Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: வாழ்த்துக்கள்

"கணினியியல் பொறியியலாளர்" பட்டம் பெற்ற சுதாகரன் கோபாலகிருஷ்ணன் - பாராட்டுகள், வாழ்த்துகள்

E-mail Print PDF

பாராட்டி வாழ்த்துக்கின்றோம்

"கணினியியல் பொறியியலாளராக" (11.11.2011) எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற  சுதாகரன் கோபாலகிருஷ்ணன் அவர்களை காலையடி மறுமலர்ச்சி மன்றம் பாராட்டி, வாழ்த்தி, கௌரவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது

காலையடி மறுமலர்ச்சி மன்றம்

தகவல்: நிவர்சன்

"கணினி பொறியிலாளர்" சுதாகரன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மேலும் பல பட்டங்கள் பெற்று உலகம் போற்றும் மாமேதையாக வாழ்க, வளர்க  என வாழ்த்துகின்றோம். திறமையை பாராட்டுகின்றோம், முயற்சியை போற்றுகின்றோம்.

பணிப்புலம்.கொம்

"கல்விமாணி" பட்டம் பெற்ற கல்விமான் - சுப்பிரமணியம் திருக்கேதீஸ்வரன் அவர்கள்

E-mail Print PDF

பாராட்டி வாழ்த்துகின்றோம்

03.04.2012 அன்று மாண்புமிகு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கல்வி நிறுவனத்தின் தேசிய பட்டமளிப்பு விழாவில் "கல்விமாணி" பட்டம் பெற்ற மதிப்பிற்குரிய சுப்பிரமணியம் திருகேஸ்வரன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

அவரது கல்விச்சேவை மேலும் சிறப்புறவும் ஏற்றமுறவும்  வாழ்த்தும்

பணிப்புலம் அரச ஊழியர் அமைப்பு

தகவல்: பகீரதன் அழகரத்தினம் அவர்கள்


கல்வித்துறையில் கிடைக்கும் அதிஉயர் விருதான "கல்விமாணி" பட்டம்பெற்ற  மதிப்பிற்குரிய சுப்பிரமணியம் திருகேதீஸ்வரன் அவர்கள் மேலும் பல பட்டங்கள் பெற்று சிறப்புற

வாழ்த்துகின்றோம், போற்றுகின்றோம்

பணிப்புலம்.கொம்


மாமேதை மார்க்ஸின் பிறந்த நாள் - Karl Marx May 5, 1818

E-mail Print PDF

"என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை"
- சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரரின் பெயர் ஜென்னி.

Read more...

"மே தினம்" எனும் தொழிலாளர் தினம்

E-mail Print PDF

Image may contain: 10 people, people smiling, text

மே தினம் என்பது; பார் எங்கும் பரந்து வாழும் தொழிலாளர்கள் அனுபவித்த வலிக்கு பல சிகிச்சைகள் மூலம் நலன் பல பெற்ற நன்நாள் என்றும், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாள் என்றும் கூறலாம். இத்திருநாள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி மாபெரும் பேரணிகளுடன் இலங்கை உட்பட எல்லா நாடுகளிலும் கொண்டாடப் பெற்று வருகின்றன.

Read more...

"பக்தி இசை வேந்தன் " T. S. ஜெயராஜனின் புதிய படைப்புகள் - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

நோர்வே நாட்டில் வசித்துவரும் எம்மூர் கலைஞன் "பக்தி இசை வேந்தன்" T. S. ஜெயராஜன் அவர்கள் பொன்னாலை வரதராஜப் பெருமாள், செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்கள் மேல் பாடப்பெற்ற பக்திப் பாடல்கள்  வெளியாகியுள்ளன.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும், செல்வச்சந்நிதி ஆலயத்திலும் இவ் இசைத்தட்டுகள் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. விற்பனையில் பெறப்படும் பணம் முழுவதும் அவ்வவ் ஆலயங்களின் திருப்பணிக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதனயும் அறியத்தருகின்றோம்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

சென்னையில் நடைபெற்ற பத்மசிறி சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவில் கௌரவிக்கப்பெற்ற "சாந்தயூர் பக்தி இசை வேந்தன்" வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

E-mail Print PDF


சுப்பிரமணிய பாரதியார் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.

Read more...

Page 8 of 13

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்