Thursday, Jul 20th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: மங்கையர் மலர்

நீலக்கால் நண்டுக்கறி – யாழ்ப்பாணம் முறை

E-mail Print PDF



தேவையான பொருட்கள்:
நண்டு - 500 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
சிறிய வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை – 1 இறகு
புளி – சிறிய தேசிக்காயளவு
இஞ்சி - சிறிது
சரக்கு மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (உறைப்பு தேவைக்கேற்ப)
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி
கடுகு - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
வெந்தயம் - சிதளவு
தேங்காய் - பாதி
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1.நண்டைச் சுத்தம் செய்து, பெரிய நண்டாக இருந்தால் 4 துண்டுகளாக உடைக்கவும்
சிறிய நண்டாயின் இரண்டாக உடைக்கவும்.
பெரிய கால்களை இரண்டாக முறிக்கவும்.
அவற்றை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். (சிலர் மஞ்சள் பாவிப்பதில்லை)

2. பாதித் தேங்காயை துருவி ஒரு தட்டில் வைக்கவும்.
வெண்காயம், பச்சைமிளகாய், என்பனவற்றை நீட்டாக வெட்டி பிறிம்பு பிறிம்பாக வைக்கவும்.
உள்ளியை சிறுதுகள்களாக சீவிக் கொள்ளவும்.
இஞ்சியையும் சீவிக் கொள்ளலாம் அல்லது குத்திக் கொள்ளவும்

3. தேங்காய், பெருஞ்சீரகம், மிளகு, ஆகியவற்றை ஒரு தாச்சியில் இட்டு தேங்காய்பூ பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கவும்.

3. தாச்சியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் அதில் கொஞ்ச கடுகு, பெருஞ்சீரகத்தை போடவும். கடுகு வெடித்ததும் அதற்குள் கொஞ்ச வெந்தயம் போடவும். வெந்தயம் பொரிந்து சிவத்ததும் வெட்டிவைத்த பெரிய வெங்காயத்தையும், பச்சை மிள்காயையும், உள்ளியையும் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கி வந்ததும் அதற்குள் கழுவி வைத்த நண்டை போட்டு கிழறி வதங்க விடவும். கொஞ்சம் வதங்கி வந்ததும் அதற்குள் பழப்புளியைக் கரைத்து விடவும். அத்துடன் நண்டு அவிய தேவையான அளவு தண்ணீரையும் விடவும்.

அதற்குள் 3 தேக்கறண்டி சரக்குமிளகாய்தூளும் (உறைப்புக்கேற்ப), தேவையான உப்பும், சீவி வைத்த இஞ்சியையும், வெட்டி வைத்த சின்ன வெங்காயமும் போட்டு கலக்கி மூடி அவிய விடவும். சிலர் வெட்டிய பச்சை மிள்காயை வதக்காது சின்ன வெங்காயத்துடன் சேர்த்து அவியப் போடுவார்கள்.

நண்டு அரை அவியல் அவிந்ததும் அதற்குள் நாம் வறுத்து வைத்த தேங்காய் வறுவலைப் போட்டு நன்கு கலக்கித் துளாவி திரும்பவும் கொதித்து அவிய விடவும்.

கறி வற்றி பிரட்டல் கறியாக வரும் போது கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி மூடிவிடவும்.

இப்போது நண்டுக் கறி ரெடி.


குறிப்பு:
சிலர் பழப் புளிக்கு பதிலாக தேசிக்காய் புளியும் விடுவார்கள்.
இன்னும் சிலர் கறிமுருக்கம் இலை சேர்ப்பார்கள்,
தேங்காய் பாலாகவும் சேர்க்கலாம். கறி தடிக்காது. பூவை வறுத்துப்போட்டால் கறி தடிக்கும், ருசியாகவும் இருக்கும்
நண்டு வாங்கும்போது பாரமான பெட்டை நண்டாக பார்த்து வாங்கவும்

பொரித்து இடித்த சம்பல்

E-mail Print PDF


தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய்ப்பூ - 2 கப்

செத்தல் மிளகாய் - 10/12 (உறைப்பை பொறுத்து)

சின்ன வெங்காயம் - சிறிதளவு

தாளிப்பதற்கு - வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியன சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மாசிக் கருவாட்டுத் தூள் - ஒரு மேசைக் கறண்டி

செய்முறை

1. காம்பு உடைத்த செத்தல் மிளகாய்களை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

2. பொரித்த மிளகாய் மற்றும் உப்பு, மாசிக் கருவாட்டுத் தூள் ஆகியவற்றை மட்டும் சேர்த்து உரலில் இடிக்கவும்(சைவாமாக இருப்போர் மாசிக் கருவாட்டைத் தவிர்க்கவும்). அம்மியில், அல்லது கிறைண்டரில் அரைக்கலாம். ஆனால் உரலில் இடித்தது போன்ற சுவை இருக்காது.

3. பின்னர் தேங்காய்ப்பூவை சேர்த்து இடிக்கவும். அல்லது அரைக்கவும்.

4. இறுதியாக சின்ன வெங்காயத்தை சேர்த்து இடிக்கவும் அல்லது அரைக்கவும்.

5. வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சம்பல் மேல் போட்டுக் கலக்கவும்.

6. சுவையான பொரித்து இடித்த சம்பல் தயார்.

யாழ்பாணத்து மக்களிடையே புட்டு மற்றும் தோசை, இடியப்பம், இட்டலிக்கு இந்த சம்பல் பெயர் பெற்றது.

வெண்டிக்காய் வெள்ளைக் கறி

E-mail Print PDF


தேவையான பொருட்கள்

பிஞ்சு வெண்டிக்காய் - 15

பச்சைமிளகாய் - 4

சின்ன வெங்காயம் - சிறிதளவு

தேங்காய்ப்பால் - 1 கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தேசிக்காய் சாறு - 1 மேசைக்கரண்டி

செய்முறை

1. வெண்டிக்காயை நன்றாகக் கழுவி அடி மற்றும் நுனி இரண்டையும் வெட்டி எடுக்கவும்.

2. பெரிய வெண்டிக்காய்களை 2 அல்லது 3 துண்டுகளாக வெட்டி கழுவி எடுக்கவும்.

3. தேங்காய்ப்பால், வெட்டிய பச்சை மிளகாள், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து அவிய விடவும்.

4. பதமான பதத்தில் இறக்கி தேசிக்காய் சேர்க்கவும். தாளிதமும் போடலாம்.

5. சூடான சுவையான வெண்டிக்காய் வெள்ளைக்கறி தயார்.

சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கறி இதுவாகும்.

விண்வெளிக் கப்பலில் பணிசெய்து வீர காவியமான பாரத வீராங்கனை கல்பனா செளலா

E-mail Print PDF

2003 பிப்ரவரி முதல் தேதியன்று அமெரிக்காவில் உள்ள புளொரிடா தொடுதளத்தை நோக்கி இறங்கிய கொலம்பியா விண்கப்பல் 16 நிமிடங்களுக்கு முன்பு, காலிஃபோர்னியா டெக்ஸஸ் வானிலே பிளவடைந்து சிதறிப் போனதால் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, கல்விகற்று அமெரிக்காவில் வாழ்ந்து வந்த "கல்பனா சௌலா" உள்ளிட்ட ஏழு வீண்வெளி வீரர்களும் வீண்வெளியிலே சங்கமமாயினர்.



கல்பனா சௌலா - Kalpana Chawla Ph.D. (1962-2003)

Read more...

பருப்பு வடை

E-mail Print PDF

தேவையான பொருட்கள்

பட்டாணி பருப்பு - 1கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் - 1 - 2
கருவேப்பிலை - கொஞ்சம்
செத்தல் மிகாய்- 2
சீரகம் -1ஸ்பூன்
பூண்டு - 2 பல்லு
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சிலர் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்ப்பார்கள்
செய்கை முறை
பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து சொரு சொருப்பாக அரைக்கவும். இதனுடன் செத்தல் மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து அரைக்கவும். அரைக்கும்போது அதிகம் நீர் விடாது குமையலாக வரக்கூடியதாக அரைத்தெடுக்கவும்.
பச்சைமிளகாய், வெண்காயத்தை சிறிதாக வெட்டி வைத்திருக்கவும்.
அரைத்தெடுத்த மாவுடன் வெட்டிவைத்த வெண்காயம், மிளகாய், மற்றும் மேலே சொன்ன பொருட்களில் எஞ்சியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வைக்கவும்.

அதனை சிறு சிறு உருண்டைகள் செய்து வடை வடிவில் (தட்டையாக) தட்டி வைக்கவும். (உருண்டையாக இருந்தால் நடுப்பகுதி அவியாது போகும்)

தாச்சியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு  வடைகளை பொரித்து எடுக்கவும்.  குறைந்த தணலில் பொரிக்கவும். அப்பொழுதுதான் உள்பகுதி அவியும்.

வடைகள் பொன்நிறம் ஆன பின்பு வடித்து எடுக்கவும்.

அசைவம் விரும்புபவர்கள் இதில் மாசிக்கருவாட்டுத் தூள், அல்லது இறால் ஒன்று அல்லது இரண்டு  பொரிப்பதற்கு முன் செய்து வைத்த வடையினுள் பதித்து பொரித்தெடுக்கவும்.

இப்பொழுது பருப்பு வடை, இறால் வடை றெடி.

அழகுக்கு அருமருந்து

E-mail Print PDF


உடலை மெருகேற்ற, அழகுபடுத்திக் கொள்ள நேரத்தை வீணக்கிக் கொண்டிருப்பவர்கள் உலகம் முழுவதும் ஏராளம், இதற்காக வருவாயின் பெரும்பகுதியை தாராளமாக செலவும் செய்யவும் தயங்க மாட்டார்கள்.

ஆனால் காசு பணம் இல்லாமல் எளிதாக கிடைக்கும் சொற்றுக் கற்றாழையை யாரும் கண்டுகொள்வதில்லை. இது உடலை அழகுபடுத்துவது மட்டுமின்றி, பலவித நோய்களுக்கு அருமருந்தாகவும் இருக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இயற்கை நமக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் சோற்றுக் கற்றாழையும் ஒன்று. எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும் பொருள் என்பது இதன் தனிச்சிறப்பு, எகிப்தியர்கள் இதன் பயனை நன்கு உணர்ந்தவர்கள்.

அதனால் தான் அழியாப் புகழ் பெற்ற கற்றாழை என்று பெயரிட்டுள்ளனர். சோற்றுக் கற்றாழையின் மருத்துவப் பயன்கள் கணக்கில் அடங்காது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கிரேக்கர்கள் ­­இந்த தாவரத்தின் மகிமையை அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெற்ற சோற்றுக் காற்றாழையின் ஏ,பி,சி,ஈ வைட்டமின்கள் அதிகம்.

மேலும் கால்சியம், மெகனீசியம், பொட்டாசியம், காப்பர், சோடியம்,சிங்க் போன்ற உடலுக்கு இன்றியையாத தாதுக்களும் கொட்டிக் கிடக்கின்றன. வாய்ப்புண்ணை ஆற்றவும், பற்களின் பாதுகாப்புக்கும் மிகச் சிறந்தது சோற்றுக் காற்றாழை சாறு என்பது கிராம மக்கள் அறிந்த ஒன்று.

இப்போதெல்லாம் பலருக்கு தலைமுடி மீதுதான் அதிக அக்கறை. இந்தப் பிரச்சினைக்கு சோற்றக் கற்றாழை பெரிய வரப்பிரசாதம். இதை உரித்து அதன் சோற்று பகுதியை தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்வது நின்றுவிடுவதுடன், அடர்த்தியாகவும் வளரும்.

சர்க்கரை நோய்க்கு கண் கண்ட மருந்தாகவும் சோற்றுக்கற்றாழை திகழ்கிறது. இதை ஜூஸாக தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தித்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.

தீக்காயத்தை எளிதில் ஆற்றும். மூட்டு வாதத்தில் இருந்து விடுதலை, உடலின் புரதத்தை கூட்டுவது, செரிமானம் என பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் சோற்றுக்கற்றாழை, உடலுக்குத் தேவையில்லாத தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் வெளியேற்றும்.

பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த சோற்றுக் கற்றாழை, தினமும் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் உறுதிப்படும்.

Page 8 of 14