Friday, Nov 17th

Last update02:47:21 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு

"பணி செய்வதே பணி" பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்ற சங்கம் - 70ம் ஆண்டு நிறைவு விழா

E-mail Print PDF

Image may contain: 2 people, people sitting

பணிப்புலம் வாழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக இறை பணிக்காகவே தம்மை அர்ப்பணித்தவர்கள். வைகறையில் துயில் எழுந்து முதற் பணியாக மொட்டறாது மலர் பறித்து, பூமாலை புனைந்து இறைவனை அலங்கரித்து, பூஜையின் போது சங்குநாதம் செய்து, பண்ணோடு பாமாலை பாடி "இறைவனை பணி செய்வதே தம் பணி" என இன்றும் பணி செய்து வருகின்றார்கள். அவ்வூரில் பிறந்தமையால் நாமும் பெருமை அடைகின்றோம்.

தேவை எங்கு தேவைப்படுகின்றதோ அங்கு அதை பெற்றுக் கொடுப்பதே சேவை. எதிர் பார்க்காத நேரத்தில் தம் தேவையை பெற்றுக் கொடுப்பதும் சேவைதான். தேவை ஏற்படாத இடத்தில் சேவைக்கு வேலையில்லை.

சேவை-பணி என்பது எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய ஒன்றன்று. அதற்கு பல அற்பணிப்புகள், நற்பண்புகள், வசதிகள் தேவை. சேவை செய்வதற்கு மற்றைய உயிர்களிடத்து அன்பு, கருணை, மனிதநேயம் நிறைந்தவர்களாக இருத்தல் அவசியம். மனித குலத்தில் மாணிக்கங்களாக திகழ்கின்றவர்களில் மட்டுமே இவ் ஒளிக் கீற்றுகள் பிரகாசிக்கின்றன.

சேவை என்பது மானிட வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றை இல்லாதவர்களுக்கும், அது தேவைப் படுகின்றவர்களுக்கும் ஈதல் அல்லது அதனை கிடைக்கச் செய்தல் என பொருள் பெறும். ஈகை என்பது தன் நலம் கருதாது பெறுபவர் நலன் கருதி வழங்குவதாகும். கொடுத்தல் என்பது ஈகையில் இருந்து வேறு படுகின்றது. உதவி செய்பவர் பெற்றவரிடம் இருந்து அதற்கு பதிலாக வேறு ஒன்றை எதிர் பார்த்துச் செய்வதாகும். இதனை

"வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து." என வள்ளுவர் கூறுகின்றார்..


இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

சாதி, மதம், குலம், இன பேதம் காட்டாது பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், யாருமற்ற அநாதைகள், காசநோய் மற்றும் குஷ்டரோகங்களால் அவதிப்பட்டோரை நாடிச் சென்று அவர்களுக்கு தஞ்சமளித்து அவர்களின் பசியையும், பிணியையும் போக்கி தாயார்போல் உடன் இருந்து சேவை செய்த அன்னை திரேசா அம்மையாரின் சேவையும் தேவையானவர்களுக்கு வழங்கப்பெற்ற ஒரு மகத்தான பணியே.

இல்லறத்தில் நல்லறம் செய்து இப் பிறப்பின் நோக்கத்தை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்ற வள்ளுவன் கூற்றிற்கு அமைய இல்வாழ்க்கை பண்புடையதாகவும், பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

இங்கே அன்பு என்ற வார்த்தையையின் பின்னால் பல நற்பண்புகள் அடங்கி இருக்கின்றன. அன்பு இருக்கும் இடத்தில் பரிவு, இரக்கம் இருக்கும், இவை இரண்டும் இருக்கும் இடத்தில் பணிவு இருக்கும், இவை அனைத்தும் நிறைந்த இடத்தில் சேவை-பணி இருக்கும். பணி செய்யும் போது அறன் தானாக வந்து சேருகின்றது. எனவே இவ் மானிடப் பிறப்பின் பண்பும், பயனும் அதுவாகி விடுகின்றது.

1945ம் ஆண்டளவில் எம்மூரில் வாழ்ந்து கொண்டிருந்த (இளையோர்) பள்ளிப் படிப்பு முடித்தோரும், பல்கலைக் கழகம் முடித்தோரும், படித்துக் கொண்டிருந்தோரும், பெரியோர்களும் முதலில் புதினப் பத்திரிகைகள் வாசிப்பதற்காக வாசிகசாலை ஒன்றை அமைத்தனர். அதன் பின்னர் ஊர் மக்களின் ஒத்தாசையுடன்; முத்தமிழும், சைவமும், தமிழர் பண்பாடும், கலாச்சார விழுமியங்களும் வருங்கால எமது சந்ததியினர் மத்தியில் வளர்ப்பதற்காக, விரிவாக்கம் அடைந்து வளர்ந்த்தே “அம்பாள் சானசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்கமாகும்.

அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்கம் கடந்த 70 வருட காலமாக செய்த நற்பணிக்கு கிடைத்த வெற்றியை ஊர்மக்கள் அனைவருடனும் கொண்டாடும் இந் நந்நாள் ஊரிலும், எமது சமூகத்திலும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பெற வேண்டிய பொன்நாளே.

இந் நன்நாளில் அம்பாள் சனசமூக நிலையத்தை உருவாக்கி, வளர்த்தெடுத்த எம்மூர் பெருமக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.

ஆக்கம்: கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
(ஓய்வு பெற்ற கணினி வலை பின்னல் இணைப்பு பரிபாலகர்)

பணிப்புலம், பண்டத்தரிப்பு

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய 70ம் ஆண்டு நிறைவு விழா - விளையாட்டுப் போட்டிகள் இன்று - 06.11.2016

E-mail Print PDF

விளையாடுப் போட்டி நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலய 70ம் ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும்; எதிர்வரும் 13.11.2016 அன்று நடைபெற இருப்பதனால் முன் ஏற்பாடாக இன்று மாலை 3:00 மணியளவில் சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற விளையாட்டும் போட்டிகளின் தொகுப்பு இங்கே பதிவாகியுள்ளன.

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் - 70 ம் ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டுப் போட்டியும் - 06.11.2016

E-mail Print PDF

அம்பாள் சனசமூக நிலைய 70 ம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 13.11.2016 அன்று நிலைய முன்றலில் நடாத்துவதற்கு நிலைய நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இவ் விழாவை முன்னிட்டு விஷேச நிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டி 06.11.2016 அன்று காலை 6:00 மணியளவில் இடம் பெறும். இப் போட்டியில் பங்கு பற்ற விரும்புவோர் 05.11.2016 ம் திகதிகதிக்கு முன்னர் தங்கள் விபரங்களை விளையாட்டு பொறுப்பாளரிடம் பதிவு செய்து தங்கள் பதிவு இலக்கத்தினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

விளையாட்டுப் போட்டி பற்றிய விபரம் அறியவும், பதிவு செய்து கொள்ளவும் அழையுங்கள்;

விளையாடுப் பொறுப்பாளர்: பா. சேந்தன் அவர்கள்

தொடர்புகளுக்கு: 0770305189

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்க திருத்தி அமைக்கப் பெற்று 30.07.2013 அன்று நிகழ்வுற்ற திறப்பு விழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

மரண அறிவித்தல் கனகசபை நாகராசா (வீரக்கோன்) அவர்கள் - கனடா - தகனம் 03.11.2016

E-mail Print PDF

மரண - அறிவித்தல்  கனகசபை நாகராசா (வீரக்கோன்)அவர்கள்

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, மற்றும் கனடாவை வதிவிடமாக கொண்டவரும் வீரக்கோன் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற கனகசபை நாகராசா அவர்கள் 30.10.2016 அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; காலஞ் சென்றவர்களான் கனகசபை - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும்;

காலஞ் சென்றவர்களான சிவதாஸ் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

அமரரான ஈஸ்வரி அவர்களின் அன்பு நிறைந்த கணவரும்;
கனகராசா (ஐயா), கனகரட்னராஜா( தவம்), சிவநேஸ்வரி (கனி), ராதா (ரதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிமோகன் (ரவி), சிவநேஸ்வரன் (சிவா), அனுஷா, தேவகி, ஆகியோரின் அன்பு மாமனாரும்;

கஜன், கௌரிஜன், கௌதம், அனுஷன், நதீன், கோபகன்,கபிலன், சாரங்கி, சோபியா, தனுஷ் ஆகியோரின் பாசமிகு பேரனாருமாவார்.


அன்னாரின் பூதவுடல் 02.11.2016 புதன்கிழமை மாலை 5:00 மணியி தொடக்கம் காலை 9:00 இல. 8911 Woodbine Ave ல் அமைந்துள்ள “Chapel Ridge Funeral Home”ல் அஞ்சலிக்காக வைக்கப் பெற்று;

மறுநாள் (03.11.2016) வியாழக்கிழமை அதே  மண்டபத்தில் காலை 8:30 மணி முதல் 11:00 மணிவரை இறுதி கிரியைகளும், அஞ்சலியும் நடைபெற்று பூதவுடல் இலக்கம் 12492 – woodbine Avenue வில் அமைந்துள்ள Highland Hills Crematorium மயானத்தில் தகனம் செய்யப் பெறும்.

துயர் பகிர:
ரவிமோகன் -416-858-6461
சிவா: 416-616-8515
கனி / ரதி 416-439-2762

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

வல்லிபுர ஆழ்வார் மஹோற்சவ விழா - 2016 நிகழ்வுற்ற தேர்த் திருவிழா நிகழ்வுகள் இணைப்பு

E-mail Print PDF

15.10.2016 வெள்ளிக்கிழமை நிகழ்வுற்ற தேர் உறாவ நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துகr

வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானம் யாழ்மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் ”வல்லிபுரம்” எனும் ஊரில் அமைந்துள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும்.

இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக சுயம்பு வடிவில் (தானாகவே) தோன்றிய விஷ்ணுவின் ”சுதர்சனச் சக்கரம்”அமைந்துள்ளது. ஆலயத்தில் திருத்த வேலைகளுக்காக பாலஸ்தானம் செய்யப் பெறும்போது கூட இவ் சுதர்சன சக்கரம் பாலஸ்தானம் செய்யப் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Page 10 of 126

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்