Tuesday, Dec 11th

Last update09:02:59 PM GMT

You are here: சமூக நோக்கு

மரண அறிவித்தல் - உயர்திரு. சின்னக்குட்டி கந்தையா (பாடசாலை அதிபர்) அவர்கள்

E-mail Print PDF

Image may contain: 1 person, closeup

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், பாடசாலை அதிபராகவும், சமூக சேவகனாகவும், சேவையாற்றி தனது இறுதிக் காலத்தில் கனாடா - ரொறொன்ரோவில் வாழ்ந்து வந்தவருமான உயர்திரு. சின்னக்குட்டி கந்தையா (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்) அவர்கள் 24.06.2017 சனிக்கிழமை    கனடாவில் சிவபதம் எய்தினார்.


மரண அறிவித்தல் - சித்தர் நரசிங்க சாமியார் அவர்களின் ஆன்மீகப் பணி

E-mail Print PDF

Image may contain: one or more people, people standing, beard and text

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், ”ஐய்யனார்” என எலோராலும் அன்பாக அழைக்கப்பெற்றவரும், சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய ஸ்தாபகருமான உயர்திரு தம்பிப்பிள்ளை வெற்றிவேல் அவர்கள் ”நரசிம்ம சுவாமிகள்” 20.06.2017 அன்று சிவபதம் எய்தினார்.

சமாதியாகிய நரசிங்க சித்தரின் இறுதி கிரியைகள் இன்று 21.06.2017 சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற்று அங்கு சமாதி வைக்கப் பெற்றது.

சுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் மாதகல் - சம்பில்துறை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய சம்புகோள பட்டினத்தில் கோயில் லொண்டு அருபாலித்து வந்த சுயம்பு சம்புநாத ஈஸ்வரர் ஆலயமும் இயற்கையின் சீற்றத்தால் இந்து சமுத்திரத்தில் சங்கமம் ஆகியதால்; அவ் ஆலயத்தை பராமரித்து பூசைகள் செய்து வந்த இந்திய செட்டியார் குலத்தினர் அங்கிருந்த ஒரு இலிங்கத்தினை வெகு சிரமத்தின் மத்தியில் எடுத்து பல இடங்களில் ஆலயங்கள் கட்டி வழிபட்டதுடன்; கடைசியாக 1820 ம் ஆண்டு சாத்தாவோலை என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர்.

இவ் ஆலயமும் உள்நாட்டு போரினால் சேதமுற்ற நிலையில்; பணிப்புலத்தில் பிறந்து இறையருளால் பல அற்புதங்கள் செய்து வந்த நரசிங்க சுவாமிகள் சம்புநாத ஈஸ்வரர் சுயம்பாக தோன்றி இந்து சமுத்திரத்தில் சங்கமமான இடத்தின் கரையோரமாக ஆலயம் அமைத்து சம்புநாத ஈஸ்வரரை பிரத்திஷ்டை செய்து அவன் அருளால் அவந்தாள் வணங்கி பல புதுமைகள் படைத்து
வந்துள்ளார்..

சம்புகோள பட்டினத்தில் அமைந்திருந்த துறைமுகத்தில் அசோகச் சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்தவும், மகன் மஹிந்தவும் வெள்ளரச மரக்கிழையுடன் வந்திறங்கியதாக பௌத மதம் கூறுகின்றது. சிறப்பு மிக்க இவ் இடத்தில் ஆலயம் அமைத்து இந்து மக்களுக்கு வழிபடும் வாய்ப்பினை தந்த சித்தருக்கு நாம் அனைவரும் நன்றி கூற கடைமைப்ப்ட்டுள்ளோம். அவ் ஆலயம் இல்லையேல் இந்துக்கள் அவ் இடத்தில் பாதம் பதிக்க முடியாதநிலை ஏற்பட்டிருக்கும் என்பது பலரது ஆதங்கம்..

அவை மட்டுமன்றி இவ் ஆல்யத்தி தீர்த்தக் கரையினில் பண்ப்புலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முத்துமாரி அம்பிகையும், சாத்தவோலை சம்புநாதீஸ்வரரும்,, காலையடி ஞானவேலாயுதரும், சாந்தை சித்தி விநாயகரும் தீர்த்தமாடும் புனித தீர்த்தக்கரையாக விளங்குகின்றது. அத்துடன் இவ் ஆலயத்தின் மேலும் மெருகூட்டும் வகையில் சிவதொண்டர் சபையினரால் 21 அடி உயரம் கொண்ட சிவனின் தியான சொரூபம் அமைக்கப்பெற்று இந்துக்களின் புண்ணிய பிரதேசமாக காட்சி தருகின்றது.

பணிப்புலம்.கொம்மரண அறிவித்தல் - திரு. ஆறுமுகம் செல்வராசா அவர்கள் - இறுதிக் கிரியை-தகனம் 05.06.2017

E-mail Print PDF

ண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடா - ஸ்காபறோ நகரை வதிவிடமாகவும் கொண்ட உயர்திரு. ஆறுமுகம் செல்வராசா அவர்கள் 02.06.2017 அன்று மாலை கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சரஸ்வதி தம்பதியினரின் மூத்த மகனும்;

காலஞ்சென்றவர்களான நடராஜா - நாகம்மா தம்பதியினரின் மருமகனும்;

லோகாம்பிகை(ஜோகி) அவர்களின் அன்புக் கணவரும்;

ரமேசன், ரதீசன், ரதீஜா, ரசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

மகேஸ்வரி-கனடா, வரதராசா-கனடா, தங்கராசா-சுவீடன், நாகராசா - டென்மார்க், யோகராசா-டென்மார்க், சிங்கராசா-கனடா, மோகனராசா-கனடா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்;

கேதீஸ்வரன், கெளரிதேவி, மதுரிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்;

கனகரத்தினம்-கனடா, பரமேஸ்வரி-கனடா, சந்திராதேவி-சுவீடன். செல்வமலர்-டென்மார்க், மலர்-டென்மார்க், சிவசாந்தி-கனடா, ரமணி-கனடா ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

யுவராம், ஆருஷன், பூமிக்கா, பிரணவி, ஆர்த்திக்கா, வைஷ்ணன், கீர்த்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி முதல் மாலை 9:00 மணிவரை

இல. 8911 Woodbine Ave ல் அமைந்துள்ள

“Chapel Ridge Funeral Home”ல் அஞ்சலிக்காக வைக்கப் பெற்று;

மறுநாள் (05.06.2017) திங்கட்கிழமை அதே மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் 11:00 மணிவரை இறுதி கிரியையும், அஞ்சலியும் நடைபெற்று;
பூதவுடல் இலக்கம் 12492 – Woodbine Avenue வில் அமைந்துள்ள Highland Hills Crematorium மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - திரு. ஐங்கரன் ஜெயராசா அவர்கள் - இறுதிக் கிரியை(தகனம்) - 06.06.2017 இன்று

E-mail Print PDF

Image may contain: 1 person, text

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், ஜேர்மனி-பிலெபில்ட் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு.  ஜெயராசா ஐங்கரன் அவர்கள் 27.05.2017 அன்று  ஜேர்மனியில் காலமானார்.

அன்னார்; காலஞ்சென்றவர்களான ஜெயராசா (சமாளர்) - அன்னலட்சுமி(இலச்சுமி) தம்பதியினரின் அன்புமகனும்;

யோகநாதன் (சின்னையர்) - ராசமலர் (தவம்) தம்பதியினரின் அன்பு மருமகனும்

விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்;

வினுஷா, விஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

பாஸ்கரன், காலஞ்சென்ற கிருஷ்ணகரன் (சேகர்), விஜயசேகரன், ஜெயந்தினி, ராதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்;

பிரியா, சசிகரன், சிவறஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 மணி தொடக்கம் 7:00 மணிவரை

oelmühlen str 9
33604 -  bielefeld


ஆகிய முகவரியில் அஞ்சலிக்காக - பார்வைக்காக வைக்கப்பட்டு; அதன் பின்னர் 

எதிர்வரும் 06.06.2017 செவ்வாய்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் பி.பகல் 14:00 மணிவரை

Sennefriedhof
Windelsbleicherstr. 139
33647 Bielefeld
Neukapelle 2


ஆகிய முகவரியில் இறுதிகிரிகை நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யபடும்

இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம்

தகவல்: மனைவி பிள்ளைகள்
Page 6 of 122

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்