Monday, Dec 11th

Last update07:59:25 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள்

நூல் நிலையங்கள் ஊரின் அறிவாலயங்கள் - இறந்தோரின் ஞாபகார்த்தமாக அவற்றை வளமாக்குவோம்

E-mail Print PDF

தோட்டத்தில் உள்ள பயிர்கள் வளமாக வளர்ந்து பயந்தர வேண்டுமாயின் அதற்கு நீர் பாச்சும் துரவு நீர் (வற்றாது) நிறைந்திருக்க வேண்டும்.

அதேபோல் எம்மூர் சிறார்கள் அறிவில் செழிப்பாக வளர்ந்து பயன்பெற வேண்டுமானால் எம்மூர் நூல் நிலையங்களில் அறிவான நூல்கள் செறிந்திருக்க வேண்டும் என்பதனை நன்கு உணர்ந்த எம்மூர் உறவுகள்; தம்மை விட்டுப் பிரிந்த பெற்றார், உற்றார், உறவினர், நண்பர்களுக்காக செய்யப் பெறும் அந்தியேட்டி கிரியைகளுடன் நூல் நிலையங்களுக்கு நூல் வழங்கும் நிகழ்வையும் பிதிர் கடன்களில் ஒன்றாக இணைத்து அவர்களின் பெயரால் (ஞாபகார்த்தமாக) எம்மூர் நூலகங்களுக்கு தம்மாலான நூல்களை வழங்கி புண்ணியம் சேர்க்கும் நல்ல பண்பாட்டை முன்னெடுத்துள்ளமை போற்றுதற்குரியது.

கடந்த 24.03.2014 அன்று சிவபதம் எய்திய அமரர். திருமதி அன்னலட்சுமி கனகசபை அம்மையாரின் ஞாபகார்த்தமாக ரூபா 3,000 பெறுமதியான மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள புத்தகங்களை எமது கிராம நூலகங்களுக்கு (அம்மையாரின்) அந்தியட்டி தினத்தன்று (23.04.2014) திரு. திருமதி. பாஸ்கரன் ஜெயலக்‌ஷ்மி குடும்பத்தினர் வழங்கியுள்ளார்கள்.  அப் புத்தகங்களை வாசித்து பயன்பெறும் இளையோர் மனதில் அவை யாருக்காக வழங்கப்பெற்றதோ அவர்கள் நன்றிக்குரியவர்களாக பதிவாகின்றனர்.

வழங்கப்பெற்ற நூல்களின் ஒரு பகுதியினை பார்வையிட இங்கே அழுத்துக

 

தகவல்: தனு சபா அவர்கள்

 

 

 

 

 

 

 

 

 

 


10வது, 5 வது பிறந்தநாள் நிகழ்வுகள் - அஸ்வின் & விஹாசினி - 20.04.2014 - சுவிஸ் - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

சுவிஸ்சில் வசிக்கும் திரு. திருமதி. விஜயகுமார் - சுதர்சினி தம்பதியினரின் செல்வப் புதல்வன் அஸ்வினது 10வது பிறந்தநாள் விழாவும்; செல்வி. விஹாசினியின் 5 வது பிறந்தநாள் விழாவும் கடந்த 20.04.2014 அன்று சுவிஸில் கொண்டாட்டப்பெற்றது.  நிகழ்வுகள் N.S.A. வீடியோவின் அதிஉயர் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பெற்றதுடன் அதன் குறும் வீடியோ உங்கள் பார்வைக்காக பதிவாகியுள்ளது.

பிறந்தநாள் நிகழ்வுகள் -அஸ்வின் & விஹாசினி - பார்வையிட இங்கே அழுத்துக

1 வது பிறந்தநாள் வாழ்த்து பேபி. தனுஜன் கேசவன் - இத்தாலி - பலெர்மோ - 21.04.2014

E-mail Print PDF

இத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திரு. திருமதி. கேசவன் - நிறோஜினி தம்பதியினரின் செல்வப்புதல்வன் ”தனுஜன்” தனது 1வது பிறந்தநாளை 21.04.2014 அன்று அவர்களது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகிறார்.

செல்லக்  குட்டி தனுஜனை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மமார், அத்தை, மாமாமார்,  மாமிமார், சித்தப்பா, சித்தி, அர்சயன் - அண்ணா, அஸ்வினி - அக்கா, தமிழினி  - அக்கா, த்ரிசா மச்சாள், நிருஜன் - மச்சான், டிவ்வியா மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறையருளால் பல் கலையும் கற்று பார் போற்றும் வித்தகனாக பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வளர்க என வாழ்த்துகினறார்கள்.

புதிய வருடத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் புதிய பெயரில் இயங்கும் சீலன் டிஜிட்டல் போடோஸ் நிறுவனம்

E-mail Print PDF

ஏப்பிரல் 14 தமிழ் ஜய வருடப்பிறப்பை முன்னிட்டு எமது சீலன் டிஜிட்டல் போடோஸ் நிறுவனம் காலத்திற்கு ஏற்ப   புத்தம் புதிய அதி நவீன பரிமாணத்தில் பெயர் மாற்றம் செய்யப்பெற்று உங்கள் முன் எமது  சேவையை ஆரம்பிக்கின்றோம்.
.
நீங்கள் இன்று வரை எமக்கு தந்த ஆக்கத்தையும் ஊக்கத்தையும் இனியும் குறைவின்றி தருவீர்கள் என் நம்புகின்றோம் . எமது வாடிக்கையாளர்கள் நன்பர்க மற்றும் உற்றார்  உறவினர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி ..
சீலன்

12 வது பிறந்தநாள் வாழ்த்து - செல்வி. சஜிதா ரவி - ஜேர்மனி - 11.04.2014

E-mail Print PDF

ஜெர்மனி - வீரபில்டில் வசிக்கும் திரு. திருமதி. ரவி சிவரஞ்சினி தம்பதியினரின் செல்வப்புதல்வி "சஜிதா" தனது 12 வது பிறந்தநாளை 11.04.2014 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.

அன்புக்குட்டி சஜித்தவை அன்பு அப்பா, அம்மா, தங்கை, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி,  மாமா, மாமிமார், அண்ணாமார், அக்காமார், மச்சான், மச்சாள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறையருளால் சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் பேரோடும் புகழோடும் பெருவாழ்வு வாழ்க வளர்க என வாழ்த்துகிறார்கள்.

 


10 வது பிறந்தநாள் வாழ்த்து - செல்வன் அபிநாஸ் றதீஸ்குமார் - கனடா - 31.03.2014

E-mail Print PDF

கனடா - ஸ்காபறோ நகரில் வசிக்கும் திரு, திருமதி றதிஸ்குமார் - ஜெயசிறி தம்பதியினரின் செல்வப் புதல்வன் “அபிநாஸ்” தனது 10 பிறந்தநாளை  31-3-2014 அன்று வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

செல்லம் அபிநாசை; அன்பு அப்பா, அம்மா, அண்ணா - சினேகன், மற்றும்  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறையருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்

Page 9 of 78

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்