Monday, Dec 11th

Last update07:59:25 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் - அன்னதான சபை நியமனம்

E-mail Print PDF

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலையத்தில் நடைபெறும் நைமித்திய, காமிக பூசைக் காலங்களில் அன்னதான சேவையை நடாத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னின்று நடாத்திய தொண்டர்கள் முன்வராத நிலையில்; ஆலய ஆதீனகர்த்தாக்கள் ஆலய முன்றலில் அவசரமாக கூடிய கூட்டத்தில் அன்னதான சபைக்கான நிரந்தர உறுப்பினர்களை தெரிவு செய்யும்வரை தற்காலிகமாக அன்னதான குழு தெரிவு செய்யப்பெற்றது.

அதில் கணேசரத்தினம் சபாநாயகம், இராசையா சிவபாதம், நாகராசா சிவசங்கர், கணபதிப்பிள்ளை கனகரத்தினம் ஆகியோர் அங்கு சமூகமளித்திருந்த பொதுமக்களால் தெரிவு செய்யப்பெற்றனர்.

அன்றைய தினமே அன்னதான மண்டபத்திற்கு சொந்தமான பொருட்களும், அன்னதான மண்டப திறப்புகளும் தற்காலிக அன்னதான குழு பொறுப்பாக பொறுப்பேற்ற கணேசரத்தினம் சபாநாயகம் அவர்களிடம் ஒப்படைக்கப் பெற்றன.

அத்துடன்; கடந்த வருடம் மிகுதியாக வங்கியில் இருந்த பணம் வங்கி வட்டியுடன் 2,71612 இருப்பதாக கூறி சிவஸ்ரீ. பாலசுப்பிரமணியம் ஐயா 2,50000 ரூபாவை க. சபாநாயகம் அவர்களிடம் ஒப்படைத்தார்.

இப் பணத்தைப் பெற்ற அன்றைய தினமே அன்னதான மண்டபத்திற்கு வெள்ளை அடித்து மறுதினம் நடைபெற இருக்கும் கொடியேற்ற விழாவிற்கு அன்னதானம் வழங்க ஆயத்தமாகினர்.

27.07.2016 அன்று ஆலய ஆதீனகர்த்தாக்களினால் முன் அறிவித்தல் கொடுக்கப் பெற்று ஆலய ஆதீனகர்த்தாக்கள் அனைவரதும் சமூகத்துடன் ஆலய மணிமண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆலய அன்னதான மண்டபத்திற்கான நிரந்தர அன்னதான சபை பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்றது.

திரு. சின்னத்தம்பி ஜெயராசா (செயன்) அவர்கள் தலைவராகவும்,
திரு. தி.ஜெ. ஜெயகாந்தன் அவர்கள் செயலாளராகவும்,
திரு. ஆ. த. குணதிலகம் அவர்கள் பொருளாளராகவும்,
திரு. ப. ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் உப-தலைவராகவும்,
திரு. கு. ஜெகதீஸ்வரன் அவர்கள் உப-செயலாளராகவும்
நிர்வாக உறுப்பினர்களாக:
1. திரு. அ. ஜெ. ஜெயகாந்தன் அவர்களும்,
2. திரு. சி. கனகலிங்கம் அவர்களும்
3. திரு. பே. ஜெகநாதன் அவர்களும்
4. திரு. ஜெ. கேதீஸ்வரன் அவர்களும்
5. திரு. மோ. கண்ணதாசன் அவர்களும்
6. திரு. க. சபாநாயகம் அவர்களும் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்றனர்.
இவர்களில் சிலர் ஆலய திருப்பணி சபையில் இணைந்து கொள்வதற்காக தமது அன்னதான சபை பதவியை இராஜினாமாச் செய்து திருப்பணிச் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

மரண அறிவித்தல் - திரு. அம்பலவாணர் ராமச்சந்திரன் -செட்டிகுறிச்சி 26.9.2016

E-mail Print PDF
செட்டிகுறிச்சியைச் சேர்ந்த அம்பலவாணர் ராமச்சந்திரன் வயது 63 இன்று 26.9.2016 காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு அம்பலவாணார் - ராசமணி தம்பதியினரின் மகனாவார். காலஞ்சென்ற கமலாசனதேவி(தேவியக்கா) யோகமலர்(யோகம்) (கனடா), சாந்தகுமார், சரோஜினிதேவி( பிள்ளையக்கா), குருபாதராசா(குஞ்சாம்பி) ஜெகதேஸ்வரி(குஞ்சக்கா) றஞ்சன் ஆகியோரின் சகோதரர் ஆவார்.


ஈமக்கிரியைகள் 29.9.2016 அன்று செட்டிகுறிச்சியில் அன்னார் பிறந்த வீட்டில் நடைபெற்றன என்பதை அறியத்தருகிறோம்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர் அனைவருக்கும் அறியத்தருகிறோம்

மரண அறிவித்தல் - திருமதி. நாகரத்தினம் சுந்தரலிங்கம் - இறுதிக் கிரியை - 14.09.2016

E-mail Print PDF
யாழ். பண்டத்தரிப்பு, சாந்தை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரலிங்கம் நாகரத்தினம் ”அம்மா) அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக் கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்;

காலஞ்சென்ற சின்னையா - கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்;

திரு சுந்தரலிங்கம் (ஓய்வு பெற்ற இ.பொ.ச பஸ் வண்டி நடத்துனர்) அவர்களின் அன்பு மனைவியும்;

சத்தியவாணி(சுவிஸ்), விநோதினி(டென்மார்க்), மதிமாறன்(ஜெர்மனி), ஜெயதயாளினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயரும்

காலஞ்சென்ற, இராசலிங்கம்(இலங்கை), இராசேஸ்வரி(இலங்கை), நாகராசா(இலங்கை) பரமசாமி(ஜெர்மனி), காலஞ்சென்ற சோமசுந்தரம்(கொலன்ட்), நாகேந்திரம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

சந்திரசேகரம்(சுவிஸ்), பத்மநாதன்(டென்மார்க்), ஜெயநாதன் ஐயா(லண்டன்) , துஷா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சங்கீதா, சஜிந்தா, சஜீபன், சுஜானா, சுஜானி, சூரியா, கிஷான், அபினேஷ், ஜஷ்வன், ஜெயகஜனி, ஜெனனி, ஜெயந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 14.09.2016 அன்று சாந்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று;

பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று தகனம் செய்யப் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல் - குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:-

சந்திரசேகரம்(சுவிஸ்) 0041317412992

பத்மநாதன்(டென்மார்க்) 004558590536

ஜெகநாதn aiயா(லண்டன்)00442083174542

மதிமாறன்(ஜெர்மனி) 004954140757826

சுந்தரலிங்கம்(இலங்கை) 0094213211804

 

காலையடி ஞானவேலயுதர் ஆலய தெற்கு வாசலில் கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா -

E-mail Print PDF
காலையடி ஞானவேலாயுதர் ஆலய தெற்கு வெளி பிரகாரத்தில் மஹாமண்டபத்திற்கு நேராக இரண்டாவது இராச கோபுரம் அமைப்பதற்கான அத்திவாரம் இடுதல் “பூமிபூஜை இன்று 09.09.2016 காலை 7:30 மணியளவில் இடம்பெற்றது. அவ் நிகழ்வுகளைகீழே உள்ள படங்களில் பார்வையிடலாம்.

https://www.facebook.com/photo.php?fbid=1698138293844767&set=pcb.1698151650510098&type=3&theater

மரண அறிவித்தல் - திரு. சுபாஸ் திரவியம் அவர்கள் - டென்மார்க் - 31.08.201

E-mail Print PDF

யாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாக கொண்ட வரும் ”சுபாஸ்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற சுபாஸ்கரன் திரவியம் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரவியம்  - சந்திரா தம்பதியினரின் (Randers) அன்மிகு மகனும்;

காலையடி பண்டத்தரிப்பை சேர்ந்த சிறிதரன் - வசந்தகுமாரி (Skjern) தம்பதிகளின் அன்புமிகு மருமகனும்;

சர்மினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்;

பேபி வர்ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்;

சுஜீதா, சுஜீதரன், சுஜீந்திரன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்;

அருமைராசா, சர்மினி, டொறின், மரியானா, தர்ஷிகா, சுஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

ஈழநாயகி, ஈழமைந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்;

சுபீட்சன், ஜெஸன், ஜஸ்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்;

அஸ்வினி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியையும் மலர் அஞ்சலியும்

03.09.201 சனிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் 12:30 மணிவரை

Nordre Kirkegård, Nørrebrogade 94 8900 Randers C, Denmark  ல் நடைபெறும்

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்
மனைவி பிள்ளை


துயர் பகிர

மனைவி: சன்மினி - 35111543

அருண் — டென்மார்க்
தொலைபேசி:    +4530223446

இந்திரன் — டென்மார்க்
தொலைபேசி:    +4528918740

சுதன் — டென்மார்க்
தொலைபேசி:    +4540781906

திரவியம் — டென்மார்க்
தொலைபேசி:    +4591729190

சிறிதரன் — டென்மார்க்
தொலைபேசி:    +4542471607

தீபன் — டென்மார்க்
தொலைபேசி:    +4531350990


 


Page 8 of 85