Monday, Oct 23rd

Last update08:11:34 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள்

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து - பேபி. மபீஷன் செல்வராசா - கனடா - 10.04.2015

E-mail Print PDF

கனடா - ஸ்காபறோ நகரில் வசிக்கும் திரு. திருமதி செல்வராஜா தம்பதியினரின் செல்வப் புதல்வன் “மபீஷன்” தனது முதலாவது பிறந்தநாளை இல. 31-சென் டெனிஸ் றைவில் அமைந்திருக்கும் தமது இல்லத்தில் 10.04.2015 அன்று வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

மபீஷன் குட்டியை பெற்றோர், பேரனார்மார், பேத்தியார்மார் அனைவரும் நோய்நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க, வளர்க என  வாழ்த்துகின்றார்கள்


காப்புறுதி பதிவுரிமை பெற்ற காப்புறுதி முகவர் - முகுந்தன் (பாபு) கனகரத்தினம்

E-mail Print PDF

நேர்மை, நம்பிக்கை, உறுதியான சேவைக்கு உத்தரவாதம்

262.24.03.2015

ஈழத்தமிழருக்கு பெருமை சேர்த்த செல்வி. ஜெசிக்கா யூட் அவர்களை வாழ்த்துகின்றோம் - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

எயரெல் சுப்பர் சிங்கர் யூனியர் - 4ல் இரண்டாவது பரிசு பெற்ற வெற்றித் கலைமகள் செல்வி. ஜெசிக்கா யூட்

இந்தியாவில் விஜே தொலைக்காட்சி நடாத்திய ”எயரெல் சுப்பர் சிங்கர் யூனியர்-4” நிகழ்வில் கனடாவில் இருந்து சென்று பங்கு பற்றிய இலங்கைத் தமிழச்சியான செல்வி. ஜெசிக்கா யூட் இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பும் இவ் நிகழ்வுகளில் இலங்கையர் பலர் பங்கு பற்றி இருந்த போதிலும்; கடைசி போட்டிக்கு தெரிவாகி பரிசு பெற்ற பெருமையை செல்வி. ஜெசிக்கா பெற்றுள்ளார்

ஆரம்பம் முதல் பங்கு பற்றிய ஆயிரக்கணக்கான போட்டியாளர்களுடன் மன உறுதியுடன் போட்டியிட்டு ஆறாவது இடத்தை பிடித்து விலகி இருந்தார். இறுதிச் சுற்றுக்கு தகுதியான போட்டியாளர்களாக செல்வி. ஹரிபியாவும், செல்வன். பரத்தும், செல்வி. ஸ்பூர்த்தியும் தெரிவாகி இருதனர்.

இதன் பின்னர் இவர்களுடன் இறுதிப் போட்டியில் பங்கு பெறும் நாலாவது போட்டியாளரை தெரிவு செய்வதற்காக பல கட்டங்களாக  ”வ்வயில்காட்” போட்டிகள் நிகழ்வுற்றன. அப்போட்டியில் கடைசியாக பங்கு பற்றிய ஆறு போட்டியாளர்களில் நான்கவது போட்டியாளரை தேர்ந்தெடுப்பதற்காக பொது மக்களின் வாக்குகள் இணைய மூலமும், தொலைஅலை மூலமும் கோரப் பெற்றன. கடைசியாக பங்கு பற்றிய ஆறு போட்டியாளர்களில் செல்வி. ஜெசிக்கா யூட் பதினான்கு இலச்சங்களுக்கு கிட்டிய வாக்குகளை பெற்று நான்காவது போட்டியாளராக தெரிவு செய்யப் பெற்றார். அதனைத் தொடர்ந்து நடுவர்களின் முடிவின் பிரகாரம் அனுஷியாவும், ஸ்ரீஷாவும் சேர்த்துக் கொள்ளப் பெற்றனர்.

இறுதியாக இந்த சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி ஓ.எம். ஆர் சாலையில் உள்ள தங்கவேலு பொறியியல் கல்லூரியில் 20.02.2015 அன்று நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் மத்தியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆறு போட்டியாளர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.

இப் போட்டியில் நடுவர்களின் மதிப்பெண்களும், இவ் நிகழ்வினை பார்வையிடும்  நேயர்களின் வாக்குகளையும் பெற்று வெற்றியாளர்கள் தெரிவாகினர். அவற்றுள்; அதிகப் படியான வாக்குகளையும். நடுவர்களின் அதிக மதிப்பெண்களையும் பெற்று செல்வி ஸ்பூர்தி முதலாவது இடத்தையும், செல்வி. ஜெசிகா யூட் இரண்டாம் இடத்தையும், செல்வி. ஹரிபியா மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இவர்களுள் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட செல்வி. ஸ்பூர்திக்கு இந்திய ரூபா எழுபது இலச்சம் பெறுமதியான வீடும், இரண்டாம் இட்த்தை பெற்றுக் கொண்ட செல்வி. ஜெசிக்காவிற்கு ஒரு கிலோ எடை கொண்ட தங்கமும், மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட செல்வி. ஹரிபிரியாவுக்கு இந்திய ரூபா பத்து லட்சம் பெறுமதியான கார் ஒன்றும் பரிசாக வழங்கப் பெற்றது.

இப் போட்டிகளில் பங்கு பற்றி நான்காவது இடத்தைப் பிடித்த  மூன்று போட்டியாளர்களுக்கும் தலா ஐயாயிரம் இந்திய ரூபா பணம் பரிசாக வழங்கப் பெற்றது.

ஜெசிக்கா தனக்கு கிடைத்த ஒரு கிலோ தங்க நகைக்குரிய பரிசுத் தொகையில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள ஒரு சிறுவர் காப்பகத்திற்கும், மிகுதித் தொகையை  இலங்கையில் உள்ள அனாதைகள் இல்லத்திற்கும் வழங்கப்போவதாக தந்தை மூலம் தெரிவித்திருந்தமை பாராட்டுக்குரியதே. "சாதனைகள் பல படைத்து பேரோடும் புகழோடும் வாழ்க வளர்க”

கடந்த 20.02.2015 அன்று நிகழ்வுற்ற நிகழ்வுகள்

பார்வையிட

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

5வது பிறந்தநாள் வாழ்த்து - செல்வி. தனிஷ்கா குகன் - கனடா - 10.02.2015

E-mail Print PDF

கனடா - ஸ்காபரறோ நகரில் வசிக்கும் குகன் - கல்யாணி தம்பதியினரின் செல்லப் புதல்வி “தனிஷ்கா” 10.02.2015 இன்று தனது 5வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

5வது பிறந்தநாளை கொண்டாடும் தனிஷ்காவை பெற்றோர், அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, மற்றும் அண்ணாமார், அக்காமார், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அம்பிகையின் அருளினால், பல்கலைகளும் கற்று  பலர் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகிறார்கள்.

அப்பா-அம்மா

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் - இலங்கை - 09.01.2015

E-mail Print PDF

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நீதியரசர் கே. ஸ்ரீபவன் முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்கொண்டார்.

முன்னதாக, யார் மனமும் புண்படாத வகையில் தனது வெற்றியை கொண்டாட வேண்டுமென்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று 09.01.2015 காலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் முழுமையாக வெளிவந்த நிலையில், தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரியா, மைத்ரிபால சிறிசேனவின் வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அதன் பின்னர் பேசிய மைத்திரிபால சிறிசேன,'எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் உள்ளிட்ட இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பொதுமக்களிடமும் கேட்கிறேன், இந்த வெற்றியின் உண்மையான அர்த்தம், சமாதானமான முறையில் செயல்படுவதுதான். ஒருவருக்கொருவர் மனரீதியில் வேதனை தருமாறு நடந்துகொள்ள வேண்டாம்.

இந்த வெற்றியை நாட்டில் உள்ள அனைவரும் அனுபவிக்கும் சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும். யாருடைய மனமும் புண்படுமாறு நடந்துகொள்ள வேண்டாம். இந்த வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டுமென நான் அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் பார்வையிட இங்கே அழுத்துக

 

 


அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய அமெரிக்க விஞ்ஞானி - Glenn Seaborg கெலென் ஸீபோர்க் - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை நாம் தவிர்க்க முடியாத ஒரு காலப் போக்காகும்! - கெலென் ஸீபோர்க்

இதுவரை மனித ஆற்றலால் படைக்க முடிந்த ஒரு பேரழிவு மூலச் சாதனத்தை [புளுடோனியம்] உண்டாக்க நான் உதவி செய்தேன் என்றாலும், அணுவிலே அதை விட இன்னும் பேரளவு அமைதி வழி ஆக்க சக்தியும் மறைந்துள்ள தென்று நான் உறுதி யூட்டுகிறேன். - கெலென் ஸீபோர்க்

Read more...

Page 5 of 78

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்