Tuesday, Dec 11th

Last update09:02:59 PM GMT

You are here: சமூக நோக்கு

மரண அறிவித்தல் - உயர்திரு சின்னையா சுந்தரலிங்கம் அவர்கள் இளைப்பாறிய இ.போ.ச நடத்துனர்- 07.02.2017

E-mail Print PDF

Image may contain: 1 person

உயர்திரு. சின்னையா சுந்தரலிங்கம் அவர்கள் - இளைப்பாறிய இ.போ.ச நடத்துனர்

பிறப்பு: 05.01.1943                                                     இறப்பு: 07.02.2017

சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்திரு. சின்னையா சுந்தரலிங்கம் அவர்கள் 07.02.2017 இன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார் காலஞ்சென்ற சின்னையா - கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும்;

காலஞ்சென்ற வீரசிங்கம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்;

சிவபதமெய்திய நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்;

சத்தியவாணி(சுவிஸ்), வினோதினி (டென்மார்க்), மதிமாறன் (ஜேர்மனி ) ஜெயதயாளினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

சந்திரசேகரன், பத்மநாதன், துஷாந்தி, ஜெயநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;

சங்கீதா, சஜீந்தா, சஜீபன், சுஜானா,சுஜானி, சூர்யா, கிஷான், அபினேஸ், ஜஸ்வன், ஜெயஜனனி,ஜெனனி, ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு பேரனாரும்;

காலஞ்சென்றவர்களான, மகாலிங்கம், செந்தில்மணி, ஏரம்பமூர்த்தி, பரமேஸ்வரி, தயாபரன், மற்றும் குலமணி ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்;

அன்னாரது இறுதிக்கிரியைகள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சாந்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்படும்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்


தகவல் குடும்பத்தினர்
சுளிபுரம்-வடக்கு, பணிப்புலம் காடேறி ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம் - 06.02.2017 - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

No automatic alt text available.

சுழிபுரம் வடக்கு, பணிப்புலம் காடேறி ஞானபைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் - 06.02.2017

மிகவும் பழமையும், புதுமையும் நிறைந்த காடேறிபைரவர் என அழைக்கப் பெற்ற காடேறிஞான பைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் 06.02.2016 அன்று
காலை 8:30 மணிமுதல் 10:30 மணிவரை அமைந்துள்ள சுபமுகூர்த்த வேளையில் நிகழ்வுற இறையருள் பாலித்துள்ளது என்பதனை அறியத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ் விழாவின்போது அனைவரும் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து சிவனின் ஒரு தோற்றமாக விளங்கும் ஞானபைரவரின் கும்பாபிஷேக விழாவினை தரிசித்து இஸ்டசித்திகளை பெற்று இன்புற்றிருக்க வேண்டுகின்றோம்.

ஆலய நிர்வாக சபை

06.02.2017 இன்று நிகழ்வுற்ற குப்பாபிஷே நிகழ்வினை தரிசிக்க இங்கே அழுத்துக

கும்பங்கள் எடுத்துச் செல்லும் காட்சி

பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும் விளக்கமாக அறிந்து கொள்ள

 

புளியங்கூடல் மகாமாரி அம்மன் ஆலயம் - IBC தமிழ் தமது ”வணக்கம் தாய்நாடு” நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பெற்ற வீடியோ இணைப்பு

E-mail Print PDF

Image may contain: one or more people, people on stage and people standing

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தோற்றத்திற்கு காரணமான புனித கத்தியானது ஆலய ஸ்தாபகரால் மூலமூர்த்தியுடன் கருவறையில் பிரதிஷ்டை செய்யப் பெற்று பூஜைகள் செய்யப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இவ் ஆலயத்தில் தமது நேர்த்தியாக பலியிடுவதற்கு புளியங்கூடலில் இருந்து கொண்டுவரப் பெற்ற ஆட்டுக் கடா தாமதமாக வந்தமையால், குழப்பம் ஏற்பட்டது.

அதன்போது ஆலய கருவறையில் இருந்த புனித கத்தியை புளியங்கூடலில் இருந்து வந்தோரால் எடுத்துச் செல்லப் பெற்று; செருத்தனைப்பதி என்னும் இடத்தில் ஆலயம் அமைத்து அக் கத்தியை பிரதிஷ்டை செய்து. தாம் நேர்த்திக்காக கொண்டுவந்த ஆட்டுக்கடாவை அங்கு பலியிட்டனர். மஹாமரி அம்மன் ஆலயம் ஸ்தாபிக்கப் பெற்று சுமார் 350 வருடங்களாகியும் இவ் புனித கத்தி ஆலய கருவறையில் வைத்து பூஜை செய்வதை தெளிவாக காணலாம்

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாக்கள் இவ் ஆலய கொடியேற்ற நிகழ்வின்போது வெளியிட்ட சீடி யில் இவ் ஆலயத்தில் மிருகபலியிடுவதற்கு பாவித்த ஆசூசமான கத்தியை எடுத்துச் சென்ற புளியங்கூடல் இராஜ மகாமாரி அம்மன் ஆலய ஸ்தாபகர் அதனை கருவறையில் பிரதிஷ்டை செய்துள்ளதாக குறிக்கப்பெற்றுள்ளமை வேதனை தருவதாக உள்ளது.

உண்மையில் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய கருவறையில் இருந்த புனித கத்தியானது அம்பிகையின் பேரருள் நிறைந்த (காமாட்சி) விளக்கினைப் போன்றது. அவ் விளக்கானது பணிப்புலம் அம்பாள் ஆலயத்தில் அம்பிகையின் பேரருள் நிறைந்த ஒளியினைை ஏற்றியபின் புளியங்கூடலில் இருக்கும் தம் அடியார்களுக்கு பேரருள் பாலிப்பதற்காக இறைவியின் அருளினால் அங்கு எடுத்துச் செல்லப்பெற்றுள்ளது என்பதே உண்மை. ஒரு தீப விளக்கினைக் கொண்டு கோடிக் கணக்கான தீபங்களை ஏற்றலாம் என்பது இங்கு நிரூபணமாகின்றது.

புளியங்கூடல் -  செருத்தனைப்பதி இராஜ மஹாமாரி அம்பாள் ஆலய வரலாறும் நிகழ்வுகளும் - வீடியோவில்

 

 

 

 

 


மரண அறிவித்தல் - உயர்திரு. சுப்பிரமணியம் சின்னத்துரை அவர்கள் - காலையடி

E-mail Print PDF

Image may contain: 1 person, text

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னத்துரை அவர்கள் இன்று 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்; அமரர்களான சுப்ரமணியம் – ராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;
(அமர்) கனகம்மாவின் அன்பு கணவரும் ஆவார்

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்: குடும்பத்தினர்

 

 

 


இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் - அமரர் நவரத்தினம் குணதீஸ்வரன் -29.01.2017

E-mail Print PDF

Image may contain: 1 person, text

கடந்த 29.01.2015 அன்று சிவபதம் எய்திய எமது குடும்ப குலவிளக்கு அமரர். நவரத்தினம் குணதீஸ்வரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆதமசாந்தி பூஜையும் (திவசம்) எதிர்வரும் 23.01.2017 அன்று கலட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடபெறும் என்பதனை அறியத்தருவதுடன், இவ் ஆத்ம சாந்தி கிரியைகளில் பங்குபற்றி பிரார்த்தனை செய்யவும், தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு பற்றி சிறப்பிக்கவும் வருகை தருமாறு உற்றார், உறவினர், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி அழைக்கின்றோம்.
தகவல்: மனைவி பிள்ளைகள்

Page 9 of 122

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்