்கோ சொந்தமானது அல்ல). இவ் ஆலயம் இந்து கலாச்சார திணைக்களத்தில் பதிவு செய்ததன் மூலம் பொது ஆலயம் என்பது நிரூபணமாகின்றது.

2. இதற்கான விண்ணப்பப் படிவம் ஆங்கில மொழியில் (கெப்பிரல்) பெரிய எழுத்துகளில் தெளிவாக எழுதப்பட வேண்டும்.

3. கோரப்படும் அனைத்து ஆவணங்களும் A4(Size) அளவுடைய தனித்தாளில் எழுதப்பட்டு /டைப் செய்யப்பட்டு இணைக்கப் படல் வேண்டும்

4. அபிவிருத்தி உதவியாளர் (இந்து கலாச்சாரம்), கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் ஆகியோரின் உறுதிப்படுத்தல் கட்டாயமானது.

5. ஆலயம் அமைந்துள்ள காணி தொடர்பான காணி உறுதிப் பத்திர பிரதி இணைக்கப்படல் வேண்டும்.

6. தோட்ட ஆலயமாயின் ஆலயக் காணியைஉறுதிப் படுத்த தோட்ட முகாமையாளரின் கடிதம் அவசியமானது.

7. தொலைபேசி இலக்கமொன்று அவசியம் குறிப்பிடப்பட வேண்டும்

மேலே சொல்லப் பெற்ற விளக்கங்களின் பிரகாரமும், இந்து கலாச்சார திணைக்களத்தில் இவ் ஆலயம் பதிவு செய்யப் பெற்று இருப்பதனாலும் இவ் ஆலயம் ஒரு பொது ஆலயமாக விளங்குகின்றது என்பதுவும், தற்போதைய பூசகர்கள் இவ் ஆலய தர்மகர்தாக்களாக உள்ளார்கள் என்பதும் நிரூபிக்கப் பெற்ற உண்மைகள். அவர்களுக்கு இவ் ஆலயத்தை மேர்ப்பார்வை செய்து, பராமரித்து பூஜைகள் செய்து பரிபாலிப்பதற்கான உரிமை மட்டுமே உள்ளது என்பது வெளிப்படை.

இவ் ஆலயம் அமைந்துள்ள 7 பரப்பு நிலமும் ஆலய ஸ்தாபகர்ருக்கே சொந்தமானதாக இருப்பதனால்; இது எங்கடை கோவில், நாங்கள் இவ் ஆலயத்தின் பரம்பரை ஆதீன கர்த்தாக்கள் எனக் கூறி ஆட்சி செய்து வரும் தர்மகர்த்தாக்கள் எவரும் இவ் ஆலயத்திற்கோ அல்லது ஆலய ஆதனங்களுக்கோ சொந்தக்காரர்ஆகிவிடமுடியாது என்பதுவும், அதற்குள் அமைந்துள்ள வீடோ, அல்லது கட்டிடங்களோ அவர்களுக்கு சொந்தம் இல்லை என்பதுவும் நிரூபிக்கப் பெற்ற உண்மைகள்.

அதனால் போலும்; CD மூலமும், ஆலய உற்சவ நோட்டீசுகளிலும் தாமே இவ் ஆலய ஆதீனகர்த்தாக்கள் என விளம்பரப் படுத்தி பொதுமக்களை ஏமாற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது.

அத்துடன்; சென்ற ஆண்டு இவ் ஆலயமுன்றலில் பொது மக்களால் தெரிவு செய்யப் பெற்ற திருப்பணிச் சபை, அன்னதான சபை ஆகியவற்றிற்கு “யாப்புஎழுதும் போது தம்மை இவ் ஆலய ஆதீனகர்த்தாக்கள் என குறிப்பிட்டு அதனை ஏற்றுக் கொள்ளும்படி நிற்பந்தித்தும் இருந்தனர். பொது மக்களால் நியமிக்கப் பெற்ற சபைகள் அதனை ஏற்றுக் கொண்டிருந்தால்; பொதுமக்களே தங்களை ஆதீனகர்த்தாக்கள் என ஏற்றுக் கொண்டதாக நிரூபிக்க முடியும் அல்லது மாற்று உறுதி ஒன்றையும் எழுத முடியும் என்பது அவர்களின் யூகமாக இருக்கலாம்.

இவ் ஆலயம் பொது ஆலயமாக இருப்பதனால்; ஆலய வரவு செலவு (ஆலய பூஜைகள், திருவிழாக்கள், திருப்பணி வரவு செலவுகள்) அறிக்கை பொதுமக்களுக்கும், பிரதேச செயலகத்திற்கும் சமர்ப்பி்க்கப் படல் வேண்டும் என்பது அரச கட்டளை.

அத்துடன்; அண்மைக் காலமாக ஆலய உற்சவங்கள் சம்பந்தமாக வெளிட்டுள்ள நோட்டீஸ்கள் மூலமும் தாமே இவ் ஆலய ஆதீனகர்தா என விளம்பரம் செய்து வரும் இவ் வேளையில்; அவர்கள் யார்? அவர்கள்தானா உண்மையான ஆதீனகர்த்தாக்கள்? என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ள அனைவருக்கும் இங்கு பதியப்பெற்றிருக்கும் சில தகவல்கள் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பது வெளிப்படை.

நன்றி

 

 

 


இவ் ஆலயம் அமைந்துள்ள 7 பரப்பு நிலமும் ஆலய ஸ்தாபகர்ருக்கே சொந்தமானதாக இருப்பதனால்; இது எங்கடை கோவில், நாங்கள் இவ் ஆலயத்தின் பரம்பரை ஆதீன கர்த்தாக்கள் எனக் கூறி ஆட்சி செய்து வரும் தர்மகர்த்தாக்கள் எவரும் இவ் ஆலயத்திற்கோ அல்லது ஆலய ஆதனங்களுக்கோ சொந்தக்காரர்ஆகிவிடமுடியாது என்பதுவும், அதற்குள் அமைந்துள்ள வீடோ, அல்லது கட்டிடங்களோ அவர்களுக்கு சொந்தம் இல்லை என்பதுவும் நிரூபிக்கப் பெற்ற உண்மைகள்.
அதனால் போலும்; CD மூலமும், ஆலய உற்சவ நோட்டீசுகளிலும் தாமே இவ் ஆலய ஆதீனகர்த்தாக்கள் என விளம்பரப் படுத்தி பொதுமக்களை ஏமாற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது.
அத்துடன்; சென்ற ஆண்டு இவ் ஆலயமுன்றலில் பொது மக்களால் தெரிவு செய்யப் பெற்ற திருப்பணிச் சபை, அன்னதான சபை ஆகியவற்றிற்கு “யாப்பு” எழுதும் போது தம்மை இவ் ஆலய ஆதீனகர்த்தாக்கள் என குறிப்பிட்டு அதனை ஏற்றுக் கொள்ளும்படி நிற்பந்தித்தும் இருந்தனர். பொது மக்களால் நியமிக்கப் பெற்ற சபைகள் அதனை ஏற்றுக் கொண்டிருந்தால்; பொதுமக்களே
தங்களை ஆதீனகர்த்தாக்கள் என ஏற்றுக் கொண்டதாக நிரூபிக்க முடியும் அல்லது மாற்று உறுதி ஒன்றையும் எழுத முடியும் என்பது அவர்களின் யூகமாக இருக்கலாம்.
இவ் ஆலயம் பொது ஆலயமாயின் ஆலய வரவு செலவு அறிக்கை பொதுமக்களுக்கும், பிரதேச செயலகத்திற்கும் சமர்ப்பி்க்கப் படல் வேண்டும் என்பது அரச கட்டளை.
நன்றி

மரண அறிவித்தல் திருமதி. பரமேஸ்வரி சிவகுருநாதன் அவர்கள் – 05.11.2017

E-mail Print PDF

பரம் அற்இய thanam kanaga முகநூலை பார்வையிடவும்

Page 3 of 124

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்