Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: மங்கையர் மலர்

பரத நாட்டியமும் அதன் நுட்பங்களும்-2

E-mail Print PDF

பிணைக்கைகள்:
அஞ்சலி, கேபாதம்-கர்கடம் ஸ்வஸ்திகம்-கடகாவர்த்தமானம் - நிஷாதம்-டோலம்- புஷ்பபுடம்-மகரம்-கஜதந்தம்-வர்த்தமானம்- அவாஹித்தம்-கர்த்தரி ஸ்வதிஸ்கம், சகடம்-சங்கம்- சக்ரம்-ஸம்புடம்-பாசம் கீலகம்-மத்ஸ்யம்-
வராஹம்-கூர்மம்-கருடம்-நாகபந்தம்-கட்வா- பேரண்டம்-அலஹித்தம் முதலியன.

பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, பார்வதி, லட்சுமி, முருகன், மன்மதன், இந்திரன், அக்னி, வாயு, யமன், வருணன், குபேரன் முதலிய தேவைதகளையும், தசாவதாரங்களையும், அரக்கரையும், நான்கு வருணங்களையும், நவக்-கிரகங்களையும் காட்டும் குறிகள் தனித்தனியே உண்டு. கருத்திற்கொண்ட பொருளைக் கைக்குறியாற் காட்டல் பிண்டி. பிண்டி பந்தத்தால் தெய்வங்களைக் குறிக்கலாம்- உதாரணமாக சிவலிங்கத்தை. நடனத்தில் ஒரு தெய்வத்தைக்
குறிக்கும் அங்கராகம், கரணம் இவற்றிற்கும் பிண்டியெனப்பெயர். பிண்டியும் பிணையலும் சேர்ந்து எத்தைகய தெய்வப் பொருளையும் விளக்கும். அதேமாதிரி பலவகைப் புட்கள், விலங்குகள், உறவினர்களைக் கைக்குறிகளாலேயே காட்ட
முடியும்.

23. காலாட்டம்
ஆடும்போது ஸ்தானகம், ஆலீடம், பிரேரிதம், ஸ்வஸ்திகம், ஸம்ஸூசி, பர்வஸூசி, ஏகபாதம், நாகபத்மம், மோதிதம், முதலிய லட்சணங்கள் காலுக் குண்டு. காலைத்தூக்கிச் சுழற்றுவதற்கு சக்ரம், ஏக பாதம், குஞ்சிதம், ஆகாசம்
முதலிய ஆட்டவகைகளுண்டு. நடத்தல், தாவல், நகரல், ஓடல், விரைதல், நடுங்கல், தத்தல், புரளல், துவளல் முதலிய பல நடைகள் உண்டு.

24. அங்க ராகங்கள்
ஸவஸ்திக ரேசிதம, பார்ஸ்வ ஸ்வதிகம், விருச்சிகம், பிரமாம், மத்தாக்ஷாலிதம், மதவிலாசிதம், கதிமண்டலம், பரிச்சின்னம், பரிவ்ருத்த ரேசிதம், வைசாக ரேசிதம், பராவ்ருத்தம், அலாதகம், பார்ஸ்வச்சேதம், வித்யுத் ப்ராந்தம், உத்வ்ருத்தம், ஆலிதம், ரேசிதம், அச்சுரிதம், ஆக்ஷிப்தேரசிதம், ஸம்ப்ராந்தம், அப ஸர்ப்பம், அர்த்த நிகுட்டகம் ஆக 32.

25. கரணங்கள்
கரணங்கள் 108 ஆகும்:
தாளபுஷ்பபுடம், வர்திதம், வலிதோருகம், அபவித்தம், ஸமானதம், லீனம், ஸ்வஸ்திக ரேசிதம், மண்டல ஸ்வஸ்திகம், நிகுட்டம், அர்தத நிகுட்டம், கடிச்சன்னம், அர்த்த ரேசிதம், வக்ஷஸ்வஸ்திகம், உன்மத்தம், ஸ்வஸ்திகம், ப்ருஷ்டஸ்வஸ்திகம், திக் ஸ்வஸ்திகம், அலாதம், கடிஸமம், ஆக்ஷிப்த ரேசிதம், விக்ஷிப்தாக்ஷிப்தம், அர்த்த ஸ்வஸ்திகம், அஞ்சிதம், புஜங்கத்ராசிதம், ஊத்வஜானு, நிகுஞ்சிதம், மத்தல்லி, அர்த்த மத்தல்லி, ரேசித நிகுட்டம், பாதாப வித்தம், வலிதம், கூர்நிடம், லலிதம், தண்டபக்ஷம், புஜங்கத்ராஸ்த ரேசிதம், நூபுரம், வைசாக ரேசிதம், ப்ரமரம், சதுரம், புஜங்காஞ்சிதம், தண்டேரசிதம், விருச்சிக குட்டிதம், கடிப்ராந்தம், லதா வ்ருச்சிகம், சின்னம், விருச்சிக ரேசிதம். விருச்சிகம், வியம்ஸிதம், பார்ஸ்வ நிகுட்டனம், லலாட திலகம், க்ராநதம், குஞ்சிதம், சக்ரமண்டலம், உரோமண்டலம், ஆக்ஷிப்தம், தலவிலாசிதம், அர்கலம், விக்ஷிப்தம், ஆவர்த்தம், டோலபாதம், விவ்ருத்தம், விநிவ்ருத்தம்,

பார்ஸ்வக்ராந்தம், நிசும்பிதம், வித்யுத் ப்ராந்தம், அதிக்ராந்தம், விவர்திதம், கஜக்ரீடிதம், தவஸம்ஸ்போடிதம், கருடப்லுதம், கண்டஸூசி, பரிவ்ருத்தம், பார்ஸ்வ ஜானு, க்ருத்ராவலீனம், ஸன்னதம், ஸூசி, அர்த்தஸூசி, ஸூசிவித்தம், அபக்ராந்தம், மயூரலலிதம், ஸர்பிதம், தண்டபாதம், ஹரிணப்லுதம், பிரேங்கோலிதம், நிதம்பம், ஸ்கலிதம், கரிஹஸ்தம், பர ஸர்ப்பிதம், சிம்ஹ விக்ரீடிதம், ஸிம்ஹாகர்சிதம், உத் விருத்தம், உபஸ்ருதம், தலஸங்கட்டிதம், ஜநிதம், அவாஹித்தம், நிவேசம், ஏலகாக்ரீடிதம், உருத்வ்ருத்தம், மதக்ஷலிதம், விஷ்ணுக்ராந்தம், ஸம்ப்ராந்தம், விஷ்கம்பம், உத்கட்டிதம், வ்ருஷ்பக்ரீடிதம், லோலிதம், நாகாபஸர்பிதம், ஸகடாஸ்யம், கங்காவதரணம்.

தொடரும்.......

1200.26.03.2015

பரத நாட்டியமும் அதன் நுட்பங்களும்

E-mail Print PDF

 

இந்தியாவின் ஆடற்கலைகள் பல. அதில் தமிழ்நாட்டின் நடனம் பரதநாட்டியம். இந்த பரத நாட்டியம் எவ்வாறு தோன்றியது ? யாரால் தோற்றுவிக்கப்பட்டது. பரதம் என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
பரதம் என்ற வார்த்தை
ப --பாவம்
ர -- ராகம்
த -- தாளம்
ம் -- ஸ்ருதி இவை நான்கும் சேர்ந்ததே பரதம் எனப்படும். பாரத தேசத்தில் முதன்முதலாக தோன்றியதால் பரதநாட்டியம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பரத முனிவரால் முதன் முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதால் இது பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது.

 

Read more...

தேன்குழல் அல்லது ஜிலேபி (50 துண்டுகள்)

E-mail Print PDF

தீபாவளி ஸ்பெஷல்"

தேவையான பொருட்கள்:
1 சுண்டு உழுந்து (கோது நீக்கியது)
3 மேசைக்கரண்டி வெள்ளையரிசி
750 கிராம் சீனி
செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு
எசென்ஸ் சிறிதளவு
1 லீற்றர் எண்ணை
சிறிதளவு தேசிப்புளி


செய்முறை
முதலில் 750 கிராம் சீனியை எடுத்து அதனுள் 3 dl தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காச்ச வேண்டும். சீனி கரைந்ததும் பாகினை 1 கிளாஸ் குளிர்தண்ணீரில் ஒரு துளியினை விட்டுப்பார்க்கும் போது பாகு அடியில் உறையும் தன்மை வரும். அப்படி பாகு உறையும் தன்மை வந்ததும் அதனுள் சிறிது கலரிங், எசென்ஸ், தேசிப்புளி என்பவற்றை சேர்த்து பாகினை உடனே இறக்கி வைக்க வேண்டும்.

வேறேர் பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விட வேண்டும்.
எண்ணையை கொதிக்க விடும்போதே உழுந்தினை அரைத்துக்கொள்ளலாம். உழுந்தை 3-4 மணித்தியாலங்கள் ஊறவைத்து கெட்டியாக (இட்டலி பதத்திற்கு ) சிறிதளவு உப்பு, சிறிதளவு கலரிங் சேர்த்து மைபோல அரைத்து எடுக்கவும்.

பின்னர் அரைத்த உழுந்தினை இலகுவான முறையில் ஒரு பொலித்தீன் பையினுள் ஊற்றி வாய்ப்பகுதியை மூடி அடைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மூலையில் சிறு துவாரம் இட்டு அதனூடாக முறுக்கு பிளிவது போல் எண்ணையினுள் 2-3 வட்டமாக   பிளிந்து விடவேண்டும்.

பின்னர் இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி வேக விட வேண்டும். நன்கு வெந்ததும் எடுத்து பாகில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் வேறோர் தட்டில் அடுக்கி வைக்கவும். அவ்வாறே எல்லாவற்றையும் சுட்டு எடுக்கவும். ஆறியதும் பரிமாறலாம்.

குறிப்பு:
உழுந்தினை அரைத்து அதிக நேரம் வைத்தால் உழுந்து புளிப்பு தன்மையை அடைந்து விடும். எசென்ஸ்க்கு பதிலாக ஏலக்காய் பவுடரையும் பாவிக்கலாம்.

பாகு மிகுதியாக இருந்தால் அதனை தோய்த்தெடுத்த தேன்குழலின்மேல் ஊற்றிவிடலாம். மறுநாள் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

மிகவும் எளிதானதும் இலகுவானதும் அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி.
தீபாவளி ஸ்பெஷலாக செய்து பரிமாறி உண்டு மகிழலாம்.

வழங்கியவர்: துஷி தாஸ் - டென்மார்க்

புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள்

E-mail Print PDF

ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இல்வாழ்கையை சுவர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் இல்லத் தலைவியில் தங்கியுள்ளது

*  இவ்வுலகில்
இறைவன் உங்களுக்கு கொடுத்த பெரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து விடாதீர்கள்.

*  நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப்பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

*  கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வாழப் பழகுங்கள்.

*  உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

*  பிறந்த வீட்டாரைப் போல், புகுந்த வீட்டாரையும் மதித்து, பணிந்து நடக்கத் தவறாதீர்கள்.

*  கணவனுக்கு விருப்பமில்லாத எதையும் செய்யத் துணியாதீர்கள்.

*  கணவனுக்கு பிடித்தமான உணவுகளை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் சமைத்து பரிமாறத் தவறாதீர்கள்.

*  கணவனுக்கு விருப்பம் இல்லாதவிடத்து அடம்பிடித்து வேலைக்குப் போக துணியாதீர்கள்.

*  கிழமையில் ஒருநாளைக்காவது அப்பா, அம்மா, மாமா, மாமியயைக் கண்டு சுகதுக்கம் கேட்கத் தவறாதீர்கள்.

*  எதுவித காரணம் கொண்டும், புகுந்த வீட்டு குறை குற்றங்களை உற்ற நண்பிகளிடத்தோ, அல்லது உங்கள் பெற்றோரிடத்தோ அல்லது, உறவுகளிடத்தோ கூறாதீர்கள்.

*  கணவன் வீட்டாரை பெருமையாக பேசிக்கொள்ளுங்கள். நீங்கள் அங்கு விவாகம் செய்ததால் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடிவிட்டதாக பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.

*  உங்கள் அப்பா, அம்மா, உறவினரின் மரியாதையை பேணுவதைப்போல் உங்கள் மாமா, மாமி உறவினர்களின் மரியாதையை பேணுங்கள்

*  உங்கள் மாமா, மாமி, உறவினர்களைப் பற்றி உங்கள் அப்பா, அம்மா, உறவினர்கள் உங்களுக்கு கூறுவதை உங்கள் கணவனுக்கு கோள்மூட்டாதீர்கள்

*  உங்கள் கணவரை விட நீங்கள் கல்வித் தகமை கூடியவராக அல்லது பதவியில் உயர்ந்தவராக இருந்தாலும்கூட உங்கள் தகமையைப் பற்றி எந்த ஒரு காரணம் கொண்டும் யாரிடமும் கூறாதீர்கள்.

*  உங்கள் கணவனிடத்து உங்கள் அன்பையோ, அழகையோ மறைக்காதீர்கள்.

*  உங்கள் கணவனிடத்து, எதையும் மறைக்காதீர்கள். பொய் சொல்லுவதையோ, உண்மையை மறைப்பதையோ, திருடுவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

*  உங்கள் கணவனுக்கு ஆலோசனை கூறுவதில் நல்ல மந்திரியாகவும், உணவு தயாரிப்பதில் அன்னையைப் போலவும், உபசரிப்பதில் நல்ல சேவகியாகவும், தாம்பத்திய உறவில் தாசிப் பெண்போலவும் நடக்க பழகிக் கொள்ளுங்கள்

*  பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.

*  முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

*  சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

*  அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

*  கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

*  உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மற்ற ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக் கூடாது என்பதை மறந்துவிடாதீகள்.

*  உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!! என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

*  வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)

*  கணவனின் துணிவகைகளை துவைத்து அவரை அழகான ஆடை அணிந்து அழகு பாருங்கள்.

*  எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்”.

*  உங்களுடைய கணவன் ஏழையாகவோ அல்லது சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உருவாக்கும்).

*  ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

*  தன்னம்பிக்கையும் மற்றும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள். உலக விஷயத்திலேயே மூழ்கிவிடாதீகள்.

*  உங்கள் செலவை குறைத்து அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு கொடுக்கவும் ஆர்வம் காட்டுங்கள்.

*  அவசியம் இல்லாத பொருள்களை வாங்கித் தரும்படி கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).

*  செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் உங்கள் சொத்துக்களாகும். அவற்றைப் பேணி நல்லமுறையில் வளர்த்தெடுக்க உங்கள் முழு முயற்சிகளையும் முன்னெடுங்கள்.

*  உங்கள் கணவர் உங்களுக்கு செய்யும் உதவிகளுக்கு உடனுக்குடன் நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்.

*  உங்கள் கணவரின் நன்றியை நீங்கள் மறக்கும்போது, உங்கள் கணவர் "ஏன் இவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்”.

*  உங்கள் கணவர் ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு 'தோள்” கொடுங்கள்.

*  உங்கள் கணவரை எது கோபப்படுத்துமோ அதை தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.

*  நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் ‘உப்பு சப்பு” பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).

*  கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

*  வெளி விஷயத்தின் காரணமாக கோபம் இருந்தால், கோபம் குறையும் வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)

*  அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.

*  "என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்;” என்றோ அல்லது எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்! என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது! என்றோ கேள்வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள்.

*  நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்).

*  தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

*  குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்)

*  வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

*  கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.

*  கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.

*  உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.

*  கணவர் வீட்டில் இருக்கும் நேரத்திலும், இல்லாத நேரத்திலும் அவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.

*  கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.

*  வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு…) ஏற்படும்போதும் இறைவனின் வேண்டிக்கொள்ளுங்கள்.

*  உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொண்டால்கூட அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).

*  உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.

*  உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

*  வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

*  பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).

*  தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

*  அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

*  பணத்தை கணவனுடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் இதற்கு உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்)

*  வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

*  குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகளை புகட்டுங்கள்.

*  கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

*  கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்)

*  கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.

*  ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள். தீர்க்க சுமங்கலியாவாள்

நல்ல மனைவி இல்லத்தையும் சுவர்க்கமாக்குவாள். துர்நடத்தையுள்ள மனைவி இல்லத்தையும் சுடுகாடு ஆக்குவாள்

நன்றி

 

2732.01.02.2015

குண்டாக இருப்பவர்கள், ஒல்லியாகத் தோற்றமளிக்க

E-mail Print PDF


உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், உடற்பயிற்சி மூலம் உடலைக் குறைக்கலாம்; அதற்கு, கடுமையான முயற்சி தேவை. ஆனால், குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம், அவர்கள் எடை குறைவானவர்களாகத் தோற்றமளிக்கலாம்.

உடலின் எடை சரியாக இருந்த போதிலும், முகத்தில் அதிக தசைப் பிடிப்பு இருப்பதாலும், சிலர் குண்டாகத் தெரிவர்.

பெண்கள், முன்பகுதியில் உள்ள முடிக்கற்றை அடிக்கடி முகத்தில் விழும் வகையில், லூசாக விட்டு விடலாம் அல்லது “போனி டெய்ல்’ முறையில் ஜடை பின்னிக் கொள்ளலாம்.கோடு போட்ட உடை அணிவதாக இருக்கும் பட்சத்தில், செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை அணியலாம்.

இதன் மூலம், குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகத் தெரிவர்.பெரும்பாலும் ஒரே நிறமுடைய ஆடைகளை பே ன்ட் – ஷர்ட் / டாப்ஸ் – பாட்டம் அணிவதன் மூலமும், குண்டாக இருப்பவர்கள் தங்களை அழகாக்கி கொள்ள முடியும்.

குள்ளமாக, குண்டாக இருப்பவர்கள், வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும்.

இவ்வகை உடைகள், இன்னும் உயரம் குறைந்தவர்களாகக் காட்டும்.குள்ளமாக, குண்டாக உள்ள பெண்கள், சுடிதார் அணியும் போது, கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்… தொளதொளவென்று அணியக் கூடாது. அதே போல், ரொம்ப இறுக்கமாகவும், இடுப்பு பகுதியில் அளவு குறைத்து, ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும்படி இருக்க வேண்டும்.

ரொம்ப இறுக்கமாக இருந்தால், பின்புறம் அசிங்கமாகத் தெரியும். எனவே, இடைப் பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும்.ஒல்லியாக உள்ளவர்கள், மிகவும் மெல்லிய உடையை தவிர்க்க வேண்டும்; இவை, உடலை குச்சி குச்சியாக காட்டும்.

எலும்புகள் துருத்திக் கொண்டு அசிங்கமாக இருக்கும். சுடிதார் அணியும் போது, கையின் அளவு ரொம்ப குறைவாக வைக்கக் கூடாது. இது, உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாகக் காட்டும். தேர்வு செய்யும் உடை, திக்கான உடையாக பார்த்துக் கொள்வது நல்லது. நான் குண்டும் இல்ல, ஒல்லியுமில்ல, குள்ளமும் இல்ல; பர்பெக்ட்டானஸ்ட்ரக்சர். இருந்தாலும், ஸ்மார்ட்டாக தெரியலை என்று வருத்தப்படுகிறீர்களா?

இதற்கெல்லாம் காரணம் உடை மட்டுமே. ஏனோ தானோவென்று உடை அணிவதாலே அவ்வாறு தெரிகிறீர்கள்.

இதற்கும், உங்கள் முக அழகிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.கறுப்பாக, மாநிறமாக இருப்பவர்கள், பிரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால், பெண்களுக்கு என்றே தற்போது பல பிராண்டு களில், அலுவலக உடை வெளியிட்டு உள்ளனர்; நீங்கள் அதை பயன்படுத்தலாம்.


பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய பேஷன். மாடர்னாகவும், அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும். சுடிதார் அணிபவராக இருந்தால், சரியான பிட் உள்ள இடுப்பளவு சின்னதாக உள்ள சுடிதாரை தான் தேர்வு செய்ய வேண்டும். லூசான உடைகளை அணியக் கூடாது.

கூந்தலை பராமரிப்பது எப்படி? அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

ஆரோக்கியமே அழகுக்கு அடிப்படை. எனவே, அழகாக இருப்பதற்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளிய முறைகளை காணலாம்.

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்
*ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம்.
* மன உளைச்சல், கோபம், படபடப்பு.
* கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.
* கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.
* அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு.

முடி உதிர்வது நிற்க வேண்டுமா?
பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.

முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்:
*வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

*இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

*தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

நரைமுடி கறுப்பாக வேண்டுமா?
பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

* மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

பொடுகு தொல்லையா?
பொடுகு தானே என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். தலைக்கு குளித்தபின் முடியை உலர்த்தாமல் இருந்தாலோ, அழுக்கான தலைமுடியுடன் இருந்தாலோ மற்றும் அதிக உஷ்ணத்தினாலோ பொடுகு தோன்றுகிறது. பொடுகு வராமல் தவிர்க்க ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, டவல் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

* நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

* நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

* தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

பேன் தொல்லை நீங்க வேண்டுமா?
முடியில் அழுக்குகள் சேர்வதாலும், வியர்வை பெருக்கத்தாலும், பேன் உள்ளவர்கள் பயன்படுத்தும் சீப்பை உபயோகிப்பதன் மூலமும் பேன் தோன்றுகிறது. இதனுடைய முக்கியமான உணவுத் தலையில் உள்ள ரத்தம் தான்.

*வசம்பை தண்ணீர் விட்டு அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து ஊறியதும் அலசினால் பேன் போகும். வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் தலைமுடியை அலசினாலும் பேன் தொல்லை நீங்கும்.

*கருந்துளசி இலைகளை தலையணையின் மேலே நன்றாக பரப்பி வைக்கவும். அதன்மேல் மெல்லிய துணியைப் போர்த்தி அத்துணியின் மேல் படுத்து உறங்கவும். இவ்வாறு செய்து வந்தால், எல்லா பேன்களும் இறங்கி ஓடி மறைந்துவிடும். சத்தான உணவு இல்லாமல், எப்படிப் பட்ட விலை உயர்ந்த ஷாம்பு மற்றும் ஆயில்களை பயன்படுத்தினாலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியாது. எனவே, உணவு பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

நன்றி: சிவா

Page 5 of 14