காலையடி ஞானவேலாயுதர் வேட்டைத் திருவிழா - படங்கள் இணைப்பு -22.05.2017

Print
Image may contain: 2 people, people standing

காலையடி ஞானவேலாயுதர் அலங்கரிக்கப் பெற்ற குதிரை வாகனத்தில் புறப்பட்டு அரசடி வீதி வழியாக பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் வேட்டை ஆடியபின் இந்துக் கல்லூரி வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தார். ஞானவேலாயுதரை தரிசிக்க ஊர் மக்ககளும் அயலூர் மக்களும் திரண்டிந்ததுடன் அவ் வீதிகளில் குடி இருப்போர் பந்தல் அமைத்து படையல் படைத்து வழிபாடு செய்து வேலாயுதர் அருள் பெற்றனர்.

வேட்டைத் திருவிழா விளக்கம்:
இவ்விழாவை மிருக யாத்திரை எனவும் கூறுவர். துஷ்ட மிருகங்களைக் கொன்றொழித்து மக்களைக் காத்தற்காக மன்னர்கள் வேட்டையாடுதலக் கைக்கொண்டிருந்தனர். இதேபோல் எம்மைத் துண்புறுத்தும் மும்மகங்கள், ஆறுபகைகள் (அசுரத் தன்மை) போன்றவற்றையும், கொடிய நோய்கள் என்பவர்றையும் வேட்டையாடி அழிப்பதற்காக இறைவன் வேட்டைத் திருவிழாவை மேற்கொள்வதாக ஐதீகம். ஆயுதங்களுடன் மூர்த்தியை அலங்கரித்து எழுந்தருளச் செய்து பூந்தோட்டத்திலோ அல்லது வேரு ஆலயங்களிற்குச் சென்று (மிருகங்களின் உருவங்களை வைத்து) அங்கு அஸ்திர தேவரைப் பூஜித்து நீற்றுப் பூசனிக்காய் பலியிடுவது வழக்கம்.

22.05.2017 இன்று காலையடி ஞானவெலாயுதர் வேட்டைத் திருவிழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

நன்றி: படங்கள் காலையடி ஞானவேலாயுதர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS