கரப்பான் (Cockroach அல்லது roach) பூச்சியை விரட்ட சில வழிமுறைகள் - அறிந்து கொள்வோம்

Print

கரப்பான் (Cockroach அல்லது roach) பூச்சி இனங்களில் ஒன்றாகும். கரப்பான் பூச்சியைத் தெரியாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். கரப்பான் பூச்சி அனேகமானவர் வீடுகளில் வாசஞ் செய்திருப்பார் அல்லது இன்னமும் வசித்து வருகிறார். ஆனால் அது மனிதனுக்கு எவ்வகையில் தீங்கு விளைவிக்கின்றது என்பது ஒரு சிலருக்கே தெரிகின்றது.

உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் அசுத்தமாக இருக்கும் வீடுகளில்  ஒரு வீட்டு ஒட்டுண்ணியாக வாழ்கின்றது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இப்பொழுது வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

உலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து எம்மோடு தங்கி இருந்து பெரும் தொல்லையைக் கொடுப்பதோடு; நோயைக் கூட பரிசாக தந்துவிடுகின்றது. அத்துடன் அவை நாம் உண்ணும் உண்வின்மீது உலாவித் திரிந்து, அசுத்தமாக்கி உல்லாசமாக சாப்பிடுவதைப் பார்க்கும்போது எமக்கு அருவருப்பும் ஆத்திரமும் வரும்.

கரப்பான் பூச்சிகள் அனைத்துண்ணிகள் இனத்தை சேர்ந்த்து. எதையும் உண்ணக் கூடியது. இதன் (உயிர்நீரில்) இரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாது இருப்பதனால் இவற்றின் குருதி வெண்ணிறமாக தோற்றமளிக்கின்றது. இதனோடு ஒப்பிடுகையில் எமக்குத் தெரியாமலேயே எமது வீடுகளில் புகுந்து மூலைமுடக்கு, தலையணை, மெத்தை, பாய் போன்றவற்றில் மறைந்திருந்து எமது இரத்ததையே உறுஞ்சி உண்ணும் ”மூட்டைப் பூச்சி” ஒர் முழு ஒட்டுண்ணியாகும். இவற்றையும்விட எமது தலையில் தங்கி இருந்து எமது இரத்தத்தையே உண்டுவாழும் ”பேன்” என்ற முழு ஒட்டுண்ணியையும் மறக்க முடியாது. இவையாவும் எம்மை நாடுவதற்கு நாம் எம்மைச் சுத்தமாக வைத்திராது அசுத்தமான சூழ்நிலையில் வாழ்வதே முக்கிய காரணமாகும்.

கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலம் மிக எளிமையானது. உடல் பலபகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. அதனாலேயே கரப்பான் பூச்சிகளின் தலையை வெட்டிவிட்டாலும் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழ்கின்றது. அணுகுண்டு தாக்கத்தையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என நம்பப்படுகிறது.

இதன் குணாதிசயத்தில் ஏற்படும் வேகமான வளர்ச்சி மரபணு மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்கு வீடுகளில் வைக்கப்படும் பொறிகளில் பயன்படுத்தப்படும் இனிப்பு உணவுகளை குறுகிய காலத்தில் தீண்டாது தவிர்த்துக் கொள்ளும் தன்மை பூச்சிகளிடத்தில் இயல்பாகவே வளர்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாம் உண்ணும் உணவு, நீர், பழங்கள் என்பனவற்றில் கரப்பான் பூச்சியின் மலக்கழிவு, அதன் உமிழ் நீரும் சேர்வதால் அவை மாசடைகின்றது. இக்கழிவுகளால் உணவினை பழுதடையைச் செய்கின்ற பக்றீரியாக்கள் செறிந்து காணப்படுகின்றன. வயிற்றோட்டம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கரப்பான் பூச்சியின் மலக்கழிவு, உடற்பாகம் காற்றிலே பரம்பலடைகின்றது. இக்காற்றினை சுவாசிப்பதினால் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஏற்படுகின்றது. இதனால் சிறுவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.

உணவு, நீர், என்பவற்றை தகுந்த சுகாதார முறைப்படி கையாள்வது மிகவும் முக்கியமானது. மேலும் உணவுப்பொருட்களை இறுக்கமாக மூடிவைத்தல், வீட்டிலுள்ள கழிவுப்பொருட்களை (முக்கியமாக சமையலறைக் கழிவுகள்) உடனுக்குடன் அகற்றுதல், மற்றும் களஞ்சிய அறை, குளிர்சாதனப்பெட்டி, பாவனையற்ற வீட்டுப்பாகங்களை அடிக்கடி தூய்மைப்படுத்தல் மூலம் கரப்பான் பூச்சிகளின் தாக்கத்தை தடுத்துக் கொள்ளலாம்.

கரப்பான் பூச்சி, மூட்டைப் பூச்சி, பேன் இருக்கும் இடங்களில் தங்கி இருந்தபின் பெட்டி படுக்கைகளுடன் எம்வீட்டிற்கு வருமபோது; எமக்கு தெரியாமலேயே அவையும் எமது வீட்டிற்கு வந்து விடுகின்றன. அவ்வாறான சந்தற்பங்களில் அவதானமாக இருந்தால் அவை எம்மிடம் வராது தவிர்த்துக் கொள்ளலாம்.

கரப்பான் பூச்சியை விரட்ட சில வழிமுறைகள்:

வெள்ளரிக்காய்
கரப்பான் பூச்சித் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டுமெனில், வெள்ளரிக்காயை பயன்படுத்தினால் வராமல் தடுக்கலாம். அதற்கு வெள்ளரிக்காயின் தோலை, ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால், அதிலிருந்து வெளிவரும் நாற்றத்தினால், கரப்பான் பூச்சிகள் வருவதை நிரந்தரமாக தடுக்கலாம்.

பேக்கிங் சோடா
ஒரு பிளாஸ்ரிக் மூடியில் சிறிய பௌலில் சிறிது பேக்கிங் சோடாவை போட்டு, அதனை கபினட்டில் வைத்து, கபினட்டை மூடி விட வேண்டும். ஆனால் 10-15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஏனெனில் அதன் வாசனை போய்விடும். மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். மேலும் வாரத்திற்கு ஒரு முறை கிச்சனை சுத்தம் செய்தால் நல்லது.

பிரியாணி இலை
சமையலில் மணத்திற்காக பயன்படுத்தும் பிரியாணி இலையை பொடி செய்து, அதன் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவினால், பிரியாணி இலையின் மணத்திற்கு கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால் கரப்பான் பூச்சி இறந்துவிடும்

சோப்பு தண்ணீர்
சோப்பு தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு கரப்பான் பூச்சிகள் வராது. எனவே கரப்பான் பூச்சி வரும் இடங்களில் சோப்புத் தண்ணீரைத் தெளித்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதுடன், வந்தால் இறந்து விடும்.

அம்மோனியா மற்றும் நீர்
கரப்பான் பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமெனில், ஒரு வாளி நீரில், 2 கப் அம்மோனியாவை சேர்த்து கலந்து, பாத்திரம் கழுவும் தொட்டியைக் கழுவினால், அம்மோனியாவின் வாசத்திற்கு கரப்பான் பூச்சிகள் நிரந்தரமாக வருவதை தவிர்க்கலாம்.

மாவு
மிகச் சிறந்த கரப்பான் பூச்சி விரட்டி என்றால் அது மாவு தான். ஆம், எப்படியெனில் மாவு உருண்டையில் சிறிது போரிக் ஆசிட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைத்தால், கரப்பான் வருவதை தவிர்க்க முடியும்.

வெள்ளைப்பூண்டு
கரப்பான் பூச்சிகள் இருக்குமிடத்தில் வெள்ளைப்பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.

சீனி - சர்க்கரை
சீனியை வைத்து கரப்பான் பூச்சியை அழிக்கலாம். அதற்கு சீனியை ஒரு பிளாஸ்ரிக் மூடியில் போட்டு, அதில் சிறிது போரிக் ஆசிட் பவுடரைப் போட்டு கலந்து, கரப்பான் பூச்சி அதிகம் வரும் இடங்களில் வெளிப்படையாக வைத்தால், அதை சாப்பிட்டுவிட்டு, இறந்துவிடும்.

முட்டை ஓடுகள்
முட்டையின் ஓடுகள் கரப்பான் பூச்சிக்கு எதிரி. முட்டையின் ஓட்டை ஷெல்ப் மற்றும் கேபினட்டின் மூலைகளில் வைத்துவிட்டால், அதன் நாற்றத்திற்கு கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.

கிராம்பு
கிராம்பு ஒரு வகையான காரமான பொருள். இதனை குழம்பு, கிரேவி மற்றும் ஹெர்பல் டீ போன்றவற்றில் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த நாற்றத்திற்கும் கரப்பான் பூச்சிகள் நிச்சயம் வராது. அதற்கு சிறிது கிராம்பை ஏதேனும் ஒரு டப்பாவின் பக்கத்தில் வைத்துவிட்டால், அதனை தீண்டாமல் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து மாற்றி மாற்றி வைத்து வந்தால், நாளடைவில் கரப்பான் பூச்சி வருவதை தடுக்கலாம்.

போராக்ஸ் பவுடர்
வீட்டில் உள்ள பூச்சிகளை அழிக்க போராக்ஸ் பவுடரைத் தான் பயன்படுத்துவோம். ஆகவே அளவுக்கு அதிகமான அளவில் கரப்பான் பூச்சி இருந்தால், இரவில் படுக்கும் முன் இந்த பவுடரை பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டும். அதுவே 2-4 கரப்பான் பூச்சிகள் இருந்தால், அந்த பவுடரை லேசாக தூவி விடலாம். ஆனால் இந்த பவுடர் போய்விட்டால், கரப்பான் பூச்சி மறுபடியும் வந்துவிடும். ஆகவே 15 நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டும்.


கொசுத் தொல்லை ஒழிக்க...

கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க முடியாதவர்கள். வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது. தும்பைச் செடி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

ஈ மொய்ப்பதை தடுக்க...
சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது.

பல்லியை விரட்ட...
வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் பாச்சை உருண்டை ஒன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி எட்டியே பார்க்காது. நாமும் பல்லி பற்றிய பயமின்றி நிம்மதியாக வீட்டு வேலைகளைக் கவனிக்கலாம்.

எறும்புகள் வராமல் தடுக்க...
எறும்பு பவுடர் போடும் போது அதை அப்படியே தூவி வைத்தால் மின்விசிறி சுற்றும்போது காற்றில் பறந்து சாப்பாட்டில் கூட கலந்து விடலாம். அதனால் எறும்பு பவுடரை மண்ணெண்ணெயில் குழைத்து பூசி விட்டால் எறும்பும் வராது. அதிகப் பவுடரும் ஆகாது.

மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க...
தேங்காய் எண்ணெய்யில் கற்பூரத்தை கலந்து அதை பிரஷ் ஒன்றினால் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் மீது தடவி வந்தால் மூட்டை பூச்சிகள் ஒழிந்து விடும்.

விஷக்கடிக்க
விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து, வலி குறையும்.

பூச்சிக்கடி, உடல் அரிப்பு
பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட வேண்டும். அரிப்பு நிற்கும். தேனீ , குளவி கடித்து பெரியதாக வீங்கினாலும் சரியாகி விடும். கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

தேள் கொட்டுதல்
தேள் கொட்டினால், கொட்டிய இடத்தில் சுண்ணாம்பை தடவ வேண்டும். 3 கிராம்புகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டின இடம் வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில் தடவினால் வலியும் வீக்கமும் மறைந்துவிடும்.

வேர்க்குரு, அரிப்பு
குளித்த பிறகு ஈரம் போக துடைத்து, மருதாணி எண்ணைய் தடவி வந்தால், அரிப்பு நின்று புண் ஆறி பரிபூரண குணம் கிடைக்கும்.

வேப்பிலையை சுத்தம் செய்து, கழுவி நிழலில் உலர வைத்து, அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குறித்தால் சரும நோய்கள் வராது.

பாசிப்பயறுடன் பொடுதலை இலையையும் சேர்த்து அரைத்துத் தேய்த்துக் குளித்தால் உடம்பு பளபளப்புடன் இருப்பதுடன் தேகத்தில் சொறி , சிரங்கு, படை போன்ற சரும நோய்கள் வராது.


BLOG COMMENTS POWERED BY DISQUS