Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சைவமும் தமிழும்

புரட்டாதி சனிக்கிழமை விரதம் - சனீஸ்வரன் விரதமும் அதன் சிறப்பும் - விஞ்ஞான விளக்கங்களுடன்

E-mail Print PDF

Image may contain: 1 person

"புரட்டாதிச் சனி விரதம்" என அழைக்கப்படுவது புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் 23 ம் திகதி (23.09.2017) முதலாவது புரட்டாதிச் சனி விரதமும்; அன்றிலிருந்து அடுத்து வருகிற செப்டெம்பர் 30, ஒக்ரொபர் 07,14 ஆகிய சனிக்கிழமைகளுடன்) நான்கு நாட்கள் புரட்டாதிச் சனி விரத நாட்களாக அமைகின்றது.

Read more...

திருமுறைகளின் தாற்பரியம்

E-mail Print PDF


சிவமயம்

ஆக்கம்: திரு. ச.  அளகரத்தினம் அவர்கள்
(ஓய்வு பெற்ற சுங்க இலாகா பிரதிப் பணிப்பாளர்)

சந்தேகம் 1 : திருமுறை என்பதன் கருத்து யாது?

தெளிவு: திருமுறை என்பது தெவீக முறைப்பாடு என்னும் கருத்துடையது. இது திருவருளாகிய சக்தி மேலிட; அடியார்கள் வாக்கில் மலர்ந்த சிவபரம்பொருள் பற்றிய துதிகளாம். இவற்றை தமிழ் வேதம் என்றும் சமய நூலறிஞர்கள் கொள்வர். சிவபெருமானின் அளப்பருங் கருணை ஆன்மாக்களின் ஆணவ இருளை அகற்றுமாறு உதவும் வகை இத் திருமுறைகளால் உணரற்பாலதாம். திருமுறை இறைவனின் மந்திர ரூபமாகும். இவற்றைப் பரிசுத்தமான இதயத்தில் வைத்துப் பூசிக்க வேண்டும். இறைவனின் தரிசனங்களை அற்புத லீலைகளை வழிமுறையாக ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற சீரடியார்கள் உலகம் உய்யும்படியாகத் தமிழில் பாடியவையே பன்னிரு திருமுறைகளாம்.

(இறைவனின் இருப்புக்குப் பிரமாணமாய் இங்கு திருமுறைப் பாடல்கள் அமைவது தெளிவு)

Read more...

தியானம்

E-mail Print PDF

தியானம் என்றால் என்ன?
மன இயக்கத்தை ஒழுங்குபடுத்துதல்; தன்னையறிதல், புலன்களை நெறிப்படுத்தி, தன் கட்டுப்பாட்டில் வைத்தல்; இறைவனை, இயற்கையை அறிய உதவி செய்யும்; நமது அறிவைப் பிரபஞ்ச அறிவுடன் இணைக்கும்.

இதுபோல் பல கூறலாம். பொதுவாக ஒன்றின் மீது முழுமையாக ஈடுபாடு கொள்வது. மன அலைச்சுழல் வேகத்தை தேவைப்படும்போது தேவையான அளவுக்கு குறைத்துக் கொள்வது. அவசரமான உலகில் நம் மனதுக்குள் ஏராளமான கருத்து மோதல்கள் உருவாகும். தியானம் இதை சரி செய்து மனம் அமைதி நிலைக்குச் செல்ல உதவுகிறது. தியானம் செய்வதால் நம் மனநிலை எப்படியிருக்கும் என்பதை அழகான ஓர் உதாரணம் மூலம் அறியலாம். தெளிந்த நீரில் அடியில் உள்ளவைகளைப் பார்ப்பதற்கு ஒப்பானது. தியானம், மனதின் அலைச்சுழல் வேகத்தைக் குறைக்கிறது. எனவே நம் குறிக்கோளை அடையாளம் காணலாம்.

Read more...

சூரன்போர் - சூரசங்காரம் - கதைச் சுருக்கம்

E-mail Print PDF

யுத்தகாண்டம் கதை - சுருக்கம்:சூரன்போர்
சூர-பத்மன் என்ற அரக்கன்  தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று; சர்வ வல்லமைகளையும் பெற்றவனாக
தானே திகழ வேண்டுமென சிவபெருமானை வேண்டி கடுந்தவம் மேற்கொண்டு; சிவனின் அருளினால் சகல வல்லமைகளையும் பெற்றதுடன், 108 யுகம் உயிர்வாழவும், 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு எந்த சக்தியாலும் தனக்கு மரணம் ஏற்படாது" என்ற வரத்தையும் பெற்றான். அதனால் ஆணவம் மேலிட இறுமாப்படைந்த சூரபத்மன் தேவர்களை எல்லாம் தேடி எதுவித அச்சமும் இன்றி சித்திரவதை செய்யலானான்.

அசுரர்களின் துன்பத்திற்கு உள்ளான தேவர்கள்; சிவனிடம் முறையிட்டனர். சூரனை அழிக்க சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை வெளிப்படுத்தினார். அந்த ஆறு சுடர்களும் வாயு தேவனால் சரவணப்பொய்கையில் மலர்ந்திருந்த 6 தாமரை மலர்களில் மீது சேர்க்கப் பெறறன. அந்த ஆறு சுடர்களும் இறை அருளால் ஆறு குழந்தைகளாக உருப்பெற்றனர்.

அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய.

Read more...

சக்தி வழிபாடு

E-mail Print PDF
சக்தியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் ”சாக்தமாகும்”. இந்து சமயத்தில் இறைவனைத் தந்தையாக, தலைவனாக, தோழனாக,  தனயனாக என்று பல வழிகளில் அடியார்கள் அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும், அந்நியோன்மானதுமான அன்பு முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி வழிபாடாகும்.

Read more...

இறை வழிபாடும் ஆலய தரிசனமும்

E-mail Print PDF

இறை வழிபாடு விளக்கம்:

இறைவன் (கடவுள்) இருக்கின்றாரா? அவரை காட்ட முடியுமா?
மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இப் பூவுலகை ஆட்டிப் படைக்கின்றது என விஞ்ஞான உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த சக்தியை ஒவ்வொரு சமயத்தவர்களும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கின்றனர். சைவசமயத்தவர் இறைவன் என அழைப்பது அந்த சக்தியையே .

எனவே, இறைவன் என்றொரு சக்தி இருக்கின்றது. அதனை காட்டமுடியாது. ஆனால் உணரமுடியும். ஞானிகளும், முனிவர்களும் இறைவனை (கடவுளை) கண்டுள்ளனர். அதற்கு ஞானம் (ஞானக் கண்கள்) பெற்றிருக்க வேண்டும். நம்பிக்கையோடு தியானம் செய்வதால் ஞானம் உண்டாகி ஞானக் கண் திறக்கின்றது.

சாதாரண மனிதர்கள் இறைவனை காண முடியாது இருப்பதற்கு காரணம் என்ன?
எமது உடம்பை ஆட்டிப் படைக்கும் உயிரைப் போல, இவ்வுலகை ஆட்டிப் படைக்கும் இறைவனும் நித்தியமானது. எமது உடம்பும், நாம் வாழும் உலகமும் எந்நேரமும் அழியக்கூடிய மாயைகள். அவை அநித்தியமானவை. இந்த மாய உடம்பில் உள்ள ஊனக் கண்களால் நித்தியமான எவையையும் நாம் காண முடியாது. நாம் எமது ஊனக் கண்களால் காண்பவை அனைத்தும் மாயைகள். அவை யாவும் என்றோ ஒருநாள் அழியக்கூடியன.

ஆனால், அகக் கண்களால் நித்தியமானவற்றை காண முடியும். அதற்கு ஞானம் வேண்டும். வேறு விதமாக கூறுவதாயின் நாம் நன்றாக துயிலும் போது எமது உடம்பில் உள்ள ஊனக் கண்களும் மூடித் தூங்குகின்றன. அப்போது நாம் காணும் கனவு எமது மனக் கண்களுக்கு மட்டும் தெரிகின்றது. மனக் கண்களால் கண்ட கனவை மற்றையோருக்கு காட்ட முடியாது அல்லவா? அது போல் ஞானக் கண்களால் காண்பவற்றை மற்றையோருக்கு காட்ட முடியாது.

இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?
இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும்.

Read more...

Page 27 of 28

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்