Tuesday, Mar 20th

Last update12:10:08 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: மங்கையர் மலர்

அகில இந்திய பட்டயக் கணக்காளர் இறுதிப் பரீட்சையில் முதலிடம் பெற்ற தமிழ்நாட்டு இளம் பெண்:

E-mail Print PDF

25.01.2013


இந்தியாவின் மும்பை நகரில் தனது சிறிய வயது முதல் வசித்து வரும் பிரேமா ஜெயக்குமார் என்னும் தமிழ்ப்பெண் அண்மையில் முழு இந்தியாவிலும் நடத்தப்பட்ட பட்டயக் கணக்காளர் (Chartered Accountants Finals Examination) இறுதிப் பரீட்சையில் முதலிடத்தைப் பெற்று தமிழ்நாட்டிற்கும் உலகத் தமிழர்களுக்கும் பெருமையை ஈட்டித் தந்துள்ளார்.

மேற்படி அவரது சாதனை குறித்த பெறுபேறுகள் வெளியானதும் அவரை தொடர்பு கொண்டு பேட்டி கண்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமா அதிக சம்பளம் வாங்கும் வேலை கிடைத்தவுடம் தனது பெற்றோருக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கி கொடுக்கவுள்ளதாக சிரித்த முகத்துடன் கூறினார்.

ஆகில இந்திய ரீதியில் மேற்படி சாதனையை நிலைநாட்டிய பிரேமாவின் தந்தை ஜெயக்குமார் கடந்த 20 வருடங்களாக மும்பை மாநகரில் ஒரு ஆட்டோ சாரதியாக பணியாற்றுகின்றார். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது சொந்த கிராமத்தில் தொழில் கிடைக்காததால் அவர் மும்பாய் நகரிற்குச் சென்றார்.

800 புள்ளிகளுக்கு 707 புள்ளிகளைப் பெற்று அகில இந்தியாவில் முதலிடம் பெற்ற பிரமேவை அவரது நண்பிகள் ஆசிரியைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் :நான் முந்தி! நீ முந்தி! என்று பாராட்டத் தொடங்கியுள்ளார்கள். தனது சாதனைகளுக்கு தனது பெற்றோரே காரணம் என்று கூறிய பிரேமா தனது உயர் கல்விக்கு தேவையான பண உதவிகளைச் செய்ய தனது தந்தையின் வருமானம் போதவில்லை என்றும் இதனால் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து தொடர்ச்சியாக கணக்கியல் துறையில் கற்றுவந்ததாகவும் கூறினார். அத்துடன் தனக்கு கிடைத்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் புலமைப் பரிசில் தனது பொருளாதாரக் கஸ்டத்தை நீ;ககியதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதேவேளை பிரேமாவின் சகோதரன் தனராஜ் கணக்கியல் துறையில் ஆர்வம் கொண்டு தன்னோடு இணைந்து பரீட்சைக்கு தோற்றி வெற்றி பெற்றுள்ளதாகவும் தங்கள் இருவருக்கும் போதிய ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கியது தங்கள் தாயும் தந்தையும்தான் என்று கூறியபோது அவரது கண்கள் கண்ணீரைச் கொட்டின என்பது இ;ங்கு குறிப்பிடத்தக்கது.

திருமணத்தின் போது மணமகள் அழகாக தோற்றமளிக்க...:

E-mail Print PDF

""மணப்பெண் அலங்காரம்" என்பது எல்லா சமூகத்தினரும் தங்கள் தங்கள் சமய, கலச்சாரத்திற்கு ஏற்ப திருமணமாகப் போகும் பெண்ணை அலங்கரிப்பது என கூறலாம். தமிழர் சமூகத்தை பொறுத்தளவில் மணப் பெண் அலங்காரம்  எங்கள் கலாச்சார பாரம்பரியத்தை முதன்மைப் படுத்தி தொன்று தொட்டு பின்பற்றப் பெற்று வந்துள்ளது.

இத் தினத்தில் மணப் பெண் சேலை அணிவித்து, மூக்குத்தி, காதணி, கொண்டை, நகைகள், பூ மாலை என்பன அணியப் பெற்று தமது சமய, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெண்ணாக தோற்றமளிப்பாள். இம் முறையானது தற்போது ஆடம்பரம் மிக்கதாக வளர்ந்து அதிமுக்கிய இடத்தை பெற்றுள்ளது.

ஒவ்வொருவரும் தத்தம் வசதிக்கேற்ப அழகுசாதனப் பொருட்களைப் பயன் படுத்தி திருமண நாளில் திருமணப் பெண்ணை அலங்காரம் செய்கிறார்கள். திருமணமாகும் நாள் ஒரு பெண்ணின் புனிதமான நாளாகவும், மகிழ்ச்சியில் பூரித்து இன்புற்று இருக்கும் நாளாகவும் அமைவதால் அப் பெண்ணின் அதிஉயர் அழகுத் தோற்றத்தை எடுத்துக் காட்டுவதற்காக மணப் பெண் அலங்காரம் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.

Read more...

அழகுக் குறிப்புகள் - சித்த மருத்துவம்

E-mail Print PDF


தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க:
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்க:
தோடப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க:
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

எடையை குறைக்க:
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

நகத்தை  விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட:
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை நீங்க:

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

தலைமுடி பளபளப்பாய் இருக்க:
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

கண்கள் பிரகாசமாக இருக்க:
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் போக்க:
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறைய:
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

முகத்தில் உள்ள எண்ணைப் பசை குறைய: .
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற:
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

வறண்ட முகச் சருமம் புதுப் பொலிவடைய:
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

முகச் சருமம் மிகவும் மிருதுவாக:
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

சருமத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்
தோடம் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

முகம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற:
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

முகம் புத்துணர்ச்சி பெற:
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

முகத்தில் எண்ணைப் பசை நீங்க:

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தோல் வறட்சியும், சுருக்கமும் நீங்க:
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

"வளைகாப்பு" சடங்கும் அதன் முக்கியத்துவமும்

E-mail Print PDF

”வளைகாப்பு” என்ற சடங்கு முக்கியமாக முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். அனேகமாக கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது.

நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கும் சம்பிரதாயங்களும் பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம் என்னும் இச் சடங்காகும்.

Read more...

உலக அழகியாக சீனாவின் வென் சியா யூ, தேர்வு - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

2012 ஆண்டுக்கான உலக அழகியாக சீனாவைச் சேர்ந்த வென் சியா யூ, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின், பீஜிங் நகரில், உலக அழகிப் போட்டி நடந்தது. 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள்  இதில் பங்கேற்றனர்.இந்தியாவின் சார்பில் வன்யாமிஸ்ரா  கலந்து கொண்டார். ஆனால், இறுதி சுற்று வரை வந்த அவர் தேர்வாகவில்லை

சீனாவின் வென் சியா யூ, உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடம் பிரிட்டனைச் சேர்ந்த வேல்ஸ் அழகி ஷோபிக்கும், மூன்றாம் இடம் அவுஸ்திரேலிய அழகி ஜெசிகாவுக்கும் கிடைத்தது. உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட வென் சியா, இசை ஆசிரியையாக விரும்புவதாக தெரிவித்தார்.திருமணமாகப் போகும் பெண்களுக்கு மருத்துவர் ஆலோசனை அவசியமா?

E-mail Print PDF


திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொடக்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப்தியாகவும் தொடரும். திருமணத்துக்குத் தயாராகிற அல்லது திருமணமாகி, குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்கள், முன்கூட்டியே தங்கள் உடல், மன ஆரோக்கியங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துகிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘கல்லூரிப் பெண்கள்ல 30 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடம்பை சிலீமாக வைத்திருக்க டயட் செய்வதால், உடம்புக்கு தேவையான சத்து உடம்பில் சேராது ரத்த சோகை ஏற்படுகின்றது. இது அவங்களுக்குக் திருமணமாகி, கருத்தரிக்கிற போது பிரச்னைகளைத் தரும். ரத்தசோகை இருக்கிறதா என்று பரிசோதனை செய்து பார்த்து இருந்தால் அதற்கான சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் பல பயங்கர பாதிப்புகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.


அடுத்து ஃபோலிக் அமிலக் குறைபாடு. கல்யாணமானதும் மருத்துவரோட உதவியோட இந்தக் குறைபாட்டுக்கான மருந்துகளை எடுபதால், மூளை மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச்னைகள் இல்லாத, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.


தட்டம்மைக்கான தடுப்பூசி மிக முக்கியம். கர்ப்பமானதும் தட்டம்மை வந்தால், உறுப்புக் கோளாறுகளுடைய குழந்தை பிறக்கலாம். இந்தத் தடுப்பூசி போட்டுக்கிட்டு, 6 மாதங்கள் கழிந்த பின்புதான் கருத்தரிக்கணும்.  மாதவிலக்கு சுழற்சி முறை தவறியிருந்தால், அதற்கும் சரியான மருத்துவ ஆலோசனை அவசியம்.


சில பெண்களுக்கு பிறவியிலிருந்து பிரச்னைகள் இருக்கும். இதய நோய், வலிப்பு, சிறுநீரகப் பிரச்னை, நீரிழிவு... இவையெல்லாம் உள்ள பெண்கள், கருத்தரிப்பதற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சில வகை இதய நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கக் கூடாது.


குடும்பநல மருத்துவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, அந்தந்த நோய்க்கான சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. ஏற்கனவே எடுக்கும் மருந்துகளை மாத்தி, கருவை பாதிக்காத அளவுக்கு பாதுகாப்பான மருந்துகளைக் பெற்றுக் கொள்ள இது வசதியா இருக்கும். அடுத்து மார்பகக் கட்டி, கர்ப்பப்பை கட்டிகள் ஏதாவது இருக்கின்றனவா என சோதனைசெய்து பார்ப்பது அவசியம்.


உடல் ரீதியான ஆலோசனை எவ்வளவு முக்கியமோ, அதைவிட மனசுக்கான ஆலோசனையும் முக்கியம். கணவன்-மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாணத்துக்கு முன்னாடியோ, கருத்தரிக்கிறதுக்கு முன்னாடியோ ஒரு கவுன்சலிங் எடுத்துக்கலாம்.


கடைசியாக குழந்தைக்கான திட்டமிடல். உடனடியா குழந்தை வேணாம்னு நினைக்கிறவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி, அவர்களின் உடல் பரிசோதனைக்குப் பிறகு சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுக்கலாம். சரியான திட்டமிடல் இல்லாது கருத்தரிச்சு, பின்பு அது வேண்டாம் என்று கலைக்கிறவர்கள் கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு, பிற்காலத்தில்  குழந்தையே இல்லாமப் போகலாம்


Page 3 of 14