Tuesday, Mar 20th

Last update12:10:08 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சிறுவர் பூங்கா

தொழில்நுட்ப உலகின் எம் எதிர்காலத்தைக் காட்டும் நம்பமுடியாத காட்சிகள் (காணொளிகள் இணைப்பு)

E-mail Print PDF

தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் நாம் நினைக்காத அளவு அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துவருகின்றது.

இதில் மணிக்கொரு புதுமையை மனிதன் நிகழ்த்திக் காட்டுகின்றான்.

மேலும் அதற்கு ஒரு படி மேலே போய் எதிர்காலம் இவ்வாறு தான் இருக்கப்போகின்றது என்பதனைக் காட்டவும் செய்கின்றான்.

குறிப்பாக பெரிய நிறுவனங்கள் தங்களது எதிர்கால உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் இவ்வாறுதான் இருக்கப்போகின்றது என்பதனைக் காட்டவும் செய்கின்றன.

இவை நிறுவனங்களுக்கு விளம்பரமாகவும் அமைகின்றன.

இவ்வாறு காட்டுவதற்கு தயார்படுத்தப்படும் காணொளிகள் பொதுவாக (Concept Videos) என அழைக்கப்படுகின்றன.

இவ்வகைக் காணொளிகள் மிகவும் சுவாரஸ்யமானவை என்பதுடன் பார்ப்பவர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியவை.

இவ்வாறான காணொளிகள் பல உள்ளபோதிலும் குறிப்பிடத்தக்க சில சுவாரஸ்யமான காணொளிகளின் தொகுப்பு கீழே!

 

1.  மைக்கிறோ சொவ்ற் வெளியீடு

2.  பிளாக் பெரி தயாரிப்புகள்

3.  2019 ல் பாவனையில்

4.  எதிர்காலத்தில் பாவிக்கப்படும் பிறின்ரர்

வானம் பகலில் நீலமாக தோன்றுவதற்கான காரணம் - விஞ்ஞான விளக்கம்

E-mail Print PDF

இது அன்றாடம் நாம் காணும் ஒரு காட்சி. அது எமக்கு பழகிப்போனதால் அதைப்பற்றி சிந்திக்க தூண்டுவதில்லை. மந்தாரமோ, பனிமூட்டமோ இல்லாத பகல் பொழுதில் வானம் நீலமாக காட்சி தருகின்றது. அதனால் பூமிக்கு கூரை இருக்கிறதா? அதன் நிறம் நீல நிறமா? என எண்ணத் தோன்றுகிறது. இக் தோற்றத்திற்கான காரணம் என்ன? என்பதை அறிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். அதற்கு முதலில் ஒளி பற்றியும், வளிமண்டலம் பற்றியும் அறிந்து கொள்வோம்.

Read more...

பூமியின் அமைப்பு - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF


இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில:

1. பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.

2. பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.

3. பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்.

4. எவரெஸ்ட் மலையின் உயரம் 29028 அடி உயரம்.

5. பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.

6. கடலில் மிகவும் ஆழம் கூடிய இடம் “மரியானா டிரெஞ்ச்” அதன் ஆழம் சுமார் ஆறே முக்கால் மைல். 35,808 அடி

7. இப்போது நாம் காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின் பொருக்கு போன்ற பகுதி. இந்தப் பொறுக்கு சுமார் 25 மைல் வரை தான் உள்ளது.

8. அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.

9. அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும் இரும்பும் உருகி உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்.

10. இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.

11. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.

12. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம் செய்கிறோம்.

13. பூமி தன்னனைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து போகிறோம்.

14. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23 மணி நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)

15. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும். (அதாவது 365 நாட்களும் 6 மணி நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.)

16. சந்திரம் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

17. பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பிறழாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.

18. பூமியிலிருந்து சந்திரன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு அப்பால்இருக்கிறது.

19. பூமியின் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பாகம் நிலப்பரப்பு. (பூமியின் ழுழுப்பரப்பின் 70.8 வீதம் நீர் - கடல்கள். மீதமுள்ள பகுதியே நாம் வாழும் பகுதி.)

உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள்

E-mail Print PDF

மொழி என்பது நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம், கலாசார எழுச்சி உணர்ச்சிகள், கருத்துக்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் ஊடகம் அல்லது கருவி எனலாம்.

உலகில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், உலகின் மொத்த சனத்தொகை 50 இலட்சம் முதல் 1 கோடி வரை இருந்த போது, அவர்களிடையே 12 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டன என்பது மொழியியலாளர்களின் முடிவாகும்.

உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?
சரியான விடை: சீன மொழி (மந்தாரின்).
உலகில் சுமார் 88.5 கோடி மக்கள் சீன மந்தாரின் மொழியை முதல் மொழியாக பேசுகிறார்கள். இது சீனாவில் மட்டுமில்லாமல் புரூனேய், கம்போடியா, இந்தோனேசியா, மலேஷியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பேசப்படுகிறது.

சீன மொழிகள்:
முதலாவது இடத்திலிருக்கும் சீன மந்தாரின் மொழி பேசும் மக்களின் தொகை இரண்டாவது இடத்திலிருக்கும் ஸ்பானிஷை விட சுமார் இரண்டு மடங்கு அதிகம். இதைத் தவிர இதர சீன மொழிகளும் உலக அளவில் அதிக மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.

சீன மொழி     பேசும் மக்கள் தொகை

மந்தாரின் (Mandarin)     88.5 கோடி            
வூ (Wu)     7.72 கோடி     10        
யூ (Yue) (Cantonese)    6.62 கோடி            
மின் நான் (Min Nan)    4.9 கோடி           
ஜின்யூ (Jinyu)    4.5 கோடி       
க்ஸியாங் (Xiang)    3.6 கோடி       
ஹக்கா (Hakka)    3.4 கோடி         
கான் (Gan)     2.06 கோடி

இந்தச் சீன மொழிகள் பெரும்பாலும் ஒரே மொழியின் வட்டார வழக்கு வேறுபாடுகள் (dialects) தான். தனி மொழிகள் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஒரு வட்டார வழக்கு மட்டும் தெரிந்தவர்களால் மற்ற வட்டார வழக்குகளை புரிந்து கொள்ள இயலாத அளவு வேறுபட்டிருப்பதால் தனி மொழிகள் என்றே கணக்கிடப்படுகிறது.

உலகில் இரண்டாவதாக அதிகம் பேசும் மொழி - எது?
ஸ்பானிஷ். 33.2 கோடி மக்களுக்கு தாய் மொழி/முதல் மொழி. பேசப்படும் நாடுகள் 23 - அந்தோரா, அர்ஜெண்டினா, பெலிஸ், பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, க்யூபா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், ஈக்விடோரியல் கினியா, குவாதிமாலா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகாராகுவா, பனாமா, பராகுவே, பெரு, ஸ்பெயின், உருகுவே, யு.எஸ்.ஏ, வெனிசுயேலா.

ஆங்கிலம் மூன்றாவதாக வருகிறது. 32.2 கோடி மக்கள் முதல் மொழியாகப் பேசுகிறார்கள். பேசப்படும் நாடுகள் - 35க்கும் மேல்.

இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?
ஹிந்தி அல்ல! வங்கம் (Bangla). சுமார் 18.9 கோடி மக்கள் பேசும் வங்க மொழி, பங்களாதேஷ், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. உலக அளவில் நான்காவது.

இதற்குச் சற்றுக் குறைவாக ஹிந்தி சுமார் 18.2 கோடி மக்களால் பேசப்படுகிறது. பேசப்படும் நாடுகள் - இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா.

திராவிட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?
தெலுங்கு. இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் 6.64 கோடி மக்கள் முதல் மொழியாக பேசுகின்றனர்.

தமிழ்:
சுமார் 6.31 கோடி மக்களுக்கு முதல் மொழி/தாய் மொழி. இந்தியா,
இலங்கை. மலேஷியா, மொராஷியஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது.

மலையாளம் & கன்னடம்:
மலையாளம் சுமார் 3.4 கோடி மக்களாலும், கன்னடம் சுமார் 3.37 மக்களாலும் முதல் மொழியாகப் பேசப்படுகிறது.

முதல் 20 மொழிகள்
1.  மாண்ட்ரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்

2.  ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்

3.  ஆங்கிலம் – ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்

4.  அராபி - மத்திய கிளக்கு நாடுகள்

5.  வங்க மொழி – இந்தியா, வங்கதேசம் - 189+ மில்லியன்

6.  ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்

7.  போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்

8.  ரஷ்ய மொழி – ரஷ்யா - 170+ மில்லியன்

9.  ஜப்பானிய மொழி – ஜப்பான் - 128+ மில்லியன்

10.  ஜேர்மன் – ஜேர்மனி - 125+ மில்லியன்

11. பிறெஞ்சி - பிறான்ஸ் - 120+ மில்லியன்

12. வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்

13. ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்

14. கொரிய மொழி – தென்லொரிய், வட கொரியா - 75+ மில்லியன்

15. வியட்நாமிய மொழி – வியட்நாம் - 67+ மில்லியன்

16. தெலுங்கு மொழி இந்துயா - 66+ மில்லியன்

17. யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்

18. மராட்டி மொழி – இந்தியா - 64+ மில்லியன்

19. தமிழ் மொழி – இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா - 63+ மில்லியன்

20. துருக்கி மொழி – துருக்கி - 59+ மில்லியன்


செல்போன் வைத்திருப்போர் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்

E-mail Print PDF

இன்று பெரும் தொழிலதிபர்கள் முதல் கூலிவேலை செய்வோர்வரை அனைவர் கையிலும் செல்போன் புழங்குகிறது. எல்லோருமே அதில் டாக்டர் பட்டம் பெறுமளவுக்கு எந்நேரமும் குடைந்துகொண்டே இருக்கிறார்கள்.

தொலைத்தொடர்பு மட்டுமின்றி, மியூசிக் பிளேயர், காமிரா, டார்ச், காலண்டர் என்று ஒரு கையடக்கத் தோழனாக செல்போன் உதவுகிறது. செல்போன் இன்றி இனி எவராலும் இயங்க முடியாது. அதன் பல்வேறு அம்சங்கள், பயன்பாடுகள் பற்றி அனைவரும் அறிந்தும் இருக்கிறார்கள். ஆனால் அறிய வேண்டிய அத்தியாவசிய அம்சங்களை அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.

அவை பற்றி…
உயிர்காப்பான்
முதலாவதாக, அவசரநிலைகளில் செல்போன் ஓர் உயிர்காப்பானாகப் பயன்படும் என்பது பலருக்குத் தெரியாது.

அதாவது, செல்போன்களுக்கு என்று உலகளாவிய ஒரு அவசரநிலை எண் இருக்கிறது. அது, 112.
இக்கட்டான நிலையில், உங்களுக்குச் சேவையை வழங்கும் நிறுவனத்தின் `நெட் ஒர்க்’ கிடைக்காத இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களால் வெளியிடங்களுக்குத் தொடர்புகொள்ள முடியாது.

ஆனால் இந்த அவசரநிலை எண்களை அழுத்தும்போது, வேறு ஏதாவது செல்போன் சேவை நிறுவத்தின் `நெட் ஒர்க்’ இருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடிக்கும். அதன்மூலம் வெளியே `எமர்ஜென்சி’ தகவலை அனுப்பும். `கீ பேட்’ லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த எண்ணை அழுத்த முடியும் என்பது ஆச்சரியமான விஷயம்.

`ரிசர்வ் சார்ஜ்’
இன்று பெரும்பாலானவர்கள், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட `ஸ்மார்ட் போன்களை’ பயன்படுத்துகிறார்கள். கூடுதல் வசதிகளைப் பயன்படுத்துவதன் காரணமாகவே இத்தகைய செல்போன்களில் சீக்கிரமே `சார்ஜ்’ தீர்ந்துவிடுகிறது. செல்போன்களில் `ரிசர்வ் சார்ஜ்’ என்ற ஒன்று இருப்பது நிறையப் பேருக்குத் தெரியாது. அது, பேட்டரியின் உண்மையான மின் சேமிப்புத் திறனில் 50 சதவீதமாகும்.

இந்த `ரிசர்வ் சார்ஜை’ பயன்படுத்துவதற்கு நாம், *3370# என்ற `கீ’க்களை அழுத்த வேண்டும். இந்த வகையில் அழுத்தியவுடனே, `சார்ஜ்’ இன்றி முடங்கிய செல்போன் உயிர்ப்பெறும். 50 சதவீத பேட்டரி சார்ஜை காட்டும். அடுத்த முறை நீங்கள் செல்போனை `சார்ஜ்’ செய்யும்போது இந்த `ரிசர்வ்’ இருப்பு, சார்ஜ் ஆகிக்கொள்ளும்.

தொலைந்துபோனால்…
செல்போன் தொலைந்துபோனாலோ, திருட்டுப் போனாலோ அதை முறைப்படி `பிளாக்’ செய்யவோ, மீட்கவோ வழியிருக்கிறது. இது பற்றிச் சிலர் அறிந்திருப்பார்கள் என்றாலும், முழுமையாகப் பார்க்கலாம்-

ஒவ்வொரு செல்போனுக்கு ஒரு வரிசை எண் உள்ளது. ஐ.எம்.ஈ.ஐ. எண் என்ற அது, ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தன்மையானது ஆகும்.

உங்கள் செல்போனின் ஐ.எம்.ஈ.ஐ. எண்ணை அறிய, *#06# என்ற `கீ’க்களை அழுத்துங்கள். உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ.எம்.ஈ.ஐ. எண், ஒவ்வொரு செல்போனுக்கும் வேறுபடும். இந்த எண்ணைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் செல்போன் தொலைந்துபோனாலோ, திருட்டுப்போனாலோ உங்களுக்கு செல்போன் சேவையை அளிக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு இந்த எண்ணைக் கொடுங்கள்.

அவர்கள் உடனே குறிப்பிட்ட செல்போனை `புளொக்’ செய்வார்கள். செல்போனை யாராவது திருடி அதன் `சிம்கார்டை’ மாற்றி னாலும் அவர்களால் முற்றிலுமாக செல்போனை பயன்படுத்த முடியாமல் போகும்.

Page 7 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்