Monday, Oct 23rd

Last update08:11:34 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம்
 

ஊரோடு உறவாடி உறவினைப் பேணுவோம் - பண் மக்கள் ஒன்றியம் - சுவிஸ் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

கடந்த 21.06.2014 சனிக்கிழமை சுவிஸ் வாழ் எம் ஊர் உறவுகள் (பண் மக்கள் ஒன்றியம்) ஒன்றுகூடி மகிழ்ந்த ஊரோடு உறவாடல் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்காக எம்மூர் மக்களால் நடாத்தப்பெறும் ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.

ஊரோடு உறவாடும் நிகழ்வினைப் பார்வையிட இங்கே அழுத்துக

தகவல்: ஆறுமுகம் அவர்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


சுவீடன் வாழ் ஊர் உறவுகளின் கோடைகால ஒன்றுகூடல் - படங்கள் இணைப்பு14.06.2014

E-mail Print PDF

தகவல்: றஞ்சன் ராஜா அவர்கள்

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்வதோடு, எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”


நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகள் கடத்தப்பட்டதா?

E-mail Print PDF

கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை செய்ய இந்திய உச்சநீதிமன்றம் நியமித்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமனியம் தலைமையிலான குழு தனது விசாரணையை முடித்து அந்த 577 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் இருப்பது கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பொக்கிஷங்களை மதிப்பிடவும், அது தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் தலைமையிலான ஒரு குழுவை நியமித்தது.

அந்த குழு அங்கு பயணித்து தங்கி விசாரணை செய்து பின் அது தொடர்பில் சமர்பித்த அறிக்கையில், கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அறக்கட்டளை மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் கடந்த 25 ஆண்டு காலத்திற்கான கணக்குவழக்குக்கள் தொடர்பிலான தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கோவில் நிர்வாகம் தொடர்பிலான வங்கி கணக்குகளையும் மற்ற எல்லா பதிவுகளையும் கோவிலின் தற்போதைய அறங்காவலர், மூலம் திருநாள் ராமவர்மா நீதிமன்றத்தில் சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்கால தங்க நகைகளுக்கு பதில் முலாம் பூசிய போலியா?
ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் ரகசிய ‘பி’ அறையை திறக்க மன்னர் குடும்பத்தினர் அனுமதி வழங்கவில்லை என்றாலும் அந்த ரகசிய ‘பி’ அறை இதற்கு முன்னர் பல முறை திறக்கப்பட்டதற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறையில் இருக்கும் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை தங்களுக்கு சொந்தமான சொத்துக்களாக கூறி மன்னர் குடும்பத்தினர் அவற்றை விற்பதாக சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், கோயிலுக்குள் தங்க முலாம் பூசும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளை கடத்தி அதற்கு பதிலாக போலி நகைகளை தங்க முலாம் பூசி அவற்றை இந்த ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் ஒரு நகரமாக இருந்தாலும் அந்த சமூகத்தில் இன்னும் மன்னர் ஆட்சி நடப்பது போலவே தோன்றுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழு நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் நிர்வாக முறைகேடுகள் நடந்துவருவதாக வேதனை வெளியிட்டுள்ள அந்த அறிக்கை, கோவிலின் தினசரி செயற்பாடுகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தற்போதைய கோவில் அறங்காவலரும் அவரது குடும்பத்தினரும் தலையிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளது.

பிந்திய செய்திள்

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து கிலோ  கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து  கடத்தப்பட்டதாகவும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகைக்கடை  உரிமையாளர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் உச்ச  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் திடுக்கிடும்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ÔஏÕ முதல்  Ôஎப்Õ வரையிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி  மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த  பொக்கிஷங்களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை  நியமித்தது.

இந்நிலையில், கோயில் சொத்து குறித்து முழு விவரங்களை  தெரிவிக்க, கோபால கிருஷ்ணன் என்பவரை உச்ச நீதிமன்றம்  நியமித்தது. அவர் கடந்த 2 மாதங்களாக கோயிலில் ஆய்வு  நடத்தி, சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் 550  பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதில்,  மன்னர் குடும்பத்தினரும் கோயில் ஊழியர்களும் சேர்ந்து  கோயில் பொக்கிஷங்களை கடத்தி இருக்கலாம் என பரபரப்பு  குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும், கோயிலில் இருந்து  கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தி  சென்றுள்ளதாகவும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகைக்கடை  உரிமையாளர்களுக்கு இது கொடுக்கப்பட்டதாகவும் அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்: பத்மநாபசுவாமி கோயில்  நகைகளை பாலிஷ் செய்வதற்காக தஞ்சாவூரை சேர்ந்த சில  நகைக்கடைகளுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். பல கட்டங்களாக  இவர்கள் கோயில் நகைகளை பாலிஷ் செய்யும் பணியில்  ஈடுபட்டனர். அப்போது கோயிலில் இருந்து கிலோ கணக்கில்  நகைகளை மணலில் கலந்து இவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.  பின்னர், இவர்கள் தவறை உணர்ந்தும் பயந்தும் சிறிது  நகைகளை உண்டியலில் போட்டுள்ளனர். நகை பாலிஷ் போடும்  பணியில் ஈடுபட்டிருந்த ராஜு என்பவருக்கு மட்டும் 3 கிலோ  எடையுள்ள தங்க செயின் உள்பட 20 கிலோ தங்கம்  கிடைத்துள்ளது.

கோயிலில் இருந்து எத்தனை கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது  என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பொக்கிஷம்  கடத்தலில் பல முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது.  இது தவிர கோயில் உண்டியலில் ஏராளமான அளவில்  வெளிநாட்டு பணம் மற்றும் தங்க நகைகள் கிடைத்துள்ளன.  இவற்றையும் பலர் சுருட்டியுள்ள னர். ரகசிய அறையில் இருந்து  திருவாங்கூர் அரண்மனைக்கு ஒரு சுரங்கப்பாதை  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை வழியாகவும்  நகைகளை கடத்திச் சென்றிருக்கலாம். பொக்கிஷங்களை  மதிப்பிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ஏராளமான  அளவில் நகைகள் கடத்தப்பட்டுள்ளன.

திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மா, கோயில்  ஊழியர்கள் பலருக்கு நகைகளை கொடுத்துள்ளார். இது  தொடர்பாக ஒரு கோயில் ஊழியர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  இவருக்கும் கிலோ கணக்கில் தங்கம் கிடைத்துள்ளது. இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேரள அரசுதான் பொறுப்பு
கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன்,  திருவனந்தபுரத்தில் நேற்று அளித்த பேட்டி:கோயிலில் இருந்து  நகைகள் கடத்தப்படுவது குறித்து எனக்கு இரண்டரை  வருடங்களுக்கு முன்பே ஏராளமான புகார்கள் வந்தன. இது  குறித்து அப்போதே கேரள அரசிடம் தெரிவித்தேன். ஆனால்,  மன்னர் குடும்பத்தினருக்கு பயந்து கேரள அரசு விசாரணை  நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தினமும் கோயிலுக்கு  வந்து விட்டு செல்லும்போது பிரசாதம் கொண்டு செல்லும்  பாயசம் வாளியில் நகைகள் கடத்திச் செல்வதாக நான்  அப்போதே கூறினேன். அப்போது என்னை கேலி செய்தனர்.  இப்போது அது உண்மை என தெரிந்துவிட்டது. இந்த கடத்தலுக்கு  மன்னர் குடும்பத்தினரும், கேரள அரசும்தான் பொறுப்பேற்க  வேண்டும். இவ்வாறு அச்சுதானந்தன் கூறினார்.

இரகசியறைகளில் எடுக்கப்பெற்ற பொக்கிசங்கள் - பார்வையிட இங்கே அழுத்துக

 


இளையோருக்கான - "தமிழ்" சொல்வது எழுதல் போட்டி முடிவுகள்

E-mail Print PDF

கடந்த 16.03.2014 அன்று நடைபெற்ற இளையோருக்கான - "தமிழ்" சொல்வது எழுதல் போட்டி  முடிவுகள் வெளியாகியுள்ளன

Kindergarten
1.)    Prithikga Vinotharuban
2.)    Grishniga Sarvanantham
3.)    Kishoen Thayalaruban

Grade One
1.)    Pahisan Sivanesan
2.)    Chakishan Charvananthan
3.)    Yalani Balasingam

Grade Three
1.)    Thivyan Vimalaruban
2.)    Abi Raventhiram
3.)    Kajanan Kirubananthan
4.)    Anoj Nadesan

Grade Four
1.)    Kobisan Vinotharuban
2.)    Chanujan Charvananthan
3.)    Kajainy Shanmugam
4.)    Abiramy Balasingam
5.)    Swetha Pulenthiran

Grade Five
1.)    Sankeeth Gnaneswaran
2.)    Juvaram Ketheeswaran

Grade Six
1.)    Shajeena Balasingam
2.)    Sharanke Sivaneswaran

Grade Seven
1.)    Salopan Vimalaruban
2.)    Aranisa Nadesan

Grade Eight
1.)    Abitha Nadesan
2.)    Sabesan Sivakumar
3.)    Rakavi Kirubainathan

தகவல்: மனுவேந்தன் அவர்கள்

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம்

Page 10 of 36

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்