Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here: சைவமும் தமிழும்

பிள்ளையார் பெருங்கதை - விரதம் - தோத்திரம், விநாயகர் அகவல் இணைப்பு

E-mail Print PDF

ஓம்
கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்

சாரம்:
யானையினுடய முகம் படைத்தவரும், பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும், பழுத்த ஜம்பூ பழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும், உமாவின் (பார்வதீ தேவியின்) குமாரரும், நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும், விக்னங்களுக்கே (தடங்கல்களுக்கு) ஈஸ்வரரும் (அதிபதி) ஆகிய கணபதி பகவானின் பாதகமலங்களில் தண்டனிடுகிறேன்.

Read more...

நவராத்திரி விரதமும் - அதன் மகிமையும்

E-mail Print PDF

ஓம் சக்தி

தனம்தரும், கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும் "அபிராம வல்லியை" வணங்கும் நவராத்திரி விரதம்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

நவராத்திரி விரதம் இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் 16.10.2012 (புரட்டாதி மாதம் 30ம்) திகதி செவ்வாய்க் கிழமை (இலங்கை) தெற்காசிய நாடுகளிலும்; 15.10.2012 திங்கட்கிழமை (கனடா) வட-அமெரிக்க நாடுகளிலும் ஆரம்பமாகின்றது. புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமியீறாகவரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி விரத காலமாகும். 10 வது தினம் விஜயதசமி தினமாகும்.

அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும்,

அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும்,

கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

Read more...

தேரின் அமைப்பும் அதன் சிறப்பும்

E-mail Print PDF

ஆக்கம்: பாலசுப்பிரமணியம் சதீசன் - ஜேர்மனி

வடமொழியில் இரதம் என்று சொல்லப்படுவதே தமிழில் தேர் என்று வழங்குகிறது. இது சிறப்பாக அரசர்களின் ஊர்தியைக் குறித்து நிற்கிறது.

தேர் பற்றி திருக்குறளிலும் பல்வேறு செய்திகள் உண்டு. உதாரணமாக “உருள்பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார்” (குறள் 667) என்று வள்ளுவர் உவமை கூறக்காணலாம். எனினும் இரதம் என்ற சொல்லாட்சி; பொலிவும், விரைந்த செயலும் உள்ள அனைத்தையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. ஆனால் தமிழ் இலக்கிய வழக்கில்  கானல் நீரை, ‘பேய்த்தேர்’ என்றும் ரோகிணி நட்சத்திரத்தை ‘தேர்’ என்ற வினைச் சொல்லாலும் சூடாமணி நிகண்டு  குறிப்பிடக் காணலாம்.

Read more...

வள்ளுவரும் குறளும் - பகுதி - 1

E-mail Print PDF

திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள்:

வள்ளுவம் வகுத்ததொரு வாழ்க்கை நெறி அதனை
உள்ளுவம் என்பதுவே உயர்ந்த வழி!

அறம் பொருள் இன்பமெனும் அரிய நற்தத்துவத்தை,
திறம்பட எடுத்துரைத்தான்; பிறர் தெரிந்து கொள்ளும் வழி அறிந்தே!
இரண்டடி தன்னில் பல ஏற்றமிகு கருத்துக்களை
இனிய நற்றமிழில் இங்கு எடுத்துரைத்தான் வாழி!!

தெள்ளுதமிழ்ப் பாடல்களில் திருவள்ளுவன் உரைத்தான்!
தினமும் ஓர் திருக்குறளைத் தெரிந்து கொள்வாய் நெஞ்சே!!

பகுதி - 1

Read more...

தமிழர்களும் சமயங்களும்

E-mail Print PDF
http://amman.fatcow.com/panippulam/images/hampi1.jpg

ஆக்கம்: பாலசுப்பிரமணியம் சதீசன் - ஜேர்மனி

தனி மனிதனைக் கடந்து அண்டத்தை உணர்த்தி நிற்கும் அல்லது ஒன்றை உணரும் வழிமுறையின் கட்டமைப்பே “சமயம்“ ஆகும். '"சமயம்" என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும், ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன் நடத்தையை (நற்செய்கைகளைச் செய்தல், கெட்ட செய்கைகளை விலக்குதல்) அமைத்துக்கொள்ள உதவியாய் அமைந்த ஒரு கோட்பாடு எனலாம்.

Read more...

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் - "சிவ தியான தோத்திரம்" இணைப்பு

E-mail Print PDF

Image may contain: one or more people and outdoor

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:

கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் என்பதாகும்.

"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று  அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும். இவ் வருடம் 13.02.2018 செவ்வாய்க்கிழமை அன்று  அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

சிவராத்திரி விரதம் பொதுவாக எல்லா சிவன் ஆலயங்களிலும் குறிப்பாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரர், ஆலயங்களிலும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பெரு விழாவாக நடைபெற்று வருகின்றன. இத் தினத்தில் பணிப்புலம் சாத்தாவோலை சம்புநாதீஸ்வர், கீரிமலை நகுலேஸ்வரர் இத் தினத்தில் தேரினில் ஆரோகணித்து வேண்டுவார் வேண்டுவதை ஈர்ந்தருளுகின்றனர்.

Read more...

Page 25 of 28

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்