Tuesday, Dec 11th

Last update09:02:59 PM GMT

You are here: சைவமும் தமிழும்

சித்தாந்தமும் மெய்ஞானமும்

E-mail Print PDF
http://amman.fatcow.com/panippulam/images/Nadarajar.jpg

சித்தாந்தமும் மெய்ஞானமும்:
ஆக்கம்: ஜே. நிவர்சன் - காலையடி

Read more...

சங்கடஹர சதூர்த்தி விரதம்

E-mail Print PDF

pillaiyar

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

Read more...

கந்தர் அலங்காரம்

E-mail Print PDF

(அருணகிரி நாதர் அருளியது)

காப்பு
அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்
தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.

Read more...

ஔவையின் தமிழ்

E-mail Print PDF

"தமிழுக்கு அமுதென்று பேர்"

உலகத்தில் இஔவைறைவனின் படைப்புகளில் மிகவும் உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பே ஆகும். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்கிறாள் ஔவைப் பாட்டி. மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவும், அதையொட்டிய அவனது செயல்பாடுகளுமே அவனைப் பிற உயிர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்த்துகின்றன.

Read more...

இறைவனை இனம் காட்டும் இராஜயோகம்

E-mail Print PDF
http://amman.fatcow.com/panippulam/images/Baba-1.jpg
" ஓம் சாந்தி"
ஆக்கம்: திரு. தம்பிப்பிள்ளை கந்தையா (ஓய்வு பெற்ற ஆசிரியர்) கனடா

நாம் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வேண்டிய மிக முக்கியமான விடயம் கடவுள் ஒருவரே என்பதாகும். அவர் பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்டவர்; அவர் ஒருவரே உவமையற்றவர். அவர் ஒருவரைத் தவிர வேறு எவரையும் கடவுள் எனக் கூற முடியாது. மனித குலத்தைச் சார்ந்தவர்கள் மனிதர்கள்தான்.

Read more...

வரலக்ஷ்மி விரதம் - பேறு 16 ம் பெற அஷ்ட இலக்ஷ்மிகளின் அருள் வேண்டி நோன்பு - 12.08.2016

E-mail Print PDF

வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ் விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும்.

ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  இவ் விரதம் இவ் வருடம் 12.08.2016 வெள்ளிக்கிழமை அமைவதாக சோதிடம் கணித்துள்ளது.

சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது. மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) இந் நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ் விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் இலக்குமிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள். இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

இவ் வரலட்சுமி விரதம், பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உள்ளிட்ட எல்லா அம்பிகை ஆலயங்களிலும், இலக்குமி தேவியை பரிவார தெய்வங்களாக கொண்ட மற்றைய ஆலயங்களிலும் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அனேகமாக எல்லோரும் ஆலயங்களில் இவ் விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். அங்கே குத்துவிளக்கேற்றி இலக்குமியை ஆவகணம் செய்து பூஜித்து வழிபட்ட பின்னர் அதனை அணையாது வீட்டிற்கு எடுத்துச் சென்று சுவாமி அறையில் வைத்து வழிபடடுகின்றனர். (இலக்குமி தேவியை ஆலயத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதாக அமைகின்றது.)

உள்ளத் தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால்; அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால்,  இல்லத்தில் செல்வம் கொழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுழுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் "பாக்கிய இலட்சுமியின்" அருளினால் மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் (குடும்பப் பெண்கள்) எல்லோரும் விரும்பிப் அனுஷ்டிக்கின்றனர். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் செல்லவச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். இலட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவளும் என்றும், பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருந்து அவளைப் பூஜித்தால் எல்லா எல்லாப் பலன்களும் கிடைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.

Read more...

Page 26 of 28

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்