Tuesday, Jul 17th

Last update02:52:36 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு

ஊர்காவற்துறை - செருத்தனைப்பதி மஹாமாரி அம்பாள் திருக்கோயில் மஹோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் - 2017

E-mail Print PDF

Image may contain: one or more people and outdoor

ஊர்காவற்துறை - செருத்தனைப்பதி மஹாமாரி அம்பாள் திருக்கொயில் மஹோற்சவ விழா விஞ்ஞாபனம் - 2017

அன்னை ஶ்ரீ இராஜ மகாமாரி அம்பிகை பெரும் திருவிழா 09.06.2017 வெள்ளிக்கிழமை கொடியேற்ற உற்சவதுடன் ஆரம்பமாகி 18 தினங்கள் பெருவிழா நிகழ அம்பிகையின் பேரருள் கூடியுள்ளது என்பதனை அறியத்தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

கொடியேற்ற உற்சவம்: 09.06.2017 வெள்ளிக்கிழமை

தேர் உற்சவம்: 24.06.2017  சனிக்கிழமை

தீர்த்த உற்சவம்: 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை

ஆலய அறங்காவலர்கள்

 


காலையடி ஞானவேலாயுதர் மஹோற்சவ விழா - 2018

E-mail Print PDF

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட

தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி

குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்

துளைத்த வேல் உண்டே துணை

ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் "சக்தி வேல்" பெற்று, சூரர் குலத்தை கருவறுத்து, தேவர் குழாத்தைக் காத்தருளி்ய குமரன் ஞான வேலாயுதனைத் துதி செய்தால் மலம் அழிந்து, மெய்ஞான அருள் பெற்று முக்திப்பேற்றையும் அடையலாம்.

காலையடியில் மூலமூர்த்தியாக ஞானவேலும், உற்சவ மூர்த்தியாக வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுக சுவாமியும் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா 0205.2018 சிவாச்சாரியார் "குமரகுருமணி" பிரம்மஸ்ரீ. இ. உலகேஸ்வரக் குருக்கள் அவர்களின் தலைமையில் (துவஜாரோகணம்) கொடியேற்ற உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் பெருவிழா நடைபெற திருவருள் பாலித்துள்ளது என்பதனை அறியத்தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

காலையடி அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி தேவஸ்தான நிகழ்வுகளும் வளர்ச்சியும்:
கதிகாமத்தில் ஒளிவீசும் வேலனாகவும், நல்லூரிலே அலங்கார வேலனாகவும், செல்வச்சன்நிதியில் அன்னதானக் வேலனாகவும், எழுந்தருளி அருள் பாலிக்கும் முருகன் பண்டத்தரிப்பு - காலையடியில் ஞானவேலனாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இவ் ஆலயங்களில் மூலமூர்த்தியாக ”வேல்” பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளமை சிறப்பாகும். கதிர்காமத்தில் மாத்திரம் ஒளிவீசும் கந்தன்னின் யந்திரமும், வேலும் புனிதப் பேழையுனுள் வைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

மரண அறிவித்தல் - திரு. பஞ்சலிங்கம் மனோகரன் (சின்னத்தம்பி) அவர்கள் - ஜேர்மனி - 02.05.2017

E-mail Print PDF

 

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், ஜேர்மனி - ஒஸ்னாபுறூக்கில் வாழ்ந்து வந்தவருமான திரு. பஞ்சலிங்கம் மனோகரன் (சின்னத்தம்பி) அவர்கள் 02.05.2017 செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; பஞ்சலிங்கம்(அமரர்) - புனிதமலர் தம்பதியினரின் அன்பு மகனும்;

சிவலிங்கம்(அமரர்) - சிவபாக்கியம் தம்பதியினரின் அனு மருமகனும்;

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்;

ஜெயந்தினி, தயந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்;

ஜெயலட்சுமி, அன்னலட்சுமி, சிறீஸ்கந்தராசா, நாகராச, இராசலட்சுமி(அமரர்), மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள்

04.05.2017 வியாழக்கிழமை காலை 09:00 மணிமுதல் 11:30 மனிவரை

Heger Friedhof

Rheiner Landstr 128

49078 Osnabruck ல் அமைந்துள மண்டபத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: ஜீவன் - 0172-7001765

மரண அறிவித்தல் - செல்வன் ரூபன் ருகிஷ்னன் - சுவீடன் - 01.04.2017

E-mail Print PDF

Image may contain: 1 person, standing

மலர்வு: 09.05.2017                                   உதிர்வு: 01.04.2017

சுவீடன் Helsingborg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரூபன் ருகிஷ்னன் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்; ரூபன் - கிரிஷா தம்பதியினரின் அன்பு மகனும்;

காலஞ்சென்ற செல்லத்துரை - நாகரத்தினம் தம்பதியினரதும்; ரவீந்திரன் - வனிதா  தம்பதியினரதும் அன்புப்  பேரனும்;

காலஞ்சென்ற தெய்வேந்திரம் – விவேகம்மா  தம்பதியிரின் அன்புப் பூட்டப் பிள்ளையும்;

மதிவதனன் ஜீவராணி, சசிவதனன் நாகராணி, செல்வவதனன் பிரவீனா, பிரேம் யசித்தா, எபி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்;

சிவரூபன்  மைதிலி,  வசிகரன்  தட்சாஜினி ஆகியோரின் அன்பு மருமகனும்;

செளமியா, சஞ்சய், சயின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

தஸ்மிகா, தட்சிகா, சயானா, சயந், சயிந், செபிஸ்னன், செயினா, செனுயா ஆகியோரின் அன்பு  உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

இறுதிக் கிரியைகள்: வியாழக்கிழமை 06.04.2017, 11:30 மு.ப — 02:00 பி.ப

முகவரி:         Pålsjö kapell, Kullavägen 94, 254 54 Helsingborg, Sweden

தொடர்புகளுக்கு

ரூபன்(அப்பா) — சுவீடன்

செல்லிடப்பேசி:      +46735773560

மதி — சுவீடன்

செல்லிடப்பேசி:      +46760084381

சசி — சுவீடன்

செல்லிடப்பேசி:      +46704549916

செல்வன்(பெரியப்பா) — சுவீடன்

செல்லிடப்பேசி:      +46760730495
Page 7 of 124

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்