Friday, Nov 17th

Last update02:47:21 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு

கட்டாயத் திருமணம்

E-mail Print PDF

கட்டாயத் திருமணம்

ஆக்கம்: திருமதி. வினோதினி பத்மநாதன் -டென்மாக்

திருமணம் என்பது என்ன ?
ஆயிரம் காலத்துப் பயிர். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உன்னதமான உறவை ஏற்படுத்தி இல்லற வாழ்கை ஆரம்பிக்க பெரியோர்களினால் நிகழ்த்தி வைக்கப் பெறும் ஒரு புனிதமான சடங்காகும்.

எங்கள் ஊரை மறக்க முடியுமா?

E-mail Print PDF

ஆக்கம்: திருமதி. குலமணி கந்தசாமி (கனடா)

எங்கள் ஊர் என்று நினக்கும் பொழுது எமக்கு பெருமையாக இருக்கிறது. முதலில் எமது குலதெய்வம் அம்பாள். மற்றது எம் ஊர் மக்களின் ஒற்றுமை, பாச உணர்வுகள் என்பன. அங்கிருக்கும் போழுது எமக்குத் தெரியாத பெருமைகளை இங்கு எமது அயலூரவர்கள் எம்மை எவ்வளவு சிறப்பாக நினைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலம் கேட்கும் போது பெருமை அடைகின்றோம். கோயில் விசேஷ திருவிழா என்றால் உங்கள் ஊர்ப் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு ஆவலோடு வருவோம். எல்லாம் உங்கள் அம்பாளின் அருட்சக்தி என்றுதான்  சொன்னார்கள்.

அம்பாள் சனசமூக நிலையமும் நாமும்

E-mail Print PDF

அம்பாள் சனசமூக நிலையம்
கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மந்தகதியில் இயங்கி வந்த அம்பாள் சனசமூக நிலையம் தற்பொழுது துரிதகதியில் இயங்க ஆரம்பித்துள்ளது. அதனை ஊர் மக்களுக்கு சேவை செய்ய வைப்பதற்கான எல்லா முயற்சிகளும்  எம்மால் முன்னெடுக்கப்பெற்று வருகின்றன.

மறுமலர்ச்சி மன்றம் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

காலையடி மறுமலர்ச்சி மன்றம்

marumalachchi

திருகோணமலை - பாலையூற்று ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம்

E-mail Print PDF

பணிப்புலம் மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் திருகோணமலை-பாலையூற்று பகுதியின் மத்தியில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயம்

இவ்வாலயத்தில் நடைபெறும் விழாக்கள், திருப்பணி வேலைகளை; மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக இவ் ஆலயத்தின் பெயரில் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுளதாக ஆலைய நிர்வாகிகள் அறிவிக்கின்றனர்.விபரங்களை காண: http://srignanavyravaralayam.shutterfly.com

பைரவர் வழிபாட்டின் பலன்கள்….
பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் சிறந்த நாளாகும். ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும், பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம் என்பது ஐதீகம். பைரவருக்கு பிடித்தமானது சந்தனகாப்பு.

இதில் வாசனை திரவியங்களான புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது சிறப்பாகும். சந்தனகாப்பு செய்வதால் ஒருகோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது.

பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தனமாலை அணிவித்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களை கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.
பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், தேன், செவ்வாழை, வெல்லப்பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பைரவரை காலையில் வழிபட சர்வநோய்களும் நீங்கும்.

பகலில் வழிபட விரும்பியது எல்லாம் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை கிட்டும்.

பைரவருக்கும் சிறு துணியில் மிளகை சிறு பொட்டலமாக கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாக பிளந்து அதனுள் எண்ணை அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் - வரலாறும் நிகழ்வுகளும் - புதிய பல விபரங்களுடன் - புளியங்கூடல் இராஜமஹாமாரி அம்பாள் ஆலய வரலாறும் நிகழ்வுகளும் வீடியோ இணைப்பு

E-mail Print PDF

Image may contain: 2 people

தேவஸ்தான வரலாறும் நிகழ்வுகளும்


ஆக்கம்: திரு. கணபதிப்பிள்ளை கனகரத்தினம் - மூத்த தர்மகர்த்தாவும் அதிகார பூசகரும்       

"முத்தராய் மனமோன மெய்திய பக்தர் மேவுநற் பணிப்புலத் உறை
முத்துமாரி பொன்முளரி மென்பதஞ் சித்தமிருத்துவார் சித்தராவரே"

இ. நமசிவாய தேசிகர்

இந்து சமுத்திரத்தின் "முத்து" என வர்ணிக்கப் பெறும் ஈழ நாட்டின் "சிரம்" போல் அமைந்துள்ள யாழ்ப்பாண குடாநாட்டில் திலகமிட்டாற்போல்  விளங்கும் பழம் பெரும் பட்டணமாம் பண்டத்தரிப்பில்  சைவமும், தமிழும் தழைத்தோங்க சமயத் தொண்டாற்றி வரும் வீரசைவர்கள் செறிந்து வாழும் பணிப்புலம் பதிதனில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் புகழ்மிக்க ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான வரலாறும் நிகழ்வுகளும்; வளர்ந்து வரும் எமது வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக இங்கு பிரசுரமாகின்றது.

Page 125 of 126

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்