Thursday, Mar 22nd

Last update08:40:09 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம்
 

பண் கலை பண்பாட்டுக் கழக ஆங்கில சொல் - எழுத்து அறிவுப் போட்டியும் , 2011 ஆண்டுக்கான நிர்வாக அங்கத்தினர் தெரிவும்

E-mail Print PDF
pann

ண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா
ஆங்கில சொல் - எழுத்து அறிவுப் போட்டி – 2010


கனடா - பண் கலை பண்பாட்டுக் கழக அங்கதினர்கள் அனைவரையும் தங்கள் பிள்ளைகளின்

பிரிவுக்குரிய ஆங்கிலச் சொற்களை தேர்ந்தெடுத்து; அதில் கொடுக்கப் பெற்றுள்ள சொற்களையும்

விளக்கத்தையும் மனப்பாடஞ் செய்யச் செய்து; கீழே குறிப்பிடப் பெற்ற இடத்தில் குறிக்கப் பெற்ற

நேரத்திற்கு முன்பதாக வருகை தந்து, அவர்களின் பெயர்களை பதிவு செய்து ஆங்கில சொல் -

எழுத்து அறிவுப் போட்டிகளில் பங்கு பற்றுமாறு பணிவோடு வேண்டப் படுகின்றனர்.


ஆங்கில சொல் அறிவுப் போட்டி நிறைவு பெற்றதும் பண் கலை பண்பாட்டுக் கழக - 2011
வருடத்திற்கான நிர்வாக அங்கத்தினர் தெரிவு இடம்பெறும்.
அதன்போது கழக அங்கத்தினர் அனைவரையும் சமூகம் தந்து புதிய அங்கத்தினர்களை
தெரிவு செய்யுமாறு அன்புடன் வேண்டப் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு:  கழக செயளாளர் நடேசன் சிவபாதம் அவர்களை  (416-208-9204)

தொடர்பு கொள்ளவும்.


பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா


இடம்:
Scarborough Civic Cente

திகதி: 18.12.2010


Pan. Art & Cultural Club - Canada

Spelling Bee Contest - 2010

Read more...

வள்ளலார் வாழ்ந்த இடத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை

E-mail Print PDF

ராமலிங்க வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழ் வளர்ச்சித் துறை கூறியுள்ளது. இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் பா. கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை:

வடலூர் வள்ளலார் ராமலிங்கப் பெருமான், சென்னை ஏழு கிணறு வீராசாமிப் பிள்ளைத் தெருவில் புதிய கதவு எண் 31 என்ற வீட்டில் தன்னுடைய 2 வயது முதல் 32 ஆண்டுகள் வாழ்ந்து கடுந்தவம் புரிந்து முக்தி என்ற முன்னறு மெய்ஞான சாதனை நிலையை அடைந்தார். இந்த இல்லத்தில் திருவருட்பாவின் பெரும்பாலான பாடல்களை அவர் எழுதினார். பின்னர் கருங்குழியில் 9 ஆண்டுகளும், வடலூரில் 3 ஆண்டுகளும், மேட்டுக்குப்பத்தில் 3 ஆண்டுகளும் தங்கியிருந்தார்.

சென்னை வீட்டிலிருந்த திண்ணையில் ராமலிங்கர் படுத்துறங்குது வழக்கம். அந்த இடத்துக்கு சிவபெருமான் பல நாள்கள் வந்ததாகவும், கீழே விழாமல் தாங்கிப் பிடித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் பசியோடு உறங்கிய ஒரு நாள் இரவில், வடிவுடையம்மனே அங்கு வந்து அவரை எழுப்பி உணவளித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இல்லம் தற்போது தனியாரிடம் இருப்பதால் திண்ணை அகற்றப்பட்டு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதை நான் எழுதி, வானதி பதிப்பகம் வெளியிட்ட "அருட்பெருஞ்சோதி ஞானச் சித்தர்' என்ற நூலில் முதல் முதலாகக் குறிப்பிட்டேன்.

கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது என் நண்பர் இராம. அனகானந்தன் மூலம் இது பற்றிய மனு ஒன்றை முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. அதன் மீது தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பதில் அளித்துள்ளார்.

அதில் ராமலிங்க வள்ளலார் இல்லத்தை நாட்டுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் கமலக்கண்ணன்.

வாகன வீதி ஒழுங்குச் சட்டம் - ஒன்ராறியோ

E-mail Print PDF
driving

வாகன வீதி ஒழுங்குச் சட்டமீறலும் தண்டனைகளும்
Criminal Offences In Driving:

வீதிகளில் வாகன செலுத்தும் போது நாம் செய்யும் தவறுகள் பொலிசார் கையில் அகப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கும்போது பொதுவாக வீதி ஒழுங்குச் சட்டத்தின் பிரகாரம் தண்டனைகள் கிடைக்கின்றன.

Read more...

கனடா பண் கலை பண்பாட்டுக் கழகம் – வாணி விழா – 2010

E-mail Print PDF

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம் - வாணிவிழா – 2010


மேற்படி கழகத்தின் வாணி விழா -2010;  எதிர்வரும் 16.10.2010 சனிக்கிழமை, ஸ்காபறோ நகரில்; 635 - மிடில்வீல்ட் வீதியில் அமைந்துள்ள
ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய மண்டபதில் மாலை 4.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெறும். இவ் நிகழ்வின்போது இடம்பெறும் நிகழ்ச்சிகளின் விபரம் கீழே தரப்பெற்றுள்ளன
நிகழ்ச்சி நிரல்:


►  பஜனையும் ஆராதனையும்

►  தமிழ்தாய் வாழ்த்து

►  கனடா தேசிய கீதம் (ஆங்கிலம்)

►  கனடா தேசிய கீதம் (தமிழ்)

►  தலைமை உரை

►  பரத நாட்டியம் “கௌத்துவம்”

►  பேச்சு (அதி கீழ்ப்பிரிவு): "எனது மொழி"

►  பேச்சு (கீழ்ப்பொரிவு): “சைவசமயம்”

►  பாடல்: “ கல்வித் தெய்வம்” (காயத்திரி மந்திரம்)

►  நடனம்: பாடல் “மீனாட்சிதாயே”

►  பேச்சு (மத்தியபிரிவு): “நன்றி மறவாமை”

►  தனி நடிப்பு: “ “வீரவாகுதேவர்”

►  சங்கீதம்

►  மிருதங்கம்

►  பேச்சு மேற்பிரிவு: “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”

►  பாடல்: “நாதர்முடி மேலிருக்கும்”. “அம்மாவென்று…”

►  நடனம்: பாடல் – “ஒற்றைப் பனைமரமே”

►  பேச்சு (அதிமேற்பிரிவு): “பெரியோரைப் பேணல்”

►  அபிநயம்: பக்திப் பாடல்

►  பரத நாட்டியம்: பாடல் “கற்பக வல்லியே”

►  வயலின் இசைக் கச்சேரி:

►  நடனம்: பாடல் “கண்ணன் வந்தாலே”

►  பாடல்: “ஓம் சக்தி ஓம்”, “ஜெயஜெயதேவி”

►  பரத நாட்டியம்:

►  இசையும் மிருதங்கமும்:

►  கீர்த்தனை: பாடல் “ஆடிக்கொண்டானந்த”

►  அபிநயம்: பாடல் “பழம் நீயப்பா”

►  சங்கீதம்: “சரிக பதநிஸ”

►  செய்திகள்:

►  நன்றியுரை

►  பரிசில் வழங்கல்

நிகழ்ச்சிகள் அதிகமாக இருப்பதனால் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பிற்பதற்கு தீர்மானிக்கப் பெற்றுள்ளது என்பதனை அறியத் தருவதுடன்;
நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக விழா மண்டபத்தில் சமூகம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பெறுகின்றனர்.

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா
11.10.2010

பண் கலை பண்பாட்டுக் கழக - பேச்சுப் போட்டி 2010 - முடிவுகள், படங்கள் இணைக்கப் பெற்றுள்ளன

E-mail Print PDF

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம் (வாணிவிழாவை முன்னிட்டு) நடாத்திய பேச்சுப் போட்டிகள் கடந்த 26.09.2010 அன்று ஸ்காபறோ நகரில் அமைந்துள்ள செல்வச் சன்நிதி முருகன் ஆலய மணடபத்தில் நடைபெற்றது.

இப் பேச்சுப் போட்டியின் போது "கனடா - கலைத் தொழில்நுட்பக் கால்லூரி" ஆசிரியைகளான திருமதி. தேன்மொழியாள் அவர்களும், திருமதி. சுகந்தினி அவர்களும் மத்தியஸ்தர்களாக கடமையாற்றிச் சிறப்பித்தனர்.

பேச்சுப் போட்டியின் போது எடுக்கப் பெற்ற நிழல் படங்கள் கீழே பதியப் பெற்றுள்ளன.

பேச்சுப் போட்டிகளில் பரிசு பெற்றொர் விபரம்

பாலர் பிரிவு

முதலாம் இடம்: வினோதறூபன் கோபிஷன்

இரண்டாம் இடம்: முருகதாஸ் அபிநயா

மூன்றாம் இடம் - கிருபைநாதன் கஜானன்

அதி கீழ்ப்பிரிவு - தரம்  1 & 2

முதலாம் இடம்: ஞானேஸ்வரன் சங்கீத்

இரண்டாம் இடம்: நந்திவரன் தனுஜன்

மூன்றாம் இடம்: நந்திவரன் வேணுஜன்

கீழ்ப் பிரிவு - தரம் 3 & 4

முதலாம் இடம்: நடேசன் அபிதாரணி

இரண்டாம் இடம்: நடேசன் ஆரணிஷா

மூன்றாம் இடம்: கிருஷ்ணராசா கஸ்தூரி

மேற்பிரிவு - தரம்5 & 6

முதலாம் இடம்: நந்திவரன் அபிஷன்

இரண்டாம் இடம்: சிவனேஸ்வரன் சிவவிதுனா

மூன்றாம் இடம்: வைகுந்தவாசன் லாவண்யா

அதி மேற் பிரிவு - தரம் 7 & 8

முதலாம் இடம்: சன்முகம் சாயினி

இரண்டாம் இடம்: மனுவேந்தன் சயம்பு

 

Page 37 of 37

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்