Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சிறுவர் பூங்கா

காண்டாமிருகம்

E-mail Print PDF

காண்டா மிருகங்கள் மிகவும் பலசாலிகள் இவற்றின் குட்டையான கால்களில் முன்று விரல்கள் உண்டு. அகன்ற தோல் இவற்றை இணைத்திருக்கும். தோளின் முன்புறமும் பின்கால்களின் முன்பும் தடித்த தோல் மூன்று மடிப்புகளாகக் கவசம் போல் அமைந்திருக்கும்.

இதனை துப்பாக்கிக் குண்டு கூடத் துளைக்க முடியாது என்பது தவறு. உயிரோடிருக்கும் போது இத்தோல் மிருதுவாகத்தான் உள்ளது. காண்டாமிருகம் இறந்துவிட்டால் தோல் உயர்ந்து குண்டு துளைக்க முடியாதபடி உறுதியாகிவிடும்.

மூக்கிலிருந்து வளர்ந்திருக்கும் கொம்பு தோலிலிருந்து வளர்கிறது. இது எதிரிகளைத் தாக்க அல்ல. கிழங்குகளைத் தோண்டவே. எதிரிகளைப் பற்களாலேயே கடிக்கும். யானைகளைக் கூடக் கொன்றுவிடக் கூடிய பலம் படைத்த இவை வெகு வேகமாக ஓடும்.

கேட்கும் சக்தி அதிகம், பார்க்கும் சக்தி குறைவு. பிராணிகளைக் கொன்ற போதிலும் புசிப்பது இல்லை. புல் பூண்டு, கிழங்குகளையே சாப்பிடும். தனித்து வாழ்வதையே விரும்பும் இது. சேற்றில் விழுந்து புரள்வதென்றால் கொண்டாட்டம்.

இரவில்தான் இரைதேடும். தடவைக்கு ஒரு குட்டி போடும். அதற்குக் கோபம் வந்தால் உடலெல்லாம் இரத்தம் போல் சிவப்பாக வியர்த்துக் கொட்டும். மூர்க்கத்தனமான இம்மிருகம் கண்ட இடத்தில் மலம் கழித்து அசுத்தப்படுத்துவது இல்லை. எப்போதும் குறிப்பிட்ட ஒரு இடத்திலேயே மலம் கழிக்கும். புல், அடர்ந்து காடுகளில்தான் இவை வசிக்கும்.

ஆப்பிழுத்த குரங்கு

E-mail Print PDF


ஒரு காட்டில் குரங்கு ஒன்று தனியாக வசித்து வந்தது. அது மிகவும் குறும்புகாரக் குரங்காக இருந்தது. பின் விளைவுகளை எண்ணாமல் மிகுந்த குறும்புத்தனம் செய்யும்.

அந்த குரங்கு வசித்த அந்த காட்டுப் பகுதிக்குள்  ஒரு விறகு வெட்டியும் வசித்துவந்தான். அவன் மரங்களை பெரிய துண்டுகளாக வேட்டிவந்து, அவற்றை தன் குடிசை அருகே வைத்து கோடரியால் பிளந்து அடுப்பில் வைக்கக் கூடியதாக சிறு துண்டுகளாக்கி, அவற்றை பக்கத்து கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்று அதைக்கொண்டு குடும்பம் நடத்தி வந்தான். அவன் மரத்துண்டுகளைப் பிளப்பதற்க்கு ஆப்புகளைப் பாவிப்பது வழக்கம். ஆப்பு என்பது V வடிவமான மரம் அல்லது இரும்பினால் ஆன ஒரு பக்கம் ஒடுக்கமாகவும் மற்றப் பக்கம் அகலமாகவும் உள்ள ஒரு ஆயுதம்.

ஒருநாள் வழமைபோல் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான். அவனுக்கு களைப்பு வந்ததால் அடிமரத்தின் பாதியளவு பிளந்திருந்த பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.

விறகு வெட்டியின் செயலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த குரங்கு அவன் சென்றவுடன் கீழே இறங்கி வந்தது.

விறகு வெட்டி விட்டுச் சென்ற மரத்துண்டின் மீதேறி மரத்தில் இறுக்கி இருந்த ஆப்பை நோக்கியவாறு அமர்ந்தது. அப்போது பிளவுபட்ட பகுதியில் அதன் வால் முழுவதும் செறிருந்தது.
குரங்கு ஆப்பை இழுக்கும் அவதானத்தில் இருந்ததால் தனது வால் மரத்துண்டின் பிளவில் போயிருப்பதை உணரவில்லை. பின் தனது குறும்பு வேலையைச் செய்ய ஆரம்பித்தது. மரப்பிளவு இறுகாமல் செருகி இருந்த ஆப்பை தன் முழுப் பலத்தையும் பாவித்து ஆட்டி ஆட்டி எடுக்க  முயற்சி செய்த்து.

திடீரென்று அந்த ஆப்புத்துண்டு குரங்கின் கையோடு வந்துவிட்டது. உடனே பிளவுபட்ட மரத்துண்டு சுருங்கிக் கொண்டது. பிளவுக்குள் தொங்கியிருந்த வால் நசுங்க குரங்கு அலறியது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மரவெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான். அதற்குள் குரங்கு வலி தாங்காமல் பரிதாபமாக மாண்டு போனது.

பாடம்: 'பின்' விளைவுகளை ஆராயாமல் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.

பேராசை பெரு நஷ்டம் - வீடியோ

E-mail Print PDF

பேராசை பெரு நஷ்டம் என்ற கதையைக் கூறும் வீடியோ

வீடியோ பார்வையிட இங்கே அழுத்தவும்

சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்

E-mail Print PDF


போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.


Page 10 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்