Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சிறுவர் பூங்கா

நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்வோம்!

E-mail Print PDF

கப்பல் கடலில் மிதந்து செல்வதைப் பார்த்திருக்கின்றோம். கடலுக்கு உள்ளே செல்லும் நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் உள்ளே சென்று பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் பயன் என்ன? அது எப்படிச் செயல்படுகிறது?

Read more...

மலர்கள் மணம் பரப்புவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!

E-mail Print PDF


எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது. சில செடிகளில் வெண்ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.

மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான்! சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.

பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்துக்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.

மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் என்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.

சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின்போது உற்பத்தி செய்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது.

எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும்.

மைக்ரோ வேவ் ஒவன் பாவிப்பது எப்படி? அறிந்து கொள்வோம்

E-mail Print PDF


20ம் நூற்றாண்டின் கண்டு பிடிப்புகளில் முக்கியமான இடத்தை  மைக்ரோ வேவ் அடுப்பு தனதாக்கிக் கொண்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது. அந்த அளவுக்கு அது எல்லோராலும் பாவிக்கப்பாடுவதால் பெரும்பாலான அடுப்பறைகளில் முக்கிய உபகரணமாக திகழ்கின்றது.

Read more...

மாத்தி யோசி - சிந்திக்கச் சில...

E-mail Print PDF

அண்மையில் எங்கள் ஊரில் நடந்த கொலை சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டிருந்த பொலிசாருக்கு ஒரு துப்புக் கிடைத்தது. கொலையாளியின் பெயர் கந்தசாமி என்றும், அவன் குறிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருப்பதாக மட்டும் பொலிசாருக்கு கிடைத்த செய்தியாகும்.

பொலிசார் அவ்விடத்திற்கு சென்றனர். அங்கே ஒரு காப்பென்ரர், ஒரு றைவர், ஒரு மெக்கானிக், ஒரு தீயணைக்கும் உத்தியோகத்தன் ஆக 4 பேர் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பொலிஸார் அங்கு சென்றதும் தீயனைக்கும் உத்தியோகத்தனை கைது செய்தனர். எதுவித கேள்விகளும் கேட்காது எப்படி கந்தசாமியை அவர்கள் கைது செய்தார்கள்?

மாத்தி யோசித்தால் விடையைக் கூறிவிடலாம். இல்லையேல் ஒருசில தினங்களில் இங்கே பதிவாகும்.

 

இதற்கான பதில் அங்கு இருந்த மற்றைய மூவரும் பெண்களாவர். அதனால் பொலிசாருக்கு கந்தசாமியை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது

Computer Terms in Tamil - கணினிக் கலைச்சொற்கள்-தமிழ்

E-mail Print PDF

ஒவ்வொரு கலை சார்ந்த சொற்களும் காலத்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றையே கலைச்சொற்கள் என்றழைக்கப்படுகின்றன. அவ்வாறே கணினியில் தமிழ் எழுத்துக்கள் தோன்றியக் காலம் முதல், தமிழ் கணினி கலைச்சொற்களின் உருவாக்கமும் தோற்றம் பெறத்தொடங்கி விட்டது. ஆனால் அவற்றின் ஆங்கிலப் பதங்களை அறிந்திருத்தல் புதிதாக கணினி பயில் விரும்புவோருக்கு காட்டாயமாகின்றது.

Read more...

கப்பல் கடலில் மிதப்பது எப்படி?

E-mail Print PDF

ஒரு கிராமமே மிதந்து செல்வது போன்று பல தொன் எடையுள்ள சாமான்களையும் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி? என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.

சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களும் அதிக எடை கொண்டவை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.

10 ஆயிரம் தொன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட்’ 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.

அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றையொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆக்கிமிடிஸ் கருதினார்.

காற்றில் அமிழ்ந்துள்ள பொருட்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும். காஸ் உள்ளிட்ட எல்லா திரவங்களுக்கும் ஆக்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனுக்குச் சமமான காற்றின் எடையை விட இலேசாக இருந்தால் மேலேசெல்லும்.

மேலே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைவாகின்றது. அதனால் மேலே சென்ற பலூனின் உள்ளே இருக்கும் வாயுவின் அடர்த்திக்கு சமனான காற்று வெளியே இருக்கும் வரை பலூன் மேலே செல்லும்.

நாம் வாயால் ஊதும் பலூன் மேலே செல்வதில்லை. காரணம். பலூலினுள் இருப்பது சாதாரண காற்று. அதனால் அதன் எடையும் அது ஏற்படுத்தும் இடத்தின் காற்றின் எட்டையும் சமமாகிறது. இதன் காராணமாகவே பறக்க விடப்படும் பலூன்களில் காற்றைவிட அடர்த்தி (எடை) குறைவான ஈலியம் வாயுவால் நிரப்பப்ப்டுகின்றது.

நீரில் மூழ்கிய ஒரு கப்பலை அல்லது, வாகனத்தை வெளியே கொண்டுவர அந்த கப்பலில் அல்லது வாகனத்தின் உள் பகுதியில் இறப்பரால் ஆன பெரிய பலூன்களை வைத்து அதற்குள் (ஈலியம்) வாயுவை நிரப்புகின்றார்கள். அப்போது நீரினால் நிரம்பிய கப்பலின் அல்லது வாகனத்தின் உள்பகுதி பலூன் விரியும் போது நீர்ரினால் நிரம்பிய பகுதி காற்றினால் நிரப்பப்ப்டுகின்றது.  நீரிலும் பார்க்க காற்று அல்லது ஈலியம் வாயு அடர்த்தி குறைவாக இருப்பதனால் மூழ்கிய கப்பலை அல்லது வாகனத்தை மிதக்கச் செய்கிறது.

கப்பல் கடலில் செல்லும் போது கடல் மட்ட நீர் இருக்க வேண்டிய இடத்தை கப்பலின் வெளிப்பக்கத்தில் கோடு இட்டு காட்டப் பட்டிருக்கும். இந்த நீர் மட்டத்திற்கு மேல் கடல் நீர் மட்டம் கூடினால் கப்பல் மூழ்கும் ஆபத்து உள்ளது. அதுபோல் இவ் நீர் மட்டத்திற்கு கீழ் கடல் நீர் இருந்தாலும் கப்பல் சரியக்கூடிய ஆபத்து உள்ளது.

உப்பு குறைவான கடலில் (அடர்த்தி குறைந்த) சென்று கொண்டிருக்கும் கப்பல் அடர்த்தி கூடிய உப்புக் கடலில் செல்லும் போது கூட மிதக்கின்றது. அதன் போது கப்பலின் கடல்நீர்மட்டத்தினை சரி செய்வதற்காக. அடித்தளத்தில் நீர் நிரப்பி நீர் மட்டத்தினை சரிசெய்கின்றார்கள்.

 

2481.11.03.2015

Page 8 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்