Monday, Oct 23rd

Last update08:11:34 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள்

தைப் பொங்கல் வாழ்த்துக்கள் - 14/15.01.2015

E-mail Print PDF

நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் நல்கும் இயற்கையை பேணிக் காக்கும்  ”சூரிய பகவானுக்கு” விருந்து படைத்து நன்றி கூறும் இத் ”தைப்பொங்கல்” திருநாளில்;

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் மக்கள் மத்தியில்; கல்வி, கலை,  கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்து; எம் மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், ஒன்றியங்கள், இணையத் தளங்கள் நிர்வாகிகள் அனைவருக்கும்;

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம்மூர் சிறார்களின் வளர்ச்சிக்காக தாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் எம்மூர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள், சமூக நலன் விரும்பிகள் அனைவருக்கும்;

நன்றிகளும், வாழ்த்துக்களும் கூறி அவர்கள் சேவையை உள்அன்போடு போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.” குறள்


எல்லோரும் எல்லாமும் பெற்று நீங்களும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்களுக்கு வேண்டியவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை கீழே பதிவிலிட்டு பரிமாறிக் கொள்ளலாம்

2015 - ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஜோதிட குறிப்புகளுடன் - பணிப்புலம்.கொம்

E-mail Print PDF

2015 ஆங்கில புத்தாண்டு மேஷ இராசி, கன்னி லக்கினம், பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று இருக்கிறார். இதனால் அன்னிய தேசங்கள் மத்தியில் நம் நாடு கௌரவமாக திகழும் அளவில் பொருளாதாரம் ஓங்கி வளரும். அரசியலில் சில மாற்றங்கள் வரும்.

சனிபகவான் 3-ம் இடத்தில் உள்ளார். விளையாட்டு துறை, தொலை தொடர்ப்புதுறை ஆபரண வகைகள் பெரும் முன்னேற்றம் அடையும்.

கேதுவை குரு பார்வை செய்வதால், பண வீக்கம் குறையும். ஆன்மிகம் வளரும். மேஷத்தில் சந்திரனும், மகரத்தில் செவ்வாயும் அமைந்து செவ்வாய், சந்திரனை பார்வை செய்வதால் சில அரசியல் பிரமுகர்களுக்கு சோதனை கட்டமாகவும், இயற்கை சீற்றம் வரவும் வாய்ப்புண்டு.

பொதுவாக கேந்திரத்தில் புதன், சூரியன் இணைந்து, “புத ஆதித்தியாய யோகம்” அடைந்ததால், கல்விதுறை பெரும் முன்னேற்றம் அடையும். உணவு பொருட்களின் விலை கூடுதலாகும். அன்னியர்களின் அத்துமீறல் அடங்கிவிடும். இந்த புத்தாண்டு மகிழ்ச்சியான, எழுச்சியான புத்தாண்டாக இருக்கும்.

Read more...

நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் - 2014

E-mail Print PDF

ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய்

அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய்

பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த

பாலன் யேசு பிறந்த இவ் இனிய

நன்நாளை நத்தார் பண்டிகையாக கொண்டாடும்

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்

எங்கள் மகிழ்ச்சி பொங்கிய  நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

Merry Christmas

பணிப்புலம்.கொம்

 


 

5வது பிறந்தநாள் வாழ்த்து - செல்வி. யஸ்மிக குலேந்திரன் - 06.12.2014 - ஜேர்மனி

E-mail Print PDF

ஜெர்மனி osnabrück வசிக்கும் திரு.திருமதி. குலேந்திரன்-ஜெயமலர் தம்பதியினரின் செல்வப்புதல்வி "யஸ்மிகா" தனது 5 வது பிறந்தநாளில் (06.12 .2014) காலடி வைக்கிறார். அவரை அன்பு அப்பா, அம்மா, அக்கா (துவாரகா ), அண்ணா(ஜெனுசன் ) மற்றும் சிந்துசன், மாலினி, baby சானுஜா  ஆகியோர் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றனர் .

 

 

 

 


10 வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் - கிருஷிகன் நிமலநாதன் - டென்மார்க் - 08.11.2014

E-mail Print PDF

பிறந்தநாள் விழா அழைப்பிதழ்

http://panipulam.net/wp-content/uploads/2014/11/Untitled-1.gif

டென்மார்க் இல் வசிக்கும் எமது  செல்வப்புதல்வன் கிருஷிகன் தனது 10வது பிறந்தநாளை 08.11.2014 சனிக்கிழமை அன்று மாலை 05.00 மணியளவில்  Stauning Sognegهrd விழா மண்டபத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடுகின்றார். தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து கிருஷிகன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்குமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விழா நடைபெறும் மண்டப முகவரி;-  Stauning Sognegهrd,
Kirkebyvej 65,
6900 Skjern.

இங்ஙனம்
தங்கள் நல்வரவை நாடும்,
திரு. திருமதி. நிமலநாதன் குடும்பத்தினர்
Danmark Skjern

நன்றி

Page 6 of 78

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்