Monday, Sep 25th

Last update07:30:58 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: மங்கையர் மலர்

"தாலி" பெண்ணுக்கு வேலி

E-mail Print PDF

தாலி என்பது திருமணத்தின் போது மணமகன், மணமகளை தன் உரிமை மனைவியாக அடையாளப்படுத்த அணிகின்ற ஒரு ஆபரணமே “மாங்கல்யம்” எனும் தாலியாகும்.

தாலி அணிந்த பெண்ணானவள் விவாகமாகியவள் என்பதையும், கணவன் உயிருடன் இருப்பதையும் உறுதி செய்வதோடு அவள் ஒருசுமங்கலி” என்பதையும் காட்டி நிற்கின்றது, ஒரு ஆடவன் தாலி அணிந்த பெண்ணைக் காணும்போது இவள் திருமணமான ஒரு பெண் என்று தன்னை விலத்திக் கொள்வான். இதனால் போலும் “தாலி பெண்ணுக்கு வேலி” எனும் முதுமொழி தோன்றியது எனவும் கூறலாம்.

முற்காலத்தில்  வேட்டையாடிய புலியை கொன்ற ஆடவன் அதன் பல்லை எடுத்து தன் கழுத்தில் மாலையாக அணிவது வழக்கமாக இருந்தது. அப் புலிப்பல் மாலையை அவன் தன்னுடைய திருமணத்தின்போது தனது மணமகளுக்கு அணிவித்தான் என்றும் அறியப்படுகின்றது.

Read more...

முதுமையிலும் அழகாக இளமையாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள்

E-mail Print PDF

வயது ஐம்பதை தாண்டியும் அழகாக இளமையாக தோற்றமளிக்க சில வழிமுறைகள்
முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி மிக இளமையான தோற்றம் பெறுவதற்காக, முகத்திலே போடப்படும் "பொடாக்ஸ் ஊசி முறைகள்" (Botox injections) மற்றும் அழகியல் மருத்துவத்துறையில் செய்யப்படும் "மைக்ரோ டெர்மாப்ரேஷன்" (Microdermabrasion) எனப்படும் அறுவை சிகிச்சை முறை, முகத்தின் அழகிற்கு பொருத்தமானதாகவோ மற்றும் அதற்கென ஆகும் செலவு பட்ஜெட்டிற்குள் அடங்குவதாகவோ இல்லை.

Read more...

தையல் கலை - பகுதி 2 - பிளவுஸ் துணி வெட்டுவது எப்படி?

E-mail Print PDF

தையற் கலை முதற்பகுதியை வாசிக்க இங்கே அழுத்துங்கள்

 

அளவான பிளவ்ஸின் அளவை வைத்து பிளவ்சுக்கு துணி வெட்டும் முறை இங்கே தரப்பட்டுள்ளது.

முதலில் துணியை நீளவாக்கில் போட்டுக் கொள்ளவும்


அதன் மேல் அளவு பிளவுஸ்சின் இரு அக்குள் பகுதியினை வைத்து உடம்பின் அளவை எடுக்கவும் அத்துடன் தையலுக்கும் விட்டு வெட்டவும்



வெட்டிய துணியை நீளவாக்கிலேயே இரண்டாக மடிக்கவும் அதையும் இரண்டாக மடக்கவும்



மடித்த துணியின்மேல் அளவைவைத்து முதுகின் நீளத்தை எடுக்கவும்



அதன் கீழே மீதமிருக்கும் துணியை கைக்களுக்கு

அந்ததுணியில் கைகளின் அளவெடுத்து வெட்டவும்,



வெட்டியபின் அடுத்தபக்கம் இரு கைகளுக்கும் இணைந்திருக்கும் இதேபோல் வெட்டிவிட்டால் இருகைகளும் தனியேவந்துவிடும்

அளவெடுத்துவைத்துள்ள துணியின்மேல் கழுத்து மற்றும் கைகளுக்கு அளவெடுத்து ..

இது கைகளுக்கு

தைப்பதற்கு விட்டுவிட்டு வெட்டவும்

தோள்பட்டையில் அளைவுசரியாக வரும்படி பார்த்துக்கொண்டு தோள்பட்டையை கட்செய்யவும்

முன்னும் பின்னும் ஒரே கழுத்துவெண்டுமென்றால் ஒரேபோல் வெட்டலாம் இல்லையென்றால் முன்பு சிறியதாக பின்னால் சற்று பெரிதாக வெட்டவும்

இப்போது வெட்டிய டிசைன்

இப்போது வெட்டிய டிசைன்

இதில் பின்பக்கவுமுள்ள துணியை தனியே வைத்துவிட்டு அதன் முன்பக்க பட்டன்வைக்கும் இடத்தின்பக்கம் கொட்ரியின் அளவெடுக்கவும்[மார்பளவு

கிராசாக வெட்டவும்

அந்த வெட்டும் பீசிலேயே இடுப்பட்டியின் அளவுவரும் இல்லையென்றால் தனியேவும் இதுபோல் வெட்டிகொள்ளலாம்

இது கழுத்து மற்றும் பட்டன் பட்டிகளுக்கு

இதுதான் நாம்வெட்டிய ஜாக்கடின் அனைத்து பாகங்களும்

இவைகளை ஒன்றிணைத்து தைத்தால் இதுபோல் வரும்


இதை நாம் தைய்பதில்தான் இருக்கிறது அதன் அழகே!!!!!

இது ஜாக்கட்டை வைத்து அளவெடுத்து தைக்கும் முறை

சேலை கட்டும் பெண்களுக்கு - சில புத்திமதிகள்

E-mail Print PDF

நம் அழகை பேணி காப்பதில் ஆடைக்கு முக்கிய பங்கு உண்டு.அதில் நமது பராம்பரிய புடவை யை சொல்ல வேண்டியதில்லை..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித ஆடை அவர்களை அழகு படுத்தும் ..

பொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் இருக்கமாக ஆடை அணியக்கூடாது .புடவை கட்டும் போது ரவிக்கையும் இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தொளதொளவென்று அணிய வேண்டும்.

பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக உடை அணிவது பருமனைக் குறைத்துக் காட்டும்.

பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு புடவை இளவண்ணமுடையதாக இருந்தால் ரவிக்கை சற்று அடர் வண்ணம் உடையதாக இருப்பது நல்லது.

புடவையின் வண்ணம் அடர்த்தியானதாக இருந்தால், ரவிக்கை மெல்லிய வண்ணத்தில் இருக்கும் மாறு பார்த்த கொள்ள வேண்டும்.

ஒரே நிறத்தில் புடவை, ரவிக்கை என்று பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.சாதரணமாக ஷாப்பிங் போன்ற இடங்களுக்கு  போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ணம் கொண்ட  நைலான் புடவைகளையே பயன்படுத்துங்கள்.

கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போது அடர்வண்ணம் கொண்ட காட்டன் புடைவைகள் அழகை கூட்டும்.

உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தைக் குறைத்துக் காட்ட குறுக்குக் கோடு போட்ட புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

குள்ளமான பெண்கள், உயரத்தைச் சற்று அதிகரித்துக் காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட புடவைகளை அணிய வேண்டும்..

புடவை கட்டும் போது பார்டர், ப்ளீட்ஸ் போன்றவை உடல் வாகுக்குகேத்தவாறு எடுத்து கொள்ள வேண்டும்..நீங்களும் உங்களுக்கேத்த புடவை எடுத்து உங்களை அழகு படுத்துங்கள்..

நரை, திரை, மூப்பு, பிணி அணுகாமல் என்றும் இளமையாக இருக்க..

E-mail Print PDF

நெல்லிக்காயில் பல அதிசய குணங்கள் உண்டு. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிகிராம், பொஸ்பரஸ் - 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஒரு அப்பிள் பழத்தில் உள்ளதை விட அதிக விற்றமின்களும் கனியுப்புக்களும் நெல்லிக்காயில் உள்ளது.

நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது.

கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் ஜாம் உண்பதால் உங்கள் இளமை அதிகரிக்கும், நீண்ட காலம் வாழ உதவும், உடலும் குளிர்ச்சியடையும், முடி வளர்ச்சியை தூண்டும்.

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. நெ‌ல்‌லி‌க்காயை ‌பிறை ‌நிலா வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டி தே‌னி‌ல் ஊறவை‌த்து எடு‌த்து காயவை‌த்து ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி தேவை‌ப்படு‌ம்போது சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். ஊறுகா‌ய் போ‌ட்டு‌ம் சாப்பிடலாம் .

உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் `சி` உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது.

நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் `சி`, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது.

நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம். நானும் அனுபவித்து இருக்கின்றேன் .

பல மருத்துவ குணங்களை கொண்ட நெல்லியில் அப்பிளை விட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ்,விட்டமின் பி என்பனநிறைந்துள்ளது.

பல மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காயை பலர் சுவைத்து இருப்பர். பலர் சுவைத்து இருக்க மாட்டார்கள் . நெல்லிக்காய் எங்கேயும் கிடைத்தால் சாப்பிட்டு பாருங்கள் .

அழகுக்குறிப்புகள் - பொட்டும் அதன் வடிவங்களும்

E-mail Print PDF

பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும்.

மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத்திறனும் திறனுக்கும் உரிய இடம் நெற்றி. யோகக் கலையில் இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை நாம் உணர்ந்திருப்போம்.

நாம் வெறும் நெற்றியாக இருக்ககூடாது என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.

இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் மங்கையர்கள் பல வித டிசைன்களில் முகத்தை அழகுபடுத்தி கொள்கின்றனர். நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். ஆதலால் முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை தேர்வு செய்து முகத்தின் அழகை அதிகரிக்க செய்யுங்கள் என அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீள் வடிவ பொட்டு

வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

இதய வடிவ முகம்

இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.

வட்ட பொட்டு

ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.

சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.

முக்கோணப் பொட்டுக்கள்
முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.

முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான்.

பொட்டு வைப்பதால் சருமத்தில் பிரச்சினை ஏற்படுமா?
பொட்டு வைப்பதில் பொதுவாக பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. ஆனால் பொட்டுகளை ஒட்ட வைக்கும் பசையின் தரத்தால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதுண்டு. ரசாயன பொருளால் உருவாக்கப்பட்டிருக்கும் பசை, தொடர்ந்து நெற்றியில் ஒட்டியிருக்கும்போது அந்தப் பகுதி நிறம்மாறி, வடு உருவாகிவிடும்.

உயர்ந்த வகை பவுடர்களை பயன்படுத்தினால் முகத்தில் சரும நிற மாற்றம் ஏற்படுமா?

பவுடர் மூலம் நிரந்தரமான சரும மாற்றம் எதுவும் ஏற்படாது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள் பவுடர் பூசாமல் இருப்பது நல்லது. பவுடரில் மணத்திற்காக சில ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவைகள் சிலருடைய உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. ஆனால் வெயில் சருமத்தில் விழுவதைத் தடுக்க சன் ஸ்கிரீன் கிரீம் பூசுவது நல்லது.

எண்ணை தேய்த்துக் குளிப்பது சருமத்திற்கு நல்லதா?

எண்ணை தேய்த்து குளிப்பது என்பது இந்தியாவின் ஒரு பகுதியில் இருக்கும் பாரம்பரிய பழக்கம். அதனால் சருமத்திற்கு மினுமினுப்பு கிடைக்கும் என்பது உண்மைதான். வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு இது நல்ல பலனளிக்கும். ஆனால் எண்ணை சருமம் கொண்டவர்களுக்கு மேலும் எண்ணையை தேய்த்து எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. எண்ணையை தேய்த்துவிட்டு சோப்பு போட்டு குளிக்கும்போது சருமத்தில் இருக்கும் எண்ணையும் சேர்ந்து தண்­ணீரோடு போய்விடும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் குளித்த பின்பு, நனைந்த துணியால் சருமத்தில் இருக்கும் தண்­ணீரை ஒற்றி எடுக்கவேண்டும். அதன்பின்பு மிகக் குறைந்த அளவு எண்ணையை எடுத்து, லேசாக சருமத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன்பு அதிகமாக எண்ணை பூசிக்கொள்வதைவிட, குளித்த பின்பு சிறிதளவு எண்ணை பூசிக்கொள்வதே சிறந்தது.

தினமும் எத்தனை தடவை குளிக்கவேண்டும்?

எத்தனை தடவை குளிக்கிறோம் என்பதை விட, உடலில் அழுக்கு சேரக்கூடாது என்பதுதான் முக்கியம். மூன்று நேரம் குளித்த பின்பும் உடலில் அழுக்கு நீங்காமலே இருந்தால் எந்த பயனும் இல்லை. வியர்வை, அழுக்கு, வேலை பார்க்கும் அல்லது வசிக்கும் சூழலுக்கு தக்கபடி உடலில் இருக்கும் அழுக்கை போக்கும் விதத்தில் குளிக்கவேண்டும். தினமும் இரண்டு தடவை குளிக்கலாம்.


முடி பிரச்னைகளை தீர்க்கும் (அன்னமுன்னாப் பழம்) சீதாப்பழம்


கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும்.
குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.

வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது.

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

இதன் தாவரவியல் பெயர் Annona squamosa. சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்:

சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டு வரை புண்கள் ஆறும்.

விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களின் உணவு மதிப்பீடு

ஈரப்பதம்- 70.5%, புரதம்- 1.6%, கொழுப்பு- 0.4%, மணிச்சத்து- 0.9%, நார்ச்சத்து- 3.1%, கால்சியம்- 17 மி.கி, பாஸ்பரஸ்- 47 மி.கி, இரும்புச்சத்து- 4.31 மி.கி, வைட்டமின் சி-37 மி.கி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து- 23.5%,கலோரி அளவு- 10.4% ஆகும்.

Page 4 of 14