Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: வாழ்த்துக்கள்

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் - இலங்கை - 09.01.2015

E-mail Print PDF

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நீதியரசர் கே. ஸ்ரீபவன் முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்கொண்டார்.

முன்னதாக, யார் மனமும் புண்படாத வகையில் தனது வெற்றியை கொண்டாட வேண்டுமென்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று 09.01.2015 காலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் முழுமையாக வெளிவந்த நிலையில், தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரியா, மைத்ரிபால சிறிசேனவின் வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அதன் பின்னர் பேசிய மைத்திரிபால சிறிசேன,'எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் உள்ளிட்ட இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பொதுமக்களிடமும் கேட்கிறேன், இந்த வெற்றியின் உண்மையான அர்த்தம், சமாதானமான முறையில் செயல்படுவதுதான். ஒருவருக்கொருவர் மனரீதியில் வேதனை தருமாறு நடந்துகொள்ள வேண்டாம்.

இந்த வெற்றியை நாட்டில் உள்ள அனைவரும் அனுபவிக்கும் சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும். யாருடைய மனமும் புண்படுமாறு நடந்துகொள்ள வேண்டாம். இந்த வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டுமென நான் அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் பார்வையிட இங்கே அழுத்துக

 

 


அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய அமெரிக்க விஞ்ஞானி - Glenn Seaborg கெலென் ஸீபோர்க் - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை நாம் தவிர்க்க முடியாத ஒரு காலப் போக்காகும்! - கெலென் ஸீபோர்க்

இதுவரை மனித ஆற்றலால் படைக்க முடிந்த ஒரு பேரழிவு மூலச் சாதனத்தை [புளுடோனியம்] உண்டாக்க நான் உதவி செய்தேன் என்றாலும், அணுவிலே அதை விட இன்னும் பேரளவு அமைதி வழி ஆக்க சக்தியும் மறைந்துள்ள தென்று நான் உறுதி யூட்டுகிறேன். - கெலென் ஸீபோர்க்

Read more...

தைப் பொங்கல் வாழ்த்துகள் - 14/15.01.2019

E-mail Print PDF

Image may contain: 1 person

நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் நல்கும் இயற்கையை பேணிக் காக்கும்  ”சூரிய பகவானுக்கு” விருந்து படைத்து நன்றி கூறும் இத் ”தைப்பொங்கல்” திருநாளில்;

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் மக்கள் மத்தியில்; கல்வி, கலை,  கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்து; எம் மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், ஒன்றியங்கள், இணையத் தளங்கள் நிர்வாகிகள் அனைவருக்கும்;

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம்மூர் சிறார்களின் வளர்ச்சிக்காக தாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் எம்மூர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள், சமூக நலன் விரும்பிகள் அனைவருக்கும்;

நன்றிகளும், வாழ்த்துக்களும் கூறி அவர்கள் சேவையை உள்அன்போடு போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.” குறள்

எல்லோரும் எல்லாமும் பெற்று நீங்களும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்களுக்கு வேண்டியவர்களுக்கு உங்கள்

வாழ்த்துக்களை கீழே பதிட்டு பரிமாறிக் கொள்ளலாம்

 

 


உலகத் தொழிலாளர்களின் தியாகத்தில் உருவானதே தொழிலாளர் தினம் எனும் "மே தினம்"

E-mail Print PDF

பார் முழுதும் வாழும் பரந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு  மருந்து போட்ட நன்னாள்,..  காலவரையற்ற உழைப்பு,  மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து உழைக்கும் வர்க்கம் தங்களை விடுவித்துக்கொண்டு உயிர்த்தெழுந்த உன்னத நாளே மே 1 தொழிலாளர் தினம்….

மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாக, விடியல் நாளாக, விடுமுறை நாளாக, ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்டது. அந்த விடியல்; உலகம் முழுக்க வியாபிக்க 33 ஆண்டுகள் பிடித்தது. 1889ஆம் ஆண்டு உலகம் முழுதும் ஒட்டுமொத்த தொழிலார்களின் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.

Read more...

நூல் நிலையங்கள் ஊரின் அறிவாலயங்கள் - இறந்தோரின் ஞாபகார்த்தமாக அவற்றை வளமாக்குவோம்

E-mail Print PDF

தோட்டத்தில் உள்ள பயிர்கள் வளமாக வளர்ந்து பயந்தர வேண்டுமாயின் அதற்கு நீர் பாச்சும் துரவு நீர் (வற்றாது) நிறைந்திருக்க வேண்டும்.

அதேபோல் எம்மூர் சிறார்கள் அறிவில் செழிப்பாக வளர்ந்து பயன்பெற வேண்டுமானால் எம்மூர் நூல் நிலையங்களில் அறிவான நூல்கள் செறிந்திருக்க வேண்டும் என்பதனை நன்கு உணர்ந்த எம்மூர் உறவுகள்; தம்மை விட்டுப் பிரிந்த பெற்றார், உற்றார், உறவினர், நண்பர்களுக்காக செய்யப் பெறும் அந்தியேட்டி கிரியைகளுடன் நூல் நிலையங்களுக்கு நூல் வழங்கும் நிகழ்வையும் பிதிர் கடன்களில் ஒன்றாக இணைத்து அவர்களின் பெயரால் (ஞாபகார்த்தமாக) எம்மூர் நூலகங்களுக்கு தம்மாலான நூல்களை வழங்கி புண்ணியம் சேர்க்கும் நல்ல பண்பாட்டை முன்னெடுத்துள்ளமை போற்றுதற்குரியது.

கடந்த 24.03.2014 அன்று சிவபதம் எய்திய அமரர். திருமதி அன்னலட்சுமி கனகசபை அம்மையாரின் ஞாபகார்த்தமாக ரூபா 3,000 பெறுமதியான மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள புத்தகங்களை எமது கிராம நூலகங்களுக்கு (அம்மையாரின்) அந்தியட்டி தினத்தன்று (23.04.2014) திரு. திருமதி. பாஸ்கரன் ஜெயலக்‌ஷ்மி குடும்பத்தினர் வழங்கியுள்ளார்கள்.  அப் புத்தகங்களை வாசித்து பயன்பெறும் இளையோர் மனதில் அவை யாருக்காக வழங்கப்பெற்றதோ அவர்கள் நன்றிக்குரியவர்களாக பதிவாகின்றனர்.

வழங்கப்பெற்ற நூல்களின் ஒரு பகுதியினை பார்வையிட இங்கே அழுத்துக

 

தகவல்: தனு சபா அவர்கள்

 

 

 

 

 

 

 

 

 

 


புதிய வருடத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் புதிய பெயரில் இயங்கும் சீலன் டிஜிட்டல் போடோஸ் நிறுவனம்

E-mail Print PDF

ஏப்பிரல் 14 தமிழ் ஜய வருடப்பிறப்பை முன்னிட்டு எமது சீலன் டிஜிட்டல் போடோஸ் நிறுவனம் காலத்திற்கு ஏற்ப   புத்தம் புதிய அதி நவீன பரிமாணத்தில் பெயர் மாற்றம் செய்யப்பெற்று உங்கள் முன் எமது  சேவையை ஆரம்பிக்கின்றோம்.
.
நீங்கள் இன்று வரை எமக்கு தந்த ஆக்கத்தையும் ஊக்கத்தையும் இனியும் குறைவின்றி தருவீர்கள் என் நம்புகின்றோம் . எமது வாடிக்கையாளர்கள் நன்பர்க மற்றும் உற்றார்  உறவினர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி ..
சீலன்

Page 3 of 13

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்