தயாராகுங்கள் விண்வெளிக்கும் சுற்றுலா செல்லலாம் - படங்கள் இணைப்பு

Print

விண்வெளித்துறையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நாடு ரஷ்யா.

தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனமொன்று புரட்சிகரமானதும் வித்தியாசமானதுமான கற்பனையொன்றுக்கு வடிவம் கொடுக்கவுள்ளது.

ஆம், விண்வெளியில் உங்கள் சுற்றுலாவை கண்டு களிப்பதற்கு அந்நிறுவனம் ஏற்பாடு செய்யவுள்ளது.


இதற்கான சிறப்பு விண்வெளி ஓடத்தினை ரஷ்ய ஓர்பிடல் டெக்னோலஜிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சி.எஸ்.எஸ் (Commercial Space Station) என பெயரிடப்பட்டுள்ளது.

இவ் விண்வெளி ஓட விடுதியானது சர்வதேச வீண்வெளி ஓடத்தினை விட வசதியாக இருக்கும், 7 பேர் தங்கியிருக்கமுடியும் என்பதுடன் விண்வெளியை கண்டு இரசிக்க முடியும்.

இப்பயணத்தின் போது பயணிப்பவர்கள் மதுபானம் அருந்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் பூமியில் சமைக்கப்பட்ட உணவுகள் விண்வெளி விடுதியில் உள்ள மைக்ரோவேவ் அவனில் சூடாக்கப்பட்டு பரிமாறப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பூமியிலிருந்து 217 மைல் தூரத்தில் அமைக்கப்படவுள்ள இவ்விண்வெளி ஓடத்திற்கு ரஷ்யாவின் சோயஸ் ரொக்கட்டுகளின் மூலம் பயணிக்கமுடியும்.

அங்கு 5 நாள் தங்குவதற்கான செலவு 100.000 பவுண்ட்ஸ்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அங்கு செல்வதற்கான செலவு 250,000 பவுண்ட்ஸ்கள் ஆகும்.

எதிர்வரும் 2016 ஆண்டில் இத்திட்டம் முழுமை பெறவுள்ளது.


BLOG COMMENTS POWERED BY DISQUS